பஞ்ச பாண்டவர்கள்

கட்டிய ஆலயங்கள்

சாந்திப்பிரியா

மகாபாரத யுத்தம் முடிந்தது. பாண்டவர்கள் மனதில் அமைதி இல்லை. அனியாயமாக தம்முடைய சந்ததியினரை கொன்று விட்டோமே என மனம் துக்கமுற்றது. ஆகவே இனி தம்மால் ராஜ்யத்தை திறமையாக ஆள முடியாது என உணர்ந்ததினால் தமது சந்ததியினரான மன்னன் பரிஷ்ஷித்திடம் நாட்டை ஒப்படைத்து விட்டு குருஷ்ஷேத்திரத்தில் நடைபெற்ற யுத்தத்தில் தமது சந்ததியினரை கொன்ற பிரும்மஹத்தி தோஷம் என்ற பாபத்தைக் களைய சிவபெருமானையும், விஷ்ணுவையும் துதித்து பாப விமோசனம் பெற ஐந்து பேரும் தீர்த்த யாத்திரை மேற்கொண்டார்கள்.

முதலில் அவர்கள் இமய மலையின் பக்கத்தில் இருந்த கர்வால் என்ற பகுதியை (இன்றைய உத்திராஞ்சல்) அடைந்தபோது அவர்களை சந்திக்க விரும்பாத சிவபெருமான் தன்னை ஒரு பசு மாடு உருவில் மாற்றிக் கொண்டு புல் மேய்ந்து கொண்டு இருந்த பசு மாடுகளுடன் ஒன்றாக நின்று கொண்டார். ஆனாலும் தமது பக்தர்களை ஏமாற்ற முடியவில்லை. பாண்டவர்களில் ஒருவரான பீமன் அவரை அடையாளம் கண்டு கொண்டு விட்டார். ஓடிச் சென்று அந்த மாட்டைப் பிடித்துக் கொள்ள முயன்ற பொழுது   பீமன் கையில் அதனுடைய வால் பகுதி மாட்டிக் கொண்டது. பீமன் பிடித்திழுக்க சிவபெருமான் அவன் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள திமிறிய பொழுது சிவபெருமானின் உடல் பிய்ந்து உடலின் பாகங்கள் கர்வாரல் முழுவதும் விழுந்தன.   விழுந்த அவருடைய உடலில் இருந்த கைகள் துங்கநாத்திலும், முகம் ருத்திரநாததிலும், பின்பகுதி கேதார்நாத்திலும் மற்றும் பிற பாகங்கள் கல்பேஷ்வர், மற்றும் மத்யமகேஷ்வரர் என்ற இடங்களில் விழுந்தன. அதனால் பாண்டவர்கள் அந்த ஐந்து இடங்களிலும் அவருக்கு ஆலயங்களை எழுப்பி பூஜித்து அவர் ஆசி பெற்ற பின் அங்கிருந்து கிளம்பி பகவான் விஷ்ணுவிடம் பாபா விமோசனம் பெற தென் பகுதியை நோக்கி கிளம்பினார்கள். 

அப்படி சென்றவர்கள் கேரளத்தில் இருந்த பம்பா நதிக் கரையை அடைந்த பொழுது அவர்களுக்கு ஒரு அசரி குரல் கேட்டது.  அசரி அந்த இடத்தை சுற்றி இருந்த இடங்களில் விஷ்ணுவை வழிபடுமாறு கூற, அவர்கள் அதன் அருகில் இருந்த திரிச்சிதாட், திருப்புலியூர், திருவரன்முலா, திருவாந்தூர் மற்றும் திருக்காடிட்டானம் என்ற ஐந்து இடங்களில் விஷ்ணுவிற்கு ஆலயம் அமைத்து வழிபட்டனர். திரிச்சிதாட்டில் யுதிஷ்டிரர், திருப்புலியூரில் பீமன், திருவரன்முலாவில் அர்ஜுனன், திருவாந்தூரில் நகுலன் மற்றும் திருக்காடிட்டானத்தில் சகாதேவனும் ஆலயம் அமைத்து வணங்கினார்கள்.  அவர்கள் நிறுவிய ஆலயம் 108 திவ்ய தேச ஆலயங்களில் ஐந்தாகும். பகவான் கிருஷ்ணர் மறைவதற்கு முன் பாண்டவ சகோதரர்களை ஆன்மீக பாதையில் சென்று தமது பாவங்களை விலக்கிக் கொள்ளுமாறு அறிவுறுத்திய பின் மறைந்து போனதினால், கலியுகத்தில் பாண்டவ சகோதரர்கள் ஆலயங்களை நிறுவினார்கள்.  

துரியோதனன் கௌரவர்களில் மூத்த சகோதரன். பாண்டவர்களை வஞ்சகமாக அழிக்க நினைத்தவன். பெண் என்றும் பாராமல் துரௌபதியின் சேலையை விலக்கி அவளது மானத்தை அனைவர் முன்னும் அழிக்க நினைத்தவன். ஆனால் அவனுக்கும் சில நல்ல பண்புகள் இருந்துள்ளன.  துரியோதனுனுக்கு இந்தியாவின் சில மானிலங்களில் ஆலயங்கள் உள்ளன. அவற்றில் ஒன்றே கொல்லத்தில் உள்ள மலைநாடா எனும் இடத்தில் உள்ள மலைநாடா துரியோதனன் ஆலயம் ஆகும். சாஸ்தம்கோட்டரா என்ற இடத்தில் இருந்து 14 கிலோ தொலைவிலும், ஆலம்கடவு என்ற ஊரில் இருந்து 27 கிலோ தொலைவிலும் உள்ளது மலநாடு. அங்குதான் துரியோதனன், துரோணர், கர்ணன், சகுனி மற்றும் பீஷ்மரும் பூஜிக்கப்படுகின்றனர். தெய்வச் சிலையே இல்லாமல் இருக்கும் அந்த ஆலயத்தில் உள்ள மண்டபத்தில் அமர்ந்து கொண்டு அவரை வழிபடுகிறார்கள்.  இவர்கள் அனைவரும் தெய்வமாக போற்றி வணங்கப்பட்டாலும் அந்த ஆலயத்தில் துரியோதனனை மட்டுமே மலயபூப்பன் என்ற பெயரில் வழிபடுகிறார்கள். துர்யோதனனுக்கு உத்திராக்கண்டிலும் சில ஆலயங்கள் உள்ளன. கேரளாவில் துரியோதனன் ஆலயம் உள்ள கிராமத்தில் வசிக்கும் பலருக்கும்   துரியோதனன் என்ற அடைமொழிப் பெயர் உள்ளது. உள்ளுரைச் சேர்ந்த குருவர் என்ற இனத்தவரே அந்த ஆலயத்தின் பிரதான பூஜாரியாக உள்ளார். அந்த ஆலயத்தை நிர்வாகிப்பது நாயர், குருவர் மற்றும் இசவா என்ற இனப் பிரிவை சேர்ந்த மக்கள்தான்.

The temples built by

Pandava Brothers

Santhipriya

The epic Mahabharata war ended. The Pandavas lost peace of mind because they felt guilty that they were responsible for the killing their own kith and kins. Therefore realizing that they can no more rule the country in peace, they handed over the powers of Kingdom to Parikshit and went on pilgrimage to seek blessings from Lord Shiva and Lord Vishnu to get rid of the Brahmahathi Dosha accrued by them due to the killing of their own descendants.

Proceeding towards Himalayas first, they reached Garhwal (today’s Uttaranchal) on the side of the Himalayas. Lord Shiva, who did not wish to meet them, disguised   in the form of a cow and mingled up with the cows gazing there. Yet he could not escape the attention of his devotees, especially Beema, one of the Pandava brothers who quickly identified the Lord, ran towards the Cow and attempted to catch it, but only the tail could be caught.  In the struggle to free himself from the clutches of Beema, Lord Shiva’s body tore into several pieces and fell in different places in Garhwal. His hands fell in Tunganath, face in Rudranath, back in Kedarnath and other parts in Kalpeshwar, and Madhyamaheshwar. Subsequently the Pandava brothers raised worship places (mini temples) for Shiva in those places and offered prayers to the Lord who blessed them to get relieved of many of sins accrued by them and advised them to get the remaining relieved from Lord Vishnu.  In view of the same, the Pandava brothers proceeded to the southern side to get relief from Lord Vishnu.

When they reached the banks of the river Pampa in Kerala, an unknown voice from the space asked them to worship Lord Vishnu in and around that area.  Therefore the Pandava brothers constructed worship places (mini temples) in central Travancore region of Kerala – Thrichitat, Thiruppuliyoor, Thiruvaranmula, Thiruvanvandoor, Thrikkodithanam in Kerala and worshipped Lord Vishnu.  Each one of the Pandava brothers installed idols of Lord Vishnu separately on the banks of the Pampa in the above mentioned places. Yudhistara established mini temple in Thrichitat, Beema established in Thiruppuliyoor, Arjuna in Thiruvaranmula, Nakula in Thiruvanvandoor and Sakadeva in Thrikkodithanam, offered worship and got rid of the remaining sins. It is believed that offering the worship at all these five temples on the same day is especially meritorious. The Pandava temples are included in the 108 Divya Desam temples. Actually the five Pandava temples came up in Kaliyug after the disappearance of Lord Krishna who advised the Pandava brothers to pursue the spiritual path to atone the sins of killing their kins and kiths.  

Duryodhana is the eldest of the Kaurava brothers. He tried to destroy Pandava brothers by deceit and attempted to outrage the modesty of Draupadi in public without even considering her to be a female.  However he was also possessed with few other good qualities.  There are few temples in India where Duryodan is worshiped. One such temple is in Kollam District in Kerala and is called Malanada Duryodhana Temple. Malanada is located at a distance of 14 km from Sasthamcottara and 27 km from Alamkadavu.  In the said temple besides Duryodhana others like Karna, Drona, Sakuni and Bhisma are also worshiped. This is the only temple in South India which is dedicated to Duryodan who is worshiped as Malayappooppan, but the temple has no idol but only a platform. This temple has no idols of Duryodhan and only a raised platform which is called Mandapam is built in which one can sit and meditate or pray to Duryodan.  Similarly there are few temples where Duryodhan is worshiped is in Uttarakhand in North India. Many in the village where the temple exist, have their surname as Duryodhana. The prime pundit of the temple belongs to the Kurava community though the temple is looked after by members from Nair, Kurava and Esava communities.