……….செளந்தர்ய லஹரி (51-75)
-51-
शिवे शृङ्गारार्द्रा तदितरजने कुत्सनपरा
सरोषा गङ्गायां गिरिशचरिते विस्मयवती ।
हराहिभ्यो भीता सरसिरुहसौभाग्यजननी
सखीषु स्मेरा ते मयि जननी दृष्टिः सकरुणा ॥
ஶிவே ஶருனகாரார்த்ரா ததிதரஜனே குத்ஸனபரா
ஸரோஷா கனகாயாம் கிரிஶசரிதே விஸ்மயவதீ ।
ஹராஹிப்யோ பீதா ஸரஸிருஹஸௌபாக்யஜனநீ (ஜயினீ)
ஸகீஷு ஸ்மேரா தே மயி ஜனநீ த்ருஷ்டி: ஸகருணா ॥
இந்த ஸ்லோகத்தை 1000 முறை என
45 நாட்கள் பாராயணம் செய்தால்
சர்வ ஜனங்களையும் வசியப்படுத்தலாம்
ஹே பரமேஸ்வரி
சிவபெருமானின் மீதான உனது பார்வை மென்மையாகவும் சிருங்கார ரசங்கள் நிரம்பியதுமாக இருக்க, அவர் மீதான உனது முழுமையான அன்பு வெளியில் தெரிகின்றது. ஆனால் அவரை தவிர்த்து மற்றவர்கள் மீதான பார்வையில் பொறாமையும், முக்கியமாக கங்கையின் மீது வெறுப்பும், கோபமும் தெரிகின்றது. சிவனின் பராக்கிரமங்களைக் கேட்கும்போது நீ பரவசப்படுகின்றாய், ஆனால் அவர் மீதுள்ள பாம்பைக் கண்டு, குளத்தில் மலர்ந்த தாமரைப் பூக்களின் நிறத்தைப் போன்ற சிவப்பு முக பாவத்தைக் காட்டி அச்சத்தை வெளிப்படுத்துகின்றாய். நண்பர்களோடு ஹாஸ்ய ரசத்துடன் உள்ளவளாகவும், என் மீது கருணை கொண்டவளுமாக காட்சி தருகின்றாய்.
- (விளக்கம்
சிருங்கார ரசம் என்பது நாட்டியம், இசை, கவிதை, நாடகம், ஓவியம் மற்றும் சிற்பத் துறையில் வெளிப்படும் கேளிக்கை, வெறுப்பு, கோபம், பயம், பொறாமை, கருணை, வீரம் அன்பு, காதல், ஆசை போன்ற பாவங்களை வெளிப்படுத்துவது ஆகும். - பரமேஸ்வரி தனது கணவரான பரமேஸ்வரனைப் பார்க்கும் போதும் அவரோடு இருக்கும் போதும் சிருங்கார ரசங்களை வெளிப்படுத்துவது போல பராசக்தியின் முக பாவங்கள் உள்ளது என்பதாக இந்த ஸ்லோகத்தின் மூலம் ஆதி சங்கரர் கூறி உள்ளார்.
- அவள் இயற்கையாகவே மென்மையான குணம் கொண்டவள் என்பதினால் அவள் பரமேஸ்வரனோடு இருக்கையில் கனிவான அன்பை வெளிப்படுத்துகிறாள். அவர்கள் இவருடைய அன்பும் எப்படிப்பட்டது என்றால் எப்படி ஒரு சொல்லின் அர்த்தத்தை சொல்லில் இருந்து தனியே பிரிக்க முடியாததோ அப்படிப்பட்ட அன்பு ஆகும்.
- ஆனால் அவள் பரமேஸ்வரனுடன் மற்றவர்களைப் பார்க்கும்போது, அவளுடைய கனிவான அன்பின் வெளிப்பாடு ஒரு விதமான பொறாமை கலந்த தோற்றத்தை தருகின்றது. இது சிருங்கார ரசத்தில் இன்னொரு தோற்றமாகும்.
- பரமேஸ்வரர் பெரும்பாலான சமயங்களில் தியான நிலையில்தான் இருக்கின்றார், அப்போதெல்லாம் அவரது குண்டலினி சக்தியில் பரமேஸ்வரியை அமர்ந்து இருக்கின்றாள் என்பதினால் பரமேஸ்வரரின் தலை எப்போதுமே நெருப்பு போன்று சூடாகவே இருக்கும், அதனால்தான் எப்போதுமே அவரது தலையில் கங்கா தேவி அமர்ந்து கொண்டு அவரது தலையை குளிர்ச்சி அடைய வைத்துக் கொண்டே இருப்பதான கருத்தும் உண்டு.
- புனித நதியான கங்கை பரமேஸ்வரனனின் ஜடை முடியின் மேல் அமர்ந்து உள்ளதை பார்க்கையில் தனது கணவரது தலை மீது இன்னொருவள் அமர்ந்து இருக்கிறாளே என்ற ஆத்திரம் மேலெழ, அது பொறாமையாக மாறுகின்றது. அதுவும் சிருங்கார ரசத்தில் ஒரு தோற்றமாகும். சிவபெருமானின் தலையை குளிர்ச்சி அடைய வைப்பதற்காகத்தான் அவர் தலை மீது கங்கை அமர்ந்து இருக்கின்றாள் என்ற கூற்றை பராசக்தியினால் ஏற்க முடியவில்லை.
- சிவபெருமானின் பத்தினி பராசக்தி தன்மீது கோபமாக இருக்கின்றாள் என்பதை உணர்ந்து கொண்ட, பனிப் பாறையாக சிவபெருமான் தலை மீது அமர்ந்து இருந்த கங்கை, பராசக்தியின் கோபத்திற்கு பயந்து, தன்னை உருக்கிக் கொண்டு தண்ணீராக பாயத் துவங்கி விட்டாளாம்.
- முனிவர்களும் ரிஷிகளும் திரிபுரா யுத்தத்தில் பரமேஸ்வரனின் பராக்கிரமங்களையும், புத்தி கூர்மையினால் மூன்று நகரங்களையும் அழித்த கதைகளையும் பரமேஸ்வரிக்கு கூறிக் கொண்டு இருக்கையில், தனது கணவரின் பெருமையைக் கேட்டு வியப்புடன் பரமேஸ்வரரை பார்வதி நோக்கிக் கொண்டு இருப்பாளாம்.
- அதே போலவேதான் அணிகலன்கள் காணப்பட வேண்டிய தனது கணவரின் உடலில் பாம்புகள் இருப்பதைக் கண்டு தனது மனதில் உள்ள கோபக் கனலை வெளிப்படுத்தும் விதத்தில் தாமரை மலர் போன்ற சிவப்பான முகத்தோடு இருந்தவாறு அவரது அருகில் செல்ல பயப்படுவாள். ஆனாலும் அவள் தனது பக்தர்களைக் காணும்போது கருணையை பொழிகின்றாள்.
——-
-52-
गते कर्णाभ्यर्णं गरुत इव पक्ष्माणि दधती
पुरां भेत्तुश्चित्तप्रशमरसविद्रावणफले ।
इमे नेत्रे गोत्राधरपतिकुलोत्तंसकलिके
तवाकर्णाकृष्टस्मरशरविलासं कलयतः ॥
கதே கர்ணாப்யர்ணம் கருத இவ பக்ஷ்மாணி தததீ
புராம் பேத்துஶ்சித்தப்ரஶமரஸவித்ராவணபலே ।
இமே நேத்ரே கோத்ராதரபதிகுலோத்தம்ஸகலிகே
தவாகர்ணாக்ருஷ்டஸ்மரஶரவிலாஸம் கலயத: ॥
இந்த ஸ்லோகத்தை 1000 முறை என
45 நாட்கள் பாராயணம் செய்தால்
காதுகள் மற்றும் கண் நோய்கள் குணமாகும்
ஹே பராசக்தி
நீ ஹிமவானுடைய வம்சத்திற்கு பெருமை சேர்க்கும் விதத்தில் தோன்றி உள்ளவள். இரண்டு காதுகள் வரை நீண்டு உள்ள உனது அழகிய இரண்டு கண்களுக்கும் மேலே உள்ள இமைகளில் காணப்படும் மயிர்கள், பாணங்களின் இரு புறங்களிலும் கட்டப்பட்ட இறகுகள் போன்று காணப்படுகின்றன, அப்படிப்பட்ட உனது கண்கள் காது வரை இழுத்து விடப்பட்ட மன்மதனின் பாணம் போன்று உள்ளது. அதனால்தானோ என்னவோ உனது கண்கள் திரிபுரா சம்ஹாரம் செய்த சிவபெருமானின் உணர்ச்சிகளை உன்னிடம் கட்டி இழுக்கின்றன.
- (விளக்கம்:
பனி மூடிய மலைகளின் மன்னனான ஹிமவான் (பார்வதியின் தந்தை) பரம்பரையில் பிறந்துள்ள பராசக்தி அவரது கிரீடம் போன்றவள். இருபுற காதுகள் வரை நீண்டு உள்ள அவளது கண்கள் மன்மதனின் அம்பு போல உள்ளது. கண்கள் மேலும் கீழுமுள்ள கண் இமைகள் பறவையின் இறகுகள் சிறகடித்தபடி உள்ளதை போல காணப்படுகின்றன என்பதினால்தான் சிவனின் மனதிலும் உள்ளத்திலும் அவள் கிளர்ச்சியை ஏற்படுத்தி அவரை அவளிடம் கட்டி இழுக்கின்றன என்பதாக ஆதி சங்கரர் இந்த ஸ்லோகத்தில் கூறி உள்ளார் - இந்த ஸ்லோகத்தின் மூலம் மறைமுகமாக ஹிமவானின் பெருமையும் பார்வதியின் கண்களின் வலிமையையும் கூறப்படுகின்றது. பராசக்தியின் மீதான ஈர்ப்பு அவளது உடல் அங்கங்களினால் அவருக்கு ஏற்படவில்லை. பராசக்தி மீதான ஈர்ப்பு அவளுடைய அழகிய கண்களில்தான் உள்ளது என்பது ஆதி சங்கரருக்கு தெரிந்தது. பல சீடர்களுக்கு குருமார்கள் கண்களின் அசைவுகள் மூலமே தீட்ஷை தருவார்கள் என்பதினால் கண்கள் மிகவும் முக்கியமானவை ஆகும்.
- இமய மலையில் உள்ள பல குகைகளிலும் முனிவர்கள் மற்றும் ரிஷிகள் அமர்ந்து இருந்தபடி தியானம் செய்கிறார்கள். அவர்களில் சிலர் வேண்டும் என்றே தவத்தைக் கலைக்க முற்படும் அப்சரஸ்களின் அழகிய கண் இமைகளின் சிமிட்டல்களினால், மோகம் கொண்டு தவத்தைக் கலைத்துக் கொண்டு தவ வலிமையை இழப்பார்கள்.
- அதே போலவேதான் காம வலையில் அனைவரையும் விழ வைக்கும் மன்மதனின் பாணங்களை போன்ற கண்களைக் கொண்ட பராசக்தியின் கண்களும் கூட பரமேஸ்வரனின் மனதை தன்னிடம் கட்டி இழுக்கின்றதாம்.
- மன்மதனிடம் ஐந்து மலர் அம்புகள்தான் உள்ளன. ஆனால் சிவபெருமானை பராசக்தியின் மீது மயக்க வைக்க வேண்டிய போதெல்லாம், மன்மதன் பராசக்தியின் கண்ணை தனது ஆறாவது அம்பு போல தோற்றம் தர வைத்து பரமேஸ்வரரை பராசக்தி மீது மயங்க வைக்கின்றான் என்றே எண்ணத் தோன்றுகின்றது.
———
-53-
विभक्तत्रैवर्ण्यं व्यतिकरितलीलाञ्जनतया
विभाति त्वन्नेत्रत्रितयमिदमीशानदयिते ।
पुनः स्रष्टुं देवान् द्रुहिणहरिरुद्रानुपरतान्
रजः सत्त्वं बिभ्रत्तम इति गुणानां त्रयमिव ॥
விபக்தத்ரைவர்ண்யம் வ்யதிகரிதலீலாஞ்ஜனதயா
விபாதி த்வன்னேத்ரத்ரிதயமிதமீஶானதயிதே ।
புன: ஸ்ரஷ்டும் தேவான் த்ருஹிணஹரிருத்ரானுபரதான்
ரஜ: ஸத்த்வம் பிப்ரத்தம இதி குணாநாம் த்ரயமிவ ॥
இந்த ஸ்லோகத்தை 1000 முறை என
45 நாட்கள் பாராயணம் செய்தால்
பராசக்தியின் அருள் கிடைக்க வழி காட்டும்
ஹே பராசக்தி
பரமேஸ்வரரின் பத்தினியே, உனது கண்களில் உள்ள விழிப் படலத்தில் காணப்படும் ரத்த நாளம் போன்ற சிவப்பு ரேகைகளும், கருப்பு நிற கண்ணின் கரு விழிகளும், வெள்ளை நிற விழிப் படலமும் மூன்று தெய்வங்களை உனது கண்களில் நீ அடக்கிக் கொண்டு உள்ளதைக் காட்டுகின்றது. மஹா பிரளய காலத்தில் மும்மூர்த்திகளான பிரும்மா, விஷ்ணு மற்றும் ருத்திரன் போன்றவர்களும் உன்னுள் அடங்கி விட, அவர்களை மீண்டும் அடுத்த பிரபஞ்சத்தின் தோற்றத்தில் ரஜோ, சத்ய மற்றும் தமோ குணங்களைக் கொண்டவர்களாக படைப்பதற்காக அந்த மூன்று நிறங்களைக் கொண்ட கண்களைக் கொண்டவளாக இருக்கிறாயோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
- (விளக்கம்:
பரமேஸ்வரரின் அன்புக்குரிய மனைவியின் கண்களில் இரண்டு இயற்கை நிறங்கள் உள்ளன. வெள்ளை நிற விழித் திரை வழியாக சிவப்பு நரம்புகள் ஓடுகின்றன. அதில் கருமை நிறத்திலான கண் விழியும் உள்ளது. இப்படியாக அவளது கண்கள் மூன்று நிறங்களை வெளிப்படுத்தும் கண்களாக உள்ளது. அதே நேரத்தில் அவள் மேல் மற்றும் கீழ் கண் இமைகளில் கருத்த மையை பூசிக் கொள்கின்றாள். அது அவளது அழகை மேலும் அதிகரிக்கின்றன. - அந்த மூன்று நிறங்களிலும் அவள் மூன்று குணங்களைக் கொண்ட தெய்வங்களை வெளிப்படுத்துகிறாள்.- சிவப்பு நிறமான ரஜஸ் குணம் பிரும்மாவைக் குறிக்கிறது, வெள்ளை நிறத்திலான சத்வ குணம் விஷ்ணுவை குறிக்கிறது, மற்றும் கருப்பு நிறத்திலானது தமஸ் குணமுடைய ருத்ரனைக் குறிக்கிறது.
- இது எதைக் காட்டுகின்றது? அவள் மூவரையும் தனக்குள் அடக்கி வைத்துக் கொண்டு இருக்கின்றாள் – பிரபஞ்சத்தின் அழிவின் போது அவர்களை தன்னுள் ஆகர்ஷித்து கொண்டு, மீண்டும் அழிவுக்குப் பிறகு புதிய பிரபஞ்சத்தைப் படைக்கும் போது அவர்களை மீண்டும் அதே குணங்களுடன் வெளிப்படுத்துகின்றாள்.
- இந்த ஸ்லோகத்தின் மூலம் ஆதி சங்கரர் என்ன கூறி உள்ளார் என்றால் கருணையுள்ள தாய் பராசக்தியானவள் தனது கண்கள் மூலமே படைப்பு-அழிவு- மீண்டும் படைப்பு என்பதை ஒரு சுழற்சி முறையில் செய்கின்றாள்.
- படைத்தல், காத்தல் மற்றும் மீண்டும் அழித்தல் எனும் மூன்று குணங்களையும் கொண்ட மூன்று தெய்வங்களை தனது கண்கள் மூலமே வெளிப்படுத்தி பிரபஞ்சத்தை படைத்த பின்னர் மீண்டும் பிரபஞ்சத்தை அழிக்கும் அவள் தனது கணவரான சிவபெருமானுடன் சில காலம் தனிமையில் இருக்க விரும்புகிறாள்.
- பிரளய காலத்தில் பிரபஞ்சம் அழியும் போது பிரம்மா, விஷ்ணு, ருத்ரன், யமன், குபேரன், இந்திரன் மற்றும் பிற கடவுள்கள் உட்பட அனைத்து பெண் தெய்வங்களுக்கும் அழிந்து விடுகின்றார்கள். ஆனால் பராசக்தியின் கணவரான பரமேஸ்வரருக்கு மட்டும் அழிவு ஏற்படுவதில்லை; அதன் காரணம் அவர் அவளுடைய உடலில் பாதி அங்கம் ஆனவர், அவர்கள் இருவரும் என்றும் நிலையானவர்கள், அவர்களுக்கு அழிவு என்பதே கிடையாது
——–
-54-
पवित्रीकर्तुं नः पशुपतिपराधीनहृदये
दयामित्रैर्नेत्रैररुणधवलश्यामरुचिभिः ।
नदः शोणो गङ्गा तपनतनयेति ध्रुवममुं
त्रयाणां तीर्थानामुपनयसि संभेदमनघम् ॥
பவித்ரீகர்தும் ந: பஶுபதிபராதீனஹ்ருதயே
தயாமித்ரைர்னேத்ரைரருணதவலஶ்யாமருசிபி: ।
நத: ஶோணோ கனகா தபனதனயேதி த்ருவமமும்
த்ரயாணாம் தீர்தானாமுபனயஸி ஸம்பேதமனகம் ॥
இந்த ஸ்லோகத்தை 1000 முறை என
45 நாட்கள் பாராயணம் செய்தால்
பாலியல் நோய்கள் நிவர்த்தி ஆகும்
ஹே பராசக்தி
பசுபதி நாதர் எனும் சிவபெருமானையே எப்போதும் மனதில் நினைத்துக் கொண்டிருக்கும் அன்னையே, புனித நதிகளான, சிவப்பு நிறத்தில் ஓடும் சோணபத்ரா நதி (சரஸ்வதி) நதி, வெண்மை நிறத்திலான பாகீரதி எனும் கங்கை நதி மற்றும் கரும் நீல நிறத்திலான யமுனை நதிகளின் சங்கமம் போல விளங்கும் உனது சிவப்பு, வெண்மை மற்றும் கருமை நிறத்திலான விழிகள் எங்களுக்கு கருணைக் காட்டி, எங்களை புனிதப்படுத்துகின்றது.
- (விளக்கம் :
புனித நதிகளில் நீராடுவது பாவங்களைப் போக்கும் என்பது பொதுவான கருத்து ஆகும், குறிப்பாக கங்கை, யமுனை மற்றும் சோணபத்ரா (சரஸ்வதி) போன்ற நதிகளின் சங்கமத்தில் (இணைந்து சேரும் இடங்கள்) குளிக்கும்போது நமது பாவங்கள் தீரும் என்பது நம்பிக்கை. இன்று சரஸ்வதி நதி வெளியில் தெரியாமல் காணாமல் போய் பல நூற்றாண்டுகள் ஆகி விட்டது என்றாலும் அது இன்றும் திரிவேணி சங்கமத்தில் வெளித் தெரியாமல் கங்கை மற்றும் யமுனை நதிகளின் அடியில் கலந்து உள்ளது என்ற நம்பிக்கை வலுவாக உள்ளது. அதனால்தான் திரிவேணி சங்கம் (மூன்று நதிகளின் சங்கமம்) என்பதாக அதைக் குறிப்பிடுகின்றார்கள். - ஆதி சங்கரர் பராசக்தியின் கண்களை அந்த மூன்று நதிகளுடன் ஒப்பிடுகிறார் என்பதின் காரணம் அவற்றின் நிறங்கள் பராசக்தியின் கண்களில் காணப்படும் – சிவப்பு, வெள்ளை மற்றும் கருப்பு- நிறங்களை ஒத்திருக்கின்றன.
- பசுபதி என்ற சிவபெருமானிடம் முழு மனதுடன் சரணடைந்துள்ள பராசக்தி மனித குலத்தின் மீது கொண்டுள்ள கருணையினால் தனது கண்களில் இந்த மூன்று நதிகளின் சங்கமங்களை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றாள் என்பது ஆதி சங்கரரின் நம்பிக்கை ஆகும்.
- சோணபத்ரா நதி தங்க நிறத்திலான இளம் சிவப்பு நிறத்தில் இருந்ததாகவும், கங்கை நதி பளிங்குக் கல்லை போன்று நிறமற்றதாகவும் (வெள்ளை), யமுனை நதியோ கரும் நீல நிறத்தில் உள்ளதாகவும் புராணங்களில் மற்றும் ரிக்வேத குறிப்புக்களில் கூறப்பட்டு உள்ளன.
- ஒரு வகையில் பார்த்தால் யமுனை மற்றும் சோணபத்ரா எனப்படும் நதிகள் இரண்டும் கங்கை நதியின் துணை நதிகள் ஆகும்.
- அதனால்தானோ என்னவோ பராசக்தியின் கண்களில் காணப்படும் கருப்பு நிறத்திலான விழிகளை சுற்றி உள்ள வெள்ளை நிறத்திலான விழி வெண் படலத்தில் காணப்படும், சிறிய அளவிலான சிவப்பு நிறத்திலான நரம்புகளை, காணாமல் போய் விட்ட இளம் சிவப்பு நிறத்தில் இருந்த சரஸ்வதி நதி என்றும், வெள்ளை விழி படலத்தை கங்கை நதி என்றும் கருமை நிறத்திலான விழிகளை யமுனை நதி என்றும், மூன்று நதிகளையும் பராசக்தி தனது விழிகளில் அடக்கிக் கொண்டு உள்ளாள் என்றும் ஆதி சங்கரர் கருதி அதை நமக்கு இந்த ஸ்லோகத்தின் மூலம் உணர்த்தி இருக்கின்றார்.
- பண்டைய இந்திய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள சரஸ்வதி நதி, இமயமலையில் தோன்றி, இந்தியாவின் வட மேற்குப் பகுதியில் பாய்ந்து, பிரயாகையில் த்ரிவேணி சங்கமம் எனும் இடத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி சங்கமம் ஆகின்றன என்பதான நம்பிக்கை உள்ளது. ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட பெரும் பூகம்பத்தினால் ஏற்பட்ட மாற்றங்களினால் ஆறுகளின் ஓட்டங்கள் திசை மாறி விட்டதினால் சரஸ்வதியின் நீர் யமுனையுடன் இணைந்து ராஜஸ்தானின் தார் பாலைவனத்தில் வறண்டு விட்டது என்று நம்புகின்றார்கள்.
- சரஸ்வதி நதி இன்னும் தார் பாலைவனத்திற்குக் கீழே பாய்கிறது என்றும் அதன் இமயமலை இணைப்பு உயிருடன் இருப்பதாகவும் நம்பப்படுகிறது).
———
-55-
निमेषोन्मेषाभ्यां प्रलयमुदयं याति जगती
तवेत्याहुः सन्तो धरणिधरराजन्यतनये ।
त्वदुन्मेषाज्जातं जगदिदमशेषं प्रलयतः
परित्रातुं शङ्के परिहृतनिमेषास्तव दृशः ॥
நிமேஷோன்மேஷாப்யாம் ப்ரலயமுதயம் யாதி ஜகதீ
தவேத்யாஹு: ஸந்தோ தரணிதரராஜன்யதனயே ।
த்வதுன்மேஷாஜ்ஜாதம் ஜகதிதமஶேஷம் ப்ரலயத:
பரித்ராதும் ஶனகே பரிஹ்ருதனிமேஷாஸ்தவ த்ருஶ: ॥
இந்த ஸ்லோகத்தை 2500 முறை என
45 நாட்கள் பாராயணம் செய்தால்
சத்ருக்கள் அழிவார்கள், உயிரணு விதைப்பை நோய் நிவர்த்தி ஆகும்
ஹே பராசக்தி
பர்வதராஜன் ஹிமயவனின் மகளான உன்னுடைய கண்களில் இருந்துதான் இந்த உலகம் தோன்றுகின்றது, அழிகிறது, மீண்டும் தோன்றுகின்றது என்பதாகவே ஞானிகளும் ரிஷி முனிவர்களும் கூறுகின்றார்கள். நீ கண்களை திறந்து வைத்திருக்கும் போது இந்த உலகம் அழியாமல் உள்ளது; கண் இமைகளை மூடினால் உலகம் அழிந்து விடும்; நீ கருணை மிக்கவள், உன்னால் படைக்கப்பட்ட உலகம் அழிந்து விடக் கூடாது என்பதற்காகத்தான் உன் இமைகளைக் கூட அசைக்காமல் கண்களை திறந்தபடியே காணப்படுகின்றாய்.
- (விளக்கம் :
சமஸ்கிருதத்தில் இரண்டு அழகான சொற்றொடர்கள் உள்ளன. அவை ‘சிருஷ்டி-திருஷ்டி’ என்றும் ‘திருஷ்டி-சிருஷ்டி’ என்றும் கூறப்படும். - ‘சிருஷ்டி-திருஷ்டி‘ என்றால் நீங்கள் ‘இருப்பதைப் பார்க்கிறீர்கள்‘ என்பது அர்த்தம். அதே போல திருஷ்டி-சிருஷ்டி என்றால் ‘நீங்கள் பார்க்க விரும்புவதை உருவாக்குகிறீர்கள்‘ என்பது அர்த்தம்.
- ஆகவே பராசக்தி பிரபஞ்சத்தை உருவாக்குவதை ‘சிருஷ்டி-திருஷ்டி‘ என்றும் அதே பிரபஞ்சத்தை நாம் பார்ப்பதை திருஷ்டி- சிருஷ்டி என்கின்றோம்.
- நமக்கு தோன்றும் வஸ்துக்களுடைய தோற்றங்கள் அனைத்துமே நாம் பார்க்கும் பார்வையில்தான் உள்ளன. ஒரு பொருளை நமது கண்ணின் உள்ளே உள்ள லென்ஸ் என்னும் கருவியால் பார்க்கிறோம். நல்ல கண்பார்வை அற்றவனுக்கு ஒரு பொருள் சிறிதாக தோன்றலாம் ஆனால் அதே பொருள் கண்பார்வை கோளாறு உள்ளவனுக்கு பெரியதாக தோன்றும். ஆகவே நாம் பார்க்கும் பொருளில் கூட இரண்டு கருத்துக்கள் இருக்கலாம். அதைத்தான் ‘திருஷ்டி சிருஷ்டி வாதம் ‘ என்று கூறுகின்றார்கள்.
- நாம் கண்களை மூடிக் கொண்டு கனவு காண்கின்றோம், அதில் பல பொருட்களும், இயற்கை காட்சிகளும் நமது எண்ண அலைகளின் விருப்பம் போல, பார்ப்பவை அனைத்துமே நிஜம் போல தோன்றும். ஆனால் நாம் கண்களை திறந்தவுடன் அவை அனைத்துமே மறைந்து விடுகின்றது. ஆனால் பராசக்தியின் கண்கள் மூடிக் கொண்டால் பிரபஞ்சம் அழிந்து பஸ்பமாக காட்சி தருகின்றது. அவள் கண்களை திறந்தால் பல்வேறு ரம்யமான இயற்கை காட்சிகளுடன் கூடிய பிரபஞ்சம் உருவாகின்றது. இதுதான் நமக்கும் பராசக்தியின் பார்வைக்கும் உள்ள வித்தியாசம் ஆகும்.
- அதனால்தான் இந்த ஸ்லோகத்தில் ஆதி சங்கரர் கூறுகின்றார், ‘ஹே மலைராஜனின் மகளே, இந்த பிரபஞ்சத்தின் தோற்றமும் மறைவும் உன்னுடைய கண் பார்வையில்தான் உள்ளது. நீ கண்களை திறந்து கொண்டு இருக்கும்போது உலகம் தோற்றம் அளிக்கின்றது. ஆனால் நீ கண்களை மூடிக் கொண்ட அடுத்த க்ஷணமே உலகம் அழிந்து விடுகின்றது. இதுவே தோற்றம் எனும் ஸ்ருஷ்டியாகவும், அழிவு எனும் த்ருஷ்டி தத்துவமாக உள்ளது என்பது எனக்கு தெரிகின்றது.
- நீயோ கருணை மிக்கவள், எப்போது கண்கள் மூடிக் கொண்டால் உலகம் அழிந்து விடுமோ என்ற எண்ணத்தில்தான் உனது கண்களின் இமைகளைக் கூட அசைக்காமல் உலகை பார்த்தபடியே இருக்கின்றாய் என்பதை பார்க்கும்போது ஆனந்தமாக உள்ளது’ என்று அன்னையின் கருணையைக் குறித்து புகழாரம் சூட்டுகிறார்)
———
-56-
तवापर्णे कर्णेजपनयनपैशुन्यचकिता
निलीयन्ते तोये नियतमनिमेषाः शफरिकाः ।
इयं च श्रीर्बद्धच्छदपुटकवाटं कुवलयम्
जहाति प्रत्यूषे निशि च विघटय्य प्रविशति ॥
தவாபர்ணே கர்ணேஜபனயனபைஶுன்யசகிதா
நிலீயந்தே தோயே நியதமனிமேஷா: ஶபரிகா: ।
இயம் ச ஶ்ரீர்பத்தச்சதபுடகவாடம் குவலயம்
ஜஹாதி ப்ரத்யூஷே நிஶி ச விகடய்ய ப்ரவிஶதி ॥
இந்த ஸ்லோகத்தை 1000 முறை என
45 நாட்கள் பாராயணம் செய்தால்
அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை கிடைக்கும்
ஹே பராசக்தி
காதுகள் வரை நீண்டு இருக்கும், நீலோத்பல புஷ்பங்கள் போன்றதும், சப்ஹாரிகா மீன்களை போன்றதுமான நீண்ட இமைகளைக் கொண்ட, உங்கள் கண்கள், எங்கே தம்மைப் பற்றி தவறாக உங்கள் காதுகளில் கூறி விடுமோ என்ற பயத்தில் சப்ஹாரிகா மீன்கள் உறங்காமல் கண்களை திறந்து கொண்டே நீரில் இருக்க, நீலோத்பல புஷ்பங்களும் அதே காரணத்திற்காக இரவில் கண்களை திறந்து வைத்தபடி உள்ளன. உங்கள் கண்களில் வாசம் செய்யும் லஷ்மி தேவியோ, தன்னைப் பற்றி நீலோத்பல புஷ்பம் உங்களிடம் எதுவும் கூறி விடுமோ என்ற பயத்தில் இரவில் திறந்து இருக்கும் அந்த புஷ்பத்தில் சென்று உறங்குகின்றாள்.
- (விளக்கம் :
இந்த ஸ்லோகத்திலும் பராசக்தியின் கண்களின் அழகை குறித்தே வர்ணிக்கப்பட்டு உள்ளது. பராசக்தியின் கண்கள் என்றுமே விழித்துக் கொண்டு உள்ள ‘சப்ஹாரிகா’ என்ற மீனின் குணத்தோடு ஒப்பிட்டு கூறப்பட்டு உள்ளன. அந்த மீன்கள் எப்போதும் கண்களை விழித்து வைத்துக் கொண்டே இருக்குமாம், தூங்குவது இல்லை. அதுவே அதன் தனி குணம். அது போலவே இந்த பிரபஞ்சத்தை தனது கண்களை மூடாமல் பார்த்தபடி இருந்து கொண்டு தேவி இரட்சித்துக் கொண்டு இருக்கின்றாள். இரவில் மட்டும் தேவி யோகா நித்திரையில் இருக்கின்றாள். அதாவது கண்கள் திறந்தே இருக்கும், ஆனால் அதில் இயக்கம் இல்லாமல் ஓய்வில் இருக்கும். - பராசக்தியின் கண்கள் மீன் விழி போன்றது, அது காதுகள் வரை நீண்டு உள்ளது என்பதாக ஏற்கனவே கூறப்பட்டு உள்ளது. ‘சப்ஹாரிகா‘ மீன்கள் தாம் உறங்கி விட்டால் பராசக்தியின் கண்களானது தம்மைக் குறித்து தேவியின் காதுகளில் எதையும் கூறி விடுமோ என்ற பயத்தில் நாள் முழுவதும் விழித்துக் கொண்டு அந்த கண்கள் நகரும் திசைகளையே பார்த்துக் கொண்டு இருக்கின்றன.
- அதே போலவேதான் பராசக்தியின் கண்களில் வாசம் செய்யும் லட்சுமி தேவியும் எங்கே தாம் தூங்கும் சமயத்தில் பராசக்தியின் கண்களானது தம்மைக் குறித்து தேவியின் காதுகளில் எதையும் கூறி விடுமோ என்ற பயத்தில் நாள் முழுவதும் விழித்துக் கொண்டு அந்த கண்கள் நகரும் திசைகளையே பார்த்துக் கொண்டு இருக்கின்றாள் என்பதினால் பகலில் லட்சுமி தேவியின் கண்களும் மூடுவது இல்லை; சப்ஹாரிகா மீன்களின் கண்களும் மூடுவது இல்லை. இப்படியாக சப்ஹாரிகா மீன்களும் லட்சுமி தேவியும் ஒருவருக்கு ஒருவர் உதவுவது போல அன்னையின் கண்களின் அசைவை வேவு பார்த்தபடி இருக்கிறார்களாம்.
- தேவியின் இமைகளோ நீலோத்பல பூக்களை போன்றது என்பது ஏற்கனவே கூறப்பட்டு உள்ளது. நீலோத்பல பூக்களோ இரவில் மட்டுமே மலரும். தன்னை வழிபட பகல் முழுவதும் காத்திருக்கும் பக்தர்களுக்கு அருள் புரிவதற்காக பகல் முழுவதும் தானும் முழித்துக் கொண்டே உள்ள லட்சுமி தேவியோ, இரவில் தூங்குகையில், நீலோத்பல பூக்கள் தேவியிடம் தம்மைக் குறித்து எதையாவது கூறி விட்டாள் என்ன ஆவது என பயந்து கொண்டு, இரவில் பராசக்தி யோக நித்திரையில் இருக்கும்போது அவளுக்கு தெரியாமல், தேவியின் கண்களில் வாசம் செய்யும் லட்சுமி தேவி, இரவில் மலரும் நீலோத்பல பூக்களுக்குள் சென்று, அதில் உறங்கி, நீலோத்பல பூக்கள் தேவியின் கண்களிடம் தன்னை குறித்து கூறி விடாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்கின்றாள்.
- இப்படியாக தேவியின் கண்களை லஷ்மி முதல் நீலோத்பல பூக்கள் மற்றும் சப்ஹாரிகா மீன்கள் வரை அனைவரும் வேவு பார்த்தபடி இருந்தாலும் கருணை மிக்க தேவியோ தனது கண்களை மூடாமல் லோகத்தை பார்த்தபடி அதை ரட்ஷித்துக் கொண்டு இருக்கின்றாள் என்பதே இந்த ஸ்லோகத்தின் தாத்பர்யமாக ஆதி சங்கரர் கூறி உள்ளார்.
——–
-57-
दृशा द्राघीयस्या दरदलितनीलोत्पलरुचा
दवीयांसं दीनं स्नपय कृपया मामपि शिवे ।
अनेनायं धन्यो भवति न च ते हानिरियता
वने वा हर्म्ये वा समकरनिपातो हिमकरः ॥
த்ருஶா த்ராகீயஸ்யா தரதலிதனீலோத்பலருசா
தவீயாம்ஸம் தீனம் ஸ்னபய க்ருபயா மாமபி ஶிவே ।
அனேனாயம் தன்யோ பவதி ந ச தே ஹானிரியதா
வனே வா ஹர்ம்யே வா ஸமகரனிபாதோ ஹிமகர: ॥
இந்த ஸ்லோகத்தை 1000 முறை என
45 நாட்கள் பாராயணம் செய்தால்
சகல சௌபாக்கியங்களும் உண்டாகும்
ஹே பராசக்தி
நீலோத்பல புஷ்பத்தை போன்ற இமைகளுடனான அற்புதமான கண்களைக் கொண்ட, காது வரை நீண்டுள்ள உனது கண்களின் கருணைப் பார்வை, சந்திரனின் குளிர்ந்த கிரணங்கள், எப்படி, காடுகள், அரண்மனைகள் போன்ற அனைத்து இடங்களிலும் எந்த பேதமும் இன்றி ஒரே நிலையிலான ஒளியை வீசுகின்றதோ, அதே போன்று உனது கருணை பார்வை, ஏழை மற்றும் சற்றும் பாக்கியமும் இல்லாதவனாகிய என் பக்கமும் சிறிதளவு திரும்புமா?
- (விளக்கம் :
இந்த ஸ்லோகத்தின் மூலம், ஆதி சங்கரர், பராசக்தி தேவியிடம், தான் ஒரு பரிதாபமான நிலையில் உள்ள அனாதையைப் போன்றவர் என்றும், தூரத்தில் நிற்கும் தன் மீது கருணை காட்டுமாறும் வேண்டுகின்றார்; காரணம் அவளை சுற்றி தேவர்களும் தெய்வங்களும் எப்போதுமே நின்று கொண்டு இருப்பதினால் அவளது அருகில் செல்ல முடியவில்லை என்று கூறும் அவர், அவளுடைய கருணையுள்ள கண்களை, மலர்ந்த நீலோத்பவ மலர்களுடன் ஒப்பிட்டுக் காட்டுகின்றார். - பனி உருண்டை போன்ற சந்திர ஒளி கதிர்கள், மாளிகையோ அல்லது அடர்ந்த காடோ அனைத்தின் மீதும் ஒரே அளவிலான வெளிச்சத்தை வீசுவதை போலவே அனைவர் மீதும் அவள் காட்டும் கருணை தன் மீதும் விழ வேண்டும் என்று வேண்டிக் கொள்கின்றார். அவள் எங்கும் நிறைந்தவள் என்பதை அறிந்ததால், அவள் நீண்ட தூரத்தில் நின்றிருந்தாலும் கூட அவளுடைய அருளைத் வேண்டினார்.
- பராசக்தியின் கருணையைக் குறித்த ஆதி சங்கரரின் ஒப்பீடு சூரியனுடன் இல்லாமல் சந்திரனுடன் இருந்ததின் காரணம் ஒருவரின் குணம் குளிர்ச்சியான அம்சம் என்பதால், கருணை உள்ளம் கொண்ட அவளது குணத்தை சந்திரனின் ஒளியோடு ஒப்பிட்டு உள்ளார்).
——–
-58-
अरालं ते पालीयुगलमगराजन्यतनये
न केषामाधत्ते कुसुमशरकोदण्डकुतुकम् ।
तिरश्चीनो यत्र श्रवणपथमुल्लङ्घ्य विलस-
न्नपाङ्गव्यासङ्गो दिशति शरसंधानधिषणाम् ॥
அராலம் தே பாலீயுகலமகராஜன்யதனயே
ந கேஷாமாதத்தே குஸுமஶரகோதண்டகுதுகம் ।
திரஶ்சீனோ யத்ர ஶ்ரவணபதமுல்லனக்ய விலஸ-
ந்னபானகவ்யாஸனகோ திஶதி ஶரஸந்தானதிஷணாம்॥
இந்த ஸ்லோகத்தை 5000 முறை என
45 நாட்கள் பாராயணம் செய்தால்
அனைத்து வியாதிகளும் குணமாகும்
ஹே பராசக்தி
மலையரசனின் மகளே, உன்னுடைய கண்களுக்கும் காதுகளுக்கும் இடையில் உள்ள கன்னப் பகுதியை பார்க்கும் எவருக்கும் அது மன்மதனின் கையில் உள்ள புஷ்பத்தில் ஆன வில்லை போலவே காட்சி தரும் எனும் வகையில் அழகாக வளைந்து காணப்படுகின்றது. உன்னுடைய கடைக்கண் பார்வையோ உனது காதையும் தாண்டிச் செல்வதை பார்த்தால், அது அந்த வில்லில் இருந்து எறியப்படும் பாணமோ (அம்பு) என்பதை போல அல்லவா காட்சி அளிக்கின்றது.
- (விளக்கம்:
இந்த ஸ்லோகத்தின் மூலம் ஆதி சங்கரர், பராசக்தியின் விண்மீன் போன்ற கண்களின் கூர்மையான முனை மற்றும் காது மடல்களுக்கு இடையில் வளைந்து காணப்படும் கன்னத்தின் தோற்றத்தை மலர்களால் ஆன மன்மதனின் வளைந்த வில்லுடன் ஒப்பிடுகிறார். காது மடல்களை நோக்கி பார்க்கும் தேவியின் கடைக்கண் பார்வை மன்மதனின் மலர் வில்லில் இருந்து ஏவப்பட அம்பைப் போன்ற தோற்றத்தை ஆதி சங்கரருக்கு தந்ததினால் பராசக்தியின் முக அழகை மன்மதனின் மலர்களால் ஆன வில் மற்றும் அம்புடன் ஒப்பிட்டு உள்ளார். - சிவபெருமானின் தவத்தைக் கலைக்க மன்மதன் அனுப்பப்பட்ட போது, அவர் தனது மலர் வில்லில் இருந்து காமத்திலான ஆன அம்பை எய்தார்.
- சிவபெருமான்கண்களைத் திறந்தபோது, மன்மதனின் எய்த அம்பானது, பராசக்தியின் அழகிய பார்வை தன்னை பக்கவாட்டில் இருந்து இழுப்பதை போல காட்சி தந்தபோது, அது பகவானின் இதயத்தில் நெருப்பை எழுப்பியது. ஆனால் ஆனால் அடுத்த கணத்திலேயே அது மன்மதனின் வில்லில் இருந்து வெளியான அம்பு என்பதை உணர்ந்தவர் மன்மதனை தனது மூன்றாவது கண்ணால் எரித்து விட்டார்).
——
-59-
स्फुरद्गण्डाभोगप्रतिफलितताटङ्कयुगलं
चतुश्चक्रं मन्ये तव मुखमिदं मन्मथरथम् ।
यमारुह्य द्रुह्यत्यवनिरथमर्केन्दुचरणं
महावीरो मारः प्रमथपतये सज्जितवते ॥
ஸ்புரத்கண்டாபோகப்ரதிபலிததாடனகயுகலம்
சதுஶ்சக்ரம் மன்யே தவ முகமிதம் மன்மதரதம் ।
யமாருஹ்ய த்ருஹ்யத்யவனிரதமர்கேந்துசரணம்
மஹாவீரோ மார: ப்ரமதபதயே ஸஜ்ஜிதவதே ॥
இந்த ஸ்லோகத்தை 1000 முறை என
45 நாட்கள் பாராயணம் செய்தால்
உலகையே கவர்ந்தவனாக இருப்பான்
ஹே பராசக்தி
உனது முகத்தில் இருபுறமும் உள்ள கன்னங்கள் கண்ணாடியைப் போல வழுவழுப்பாக இருப்பதினால், உனது காதுகளில் உள்ள இரண்டு தோடுகளின் வடிவமும் அதில் பிரதிபலிக்கையில், தூரத்தில் நின்று பார்க்கும்போது அது நான்கு சக்கரங்களை கொண்ட மன்மதனின் தேர் போல காட்சி அளிக்கின்றது. அதில் ஏறிக் கொண்டுதான் மன்மதனும் தாரகாசுரனை வென்ற, சூரிய சந்திரர்களை சக்கரங்களாகக் கொண்ட, பூமித் தேரில் வந்த பரமேஸ்வரரை எதிர்த்து போர் புரிய வந்தானோ என்று எண்ணத் தோன்றுகின்றது.
- (விளக்கம்:
இந்த ஸ்லோகத்திலும் ஆதி சங்கரர் பராசக்தியின் முக அழகை முக்கியமாக கண்ணாடியைப் போல பளபளக்கும் கன்னங்களின் அழகை வர்ணனை செய்து உள்ளார். - இதை மேலோட்டமாக பார்க்கக் கூடாது. மன்மதனைக் கண்டால் பராசக்திக்கு மிகவும் பிடிக்கும் என்பதினால், தவத்தில் இருந்த பரமேஸ்வரனின் தவத்தைக் கலைக்க மன்மதனின் உதவியை பெற்றுக் கொண்டாள். எதற்காக ஆதி சங்கரர் அன்னையின் அழகை வர்ணனை செய்து உள்ளார் என்றால், அவளது அழகு சிவபெருமானைக் கூட மயக்கி விடுகின்றது என்பதை உலகிற்கு காட்ட வேண்டும் என்ற நோக்கம்தான்.
- பரமேஸ்வரனோ மஹா யோகி, அனைத்து குணங்களுக்கும் அப்பாற்பட்டவர், எதனாலும் ஈர்க்கப்பட்ட முடியாதவர். அவருடைய ஒரே பலவீனமே பராசக்திதான்.
- மன்மதன் மூலம் பராசக்தி சிவபெருமானின் தவத்தைக் கலைத்ததும் ஒரு நிமிடம் பராசக்தியின் முகத்தை நோக்கினால் அவளது அழகில் பரமேஸ்வரர் மயங்கி விடுவார் என்பதினால்தான், மன்மதன் பராசக்தியின் முகத்தில் இருந்து காம பாணத்தை விட்டதை போன்ற தோற்றத்தை சிவபெருமானின் மனதில் ஏற்படுத்தி இருந்தாள்.
- பராசக்தியின் கன்னத்தில் தோன்றிய பிம்பத்திலான நான்கு சக்கர தேரில் ஏறிக் கொண்டு, மன்மதன் சிவபெருமானுடன் மனதை மயக்கும் யுத்தம் செய்து அதில் வெற்றி பெற்றான். இதில் இருந்து பராசக்தியின் கன்னங்களின் மேன்மை எப்படிப்பட்டது என்பது புரியும்.
- அதை எடுத்துக் காட்டவே பராசக்தியின் அழகை பல்வேறு ஸ்லோகங்கள் மூலம் ஆதி சங்கரர் வர்ணனை செய்து உள்ளாரே தவிர அவர் அன்னையின் அழகை பார்த்து ரசிக்கவில்லை. காரணம் ஆதி சங்கரரும் பரமேஸ்வரரைப் போன்றே அனைத்து குணங்களுக்கும் அப்பாற்பட்டவர், எதனாலும் ஈர்க்கப்பட்ட முடியாதவர், அனைத்தையும் துறந்து நின்ற மஹா யோகி.
- ஆதி சங்கரர் தியான நிலையில் இருந்தபோது பராசக்தியையும் பரமேஸ்வரரையும் நேரடியாக பார்த்தபோது, அவர்கள் எப்படி அவருக்கு தோற்றம் அளித்தார்களோ அவற்றைத்தான் ஸ்லோகங்களில் விளக்கிக் கூறி உள்ளார்.)
——–
-60-
सरस्वत्याः सूक्तीरमृतलहरीकौशलहरीः
पिबन्त्याः शर्वाणि श्रवणचुलुकाभ्यामविरलम् ।
चमत्कारश्लाघाचलितशिरसः कुण्डलगणो
झणत्कारैस्तारैः प्रतिवचनमाचष्ट इव ते ॥
ஸரஸ்வத்யா: ஸூக்தீரம்ருதலஹரீகௌஶலஹரீ:
பிபந்த்யா: ஶர்வாணி ஶ்ரவணசுலுகாப்யாமவிரலம் ।
சமத்காரஶ்லாகாசலிதஶிரஸ: குண்டலகணோ
ஜணத்காரைஸ்தாரை: ப்ரதிவசனமாசஷ்ட இவ தே ॥
இந்த ஸ்லோகத்தை 1000 முறை என
45 நாட்கள் பாராயணம் செய்தால்
நல்ல அறிவாற்றல் பெறுவான்
ஹே பராசக்தி
பரமேஸ்வரரின் பத்தினியே, உலகின் தாயே, உனது நாவில் இருந்து வெளி வந்த அமிர்தம் போன்ற வார்த்தைகளை கவனமாக கேட்டு ரசித்த வண்ணம் சரஸ்வதி தேவி இருந்தாள். அப்போது, அதன் உள் அர்த்தங்களை அறிந்து கொண்டபோது வியப்புடன் தன்னை மறந்து தலையை ஆட்டிக் கொண்டு இருந்தபோது, அவளது காதுகளில் அணிந்து கொண்டுள்ள குண்டலங்கள் அசைந்து, அசைந்து வெளிப்படுத்திய ஓசை, உனது வாயில் இருந்து பிரவாகம் போல வெளிப்பட்ட வார்த்தைகளை ஆமோதித்துக் கொண்டு இருந்ததை போல காணப்பட்டது.
- (விளக்கம்:
இந்த ஸ்லோகத்தில் ஆதி சங்கரர் பராசக்தியின் வாயில் இருந்து வெளிவந்து கொண்டிருந்த அமிர்தம் போன்ற இனிமையான வார்த்தைகளை குறித்துக் கூறி உள்ளார். - பராசக்தியின் வாக்கு வலிமைக்கு ஈடு இணை கிடையாது . அத்தனை ஏன், வாக்கின் அதிபதி என்று சொல்லக் கூடிய சரஸ்வதி தேவியே கூட பராசக்தியின் வாக்கு வலிமைக்கு நிகரானவள் அல்ல என்பதை இந்த ஸ்லோகம் மூலம் ஆதி சங்கரர் எடுத்துக் காட்டி உள்ளார்.
- ஒருமுறை பராசக்தியானவள் தனது சபையில் யாராலும் எளிதில் கூற முடியாத பல அர்த்தங்களைக் கொண்ட சிலவற்றை தனது சொல்லாற்றலினால் கூறிக் கொண்டு இருந்தபோது, வாக்கு மேன்மைக்கு அதிபதியான சரஸ்வதி கூட பராசக்தியின் வாயில் இருந்து வெளி வந்து கொண்டிருந்த வார்த்தைகளின் அர்த்தங்களைக் கேட்டு வியப்புடன் தன்னை மறந்து, தன்னையும் அறியாமல் தனது தலையை ஆட்டியபடியே அவற்றை ரசித்துக் கொண்டு இருந்தாளாம்.
- எங்கே தனது வீணையின் நாத ஒலியினால் அன்னையின் சொற்பொழிவு நின்று விடுமோ என்று பயந்து போன சரஸ்வதி தனது வீணையின் இசையை நிறுத்தி விட்டு அவற்றைக் கேட்டுக் கொண்டு இருந்தபோது அவளது காதுகளில் குண்டலம் போன்று அணிந்து இருந்த காதணிகலன்கள் ஆடி ஆடி எழுப்பிய மெல்லிய ஓசை பராசக்தியின் வார்த்தைகளுக்கு மெருகூட்டிக் கொண்டிருந்த ஒரு இசை வாத்தியம் போல இருந்ததாக ஆதி சங்கரர் கூறி உள்ளார்).
——
61-
असौ नासावंशस्तुहिनगिरिवंशध्वजपटि
त्वदीयो नेदीयः फलतु फलमस्माकमुचितम् ।
वहन्नन्तर्मुक्ताः शिशिरतरनिश्वासगलितं
समृद्ध्या यत्तासां बहिरपि च मुक्तामणिधरः ॥
அஸௌ நாஸாவம்ஶஸ்துஹினகிரிவம்ஶத்வஜபடி
த்வதீயோ நேதீய: பலது பலமஸ்மாகமுசிதம் ।
வஹன்னந்தர்முக்தா: ஶிஶிரதரனிஶ்வாஸகலிதம்
ஸம்ருத்த்யா யத்தாஸாம் பஹிரபி ச முக்தாமணிதர: ॥
இந்த ஸ்லோகத்தை 12000 முறை என
8 நாட்கள் பாராயணம் செய்தால்
டுக்கும் அனைத்து காரியங்களும் வெற்றி அடையும்
ஹே பராசக்தி
பர்வத ராஜனின் வம்சத்திற்கு ஒளியூட்ட வந்த மகளே, முத்து மூக்குத்தியை தரித்துக் கொண்டிருக்கும் உனது அழகிய மூக்கானது, கணுக்காலுக்கு உள்ளே முத்துக்கள் நிறைந்து உள்ளதாக கூறப்படும் இள மூங்கில் போல் காட்சி தருகின்றது. நீ விடும் மூச்சுக் காற்றினால் வெளி வந்த ஒரு முத்தானது உனது மூக்குத்தியாக மாறி உனது மூக்கை அலங்கரிப்பதை போலவே காட்சி தருகின்றது. அந்த மூக்குத்தி எங்களுக்கு அனைத்து நன்மைகளையும் கிடைக்க அருள் புரியட்டும் என்று வேண்டுகின்றேன்.
- (விளக்கம்:
இந்த ஸ்லோகத்தில் ஆதி சங்கரர், தேவியின் முகத்தில், மூக்கின் மீதுள்ள அழகிய மூக்குத்தியை பற்றி விவரித்து உள்ளார். தேவியின் மூக்கு, ஒரு மூங்கில் போன்றே கீழே பருத்தும் மேலே ஒல்லியாகவும் காணப்படுவது இளம் மூங்கில் போன்றே உள்ளது என்றும், அவளது மூக்கில் காணப்படும் முத்து மூக்குத்தி அன்னைக்கு அழகை மட்டும் சேர்க்கவில்லை, அது பக்தர்களுக்கு தேவையான அருளையும் புரிகின்றது என்பதாக தெரிவிக்கின்றார். - மனித உடலில் மூன்று நாடிகள் உள்ளன. அவை இடை, பிங்கலை மற்றும் சுஷும்னா நாடி என்று அழைக்கப்படுகின்றன. இடை நாடி சூரியனுக்குச் சொந்தமானது மற்றும் உடலை வெப்பமாக்குகிறது; பிங்கலை நாடி சந்திரனுக்குச் சொந்தமானது, உடலை குளிர்விக்கிறது; சுஷும்னா நாடி அக்னியைக் குறிக்கிறது. இயற்கையின் செயலினால் ஒரு மூக்கு நாசி வழியே செல்லும் சுவாசமானது இதயப் பகுதியைக் கடந்து மற்றொரு நாசி வழியே வெளியில் வருகின்றது. தொடர்ந்து நிகழும் இந்த ஸ்வாச நிகழ்வு உடல் வெப்ப நிலையைப் பராமரிக்கவும் உடலுக்கும் இதயத்திற்கும் தேவையான ஆக்ஸிஜனை வழங்கவும் வழி வகுக்கின்றது. பராசக்தியின் மூக்கு பகுதி இந்த சுவாசப் பயிற்சியை செய்தவண்ணம் இருக்கையில் ஒரு முத்தானது அவளது அவளது நாசியிலிருந்து வெளியே வந்து அவளது மூக்குத்தி ஆகி இருக்க வேண்டும் என்பதாக இந்த ஸ்லோகத்தில் ஆதி சங்கரர் எடுத்துக் காட்டி உள்ளார்.
- பொதுவாக, முத்துக்கள் கடலில் உள்ள கிளிஞ்சல்களில் இருந்து எடுக்கப்படுவதாக அனைவரும் நம்புகிறார்கள், இருப்பினும், முத்துக்கள் சில சிறப்பு வகை பாம்புகளிலிருந்தும், சில வகை யானைகளின் முன் கோளங்களிலிருந்தும், மற்றும் கரும்புகளின் உட்புறமுள்ள பகுதிகளிலிருந்தும் எடுக்கப்படுகின்றன என்பதும் தெரிகின்றது.
- முத்துக்கள் கடலுக்குள் இருந்து மட்டுமே கிடைப்பது இல்லை. மூங்கில் கணுக்கால்களுக்கு இடையே உள்ள இடை வெளியிலும் நீர் வற்றி முத்துக்கள் பிறக்கின்றனவாம். அவை பிறக்கும் இடங்களை பொறுத்தே அவற்றின் நிறங்களும் வடிவங்களும் இருக்குமாம். முத்துக்கள் எங்கெங்கே பிறக்கின்றன என்பதை தமிழ் இலக்கியங்கள், புராணங்கள் மற்றும் சமஸ்கிருத நூல்களிலும் கூறப்பட்டு உள்ளது. கருட புராணத்தில் கூட முத்துக்கள் பற்றி கூறப்பட்டு உள்ளதாம்).
———
-62-
प्रकृत्या रक्तायास्तव सुदति दन्तच्छदरुचेः
प्रवक्ष्ये सादृश्यं जनयतु फलं विद्रुमलता ।
न बिम्बं तद्बिम्बप्रतिफलनरागादरुणितं
तुलामध्यारोढुं कथमिव विलज्जेत कलया ॥
ப்ரக்ருத்யா ரக்தாயாஸ்தவ ஸுததி தந்தச்சதருசே:
ப்ரவக்ஷ்யே ஸாத்ருஶ்யம் ஜனயது பலம் வித்ருமலதா ।
ந பிம்பம் தத்பிம்பப்ரதிபலனராகாதருணிதம்
துலாமத்யாரோடும் கதமிவ விலஜ்ஜேத கலயா ॥
இந்த ஸ்லோகத்தை 8000 முறை என
8 நாட்கள் பாராயணம் செய்தால்
நல்ல உறக்கம் வரும்
ஹே பராசக்தி
உன்னுடைய பல் வரிசையோடு கூடிய அழகிய சிவந்த உதடுகளுக்கு இணையாக வேறு எதைத்தான் கூற முடியும்? ஒருவேளை பவழக் கொடியின் (கடலில் வளரும் கொடி வகை) பழத்தைக் கூறலாம் என்றால் பவழக் கொடிக்கு பழம் கிடையாது. உள்ளே சிவப்பிலான கோவைப் பழத்தை ஒப்பிடலாம் என்றால், எந்த நிலையிலும் உனது உதடுகளுக்கு தான் சமமானது அல்ல என்று அது ஒதுங்கி கொண்டு விடுகின்றது.
- (விளக்கம்:
இந்த ஸ்லோகத்தின் மூலம் ஆதி சங்கரர் பராசக்தியின் அழகு மிக்க வெண்ணிறமான பற்களையும் அவளுடைய சிவந்த இரண்டு உதடுகளையும் குறித்து பெருமையாக கூறி உள்ளார். ஆனால் அவற்றோடு எதையுமே ஒப்பிட முடியாத அளவினால் அழகானவை என்பதினால் அது குறித்து மேலும் எதையும் கூறாமல் இந்த ஸ்லோகத்தை முடித்து விட்டார்).
——-
-63-
स्मितज्योत्स्नाजालं तव वदनचन्द्रस्य पिबतां
चकोराणामासीदतिरसतया चञ्चुजडिमा ।
अतस्ते शीतांशोरमृतलहरीमम्लरुचयः
पिबन्ति स्वच्छन्दं निशि निशि भृशं काञ्जिकधिया ॥
ஸ்மிதஜ்யோத்ஸ்னாஜாலம் தவ வதனசந்த்ரஸ்ய பிபதாம்
சகோராணாமாஸீததிரஸதயா சஞ்சுஜடிமா ।
அதஸ்தே ஶீதாம்ஶோரம்ருதலஹரீமம்லருசய:
பிபந்தி ஸ்வச்சந்தம் நிஶி நிஶி ப்ருஶம் காஞ்ஜிகதியா॥
இந்த ஸ்லோகத்தை 30,000 முறை என
30 நாட்கள் பாராயணம் செய்தால்
அனைவரையும் தன் வசம் ஆக்கலாம்
ஹே பராசக்தி,
சந்திரனைப் போன்ற உன் முகத்தில் எப்போதுமே புன்சிரிப்புதான் காணப்படுகின்றது. அந்த புன்சிரிப்பில் இருந்து வெளியேறிக் கொண்டே இருக்கும் ஒளிக் கதிர்களை இனிய பானத்தைப் பருகுவதை போல சகோரப் பறவைகள் குடித்து விடுகின்றன. உனது புன்சிரிப்பின் ஒளிக் கற்றைகளின் இனிப்பான சுவை திகட்டி விடுவதினால், இரவில் புளிப்பாக ஏதாவது கிடைக்குமோ என்ற ஆவலில் அந்த பறவைகள் சந்திரனின் ஒளி கற்றைகளை பருக தேடி அலைகின்றன.
- (விளக்கம்:
இந்த ஸ்லோகத்தில் ஆதி சங்கரர் பராசக்தியின் புன்முறுவலின் அபார தன்மையை விளக்கி உள்ளார். பராசக்தியின் சந்திரனைப் போன்ற முகத்தில் எப்போதுமே காணப்படும் புன்சிரிப்பில் இருந்து வெளிவரும் அமிர்தம் போன்ற புன்சிரிப்பின் அழகு அலைகள் நமது கண்களுக்கு தெரிவது இல்லை. - ஆனால் அவற்றில் இருந்து வெளிவந்து கொண்டே உள்ள அமிர்தம் போன்ற இனிய ஒளிக் கற்றைகளை சகோரா எனும் பறவைகளினால் பானம் போன்று அருந்த முடியும் என்பதினால் அவை அன்னையின் முகத்தில் இருந்து வரும் புன்னகையின் அமிர்த ஒளிக் கற்றைகளை குடித்துக் கொண்டே இருக்கின்றன.
- ஒரு கட்டத்தில் அவளது புன்சிரிப்பின் இனிப்பான ஒளிக் கதிர்களை பருகிக் கொண்டே இருக்கையில் அவற்றுக்கும் கூட அந்த இனிப்பு திகட்டி விடுமாம். அந்த அளவு வெளிவரும் பராசக்தியின் புன்சிரிப்பின் இனிப்பான ஒளிக் கற்றைகளை இனியும் தம்மால் பருக முடியாது எனும் நிலை தோன்றி விடும்போது அந்த பறவைகள் இரவில் எப்போது சந்திரன் தோன்றி தனது ஒளிக் கற்றைகளை வெளியிடுவார். அந்த ஒளிக் கற்றைகள் புளிப்பாக இருந்து இனிப்பின் சுவையை சற்று குறைக்குமா என எதிர்பார்த்து காத்திருக்குமாம்.
- சகோரா பறவை என்பது இந்து புராணங்களில் விவரிக்கப்பட்டுள்ள ஒரு பழம் பெரும் பறவையாகும். இந்த பறவை, கற்பனைப் பறவை என்பதாக சில நூல்களில் கூறப்பட்டு உள்ளது. வட இந்தியாவில் பல நாட்டுப்புற காதல் கதைகளிலும் சகோரா பறவை இடம் பெற்று உள்ளது. இந்த பறவை தினமும் சந்திரனில் இருந்து வெளி வரும் ஒளிக் கற்றைகளில் உள்ள, நமது கண்களுக்கு புலப்படாத அமிர்தம் போன்ற பானகத்தை குடித்து வாழ்கின்றதாம்).
–——–
-64-
अविश्रान्तं पत्युर्गुणगणकथाम्रेडनजपा
जपापुष्पच्छाया तव जननि जिह्वा जयति सा ।
यदग्रासीनायाः स्फटिकदृषदच्छच्छविमयी
सरस्वत्या मूर्तिः परिणमति माणिक्यवपुषा ॥
அவிஶ்ராந்தம் பத்யுர்குணகணகதாம்ரேடனஜபா
ஜபாபுஷ்பச்சாயா தவ ஜனநி ஜிஹ்வா ஜயதி ஸா ।
யதக்ராஸீனாயா: ஸ்படிகத்ருஷதச்சச்சவிமயீ
ஸரஸ்வத்யா மூர்தி: பரிணமதி மாணிக்யவபுஷா ॥
இந்த ஸ்லோகத்தை 10,000 முறை என
18 நாட்கள் பாராயணம் செய்தால்
மக்களை கவர்வார்கள்
ஹே பராசக்தி
பதிவிரதையான நீ எப்போதும் உனது கணவரான பரமேஸ்வரனுடைய பெருமைகளை மீண்டும் மீண்டும் கூறிக் கொண்டே உள்ளதினால் உனது நாக்கானது செம்பருத்திப் பூவைப் போல சிவந்த நிறமாகவே மாறி காட்சி தருகின்றது. உனது நாக்கின் நுனி முனையில் வாசம் செய்யும் சரஸ்வதி தேவியோ பளிங்கு போன்ற வெண்மை நிறத்திலானவள் என்றாலும், உனது நாவில் குடி கொண்டு உள்ளதினால் அவளும் மாணிக்கக் கல்லை போன்ற சிவந்த நிறத்தில் காட்சி தருகின்றாள்.
- (விளக்கம்:
இந்த ஸ்லோகத்தின் மூலம் ஆதி சங்கரர் பராசக்தியின் நாக்கின் நிறம் எதனால் செம்பருத்திப் பூவைப் போல ரத்த சிவப்பாக உள்ளது என்பதைக் குறித்துக் கூறி உள்ளார். - ஆதி சங்கரரின் கூற்றின்படி பரமேஸ்வரரின் நினைவோடு மட்டுமே எப்போதுமே இருக்கும் பராசக்தியானவள், தன்னிடம் வருபவர்கள் அனைவரிடமும் ‘பரமேஸ்வரன் அந்த யுத்தம் செய்து அந்த அரக்கர்களையும், அசுரர்களையும் அழித்தார், இந்த யுத்தம் செய்து அந்த அசுரனை வென்றார், திரிபுரா ரகசியம் குறித்து கூறினார்’, என்றெல்லாம் அவருடைய அருமை பெருமைகளைக் கூறிக்கொண்டே இருப்பதினால் அவளது நாவானது சிவப்பு நிறத்தில் மாறிவிட்டது.
- அதில் குடி இருக்கும் பளிங்கு நிறத்திலான சரஸ்வதியும் கூட பராசக்தியின் சிவப்பு நிறத்தையே பிரதிபலிக்கின்றாள் என்பதாகக் கூறி உள்ளார்.
——–
-65-
रणे जित्वा दैत्यानपहृतशिरस्त्रैः कवचिभिर्-
निवृत्तैश्चण्डांशत्रिपुरहरनिर्माल्यविमुखैः ।
विशाखेन्द्रोपेन्द्रैः शशिविशदकर्पूरशकला
विलीयन्ते मातस्तव वदनताम्बूलकबलाः ॥
ரணே ஜித்வா தைத்யானபஹ்ருதஶிரஸ்த்ரை: கவசிபிர்-
நிவ்ருத்தைஶ்சண்டாம்ஶத்ரிபுரஹரனிர்மால்யவிமுக।
விஶாகேந்த்ரோபேந்த்ரை: ஶஶிவிஶதகர்பூரஶகலா
விலீயந்தே மாதஸ்தவ வதனதாம்பூலகபலா: ॥
இந்த ஸ்லோகத்தை 1000 முறை என
45 நாட்கள் பாராயணம் செய்தால்
அனைத்திலும் வெற்றி கிடைக்கும்
ஹே பராசக்தி
அசுரர்களுடன் யுத்தம் செய்து அவர்களை அழித்த பின்னர் யுத்தத்தில் தாம் அடைந்த வெற்றியைக் குறித்து உன்னிடம் கூற குமாரசுவாமி (முருகப் பெருமான்) தன்னுடைய சேனாதிபதிகளாக இருந்த விஷ்ணு மற்றும் இந்திரனுடன் வந்தார். அப்படி வந்தவர்கள் சிவ நிர்மால்யத்தை (சிவனின் பிரசாதம்) ஏற்றுக் கொள்ளாமல், தமது தலைப் பாகையை மட்டும் கயற்றி விட்டு, தாம் அணிந்திருந்த யுத்த கவசங்களோடு உன்னிடம் வந்தபோது, உணவு அருந்திய பின்னர் பச்சைக் கற்பூரத்துடன் கூடிய தாம்பூலத்தை வாயில் போட்டு மென்று கொண்டிருந்த நீ, அதை உன் வாயில் இருந்து எடுத்து வந்தவர்களுக்கு கொடுக்க, அவர்களும் அதை மஹா பிரசாதம் என்று உண்டார்கள்.
- (விளக்கம்:
உலகத்தில் உள்ளவர்களை கொடுமைப்படுத்தி வந்திருந்த அசுரர்களையும் அரக்கர்களையும் அழிக்க சக்தி தேவியான பராசக்தி முருகப் பெருமானுக்கு விசேஷமான ஆயுதத்தை அளித்து அவரோடு மற்ற தெய்வங்களையும் யுத்த பூமிக்கு அனுப்பி வைத்து இருந்தாள். அவர்களும் யுத்தத்தில் அசுரர்களை வதம் செய்துவிட்டு அதைக் குறித்து முதலில் பராசக்தியிடம் கூற வந்தபோது சிவாலயத்தில் சிவ நிர்மால்யத்தை (சிவனின் பிரசாதம்) பெற்றுக் கொள்ளாமல் பராசக்தியிடம் யுத்தத்தின் வெற்றியைக் குறித்துக் கூற சென்றார்கள். - அங்கு சென்றவர்கள் அவளுக்கு மரியாதை தர எண்ணி தலையில் அணிந்திருந்த கிரீடங்களை மட்டும் கயற்றி விட்டு யுத்த ஆடைகளோடு சென்று அவளுக்கு வணக்கங்களை தெரிவித்த பின்னர் யுத்த வெற்றியையும் கூற, அவள் தனது வாயில் மென்று கொண்டிருந்த தாம்பூலத்தை எடுத்து பிரசாதமாக அவர்களுக்கு கொடுக்க, அவர்களும் அதை மஹா பிரசாதமாக எண்ணி உண்டு மகிழ்ந்தார்கள்.
- சிவபெருமானின் ஆலயத்துக்கு செல்பவர்கள் முதலில் சிவபெருமானை வணங்கிய பிறகே பார்வதி தேவிக்கு பூஜைகள் செய்ய அவளுடைய சன்னதிக்கு செல்வது உண்டு. ஆனால் அந்த முறையை கடை பிடிக்காமல் அவர்கள் நேராக பராசக்தியிடம் சென்றார்கள்.
- எதனால் அவர்கள் சிவாலயத்தில் இருந்த சிவ நிர்மால்யத்தை பெற்றுக் கொள்ளாமல் சென்றார்கள்? அது சிவபெருமானை அவமதிக்கும் செயல் அல்ல. அதற்கான காரணம் உண்டு. தெய்வங்களுக்கு படைக்கும் பிரசாதங்கள் அனைத்திற்கும் ‘நிர்மால்யம்’ என்று பெயர். ஆனால் சிவன் ஆலயங்களில் சிவபெருமானுக்கு படைத்த பிரசாதங்களை சிவ பூஜை முடிந்த பிறகு பிரசாதமாக வழங்காமல் இருப்பதற்கான பெயர் ‘சிவ நிர்மால்யம்’ என்பது, ஆகும். அதை அம்பாள் சன்னதியில் பூஜை செய்த பிறகே பக்தர்களுக்கு தருவார்கள் என்பதான நம்பிக்கை உண்டு.
- சைவ ஆகமத்தின்படி, தெய்வத்திற்கு படைக்கப்படும் பிரசாதத்தில் தெய்வங்களின் எச்சில் (நிர்மால்யம்) இருப்பதால், அதை பிரசாதமாக வழங்க மாட்டார்கள். எனவேதான் அதை உண்டால் நிர்மால்ய தோஷம் ஏற்படும் என்பது நம்பிக்கை என்பதினால்தான் சிவன் ஆலயங்களில் எவ்வித பிரசாதமும் பக்தர்களுக்கு விநியோகிக்கப்படுவதில்லை என்பது இன்னொரு வாதம்.
- இன்னொரு வாதம் என்ன என்றால் சிவபெருமானின் சன்னதியில் பூஜை செய்த பிரசாதங்களில் முதலில் ஒரு பங்கு சண்டிகேஸ்வரருக்கு தருவார்கள். அதை சண்டிகேஸ்வரர் பலி என்பார்கள். அதற்குப் பிறகு அது அம்பாள் சன்னதிக்கு எடுத்துச் செல்லப்பட்டு அங்கும் பூஜை செய்த பின் பக்தர்களுக்கு தருவார்கள்.
- முருகப் பெருமானும் மற்றவர்களும் யுத்தம் முடிந்து திரும்பிய போது சிவன் சன்னதியில் ஆராதனை முடிந்து அம்பாள் சன்னதிக்கு ஆராதனை செய்ய பிரசாதம் போய்விட்டது. சிவன் சன்னதியிலோ சண்டிகேஸ்வரர் பங்கிற்கான பிரசாதம் மட்டுமே மீதம் இருந்தது. எங்கே சிவபெருமானை சந்தித்து யுத்தத்தில் பெற்ற வெற்றியைக் குறித்துக் கூறினால், அவர் மகிழ்ச்சியில் சண்டிகேஸ்வரர் பங்கிற்கான பிரசாதத்தை தமக்கு தந்து விடுவாரோ, அப்படி செய்தால் சண்டிகேஸ்வரர் வருத்தம் அடைவார் அல்லவா என்ற எண்ணத்தில்தான் அவர்கள் நேரடியாக பரமேஸ்வரியின் சன்னதிக்கு சென்று அவளை சந்தித்தார்கள்.
- பெரிய புராணத்தின்படி சண்டிகேஸ்வரரின் பெயர் விசாரசர்மன். இவர் இளம் வயதில் மாடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். சிறுவயதிலேயே சிவபெருமான் மீது பக்தி கொண்டு இருந்ததினால் மண்ணினால் ஆன சிவ லிங்கம் செய்து பூஜித்து வந்தார். அவர் மேய்த்த மாடுகள் அவர் உருவாக்கிய மணல் லிங்கத்தின் மீது தானாக பாலை சுரந்து அபிஷேகம் செய்து வந்தன.
- இந்த செய்தி மாட்டின் உரிமையாளரை எட்டிய போது அவர் விசாரசர்மனின் தந்தையிடம் புகார் செய்ய ஒருநாள் விசாரசர்மன் பூஜித்துக் கொண்டு இருந்தபோது விசாரசர்மனின் தந்தை அந்த மணல் லிங்கத்தை காலால் உதைத்தார். இதனால் கோபமுற்ற விசாரசர்மன் ஒரு குச்சியால் தந்தையின் காலை தாக்க அதுவே கோடாரியாக மாறி அவர் தந்தையின் காலை கடுமையாக தாக்கியது.
- அப்போது அவர்கள் முன் தோன்றிய சிவபெருமான், விசாரசர்மனின் பக்தியை மெச்சி அவர் தந்தையின் கால்களை மீண்டும் சரியாக்கி அனுப்பி வைத்தார். அன்று முதல் அவர் சண்டிகேஸ்வரர் என்றும், சிவனின் சொத்துக்களான கணங்கள் அனைத்தையும் காவல் காப்பவராக திகழ்வார் எனவும், தனக்கு நிகழ்ந்த பூஜைகளும் மரியாதையும் இனி அவருக்கும் கிடைக்கும் எனவும் அருளினார்.
- எனவே சிவனை வணங்கி விட்டு செல்லும் பக்தர்கள், சண்டிகேஸ்வரர் சன்னதிக்கு சென்று மென்மையாக கைகளை தட்டி தாம் எந்த சிவ சொத்தையும் எடுத்து செல்லவில்லை என கைகளை உதறி காட்ட வேண்டும். பிரசாதத்தை எடுத்து செல்லும் அனுமதியை அவரிடம் கேட்டு எடுத்து செல்ல வேண்டும். இந்த கைகளை உதறும் வழக்கமே கால போக்கில் கைகளை தட்டும் பழக்கமாக மாறிவிட்டது. இவர் 63 நாயன்மார்களுள் ஒருவராக இருக்கிறார்.
——
-66-
विपञ्च्या गायन्ती विविधमपदानं पशुपतेः
त्वयारब्धे वक्तुं चलितशिरसा साधुवचने ।
तदीयैर्माधुर्यैरपलपिततन्त्रीकलरवां
निजां वीणां वाणी निचुलयति चोलेन निभृतम् ॥
விபஞ்ச்யா காயந்தீ விவிதமபதானம் பஶுபதே:
த்வயாரப்தே வக்தும் சலிதஶிரஸா ஸாதுவசனே ।
ததீயைர்மாதுர்யைரபலபிததந்த்ரீகலரவாம்
நிஜாம் வீணாம் வாணீ நிசுலயதி சோலேன நிப்ருதம்॥
இந்த ஸ்லோகத்தை 5000 முறை என
3 நாட்கள் பாராயணம் செய்தால்
சங்கீதத்தில் மேன்மை பெறுவான், வியாதிகள் குணமாகும்
ஹே பராசக்தி
ஒருமுறை சரஸ்வதி தேவி உனது கணவரான பரமேஸ்வரரின் புகழை உனது சபையில் தனது வீணையில் இசையாக ஒலித்தபடி இருந்தபோது, நீ நடு நடுவே சபாஷ், சபாஷ் என்று கூறத் துவங்க, உனது மதுரமான வார்த்தையின் ஒலி, வீணையின் தந்திகள் வெளிப்படுத்திய இசையை விட இனிய இசையை எழுப்பும் வண்ணம் உள்ளதே என்ற வெட்கத்தினால், சரஸ்வதி தேவி யாருக்கும் தெரியாமல் மெதுவாக வீணை வாசிப்பதை நிறுத்தி விட்டு வீணையின் மீது உறையைப் போட்டு மூடி வைத்து விட்டாள்.
- (விளக்கம்:
ஒருமுறை சரஸ்வதி தேவி பராசக்தியின் கணவரான பரமேஸ்வரரின் பல்வேறு சாதனைகளையும், மேன்மைகளையும், பராக்கிரமங்களையும் பராசக்தியின் சபையில் தனது வீணையில் இசையாக ஒலித்துக் கொண்டு இருந்தபோது, அதைக் கேட்டுக் கொண்டு இருந்த பராசக்தி பரவசம் அடைகிறாள். - ஒரு பெண்ணுக்கு தனது கணவரின் மகிமையைக் குறித்து மற்றவர்கள் கூறிக் கேட்கும்போது அது அவர்களுக்கு ஒரு விதத்திலான பெருமையை தருகின்றது.
- அதே நிலையில் இருந்த பராசக்தியும் தன்னை மீறி நடுநடுவே ‘சபாஷ்’, ‘சபாஷ்’ என்று கூறத் துவங்கி விடுகின்றாள். பராசக்தியின் மெல்லிய, அற்புதமான வார்த்தை ஒலிகள் வீணையின் தந்திகள் வெளிப்படுத்தும் இசையை விட அதிக இனிய இசையை எழுப்பும் வண்ணம் உள்ளதே, இனி இந்த சபையில் எனது வீணையின் நாதம் எடுபடாது என்ற எண்ணத்தை அடைந்த சரஸ்வதி தேவி, யாருக்கும் தெரியாமல் மெதுவாக தனது வீணையின் மீது உறையைப் போட்டு மூடி வைத்து விடுகின்றாள்.
- இந்த ஸ்லோகத்தின் மூலம் ஆதி சங்கரர் என்ன கூறி உள்ளார் என்றால் ‘இசைக்கும் அறிவாற்றலுக்கும் அதிபதியாக பராசக்தியின் உடலுக்குள் இருந்து அவளே தோற்றுவித்த சரஸ்வதியின் குரல் மற்றும் இசை வளமையை விட, அவளை தோற்றுவித்த பராசக்தியின் குரல் வளம் இனிமையாக இருந்தது என்பதில் இருந்தே பராசக்தியின் மேன்மை எத்தகையது என்பது புரியும்’).
——-
-67-
कराग्रेण स्पृष्टं तुहिनगिरिणा वत्सलतया
गिरीशेनोदस्तं मुहुरधरपानाकुलतया ।
करग्राह्यं शम्भोर्मुखमुकुरवृन्तं गिरिसुते
कथङ्कारं ब्रूमस्तव चिबुकमौपम्यरहितम् ॥
கராக்ரேண ஸ்ப்ருஷ்டம் துஹினகிரிணா வத்ஸலதயா
கிரீஶேனோதஸ்தம் முஹுரதரபானாகுலதயா ।
கரக்ராஹ்யம் ஶம்போர்முகமுகுரவ்ருந்தம் கிரிஸுதே
கதனகாரம் ப்ரூமஸ்தவ சிபுகமௌபம்யரஹிதம் ॥
இந்த ஸ்லோகத்தை 1000 முறை என
45 நாட்கள் பாராயணம் செய்தால்
அரசாங்கத்தின் அங்கீகாரம் கிடைக்கும்
ஹே பராசக்தி
ஹிமயமலை அரசனின் புதல்வியே, உனது தந்தையின் நுனி விரலினால் பாசத்துடன் தொடப்பட்டதும், உனது உதடுகளில் முத்தமிட ஆசைக் கொண்ட உனது கணவரால், அடிக்கடி உயர தூக்கி பிடிக்கப்பட்டதுமான உனது முகவாய்கட்டைக்கு ஈடு இணை ஏதும் கிடையாது. உனது முகவாய்கட்டை, உனது அழகிய முகத்தை தூக்கி நிறுத்தி வைத்துள்ள, ஒரு கண்ணாடியின் கைபிடியைப் போல காணப்படுகின்றது.
- (விளக்கம்:
குழந்தைகளோடு கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கும் அதன் பெற்றோர்கள் குழந்தையின் முகவாய்க் கட்டையை தமது விரலால் தொட்டு அதன் கவனத்தை தம்மிடம் ஈர்ப்பார்கள். - அதை போன்ற நிலையில்தான் ஹிமய மலையின் அரசனான ஹிமாயவனும் தனது மகள் பராசக்தியின் முகவாய் கட்டையை ஆசையோடு தனது கைவிரல் நுனியினால் தொட்டு அவளது கவனத்தை தன்பால் ஈர்ப்பார். அது தனது குழந்தையான மகளிடம் தந்தை காட்டும் பாசம் ஆகும்.
- அதே போன்று பராசக்தியின் கணவரான பரமேஸ்வரனோ பராசக்தியின் முகவாய்க் கட்டையை தன் விரல்களால் பிடித்து தன் முகத்தை நோக்கி இழுத்து வைத்து அதார பானத்தை பருகுவது போல அவளது இதழ்களில் தனது இதழ்களை பதிப்பார். அது கணவனுக்கு மனைவி மீதான மோகத்திலான ஆசையைக் காட்டுகின்றது.
- குழந்தை வளர்ந்து பெரிய பெண்ணானாலும் அவளுடைய தந்தை அவளை தொடலாம், குழந்தை வளர்ந்து பெரியவள் ஆனாலும் பெற்றோர்களுக்கு அந்த உரிமை உண்டு. அதே போன்று அவளை மண முடிக்கும் கணவரும் அவளை தொடலாம், அவருக்கும் அந்த உரிமை உண்டு. ஆனால் மற்ற எந்த ஆண்களுக்கும் அந்த உரிமை கிடையாது.
- அதார என்றால் தெய்வங்களின் உதடுகள் என்பதாகும். பூரி ஜகந்நாதர் ஆலயத்தில் நடைபெறும் விழாவில் பாரம்பரியத்தின் படி, பால், சர்க்கரை, பாலாடைக் கட்டி, வாழைப்பழம், கற்பூரம், ஜாதிக்காய் மற்றும் கருப்பு மிளகு போன்றவற்றால் செய்யப்பட்ட இனிப்பு பானத்தை ஆதார பானம் என்பார்கள். (அதை பனா என்பார்கள் )
- ஒவ்வொன்றும் ஒரு மீட்டர் உயரம் கொண்ட ஒன்பது பெரிய மண் குடங்களில் அந்த பானம் இறைவனுக்கு சமிர்பிக்கப்படும். அந்த மண் பானைகளில் உள்ள பானம் தெய்வங்களின் உதடுகளை தொடும் அளவில் இருக்கும். அதையே அதாரா பானம் பருகுவது என்பார்கள்.
——–
-68-
भुजाश्लेषान्नित्यं पुरदमयितुः कण्टकवती
तव ग्रीवा धत्ते मुखकमलनालश्रियमियम् ।
स्वतः श्वेता कालागुरुबहुलजम्बालमलिना
मृणालीलालित्यम् वहति यदधो हारलतिका ॥
புஜாஶ்லேஷான் நித்யம் புரதமயிது: கண்டகவதீ
தவ க்ரீவா தத்தே முககமலனாலஶ்ரியமியம் ।
ஸ்வத: ஶ்வேதா காலாகுருபஹுலஜம்பாலமலினா
ம்ருணாலீலாலித்யம் வஹதி யததோ ஹாரலதிகா ॥
இந்த ஸ்லோகத்தை 1000 முறை என
45 நாட்கள் பாராயணம் செய்தால்
அரசாங்கத்தின் அங்கீகாரம் கிடைக்கும்
ஹே பராசக்தி
பரமேஸ்வரர் உன்னை கட்டித் தழுவும் போதெல்லாம் உன்னுடைய கழுத்து பகுதி மயிர்க் கூச்சல் எடுப்பதினால் முள்ளு முள்ளாகத் தோற்றம் தருகின்றது. உன் முகமோ தாமரை மலருக்கு இணையாக இருக்க, முள்ளு முள்ளாகத் தெரியும் உனது கழுத்து பகுதியோ தாமரை மலரின் தண்டு போல காணப்படுகின்றது. கழுத்தில் கீழே தொங்கும் முத்து மாலையோ உனது கழுத்து பகுதியில் தடவி உள்ள ‘அகில்’ கலந்த சந்தனக் கலவையின் கருமை நிறத்தினால் கருப்பாகி சேற்றில் உள்ள தாமரை தண்டின் கொடியைப் போலக் காட்சி அளிக்கின்றது.
- (விளக்கம்:
இந்த ஸ்லோகத்தில் ஆதி சங்கரர் பராசக்தியின் அழகிய கழுத்துப் பகுதியை குறித்து இப்படியாக விமரிசனம் செய்து உள்ளார். - பரமேஸ்வரர் தனது மனைவியான பராசக்தி மீது அளவு கடந்த ஆசையும் மோகமும் கொண்டவர். அவர் அவளிடம் அடிக்கடி சென்று கட்டி அணைத்துக் கொள்வார். அப்படி அவர் கட்டி அணைக்கும்போது அவளுக்கு வெட்கத்தினால் மயிர் கூச்சல் எடுக்கும். அப்படி மயிர்க் கூச்சல் எடுக்கும் போதெல்லாம் அவளது கழுத்துப் பகுதியில் மயிர் கால்கள் விறைத்து நிற்க கழுத்து முழுவதுமே முள்ளு முள்ளாகத் தெரியும்.
- பராசக்தியின் முகமோ மலர்ந்த தாமரை மலரைப் போல காட்சி அளிக்க, மயிர் கூச்சல் எடுத்ததினால் கழுத்து முழுவதும் முள்ளு முள்ளாகத் தெரியும் போது பராசக்தியின் கழுத்து தாமரை மலரின் தண்டு போல காட்சி அளிக்கின்றது. அதோடு மட்டும் இல்லாமல் அவளது கழுத்தில் பூசிக் கொண்டு உள்ள சந்தனக் கலவையில் கருமை நிறத்திலான ‘அகிற் கட்டை’ எனும் நறுமணப் பொருளும் சேர்ந்து உள்ளதினால், பராசக்தி அணிந்துள்ள வெண்ணிற முத்து மாலையில் அந்தக் கலவை ஒட்டிக் கொண்டு, தாமரை தண்டை சுற்றிக் கொண்டுள்ள சிறு செடி கொடிகள் அல்லது வேர்களை போல காட்சி தருகின்றது.
- அகிற் பிசின் என்பது நறுமணப் பொருள்களின் தயாரிப்புக்காகப் பெறப்படும் அகிற் கட்டையில் (Agar wood) இருந்து பெறப்படும் நறுமணப் பொருள் ஆகும், எண்ணெய் பிசின் போன்றதாக இருக்கும்.
———
-69-
गले रेखास्तिस्रो गतिगमकगीतैकनिपुणे
विवाहव्यानद्धप्रगुणगुणसंख्याप्रतिभुवः ।
विराजन्ते नानाविधमधुररागाकरभुवां
त्रयाणां ग्रामाणां स्थितिनियमसीमान इव ते ॥
கலே ரேகாஸ்திஸ்ரோ கதிகமககீதைகனிபுணே
விவாஹவ்யானத்தப்ரகுணகுணஸங்க்யாப்ரதிபுவ: ।
விராஜந்தே நானாவிதமதுரராகாகரபுவாம்
த்ரயாணாம் க்ராமாணாம் ஸ்திதினியமஸீமான இவ தே॥
இந்த ஸ்லோகத்தை 1000 முறை என
45 நாட்கள் பாராயணம் செய்தால்
சகல கார்ய சித்தி
ஹே பராசக்தி
சங்கீத சாஸ்திரங்களில் வரும் கதி, கமகம், கீதம் போன்றவற்றில் வல்லவளே, உனது கழுத்தில் காணப்படும் மூன்று கோடுகளும் (ரேகைகள்) பரமசிவன் உனது கழுத்தில் கட்டிய திருமாங்கல்யக் கயிற்றின் அடையாளம் போல தெரிகின்றது. இசையில் வேறு எந்த எந்த எல்லையும் இல்லாததை போல, நீங்கள் பேசும்போது, உங்கள் குரல் மூன்று இனிமையான இசைத் தாளங்களை வெளியிடுகிறது.
- (விளக்கம்:
இந்த ஸ்லோகத்தில், ஆதி சங்கரர் பராசக்தியின் கழுத்தில் காணப்படும் மூன்று ரேகைகளின் அழகை விவரிக்கிறார். முதலாவது பராசக்தியின் கணவர் அவள் கழுத்தில் கட்டிய மூன்று முடிச்சுக்களில் ஆன தாலியை எடுத்துக் காட்டும் விதத்தில் அந்த மூன்று ரேகைகள் அமைந்து இருக்கலாம். இரண்டாவது பராசக்தியின் கழுத்துப் பகுதியில் உள்ள குரல் வளையில் இருந்து வெளிப்படும் குரல்தான் இனிமையான இசை ஒலிகளுக்கு மூல ஆதாரமானது என்றும், அதைத் தாண்டி வேறு எந்த இசைக் குறிப்புகளும் கிடையாது என்பதையும் எடுத்துக் காட்டும் விதத்தில் அவர் இந்த ஸ்லோகத்தை அமைத்து இருக்கலாம். - ஆதி சங்கரர் பராசக்தியின் கழுத்தில் காணப்படும் மூன்று ரேகைகளின் அழகை வர்ணித்ததோடு மட்டும் இருந்திருக்கலாம். ஆனால் அவர் இசை உட்பட அனைத்திலும் நிபுணத்துவம் பெற்றவர் என்பதால், அன்னையின் கழுத்தில் உள்ள மூன்று வரிகளை விவரிக்க, அவர் சங்கீதத்தையும், பராசக்தியின் குரல் வளத்தையும் அதோடு கலந்து உள்ளார் என்பதின் காரணம் 66 ஆம் ஸ்லோகத்தில் கூறி உள்ளபடி சரஸ்வதியின் சங்கீத ஆற்றலை முறியடிக்கும் விதத்தில் பராசக்தியின் குரல் வளம் இருந்தது என்பதே ஆகும்.
- மனதை மயக்கும் வண்ணம் இசைக்கப்படும் ஒலியே சப்த ஸ்வரங்கள் ஆகும். அந்த ஏழு ஸ்வரங்கள் ஸட்ஜம் (ஸ), ரிஷபம் (ரி), காந்தாரம் (க), மத்யமம் (ம), பஞ்சமம் (ப), தைவதம் (த), நிஷாதம் (நி) என்பன ஆகும். அவற்றில் முக்கியமானவை ஸட்ஜம், காந்தாரம், மற்றும் மத்யமம் எனும் க்ரமங்கள் (ராகங்கள்) என்றும், அவற்றில் இருந்துதான் மனதை மயக்க வைக்கும் அளவிலான பெரும்பாலான இசை ராகங்கள் எழுகின்றன என்பதாகவும் கருதி உள்ள ஆதி சங்கரர், அன்னையின் கழுத்தில் உள்ள மூன்று வரிகள் மூன்று கமகங்களைக் (ராகங்களை) குறிக்கின்றனவோ என்றும், அந்த கமகங்கள் ஒன்றுடன் ஒன்று கலந்து விடாமல் இருக்க வேண்டும் என்பதைக் குறிப்பிடும் வகையில் அவற்றின் எல்லைகளைக் காட்டும் வகையில் மூன்று ரேகைகள் அன்னையின் கழுத்தில் காணப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகம் அடைகின்றார்.
- பராசக்தியின் தொண்டைப் பகுதியில் இருந்து குரலின் இனிமையும் வெளிப்படுகின்றது என்பதினால், அன்னையின் கழுத்தில் உள்ள மூன்று ரேகைகள்தான் ராகங்களையே உற்பத்தி செய்யும் இடமாக உள்ளது என்பதாக கருதி உள்ளார் என்றே தோன்றுகின்றது).
——
-70-
मृणालीमृद्वीनां तव भुजलतानां चतसृणां
चतुर्भिः सौन्दर्यं सरसिजभवः स्तौति वदनैः ।
नखेभ्यः सन्त्रस्यन् प्रथममथनादन्धकरिपो-
श्चतुर्णां शीर्षाणां सममभयहस्तार्पणधिया ॥
ம்ருணாலீம்ருத்வீநாம் தவ புஜலதாநாம் சதஸ்ருணாம்
சதுர்பி: ஸௌந்தர்யம் ஸரஸிஜபவ: ஸ்தௌதி வதனை: ।
நகேப்ய: ஸந்த்ரஸ்யன் ப்ரதமமதனாதந்தகரிபோ-
ஶ்சதுர்ணாம் ஶீர்ஷாணாம் ஸமமபயஹஸ்தார்பணதியா॥
இந்த ஸ்லோகத்தை 1000 முறை என
45 நாட்கள் பாராயணம் செய்தால்
அனைத்து வேலைகளிலும் வெற்றி
ஹே பராசக்தி
ஒருமுறை பிரும்மா கூறிய பொய்யினால் கோபமுற்ற பரமேஸ்வரர் அவருடைய ஐந்தாவது தலையை தனது கை நகங்களினால் கிள்ளி எறிந்து விட்டார். ஆகவே எங்கே தன்னுடைய மீதமுள்ள நான்கு தலைகளையும் பரமேஸ்வரர் கிள்ளி எறிந்து விடுவாரோ என்ற அச்சம் கொண்ட பிரும்மா, பரமேஸ்வரி உன்னை சரண் அடைந்து, உன்னுடைய நான்கு கைகளின் அழகை தோத்திரம் செய்து, மீதம் உள்ள தனது தலைகளை காப்பாற்றுமாறு வேண்டிக் கொள்கின்றார்.
- (விளக்கம்:
ஜென்ம ஜென்மாந்திரங்களுக்கு முன் ஒருமுறை பிரும்மா மற்றும் விஷ்ணுவிற்கு இடையே ஒரு பந்தயம் நடைபெற்றது. சிவபெருமானின் பாதத்தையும், தலையையும் பார்த்து விட்டு முதலில் யார் திரும்பி வருகிறார்களோ அவர்களே வெற்றி பெற்றவர்கள் என்பதே போட்டியாகும். - அப்போது பிரும்மாவிற்கு ஐந்து தலைகள் இருந்தன. அதன்படி பிரும்மா சிவபெருமானின் தலையையும், விஷ்ணு சிவபெருமானின் பாதத்தையும் தரிசனம் செய்து விட்டு வர ஒப்புக் கொண்டார்கள்.
- விஷ்ணு வராஹ அவதாரம் எடுத்துக் கொண்டு கீழே இருந்த ஏழு லோகங்களான அதல, விதல, சுடல, ராசாதல, தலாதல, மஹாதல, பாதாள என அனைத்து இடங்களுக்கும் சென்றும் கூட சிவபெருமானின் பாதத்தைக் காண முடியாமல் திரும்பி வந்து தனது தோல்வியை ஒப்புக் கொண்டார்.
- ஆனால் பிரும்மாவோ பூமிக்கு மேலே இருந்த ஏழு லோகங்களான பூலோக , புவர் லோக, ஸ்வர்க லோகம், ஜன லோகம், தப லோகம், மற்றும் சத்ய லோகம் வரை சென்றும் சிவபெருமானின் தலையை காண முடியாமல் போனதினால் திரும்பி வந்து, தான் சிவபெருமானின் தலையை பார்த்து விட்டதாக பொய் கூறி விட்டார் .
- அதற்கு சாட்சியாக தான் எங்கிருந்தோ பறித்துக் கொண்டு வந்திருந்த தாழம்பூவை காட்டி, சிவபெருமானின் தலையில் இருந்த தாழம்பூவே அது என்று கூறினார். போட்டி துவங்கும் முன்னர் சிவபெருமான் தலையில் தாழம்பூவை வைத்துக் கொண்டு இருந்ததை இருவருமே பார்த்து இருந்தார்கள். பிரும்மா கூறிய பொய்களைக் கேட்ட சிவபெருமான் கோபமுற்று பிரும்மாவின் ஐந்தாவது தலையை தனது கை நகத்தினால் கிள்ளி எறிந்து விட்டார்.
- எங்கே மிச்சமுள்ள நான்கு தலைகளையும் கூட சிவபெருமான் கிள்ளி எறிந்து விடுவாரோ என்று பயந்து போன பிரும்மா பராசக்தியிடம் ஓடிச் சென்று அவளிடம் சரண் அடைந்து தாமரை மலரைப் போன்ற அன்னையின் முகத்தை தாங்கி நிற்கும் நான்கு தாமரை மலரின் தண்டுகளை போல காணப்பட்ட அன்னையின் நான்கு கைகளையும் போற்றி ஆராதனை செய்து தனது தலையை காப்பாற்றுமாறு வேண்டிக் கொண்டார்.
- அதனால் மீதம் இருந்த நான்கு தலைகளும் தப்பின. இதில் இருந்து என்ன தெரிந்தது என்றால் பிரும்மா ஒருவரே பராசக்தியின் நான்கு கரங்களையும் ஒரே நேரத்தில் பூஜித்து வணங்கத் தகுதி வாய்ந்தவராக இருந்துள்ளார். அவருக்கு நான்கு தலைகள் இருந்ததினால் பராசக்தியின் நான்கு கைகளையும் ஒரே நேரத்தில் வணங்கி துதிக்க முடிந்தது.
- பரமேஸ்வரராலும் கூட பராசக்தியை மீறி பிரும்மாவை ஒன்றும் செய்ய முடியாமல் இருந்தது. அவளுடைய கருணையினால்தான் பிரும்மாவும் செயல்பட முடிகின்றது என்பதை எல்லாம் இந்த ஸ்லோகத்தின் மூலம் ஆதி சங்கரர் எடுத்துக் காட்டி உள்ளார் .
——-
-71-
नखानामुद्द्योतैर्नवनलिनरागं विहसतां
कराणां ते कान्तिं कथय कथयामः कथमुमे ।
कयाचिद्वा साम्यं भजतु कलया हन्त कमलं
यदि क्रीडल्लक्ष्मीचरणतललाक्षारुणदलम् ॥
நகானாமுத்த்யோதைர்னவனலினராகம் விஹஸதாம்
கராணாம் தே காந்திம் கதய கதயாம: கதமுமே ।
கயாசித்வா ஸாம்யம் பஜது கலயா ஹந்த கமலம்
யதி க்ரீடல்லக்ஷ்மீசரணதலலாக்ஷாரஸசணம் ॥
இந்த ஸ்லோகத்தை 12,000 முறை என
90 நாட்கள் பாராயணம் செய்தால்
யக்ஷினிகள் வசியம் ஆவார்கள்
ஹே பராசக்தி,
புதியதாக மலர்ந்த சிவப்பு தாமரைப் பூவே வெட்கி தலை குனியும் வகையில் உனது கைகளில் உள்ள நகங்களின் வண்ணம் காணப்படுகின்றது. அதன் காரணம் அந்த தாமரைப் பூவின் சிவப்பு வண்ணம் கூட, அதில் வாசம் செய்யும் மஹாலக்ஷ்மியின் கால்களில் அவள் பூசிக் கொள்ளும் மருதாணியின் சிவப்பு நிறத்தில் இருந்தே வண்ணத்தை பெறுகின்றது. எனவே உனது விரல் நகங்களின் நிறத்தை ஒப்பிட வேறு எதுவுமே இந்த பிரபஞ்சத்தில் கிடையாது.
- (விளக்கம்:
இந்த ஸ்லோகத்தின் மூலம் ஆதி சங்கரர் பராசக்தியின் கை நகங்களின் சிவப்பான நிற அழகை வர்ணனை செய்ய முயல்கின்றார். அவற்றோடு ஒப்பிட, சன்யாசியான அவருக்கு வேறு எதுவுமே கிடைக்கவில்லை என்பதினால், அவர் மஹாலஷ்மியின் கால் பாதங்களில் காணப்படும் மருதாணி வண்ணத்துடன் ஒப்பிடப் பார்த்தால், அதுவும் முடியவில்லை. - சிவப்பு நிறத்திலான தாமரைப் பூவோடு ஒப்பிடலாம் என்றால் அதுவும் முடியவில்லை. மஹாலக்ஷ்மி வாசம் செய்யும் தாமரைப் பூவோ அதற்கான சிவப்பு நிறத்தைக் கூட மஹாலக்ஷ்மியின் கால்களில் உள்ள மருதாணி நிறத்தில் இருந்தே பெறுகின்றது என்பதை அறிந்து கொள்ளும்போது, பராசக்தியின் கைகளையும், அதில் உள்ள நகங்களின் நிறங்களின் அழகையும் ஒப்பிட இந்த பிரபஞ்சத்தில் வேறு எதுவுமே கிடையாது என்ற உண்மையை உணர்ந்து கொண்டு விடுகின்றார்).
———–
-72-
समं देवि स्कन्दद्विपवदनपीतं स्तनयुगं
तवेदं नः खेदं हरतु सततं प्रस्नुतमुखम् ।
यदालोक्याशङ्काकुलितहृदयो हासजनकः
स्वकुम्भौ हेरम्बः परिमृशति हस्तेन झडिति ॥
ஸமம் தேவி ஸ்கந்தத்விபவதனபீதம் ஸ்தனயுகம்
தவேதம் ந: கேதம் ஹரது ஸததம் ப்ரஸ்னுதமுகம் ।
யதாலோக்யாஶனகாகுலிதஹ்ருதயோ ஹாஸஜனக:
ஸ்வகும்பௌ ஹேரம்ப: பரிம்ருஶதி ஹஸ்தேன ஜடிதி ॥
இந்த ஸ்லோகத்தை 12,000 முறை என
90 நாட்கள் பாராயணம் செய்தால்
பயங்களில் இருந்து விடுதலை கிடைக்கும்.
ஹே பராசக்தி
தனது மகன்களைக் கண்டதும் பால் பெருகுகின்ற நுனியோடு கூடிய ஸ்தனங்களில் இருந்து கணபதியும், குமாரசாமியும் ஒரே நேரத்தில் பருகிய பாலை சுரந்த உனது ஸ்தனங்களைக் கண்ட யானை முகத்தவனான கணபதி, தனது தலையிலுள்ள கும்பங்களைத்தான் தனது தாயார் அபகரித்துக் கொண்டு தனது ஸ்தனங்களாக மாற்றிக் கொண்டு விட்டாளோ என்ற பயத்தில் அடிக்கடி தனது தலையில் கும்பங்களுள்ளதா என தடவிப் பார்த்துக் கொள்வதைக் காணும் தாயாரும் தந்தையும் சிரிப்பார்களே, அப்படிப்பட்ட மகிமை வாய்ந்த உனது ஸ்தனங்கள் எங்கள் துயரங்களை தீர்க்கட்டும்.
- (விளக்கம்:
ஆதி சங்கரர் இயற்றி உள்ள இந்த ஸ்லோகத்தில் பராசக்தியின் ஸ்தனங்களின் மகிமையை விளக்குவது காமப் பார்வையைக் கொண்ட நிலையிலானது அல்ல. இவற்றை பராசக்தியின் அங்க வர்ணனைகளாக கருதக் கூடாது. அவர் கூறி உள்ள கருத்து மிகவும் ஆழமானது, அற்புதமான தத்துவத்தைக் கொண்டது ஆகும். - ஸ்தனம் என்றால் முலை என்ற அர்த்தம் ஆகும். ஆகவே முலை என்பதை முளைக்க வைப்பது என்ற அர்த்தத்தில் பார்க்க வேண்டும். ஒரு செடியோ மரமோ வளர வேண்டும் எனில் அதற்கு விதை போட்டு தண்ணீர் ஊற்றி பராமரித்தால்தான் அந்த விதை முளை விட்டு பெரியதாகும். அதே போன்ற நிலையில்தான் ஒவ்வொரு தாயாரும் கருவுற்று குழந்தையை பெற்றெடுத்து பாலூட்டி வளர்த்து பெரியவர்களாக்குகின்றாள்.
- பராசக்தி அவளது மகன்களான கணபதி மற்றும் குமாரசாமிக்கு மட்டும் தாயார் அல்ல. அவள் இந்த உலகில் உள்ள அனைத்து ஜீவன்களுக்கும் தாயாரானவள். இந்த உலகைப் படைத்தவள் அவள்தான். ஆகவே அவளே பல்வேறு ஜீவன்களில் ஒரு தாயாரைப் போன்ற உருவில் இருந்தவாறு அந்தந்த ஜீவன்களுக்கு உணவை தன்னிடம் இருந்து தருகின்றாள். பிறந்த குழந்தைகள் சில ஆண்டுகள் தாயின் பாலில்தான் உயிர் வாழ்கின்றன என்பதால் பெரிய மார்பகம் (ஸ்தனங்கள்) என்பது பெரிய உயிரியல் நோக்கத்தைக் கொண்டுள்ளது.
- அப்படி தனது உடலில் இருந்து (ஸ்தனங்களில் மற்றும் பால் சுரக்கும் உடலின் பகுதியில் இருந்து) உணவை தரும்போது அந்தந்த ஜீவன்களுக்கு தனது கருணையையும் சேர்த்தே தருகின்றாள் என்பதினால்தான் இந்த ஸ்லோகத்தின் மூலம் மீண்டும் அவளது கருணையை தந்து வாழ்க்கையின் இருளை போக்க வேண்டும் என்பதாக ஆதி சங்கரர் வேண்டுகோள் விடுகின்றார்.
- சௌந்தர்யலஹரியின் பல ஸ்லோகங்கள் தேவியின் அங்க அழகை விவரமாக விவரித்து உள்ளன. அவை வெளிப் பார்வைக்கு விரசமாக தோற்றம் அளிக்கலாம். ஆனால் அதை படிக்கும் உண்மையான பக்தர்கள், தனது தாயார் ஸ்தானத்தில் உள்ள அன்னை சாமுத்ரிகா லஷணத்தை பிரதிபலிக்கின்றாள் என்பதை உணர்வார்களே தவிர அன்னையின் அழகை வேறு கோணத்தில் பார்க்க மாட்டார்கள்.
- ஆதி சங்கரர் ஒரு பரிசுத்தமான யோகி. அவர் தியான நிலையில் இருந்தபோது பராசக்தியையும் பரமேஸ்வரரையும் நேரடியாக பார்த்தபோது, அவர்கள் எப்படி அவருக்கு காட்சி அளித்தார்களோ அவற்றைத்தான் ஸ்லோகங்களில் விளக்கிக் கூறி உள்ளார்.
- பராசக்தி இந்த ஜகத்திற்கே தாயார் என்பதினால், ஒரு பிறந்த குழந்தை தனது தாயாரின் அழகை அதன் மனதிற்குள்ளேயே, அது என்ன என்று தெரியாமல் பார்த்தபடி இருந்தவாறு ரசிப்பதை போலவேதான் ஆதி சங்கரரும் அன்னையின் உருவத்தை ஒரு குழந்தையாக இருந்தவாறு விளக்கி உள்ளார்.
- சாமுத்ரிகா லட்சணம் என்பது ஒருவரின் உடல் அமைப்புகளை பற்றி கூறும் சாஸ்திரம் ஆகும். ஆண்கள் மற்றும் பெண்களுடைய உடலின் ஒவ்வொரு பகுதியும். எந்த அளவில், எந்த கோணத்தில்,இருக்க வேண்டும் என்பது பற்றி அகஸ்திய முனிவரால் எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் சிலைகளை செதுக்கும் சிறப்பிகளும் மற்றும் சிற்பங்களை வரையும் கலைஞர்களும் அந்த அளவீடுகளைப் பின்பற்றுகிறார்கள்.
——–
-73-
अमू ते वक्षोजावमृतरसमाणिक्यकुतुपौ
न संदेहस्पन्दो नगपतिपताके मनसि नः ।
पिबन्तौ तौ यस्मादविदितवधूसङ्गरसिकौ
कुमारावद्यापि द्विरदवदनक्रौञ्चदलनौ ॥
அமூ தே வக்ஷோஜாவம்ருதரஸமாணிக்யகுதுபௌ
ந ஸந்தேஹஸ்பந்தோ நகபதிபதாகே மனஸி ந: ।
பிபந்தௌ தௌ யஸ்மாதவிதிதவதூஸனகரஸிகௌ
குமாராவத்யாபி த்விரதவதனக்ரௌஞ்சதலனௌ ॥
இந்த ஸ்லோகத்தை 1000 முறை என
7 நாட்கள் பாராயணம் செய்தால்
பெண்கள் மார்பில் அதிக பால் சுரக்கும்
ஹே பராசக்தி
பர்வத ராஜனான ஹிமவனுக்கு புகழை சேர்க்க வந்தவளே, உன்னுடைய இரண்டு ஸ்தனங்களும் அமிர்தத்தைக் கொண்ட மாணிக்கக் குடுவைகள் போன்றவைகளாகவே இருந்திருக்க வேண்டும், சாதாரணமாக தாயிடம் இருந்து வெளிப்படும் பாலை அவை சுரந்ததாக தெரியவில்லை. அதன் காரணம் உனது ஸ்தனங்களில் இருந்து பாலை பருகிய கணபதியும், கந்தனும் அது பாலாக இருந்திருந்தால் பருவத்தின் முதிர்ச்சி அல்லவா அடைந்து இருப்பார்கள். எத்தனைக் காலம் ஆயினும் அவர்கள் இன்னமும் மங்கையர்கள் சம்மந்தம் இல்லாத குழந்தைகளாகவே அல்லவா இருக்கின்றார்கள்.
- (விளக்கம்:
இந்த ஸ்லோகத்தின் மூலம் ஆதி சங்கரர் என கூறி உள்ளார் என்றால் ’பராசக்தியின் ஸ்தனங்களில் இருந்து பாலைக் குடித்த கணபதி மற்றும் கந்தன் என்ற இரண்டு மகன்களும் தங்கள் இளம் தோற்றத்தையும், அதே பால்ய மன நிலையையும் இழக்காமல் ஒரே மன நிலையோடு இருந்தவாறும், பெண்களிடம் எந்த தவறான செயல்களிலும் ஈடுபடாமல் உள்ளதைக் காணும்போது அவர்கள் பராசக்தியிடம் இருந்து பருகியது பாலும் அல்ல, அவள் ஸ்தனங்களில் இருந்து வெளி வந்ததும் பால் அல்ல. மாறாக அவளது ஸ்தனங்களில் இருந்து வெளி வந்த பானம் அமிர்தமாகவே இருந்திருக்க வேண்டும்’. - இந்த கருத்தையே பிருஹதாரண்யக உபநிட ஸ்லோகத்தில் ( 5-5-1) இவ்வாறாக கூறப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது :-‘தஸ்மாத் ப்ரஹ்மணா பாண்டித்தியம் நிர்வித்ய பால்யேன திஷ்டாசேத்‘ அதாவது பரிபூரண ஞானம் பெற்று இருந்தாலும், பால்யத்துடன் (மனதில் குழந்தைப் பருவத்தோடு ) இருக்க வேண்டும்-
- பிருஹதாரண்யக உபநிடம் என்பது யசுர் வேதத்தில் அமைந்துள்ள ஒரு உபநிடம் ஆகும். பிருஹதாரண்யக என்பதின் அர்த்தம் ‘மிகப்பெரிய அடர்ந்த காடு’ என்பதாகும். இது இந்து மதத்தின் பல்வேறு பள்ளிகளுக்கு முக்கியமான வேதமாகும். இந்த உபநிடதத்தில் ஆத்ம தத்துவ விசாரணை, நன்னெறிகள், வேள்விகள், சடங்குகள், தியானம், உபாசனை, ஒரு மனிதன் எவ்வாறு வாழ வேண்டும், பிரம்மத்தை அடையும் வழிகள், மன அடக்கம், புலனடக்கம் மற்றும் கருணை போன்றவை போதனை செய்யப்பட்டு உள்ளன. இந்த உபநிடத்திற்கு ஆதி சங்கரர், இராமானுசர், மற்றும் மத்வர் ஆகியோர் விளக்க உரை எழுதியுள்ளனர்.
——-
-74-
वहत्यम्ब स्तम्बेरमदनुजकुम्भप्रकृतिभिः
समारब्धां मुक्तामणिभिरमलां हारलतिकाम् ।
कुचाभोगो बिम्बाधररुचिभिरन्तः शबलितां
प्रतापव्यामिश्रां पुरदमयितुः कीर्तिमिव ते ॥
வஹத்யம்ப ஸ்தம்பேரமதனுஜகும்பப்ரக்ருதிபி:
ஸமாரப்தாம் முக்தாமணிபிரமலாம் ஹாரலதிகாம் ।
குசாபோகோ பிம்பாதரருசிபிரந்த: ஶபலிதாம்
ப்ரதாபவ்யாமிஶ்ராம் புரதமயிது: கீர்திமிவ தே ॥
இந்த ஸ்லோகத்தை 108 முறை என
45 நாட்கள் பாராயணம் செய்தால்
பெரும் கீர்த்தி பெறுவார்கள்
ஹே பராசக்தி
கஜாசுரனை சிவபெருமான் வதம் செய்த பின்னர் அவனது கும்பத்தில் இருந்து வெளி வந்த முத்துக்களால் செய்த மாலையை நீ உனது இரண்டு ஸ்தனங்களுக்கும் இடையே அணிந்து கொண்டு உள்ளாய். பல நிறமுடைய அந்த மணியின் நிறமானது உனது உதட்டின் சிவப்பு நிறத்தைப் போல வெளியிலும், உள்ளே பல நிறங்களில் ஆனதாகவும், பரமேஸ்வரரின் பராக்கிரமத்தை எடுத்துச் சொல்வதாகவும் அமைந்து உள்ளது.
- (விளக்கம்:
பராசக்தி அணிந்துள்ள முத்து மாலையின் பின்னணியில் ஒரு கதை உண்டு. அது கஜாசுரன் என்ற அசுரனின் கதை ஆகும். - மகிஷாசுரனின் மரணத்திற்குப் பிறகு, அவரது மகன் கஜாசுரன் என்பவன் தனது தந்தையின் மரணத்திற்கு காரணமான அனைத்து தேவர்களையும் பழிவாங்க முடிவு செய்தான். ஒரு கால் விரலில் நின்று, பல வருடங்கள் தீவிரமாக தவமிருந்து, பிரம்மாவிடமிருந்து ஒரு தனித்துவமான வரத்தைப் பெற்றான்; அதன்படி எந்த ஆணோ, பெண்ணோ அல்லது தெய்வமோ அவனுக்கு எந்த தீங்கும் செய்ய முடியாது.
- தனக்குக் கிடைத்த தனித்துவமான வரத்தினால், கஜாசுரன் மூன்று உலகங்களையும் வென்ற பிறகு, பூமி, வானம் மற்றும் பாதாளம் ஆகிய மூன்று லோகங்களிலும் உள்ள அனைவரையும் பயமுறுத்த தொடங்கினான். அவனிடம் இருந்த மாய சக்தியின் காரணமாக, அவன் ஒரு கண் இமைக்கும் நேரத்தில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்ல முடிந்தது. ‘வரவிருக்கும் நிகழ்வுகள் அவற்றின் நிழலை முன்னோக்கிப் போட்டன’ என்று நாம் சொல்வது போல், ஆணவத்துடன் காசிக்குச் சென்று அங்குள்ள சிவ பக்தர்களைப் துன்புறுத்தத் தொடங்கினான்.
- பக்தர்கள் சிவபெருமானின் சென்று தமக்கு ஏற்படும் கொடுமைகளை கூறி, அவரது பாதுகாப்பை நாடிய போது, சிவபெருமான் கோபமடைந்து, கஜாசுரனை எதிர்த்துப் போர் தொடுத்து, அவனை தனது திரிசூலத்தால் கொன்றார்.
- சிவபெருமானின் சக்தியை உணர்ந்து கொண்ட கஜாசுரன் மரணத்தின் விளிம்பில் சென்று விட்ட போது, தன்னை மன்னித்து, தனது தோலைத் அவருடைய ஆடையாக பயன்படுத்தும்படி இறைவனிடம் வேண்டுகோள் விடுத்து அவரிடம் சரணடைந்தான், தனக்கு அமைதியான மரணத்தைத் தரும்படி வேண்டினான். அதை இறைவனும் ஏற்றுக் கொண்டு அவனுக்கு அவ்வாறே அருள் புரிந்தார்.
- யானை வடிவில் இருந்த கஜாசுரன் மண்டை ஓட்டிலிருந்து ரத்தினங்கள் வெளியில் எடுக்கப்பட்டு உருவான மாலை பராசக்திக்கு தரப்பட்டது. அந்த மாலையின் அழகைதான் ஆதி சங்கரர் இந்த ஸ்லோகத்தில் வெளிப்படுத்தி உள்ளார்.
- பொதுவாக, முத்துக்கள் கடலில் உள்ள கிளிஞ்சல்களில் இருந்து எடுக்கப்படுவதாக அனைவரும் நம்புகிறார்கள், இருப்பினும், முத்துக்கள் சில சிறப்பு வகை பாம்புகளிலிருந்தும், சில வகை யானைகளின் முன் கோளங்களிலிருந்தும், கரும்புகளின் உட்புறமுள்ள பகுதிகளிலிருந்தும் எடுக்கப்படுகின்றன என்பதும் தெரிகின்றது.
- முத்துக்கள் கடலுக்குள் இருந்து மட்டுமே கிடைப்பது இல்லை. மூங்கில் கணுக்கால்களுக்கு இடையே உள்ள இடை வெளியிலும் நீர் வற்றி முத்துக்கள் பிறக்கின்றனவாம். அவை பிறக்கும் இடங்களை பொறுத்தே அவற்றின் நிறங்களும் வடிவங்களும் இருக்குமாம். முத்துக்கள் எங்கெங்கே பிறக்கின்றன என்பதை தமிழ் இலக்கியங்கள், புராணங்கள் மற்றும் சமஸ்கிருத நூல்களிலும் கூறப்பட்டு உள்ளது. கருட புராணத்தில் கூட முத்துக்கள் பற்றி கூறப்பட்டு உள்ளதாம்).
——–
-75-
तव स्तन्यं मन्ये धरणिधरकन्ये हृदयतः
पयःपारावारः परिवहति सारस्वतमिव ।
दयावत्या दत्तं द्रविडशिशुरास्वाद्य तव यत्
कवीनां प्रौढानामजनि कमनीयः कवयिता ॥
தவ ஸ்தன்யம் மன்யே தரணிதரகன்யே ஹ்ருதயத:
பய:பாராவார: பரிவஹதி ஸாரஸ்வதமிவ ।
தயாவத்யா தத்தம் த்ரவிடஶிஶுராஸ்வாத்ய தவ யத்
கவீநாம் ப்ரௌடானாமஜனி கமனீய: கவயிதா ॥
இந்த ஸ்லோகத்தை 12,000 முறை என
3 நாட்கள் பாராயணம் செய்தால்
கவிதை, கட்டுரைகள் போன்றவற்றை எழுதும் ஆற்றல் கிடைக்கும்
ஹே பராசக்தி
உனது ஸ்தனங்களில் இருந்து வெளியான பால் வெறும் பால் அல்ல; அது சரஸ்வதி தேவியால் உனது ஸ்தனங்களில் இருந்து வெளிப்படுத்தப்பட்ட ஞானப் பால் எனும் அமிர்தம் என்றும், அதை பருகியதினால்தான் திராவிட நாட்டில் ஒரு பெரும் கவிஞன் உருவானான் என்றும் கூறுகின்றார்கள்.
- (விளக்கம்: இதில் இரண்டு விஷயங்கள் கூறப்பட்டு உள்ளன. பராசக்தியின் ஸ்தனங்களில் இருந்து வெளியான பாலானது வெறும் பால் அல்ல, அதை ஞானத்தை தரும் சரஸ்வதி தேவி அமிர்தமாகவே வெளியிட வைக்கிறாள். அதனால்தான் அதை குடித்த (விநாயகர் மற்றும் முருகப் பெருமான் எனும் தெய்வ குழந்தைகளை தவிர்த்து) திராவிடக் குழந்தையானது, அனைவரும் போற்றிடும் மாபெரும் கவிஞ்சராக பிற்காலத்தில் உருவானார் என்பதாக ஆதி சங்கரர் குறிப்பிட்டு உள்ளார். அவர் யாரைக் குறித்து அப்படி கூறி உள்ளார் என்பது விளங்கவில்லை.
- ஸ்தனங்களில் இருந்து வெளியான அமுதப் பால் என்பதை இங்கு மேன்மையான ஆன்மீக எண்ணங்கள் என்பதாக பொருள் கொள்ள வேண்டும். ஏன் எனில் ஆதி சங்கரர் பராசக்தியிடம் இருந்து ஞானப் பாலைக் குடிக்கவில்லை. அமுதப் பால் என்பது அன்னையின் போதனைகளாக இருந்திருக்கலாம். அவர் வாழ்ந்திருந்த காலத்தில் தென் இந்தியா நான்கு மானிலங்களையும் உள்ளடக்கிய திராவிட நாடாகவே இருந்துள்ளது. ஆகவே அவர் கேரளாவில் உள்ள காலடியில் பிறந்ததினால் தானும் திராவிட நாட்டுக் குழந்தை என்று கருதி இந்த ஸ்லோகத்தை இயற்றி இருக்கலாம்.
- அவளுடைய ஸ்தனங்களில் இருந்து சுரக்கும் பால், ஞானத்தை விரும்பும் ஒருவருக்கு வழங்கப்பட வைக்கப்பட்டு உள்ள ‘ஞான அமிர்தக் கலசங்களாக’ அவர் கற்பனை செய்திருக்கலாம் – அமிர்தத்தைக் குடித்த இரண்டு மகன்களும், இளமையை இழக்கவில்லை, அதே அப்பாவித்தனத்தை கொண்டு, இன்றுவரை பெண்களின் மீதான நாட்டம் கொண்டு ஆடவில்லை.
- பராசக்தியின் பாலை அருந்திய ஒரு திராவிடக் குழந்தை ஞானம் பெற்றது என்றும் அவர் தன்னையே கூட குறிப்பிட்டு இருக்கலாம். ஆனால் இதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆதி சங்கரர் மாபெரும் யோகி, உலக ஆசைகள், பந்தங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பதினால் தன்னை குறுக்கிக் கொண்டு திராவிட நாட்டுக் குழந்தை என்று கூறிக் கொள்ள ஆசைப்பட்டு இருக்க முடியாது. அவர் விரும்பியது மோட்ஷம் மட்டுமே ஆகும்.
- ஞானப் பாலைக் குடித்தவர் என்ற பெருமை திருஞான சம்மந்தருக்கு மட்டுமே உண்டு என்பதினால் அவரைக் குறித்துக் கூறி இருக்கலாம். முருகப் பெருமானே திருஞான சம்மந்தராக அவதரித்து இருந்தார் என்றும் சிலர் கூறுவார்கள். திராவிட நாடு என்ற பகுதியில் தான் முருகப் பெருமானும் அதிக பெருமை பெற்றவர் என்பதினால் இதில் சற்று குழப்பம் உள்ளது ).
………….சௌந்தர்யலஹரி தொடர்கின்றது : 76 -100