செளந்தர்யலஹரி (76-100)
-76-
हरक्रोधज्वालावलिभिरवलीढेन वपुषा
गभीरे ते नाभीसरसि कृतसङ्गो मनसिजः ।
समुत्तस्थौ तस्मादचलतनये धूमलतिका
जनस्तां जानीते तव जननि रोमावलिरिति ॥
ஹரக்ரோதஜ்வாலாவலிபிரவலீடேன வபுஷா
கபீரே தே நாபீஸரஸி க்ருதஸனகோ மனஸிஜ: ।
ஸமுத்தஸ்தௌ தஸ்மாதசலதனயே தூமலதிகா
ஜனஸ்தாம் ஜானீதே தவ ஜனநி ரோமாவலிரிதி ॥
இந்த ஸ்லோகத்தை 1,000 முறை என
12 நாட்கள் பாராயணம் செய்தால்
அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும்
ஹே பராசக்தி
இமயமலை மன்னனின் மகளே, பரமசிவன் ஒருமுறை கோபத்தில் மன்மதனை எரித்து விட அந்த சூட்டின் வெப்பம் தாங்க முடியாமல் நெருப்புப் புகையுடன் அமிர்த கங்கையோ என்ற எண்ணத்தில் மன்மதன் உனது தொப்புளில் குதித்து விட்டான். உனது தொப்புளை சுற்றி எழுந்த புகை உனது தொப்புளை சுற்றி இருந்த அழகிய ரோமமோ என்று எண்ணினார்கள்
- (விளக்கம்:
முதலில் இந்த ஸ்லோகத்தின் பின்னணிக் கதையைப் பார்க்க வேண்டும். தக்ஷனுக்கு சிவபெருமானின் மீது இருந்த வெளிப்படையான பகைமையால் வருத்தம் அடைந்த தக்ஷனின் மகள் சதி, தீயில் குதித்து தன்னைத்தானே எரித்துக் கொண்டு இறந்து விடுகிறாள். பின்னர் அவள் இமயவனின் மகளாக மறுபிறவி எடுத்து, சிவனை மீண்டும் தனது மனைவியாகப் பெற இமயமலையில் கடுமையான தவம் செய்கிறாள். சதி, கைலாசத்தை விட்டு வெளியேறிய பிறகு, சிவனும் கைலாசத்தில் இருந்து கிளம்பி தொலை தூர இடத்திற்குச் சென்று மிகக் கடுமையான தவத்தில் அமர்ந்து விடுகின்றார். - அந்த நேரத்தில்தான் சிவனால் மட்டுமே தீர்க்கக் கூடிய ஒரு சிக்கல் எழுந்தது. சிவபெருமானின் பக்தனான தாரகாசுரன் என்ற ஒரு அசுரன் அனைத்து லோகங்களிலும் அனைவரையும் பயமுறுத்தி துன்புறுத்திக் கொண்டிருந்தான்.
- அவனை சிவபெருமானுக்குப் பிறக்கும் குழந்தையால் மட்டுமே கொல்ல முடியும் என்ற அரிய வரத்தை பிரம்மாவிடமிருந்து பெற்று இருந்ததினால், அவனை எப்படி அழிப்பது என்ற பிரச்சனை எழுந்தது. சிவபெருமானோ கடுமையான தவத்தில் இருந்தார். ஏற்கனவே அவருடன் மீண்டும் இணைய வேண்டும் என்பதற்காக பார்வதி சிவனைத் தேடிக் கொண்டிருந்தார். சிவபெருமான் தவத்தில் இருந்த இடத்தைக் கண்டு பிடித்துவிட்டாள்.
- அவருடைய தவத்தை எப்படி கலைப்பது என்று எண்ணியவள் பிரும்மாவையும், விஷ்ணுவையும் சந்தித்து ஆலோசனை கேட்டாள். அவர்கள் இருவரும் நன்கு ஆலோசனை செய்த பின் மன்மதனை அணுகி, பார்வதி மீது சிவபெருமானுக்கு மோகம் ஏற்பட வேண்டும் என்பதற்காக சிவனின் தவத்தைக் கலைக்க மன்மதனை அனுப்பினார்கள்.
- மன்மதன் சிவன் மீது காதல் அம்புகளை எய்து அவரது தவத்தைக் கலைத்தார். அதனால் கோபமடைந்த சிவபெருமான், மன்மதனை தனது மூன்றாவது கண்ணை திறந்து எரித்து விட்டாலும், பார்வதியின் வேண்டுகோளை ஏற்று அவருக்கு மீண்டும் உடலற்ற உயிரைக் கொடுத்தார்.
- சிவ பெருமானால் எரிக்கப்பட்ட மன்மதன், தீயின் சூட்டை தாங்க முடியாமல், கங்கை நதி போல அவருக்கு காட்சி தந்த பராசக்தியின் தொப்புளில் குதித்து அங்கேயே மறைந்து கொண்டு விடுகின்றார் என்று ஆதி சங்கரர் இந்த ஸ்லோகத்தின் மூலம் வர்ணிக்கிறார்.
- மன்மதனின் உடலில் இருந்து தீக்காயத்தினால் எழுந்த புகையின் தோற்றம் பராசக்தியின் தொப்பிளை சுற்றி புல்லரிப்பினால் ரோமம் எழுந்து உள்ளதை போல காணப்பட்டது என்பதாக அந்த காட்சியை விவரித்து உள்ளார். ஆதி சங்கரர் அவளுடைய தொப்பிளை ஒரு ஹோம குண்டமாக கற்பனை செய்திருக்கலாம், அங்கிருந்து புகை எழுந்து மேலே செல்கின்றது. அது காற்றினால் மெல்ல உயரே எழும்பியவாறு பறக்கும் மெல்லிய முடியுடன் ஒப்பிடப்படுகிறது.
- மன்மதன் அழகு காம உணர்வின் அடையாளமாகும். ஆகவே மன்மதன் பராசக்தியின் தொப்புள் பகுதியில் இருந்ததினால், பராசக்தியின் தொப்புள் பரமசிவனை காமத்தால் இழுக்கும் அளவிலான அழகை பெற்றது என்றும், அதனால்தான் பரமசிவன் அவளது தொப்புள் பகுதியை பார்க்கும்போது எல்லாம் அவள் மீது மோகம் கொண்டு விடுகின்றார், அந்த மோகத்தால் அவளிடம் அவர் அடங்கி இருக்கின்றார் என்பதாக கூறி உள்ளார். தொப்புளின் அழகை ஏன் ஆதி சங்கரர் இப்படியாக வர்ணித்து உள்ளார்?
- சிவபெருமானின் தவத்தைக் கலைக்க காம தேவன் தனது உடலில் அபரிதமான அளவில் காம உணர்வுகளை வளர்த்துக் கொண்டு அந்த மோக சக்தியால் காம பாணத்தை எறிந்தான். அந்த செயலை செய்து முடித்த பின்னர் அதே எண்ணங்களோடு இருக்கக் கூடாது என்பதற்காகவே உடனடியாக பராசக்தியிடம் சரண் அடைந்து தனது காம எண்ணங்களை அழித்துக் கொள்கின்றான். அதை எடுத்துக் காட்டியதே அவன் பராசக்தியின் தொப்புளில் குதித்த நிலை ஆகும்.
- ஆகவே இந்த ஸ்லோகத்தின் கருத்தை ‘காமதேவனின் தனது உடலில் எரிந்து கொண்டிருந்த காம எண்ணங்களை அழித்துக் கொள்வதற்காக தூய்மையான கங்கை நதி போலிருந்த அன்னையின் தொப்பிள் பகுதியில் குதித்தான்’ என்பதாக பொருள் கொள்ள வேண்டும். ஆகவேதான் பராசக்தியின் தொப்பிள் பகுதியை தியானிக்கும் சாதகனின் காம எண்ணங்கள் அனைத்தும் அடியோடு அழிந்து அவன் அடுத்த நிலைக்கு (சக்கரத்திற்கு) செல்ல ஆயத்தம் ஆகின்றான் என்பதையே இந்த ஸ்லோகத்தில் ஆதி சங்கரர் மறைமுகமாகக் கூறி உள்ளார்.
- ஆதி சங்கரர் இதை ஒரு உவமையாக மட்டும் கூறி உள்ளார். ஆனால் மேலும் அதில் அவர் வைத்துள்ள தத்துவம் என்ன என்றால் பராசக்தியின் தொப்புளை போன்றதே இந்த உலக தோற்றங்கள். அதில் காணப்படும் அனைத்துமே மாயை.
- எவன் உலக வாழ்க்கையை துறந்து ஞானம் அடைய நினைக்கிறானோ அவர்கள் உலகின் சுக போகங்களை பார்க்காமல், அந்த நினைவுகளை அழித்துக் கொண்டு பராசக்தியை மனதில் கொண்டு தியானம் அல்லது யோக நிலையில் இருந்தால், அவனால் அவளது பாதங்களில் கலந்து விட முடியும், மோட்ஷம் பெற முடியும். மற்றவர்களின் சுக போகங்களை பார்த்தால்தானே உலகில் வாழ வேண்டும் என்ற ஆசை அதிகமாகும் என்பதால் அவற்றின் மீதான எண்ணங்களை அழித்துக் கொள்ள வேண்டும் என்பது இதன் அர்த்தம் ஆகும்.
- சௌந்தர்யலஹரியின் பல ஸ்லோகங்கள் தேவியின் அங்க அழகை விவரமாக விவரித்து உள்ளன. அவை வெளிப் பார்வைக்கு விரசமாக தோற்றம் அளிக்கலாம். ஆனால் அதை படிக்கும் உண்மையான பக்தர்கள், தனது தாயார் ஸ்தானத்தில் உள்ள அன்னை சாமுத்ரிகா லஷணத்தை பிரதிபலிக்கின்றாள் என்பதை உணர்வார்களே தவிர அன்னையின் அழகை வேறு கோணத்தில் பார்க்க மாட்டார்கள்.
- சாமுத்ரிகா லட்சணம் என்பது ஒருவரின் உடல் அமைப்புகளை பற்றி கூறும் சாஸ்திரம் ஆகும். ஆண்கள் மற்றும் பெண்களுடைய உடலின் ஒவ்வொரு பகுதியும். எவ்வாறான அளவில்,எந்த கோணத்தில்,இருக்க வேண்டும் என்பது பற்றி அகஸ்திய முனிவரால் எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் சிலைகளை செதுக்கும் சிறப்பிகளும் மற்றும் சிற்பங்களை வரையும் கலைஞர்களும் அந்த அளவீடுகளைப் பின்பற்றுகிறார்கள்.
- ஆதி சங்கரர் ஒரு பரிசுத்தமான யோகி. அவர் தியான நிலையில் இருந்தபோது பராசக்தியையும் பரமேஸ்வரரையும் நேரடியாக பார்த்தபோது, அவர்கள் எப்படி அவருக்கு தோற்றம் அளித்தார்களோ அவற்றைத்தான் ஸ்லோகங்களில் விளக்கிக் கூறி உள்ளார்.
- பராசக்தி இந்த ஜகத்திற்கே தாயார் என்பதினால், ஒரு பிறந்த குழந்தை தனது தாயாரின் அழகை அதன் மனதிற்குள்ளேயே, அது என்ன என்று தெரியாமல் ரசிப்பதை போலவேதான் ஆதி சங்கரரும் அன்னையின் உருவத்தை ஒரு குழந்தையாக இருந்தவாறு விளக்கி உள்ளார்.
———-
-77-
यदेतत् कालिन्दीतनुतरतरङ्गाकृति शिवे
कृशे मध्ये किंचिज्जननि तव यद्भाति सुधियाम् ।
विमर्दादन्योऽन्यं कुचकलशयोरन्तरगतं
तनूभूतं व्योम प्रविशदिव नाभिं कुहरिणीम् ॥
யதேதத் காலிந்தீதனுதரதரனகாக்ருதி ஶிவே
க்ருஶே மத்யே கிஞ்சிஜ்ஜனநி தவ யத்பாதி ஸுதியாம் ।
விமர்தாதன்யோன்யம் குசகலஶயோரந்தரகதம்
தனூபூதம் வ்யோம ப்ரவிஶதிவ நாபிம் குஹரிணீம் ॥
இந்த ஸ்லோகத்தை 2000 முறை என
15 நாட்கள் பாராயணம் செய்தால்
அரசாங்கத்தின் அங்கீகாரம் கிடைக்கும்
ஹே பராசக்தி
கருமை நிறத்திலான யமுனை நதியின் மெல்லிய அலைகளை போன்று, ஞானம் பெற்ற ஆத்மாக்கள் கண்களுக்கு மட்டுமே புலப்படும், உன் சிறு இடுப்பின் ரோம வரிசைகள், இரு பருத்த ஸ்தனங்களின் மத்தியில் எங்கே தான் அகப்பட்டுக் கொண்டு அழிந்து விடுவோமோ என்ற பயத்தில், கருப்பு நிறத்திலான யமுனை நதி இரு ஸ்தனங்களுக்கும் இடையே புகுந்து சென்று உனது தொப்புளில் சங்கமிக்கின்றது போல காணப்படுகின்றது.
- (விளக்கம்:
பராசக்தியின் அழகை ஆதி சங்கரர் விவரித்து உள்ள விதம், விரசமாக தோன்றலாம்.
- ஆதி சங்கரர் பராசக்தியை எந்த நிலையிலும் ஒரு குடும்பப் பெண்ணாகப் பார்க்கவில்லை; மாறாக அவரை பிரபஞ்சத்தின் பூமியாக, இந்த பிரபஞ்சத்தின் தாயாகப் பார்க்கிறார். தன்னை அவளுடைய குழந்தையாக, தனக்கு பாலூட்டி வளர்த்த தாயாராகவே பார்க்கின்றார்.
- ஸ்லோகங்களில் உள்ள வசனங்கள் பெரும்பாலும் அதிக விளக்கம் தராத நிலையில் உள்ளன இருக்கின்றன என்றாலும் ஆழமான ஆன்மீக அர்த்தங்களை வெளிப்படுத்துகின்றன.
- பராசக்தி அவருக்கு தூய ஞானத்தைக் கொடுத்திருக்கிறாள். அவரைப் பொறுத்தவரை பராசக்தி இந்த பிரபஞ்சத்தை படைத்தவள்; அவளே இந்த பிரபஞ்சமாக இருப்பதினால் இயற்கையாக உள்ள ஆறுகள், மலைகள், குகைகள், நெல் மற்றும் பிற வயல்கள், கடல், ஆறுகள் போன்றவற்றின் உருவங்கள் அவள் உடலில் காணப்படுகின்றன; பிரபஞ்சத்தின் ஒவ்வொரு பக்கமும் ஏதோ ஒரு வடிவத்தில் அவளுடைய உடலில் பிரதிபலிக்கிறது; எனவே அவர் தனது தாயின் உடலில் காணும் இயற்கையின் அழகை ஒரு சிறு ரோமம் போல பார்த்து தனது ஸ்லோகங்களில் வெளிப்படுத்தி உள்ளார் .
- பராசக்தியின் உடலில் உள்ள கண்கள், புருவங்கள், கண் இமைகள், மூக்கு, வாய் காது மடல், கன்னம், உதடுகள், கன்னம், மார்பகங்கள், முடி போன்றவை பல்வேறு இயற்கையின் அழகை பிரதிபலிக்கின்றன.
- ஆதி சங்கரர் அவளுடைய தொப்பிளை ஒரு ஹோம குண்டமாக கற்பனை செய்திருக்கலாம், அங்கிருந்து புகை எழுந்து மேலே செல்கின்றது. அது காற்றினால் மெல்ல உயரே எழும்பியவாறு பறக்கும் மெல்லிய முடியுடன் ஒப்பிடப்படுகிறது.
- அவளுடைய ஸ்தனங்களில் இருந்து சுரக்கும் பால், ஞானத்தை விரும்பும் ஒருவருக்கு வழங்கப்பட வைக்கப்பட்டு உள்ள ‘ஞான அமிர்தக் கலசங்களாக’ அவர் கற்பனை செய்திருக்கலாம் – அமிர்தத்தைக் குடித்த இரண்டு மகன்களும், இளமையை இழக்கவில்லை, அதே அப்பாவித்தனத்தை கொண்டு, இன்றுவரை பெண்களின் மீதான நாட்டம் கொண்டு ஆடவில்லை.
- பராசக்தியின் பாலை அருந்தியதினால் ஒரு திராவிடக் குழந்தை (ஒருவேளை சைவப் பிரிவின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவரான திருநாவுக்கரசரை, அல்லது தன்னையும் சேர்த்தே குறிப்பிடலாம்) ஞானம் பெற்றது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
- தாயின் பெரிய மார்பகங்களை மலைகளின் ராஜா, இமயமலை என்று அவர் அர்த்தப்படுத்தியிருக்கலாம். அவை இரண்டின் இடைவெளியை ஒரு குகையாகவும், அவளுடைய உடலில் உள்ள முடியை நெல், செடிகள் மற்றும் அவற்றில் வளரும் பிற பயிர்கள் நிறைந்த விவசாய வயல்களாகவும் அவர் கற்பனை செய்திருக்கலாம்.
- பராசக்தியின் உடலின் மார்புப் பகுதியில் காணப்படும் மயிர்கள் ஆழ்ந்த ஞான நிலையில் உள்ளவர்களின் கண்களுக்கு மட்டுமே தெரியும். அவைகளே அவர்களுக்கு வயல் வெளியில் வளரும் நெல், செடி-கொடிகள் மற்றும் அவற்றில் வளரும் பிற பயிர்களாக காட்சி தருகின்றது. ஏன் என்றால் அவர்கள் அன்னையை ஒரு பெண்ணின் உடலாக பார்க்கவில்லை. அவளை இந்த பிரபஞ்சத்தின் பூமியாகவே பார்த்து தியானிக்கின்றார்கள்.
- எனவே, ஒரு சாதாரண மனிதனால் எளிதில் புரிந்து கொள்ள முடியாத மாய தத்துவ செய்திகள் நிறைந்தவை ஆதி சங்கரரின் சௌந்தர்யலஹரி ஸ்லோகங்கள்.
- சௌந்தர்யலஹரியின் பல ஸ்லோகங்கள் தேவியின் அங்க அழகை விவரமாக விவரித்து உள்ளன. அவை வெளிப் பார்வைக்கு விரசமாக தோற்றம் அளிக்கலாம். ஆனால் அதை படிக்கும் உண்மையான பக்தர்கள், தனது தாயார் ஸ்தானத்தில் உள்ள அன்னை சாமுத்ரிகா லஷணத்தை பிரதிபலிக்கின்றாள் என்பதை உணர்வார்களே தவிர அன்னையின் அழகை வேறு கோணத்தில் பார்க்க மாட்டார்கள்.
- ஆதி சங்கரர் ஒரு பரிசுத்தமான யோகி. அவர் தியான நிலையில் இருந்தபோது பராசக்தியையும் பரமேஸ்வரரையும் நேரடியாக பார்த்தபோது, அவர்கள் எப்படி அவருக்கு தோற்றம் அளித்தார்களோ அவற்றைத்தான் ஸ்லோகங்களில் விளக்கிக் கூறி உள்ளார்.
பராசக்தி இந்த ஜகத்திற்கே தாயார் என்பதினால், ஒரு பிறந்த குழந்தை தனது தாயாரின் அழகை அதன் மனதிற்குள்ளேயே, அது என்ன என்று தெரியாமல் ரசிப்பதை போலவேதான் ஆதி சங்கரரும் அன்னையின் உருவத்தை ஒரு குழந்தையாக இருந்தவாறு விளக்கி உள்ளார்.
———-
-78-
स्थिरो गङ्गावर्तः स्तनमुकुलरोमावलिलता-
कलावालं कुण्डं कुसुमशरतेजोहुतभुजः ।
रतेर्लीलागारं किमपि तव नाभिर्गिरिसुते
बिलद्वारं सिद्धेर्गिरिशनयनानां विजयते ॥
ஸ்திரோ கனகாவர்த: ஸ்தனமுகுலரோமாவலிலதா-
கலாவாலம் குண்டம் குஸுமஶரதேஜோஹுதபுஜ: ।
ரதேர்லீலாகாரம் கிமபி தவ நாபிர்கிரிஸுதே
பிலத்வாரம் ஸித்தேர்கிரிஶனயனாநாம் விஜயதே ॥
இந்த ஸ்லோகத்தை 108 முறை என
45 நாட்கள் பாராயணம் செய்தால் —
அரசாங்கத்தின் அங்கீகாரம் கிடைக்கும்,
அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும்
ஹே பராசக்தி
உனது தொப்பிள் என்பது அமைதியாக உள்ள கங்கை நதியின் சூழல் போன்றது. அங்கே தாமரை மலர்களின் மொட்டுக்களை தாமரை மலர்களின் தண்டுகள் சுமப்பதை போன்று, உனது ரோமங்கள் ஸ்தனங்களை சுமந்து கொண்டு இருக்கும் காட்சி உள்ளது. மேலும் அது மன்மதனின் அக்னி குண்டம் போன்றும், மன்மதனின் மனைவியான ரதி விளையாடும் இடமும் போன்றும், பரமேஸ்வரர் மற்றும் ரிஷி -முனிவர்கள் சித்தி அடைய தவம் செய்ய தேர்ந்து எடுத்த இடம் போலவும் அல்லவா உள்ளது.
- (விளக்கம்:
கங்கை நதியின் நீர் சுழல்கள் ஸ்திரமாக இருக்காதாம். ஆனால் இந்த ஸ்லோகத்தில் ஆதி சங்கரர் பராசக்தியின் தொப்பிளை கங்கையின் அமைதியான சுழல் நீருடன் ஒப்பிட்டு உள்ளார். கங்கை நீரில் குளித்தால் பாவங்கள் போய் விடும், ஆனால் பராசக்தியின் தொப்பிள் உள்ள பகுதியை தியானித்தால் மட்டும் போதும் அது பாவத்தைப் போக்கி விடும். - அங்குதான் மன்மதன் குதித்து தன்னை தீயின் தாக்கத்தில் இருந்து காப்பாற்றிக் கொண்டதாக 76 வது ஸ்லோகத்தில் கூறப்பட்டு இருந்தது. அந்த இடத்தில் உள்ளவரை அவன் மனதில் காம மோக எண்ணங்கள் வர முடியாதாம். அத்தகைய எண்ணங்களை அழித்து விடும் நிலையிலான இடம் அது ஆகும். ஆகவே அந்த இடத்தை தியானிக்கும் சாதகர்களுக்கு காம, மோக, இச்சைகளுக்கான எண்ணங்கள் அழிந்து விடுமாம்.
- மூன்றாவது, அன்னையின் அந்த உடல் பகுதியில் உள்ள ரோமங்கள் அன்னையின் ஸ்தனங்களை தூக்கிப் பிடித்துக் கொண்டு உள்ளதை போல தோற்றம் தரும் காட்சி தாமரை மலரையும் அதை தாங்கி நிற்கும் தண்டையும் போல உள்ளது என்று கூறுவதில் மூலம், தாமரை மலரில் வசிப்பவள் லட்சுமி தேவி, ஆகவே அந்த பகுதியை நினைத்து தியானம் செய்கையில் பரிபூரணமான லட்சுமி கடாட்ஷம் கிட்டும் என்பதை உணர்த்துகின்றார்.
- மன்மதனை எரித்த சிவபெருமான் அவன் எப்போது வெளி வருவான் என்று எதிர் பார்த்தபடி அவன் கீழே குதித்தவுடன், கங்கை நதியின் அமைதியான சுழல் நீரைப் போல உள்ள அன்னையின் தொப்பிளை நிலையாக பார்த்துக் கொண்டே இருக்கின்றார். அப்படி பார்த்துக் கொண்டே இருக்கும்போது அவளது தொப்பிள் அழகில் மயங்கி தன்னை மறந்து தியான நிலையில் சென்று விடுகின்றார். அவருடைய கோபங்கள் கங்கை நதியின் அமைதியான சுழல் நீரைப் போல உள்ள அன்னையின் தொப்புளில் கரைந்து அமைதியாகி விடுகின்றன. எனவே பராசக்தியின் தொப்பிள் உள்ள பகுதியை தியானித்தால் ஒருவரது மனம் அமைதியாகி விடுகின்றது.
- அமைதி தியான நிலையின் உச்ச கட்டத்திற்கு செல்ல வழி காட்டி விடுகின்றது. தியானத்தின் உச்ச கட்டத்தை எட்டுபவன் ஞான நிலைக்கு சென்று விடுவான் என்பவை அனைத்தும் இந்த ஸ்லோகத்தின் உள் அர்த்தமாக உள்ளது.
- ஆகவே அன்னையின் உடலின் இந்த இடம், விழிப்புணர்வு விரைவாகப் பெற எண்ணி தியான நிலையில் உள்ள சாதகர்களுக்கு மிக முக்கியமான இடம் ஆகும்.
- எனவே, முன் ஸ்லோகத்தில் விளக்கி உள்ளபடி ஒரு சாதாரண மனிதனால் எளிதில் புரிந்து கொள்ள முடியாத மாய தத்துவ செய்திகள் நிறைந்தவை ஆதி சங்கரரின் சௌந்தர்யலஹரி ஸ்லோகங்கள் என்பது இதிலும் புரிகின்றது.
- சௌந்தர்யலஹரியின் உண்மையான விளக்க உரைகளை நல்ல குருக்களிடம் இருந்து அறிந்து கொள்ள வேண்டும்.
- சௌந்தர்யலஹரியின் பல ஸ்லோகங்கள் தேவியின் அங்க அழகை விவரமாக விவரித்து உள்ளன. அவை வெளிப் பார்வைக்கு விரசமாக தோற்றம் அளிக்கலாம். ஆனால் அதை படிக்கும் உண்மையான பக்தர்கள், தனது தாயார் ஸ்தானத்தில் உள்ள அன்னை சாமுத்ரிகா லஷணத்தை பிரதிபலிக்கின்றாள் என்பதை உணர்வார்களே தவிர அன்னையின் அழகை வேறு கோணத்தில் பார்க்க மாட்டார்கள்.
- சாமுத்ரிகா லட்சணம் என்பது ஒருவரின் உடல் அமைப்புகளை பற்றி கூறும் சாஸ்திரம் ஆகும். ஆண்கள் மற்றும் பெண்களுடைய உடலின் ஒவ்வொரு பகுதியும். எவ்வாறான அளவில்,எந்த கோணத்தில்,இருக்க வேண்டும் என்பது பற்றி அகஸ்திய முனிவரால் எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் சிலைகளை செதுக்கும் சிறப்பிகளும் மற்றும் சிற்பங்களை வரையும் கலைஞர்களும் அந்த அளவீடுகளைப் பின்பற்றுகிறார்கள்.
- ஆதி சங்கரர் ஒரு பரிசுத்தமான யோகி. அவர் தியான நிலையில் இருந்தபோது பராசக்தியையும் பரமேஸ்வரரையும் நேரடியாக பார்த்தபோது, அவர்கள் எப்படி அவருக்கு தோற்றம் அளித்தார்களோ அவற்றைத்தான் ஸ்லோகங்களில் விளக்கிக் கூறி உள்ளார்.
- பராசக்தி இந்த ஜகத்திற்கே தாயார் என்பதினால், ஒரு பிறந்த குழந்தை தனது தாயாரின் அழகை அதன் மனதிற்குள்ளேயே, அது என்ன என்று தெரியாமல் ரசிப்பதை போலவேதான் ஆதி சங்கரரும் அன்னையின் உருவத்தை ஒரு குழந்தையாக இருந்தவாறு விளக்கி உள்ளார்).
———-
-79-
स्थिरो गङ्गावर्तः स्तनमुकुलरोमावलिलता-
कलावालं कुण्डं कुसुमशरतेजोहुतभुजः ।
रतेर्लीलागारं किमपि तव नाभिर्गिरिसुते
बिलद्वारं सिद्धेर्गिरिशनयनानां विजयते ॥
ஸ்திரோ கனகாவர்த: ஸ்தனமுகுலரோமாவலிலதா-
கலாவாலம் குண்டம் குஸுமஶரதேஜோஹுதபுஜ: ।
ரதேர்லீலாகாரம் கிமபி தவ நாபிர்கிரிஸுதே
பிலத்வாரம் ஸித்தேர்கிரிஶனயனாநாம் விஜயதே ॥॥
இந்த ஸ்லோகத்தை 1000 முறை என
45 நாட்கள் பாராயணம் செய்தால் தந்திர,
மாயா வித்தைக் கலைகளில் சிறந்து
விளங்குவார்கள்; மக்கள் மனதை கவர்வார்கள்
ஹே பராசக்தி
ஆற்று கரையில் உள்ள பெரிய மரமானது ஆற்று மணல் அரிப்பால் சாய்ந்து கொண்டே இருந்தாலும் அது பூமியில் புதைந்து உள்ள நீண்ட வேரினால் உடையாமல் உறுதியாக நிற்பதை போல உனது ஸ்தனங்களின் பாரத்தினால் சற்றே சாய்ந்து காணப்படும் உன்னுடைய மெல்லிய இடை ஒடிந்து விழாமல் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கின்றேன்
- (விளக்கம்:
இதன் தத்துவார்த்தமான அர்த்தம் என்ன என்றால் இந்த பிரபஞ்சமே அன்னையின் உடல். வளைந்து காணப்படும் உடலின் இடுப்புப் பகுதியே பூமி ஆகும். அந்த பூமியையே கரை உடைந்த நதிக்கரையில் உள்ள ஒரு மரத்தின் நிலையைப் போன்ற ஒரு பொருளாக காட்டுகின்றார். - பிரபஞ்சத்தை தாங்கி நிற்கும் பூமியானது பெருகிக் கொண்டே இருக்கும் ஜனத்தொகை, மலை, நதிகள், ஆறுகள், மரம் செடி கொடிகள், விலங்குகள் என்ற அனைத்து பாரத்தையும் தாங்க முடியாமல் போகும் நிலையில் பூமி அழிந்து விடக் கூடாதே என்ற எண்ணத்தில் பிரபஞ்சத்தின் நியதி அவ்வப்போது இயற்கை பேரழிவுகளை ஏற்படுத்தி மானிடர்களின் எண்ணிக்கையைக் குறைத்து அதன் மூலம் பூமியின் மீதுள்ள பாரத்தை குறைத்துக் கொண்டு வருகின்றது.
- ஆகவே அப்படிப்பட்ட பேரழிவுகள் வராத அளவில் பூமிக்கும், மானிடர்களின் எண்ணிக்கைக்கும் ஒரு அளவுக் கோட்டை நியதி நியமித்து உள்ளது. அந்த இரண்டு வரைமுறைகளை எடுத்துக் காட்டுவதே தராசு போல இயங்கும் அன்னையின் இரு மார்பகங்களும் ஆகும். அது ஒரு தராசைப் போல இயங்கி கொண்டு இரு பக்கத்தையும் – மானிடர்கள் மற்றும் பிற ஜீவன்கள், இயற்கை வளங்கள் என அனைத்தையும் சம நிலையில் வைத்து, பூமியே அழிந்து விடாமல் இருக்குமாறு பாதுகாத்துக் கொண்டு வருகின்றது என்பதை இந்த ஸ்லோகத்தின் மூலம் ஆதி சங்கரர் உணர்த்தி அதற்காகவே பிரார்த்தனை செய்கின்றார். பராசக்தி இந்த ஜகத்திற்கே தாயார் என்பதினால், ஒரு பிறந்த குழந்தை தனது தாயாரின் அழகை அதன் மனதிற்குள்ளேயே, அது என்ன என்று தெரியாமல் ரசிப்பதை போலவேதான் ஆதி சங்கரரும் அன்னையின் உருவத்தை ஒரு குழந்தையாக இருந்தவாறு விளக்கி உள்ளார்
———-
-80-
कुचौ सद्यःस्विद्यत्तटघटितकूर्पासभिदुरौ
कषन्तौ दोर्मूले कनककलशाभौ कलयता
तव त्रातुं भङ्गादलमिति वलग्नं तनुभुवा
त्रिधा नद्धं देवि त्रिवलि लवलीवल्लिभिरिव ॥
குசௌ ஸத்ய:ஸ்வித்யத்தடகடிதகூர்பாஸபிதுரௌ
கஷந்தௌ தோர்மூலே கனககலஶாபௌ கலயதா ।
தவ த்ராதும் பனகாதலமிதி வலக்னம் தனுபுவா
த்ரிதா நத்தம் தேவி த்ரிவலி லவலீவல்லிபிரிவ ॥॥
இந்த ஸ்லோகத்தை 1000 முறை என
45 நாட்கள் பாராயணம் செய்தால்
தந்திர,மாயாஜால வித்தைகளில் சிறந்து விளங்குவார்கள்
ஹே பராசக்தி
நீ உன் கணவர் பரமேஸ்வரரின் பெருமைகளை நினைத்து நினைத்து பூரிப்பு அடைவதினால், உன்னுடைய தேகம் வியர்வையில் நனைந்து போகின்றது. அப்போது விம்மும் தங்கக் கலசங்கள் போன்ற உனது ஸ்தனங்கள், உனது ரவிக்கையையும் கிழித்துக் கொண்டு இடுப்பையும் ஒடித்து விடுமோ என்ற பயத்தில், உன்னுடைய சரீரத்தை உருவாக்கிய மன்மதன், உனது இடுப்பில் மூன்று ரேகைகளை போன்று மூன்று மடிப்புக்களையும் ஏற்படுத்தி உள்ளான் என்று தோன்றுகின்றது.
- (விளக்கம்:
இந்த ஸ்லோகத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை கவனிக்க வேண்டும். பராசக்தி யாராலும் உருவாக்கப்படவில்லை. அவள் உருவாக்கியதே இந்த பிரபஞ்சமும் பதினான்கு லோகங்களிலும் காணப்படும் அனைத்து உயிரினங்கள், இயற்கை வளங்கள், தாவரங்கள், விலங்குகள் போன்றவை ஆகும். அது மட்டும் அல்ல அனைத்து தெய்வங்களும் அவளால்தான் படைக்கப்பட்டுள்ளனர் எனும்போது எதற்காக ஆதி சங்கரர் அவளது இடுப்பு பிரதேசத்தில் காணப்படும் மூன்று மடிப்புக்களை போன்ற சதையை மன்மதன் உருவாக்கி உள்ளான் என்று கூற வேண்டும். - மன்மதன் என்றால் அழகிலும் அழகானவன் என்பது அர்த்தம். இந்த பிரபஞ்சம் உருவாகும் முன்னரே பராசக்தி என்பவள் பரமேஸ்வரனுடன் கலந்து இருந்த சதாசிவனாக இருந்தார் என்பது அனைவரும் அறிந்ததே. முதலில் பராசக்தி இந்த பிரபஞ்சத்தை தான் கூறியபடி படைக்க எண்ணி தன்னிடம் இருந்து சதாசிவனை வெளியில் விடுகின்றார். அவரை ஈஸ்வரன் என்று அழைத்தார்கள்.
- அந்த ஈஸ்வரன் வெளிப்படுத்திய மூன்று தெய்வங்களான பிரும்மா, விஷ்ணு மற்றும் ருத்திரன் என்பவர்களில் பிரும்மா மூலம்தான் இந்த பிரபஞ்சத்தின் அனைத்தும் உருவாகியது. ஆகவே பிரும்மா கூட உருவாக்காத பரமேஸ்வரியின் உருவத்தை எப்படி மன்மதனால் இந்த ஸ்லோகத்தில் கூறி உள்ளபடி அமைத்து இருக்க முடியும்?
- இங்குதான் இந்த ஸ்லோகத்தில் ஆதி சங்கரரின் பார்வை என்ன என்பது தெரிகின்றது. அவர் மன்மதன், அதாவது அதி அழகன் என்று இந்த ஸ்லோகத்தில் குறிப்பிட்டு உள்ளது பரமேஸ்வரியோடு இணைந்து இருந்த சதாசிவனைத்தான். ஆகவே இது அவளால் சுயமாக உருவாக்கப்பட்டது என்பதை தெளிவுபடுத்துகிறது.
- எதனால் மூன்று ரேகைகளை போன்ற மூன்று மடிப்புக்கள் பராசக்தியின் உடலில் உள்ளது? பராசக்தியின் உடலே இந்த பிரபஞ்சம் ஆகவே என்பது ஆதி சங்கரரின் பார்வை. அந்த மூன்று மடிப்புக்களும் பிரபஞ்சத்தில் மேல் லோகம், மத்திய லோகமான பூமி மற்றும் பூமிக்கு கீழே உள்ள கீழ் லோகம் என்பவற்றை பிரதிபலிக்கின்றது. அந்த மூன்று மடிப்புக்களும், மூன்று லோகங்களையும் தனது உடலில் அடக்கிக் கொண்டு உள்ளாள் என்பதைக் காட்டுகின்றன என்பதே இந்த ஸ்லோகத்தில் காணப்படும் ஆழமான அர்த்தம் ஆகும்.
- பராசக்தியின் கனத்த மார்பகத்தை அவளது வயிற்றுப் பகுதி தாங்குவதால் வயிற்றுப் பகுதியின் மேல் மூன்று கொடிகள் போன்ற மடிப்புகள் காணப்படுகின்றது. அது மட்டும் அல்ல மார்பகத்தின் பாரத்தால் ஒடிந்து விடுவது போல காட்சி அளிக்கும் மெல்லிய இடைக்கு ஒட்டியாணம் போலவும் அந்த மூன்று மடிப்புக்கள் காட்சி அளிக்கின்றது.
- இதில் உள்ள தத்துவம் என்ன என்றால் ‘பராசக்தியின் மார்பகம் தாய்மையைக் குறிக்கின்றது. பிரபஞ்சத்தில் உள்ள அனைவரின் வயிற்றுக்கும் உணவளிக்கும் தாய் என்பதால், வயிறு அனைத்து ஜீவன்களும் உள்ள பிரபஞ்சத்தைக் குறிக்கிறது. இடுப்பில் அணிந்திருக்கும் ஒட்டியாணம் அவள் பிரபஞ்சத்தை எல்லாப் பக்கங்களிலிருந்தும் அணைத்துக் கொண்டிருக்கும் நிலையைக் குறிக்கிறது.’
- சௌந்தர்யலஹரியின் பல ஸ்லோகங்கள் தேவியின் அங்க அழகை விவரமாக விவரித்து உள்ளன. அவை வெளிப் பார்வைக்கு விரசமாக தோற்றம் அளிக்கலாம். ஆனால் அதை படிக்கும் உண்மையான பக்தர்கள், தனது தாயார் ஸ்தானத்தில் உள்ள அன்னை சாமுத்ரிகா லஷணத்தை பிரதிபலிக்கின்றாள் என்பதை உணர்வார்களே தவிர அன்னையின் அழகை வேறு கோணத்தில் பார்க்க மாட்டார்கள்.
- சாமுத்ரிகா லட்சணம் என்பது ஒருவரின் உடல் அமைப்புகளை பற்றி கூறும் சாஸ்திரம் ஆகும். ஆண்கள் மற்றும் பெண்களுடைய உடலின் ஒவ்வொரு பகுதியும். எவ்வாறான அளவில்,எந்த கோணத்தில்,இருக்க வேண்டும் என்பது பற்றி அகஸ்திய முனிவரால் எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் சிலைகளை செதுக்கும் சிறப்பிகளும் மற்றும் சிற்பங்களை வரையும் கலைஞர்களும் அந்த அளவீடுகளைப் பின்பற்றுகிறார்கள்.
- ஆதி சங்கரர் ஒரு பரிசுத்தமான யோகி. அவர் தியான நிலையில் இருந்தபோது பராசக்தியையும் பரமேஸ்வரரையும் நேரடியாக பார்த்தபோது, அவர்கள் எப்படி அவருக்கு தோற்றம் அளித்தார்களோ அவற்றைத்தான் ஸ்லோகங்களில் விளக்கிக் கூறி உள்ளார்.
- பராசக்தி இந்த ஜகத்திற்கே தாயார் என்பதினால், ஒரு பிறந்த குழந்தை தனது தாயாரின் அழகை அதன் மனதிற்குள்ளேயே, அது என்ன என்று தெரியாமல் ரசிப்பதை போலவேதான் ஆதி சங்கரரும் அன்னையின் உருவத்தை ஒரு குழந்தையாக இருந்தவாறு விளக்கி உள்ளார்).
———
-81-
गुरुत्वं विस्तारं क्षितिधरपतिः पार्वति निजा-
न्नितम्बादाच्छिद्य त्वयि हरणरूपेण निदधे ।
अतस्ते विस्तीर्णो गुरुरयमशेषां वसुमतीं
नितम्बप्राग्भारः स्थगयति लघुत्वं नयति च ॥
குருத்வம் விஸ்தாரம் க்ஷிதிதரபதி: பார்வதி நிஜா-
ந்னிதம்பாதாச்சித்ய த்வயி ஹரணரூபேண நிததே ।
அதஸ்தே விஸ்தீர்ணோ குருரயமஶேஷாம் வஸுமதீம்
நிதம்பப்ராக்பார: ஸ்தகயதி லகுத்வம் நயதி ச ॥
இந்த ஸ்லோகத்தை 1000 முறை என
16 நாட்கள் பாராயணம் செய்தால்
நெருப்பின் மீது நீந்தும் வகையிலான சக்தியை பெறலாம்
ஹே பராசக்தி
உன்னுடைய பின் பாகமானது பிரும்மாண்டமாகவும், பக்கவாட்டில் அகலமாகவும் உள்ளதினால், அது இந்த பூமியையே மறைப்பது போல உள்ளது. அது உனது தந்தையான ஹிமாயவன் உனக்கு ஹிமய மலையின் அடிவாரத்தில் இருந்து வெட்டி எடுத்து அளித்த சீர் வரிசை போன்ற அளவில் காணப்படுகின்றது
- (விளக்கம்:
இந்த ஸ்லோகத்தின் மூலம் ஆதி சங்கரர் கூறி உள்ளது என்ன என்றால்,’ நாம் அனைவருமே இந்த உலகம் மிக, மிகப் பெரியது என்று நினைத்துக் கொண்டு உள்ளோம், ஆனால் அதுவே அன்னையின் இடுப்புப் பகுதியால் மறைக்கப்பட்டு விடுகின்றது என்றால் பராசக்தி இந்த உலகை விட எத்தனை பெரிய அளவிலான உருவம் கொண்டு இருந்திருக்க வேண்டும்’. - அப்படி என்றால் மறைக்கப்படும் அதே உலகில் நின்று கொண்டு அன்னையை வர்ணிக்கும் ஆதி சங்கரரும் அல்லவா அன்னையின் முழு உருவையும் பார்க்க முடியாமல், அங்கம் அங்கமாக வர்ணிக்க முடியாமல் இருந்திருப்பார்.
- ஆகவே இந்த ஸ்லோகத்தின் கருத்தை மேலோட்டமாக பார்க்கக் கூடாது, இதில் அடங்கி உள்ள தத்துவத்தை மட்டுமே பார்க்க வேண்டும். ‘அன்னையின் பின்புறம் பூமியை மறைக்கின்றது என்றால் இந்த உலகமே அவளுக்குள் அடங்கி உள்ளது, உலகமே பராசக்தியாக காட்சி அளிக்கின்றது என்பதே இதன் அர்த்தம் ஆகும்’. ஆதி சங்கரர் அன்னையின் ஒவ்வொரு அங்கங்களும் எப்படி இந்த உலகை பிரதிபலிக்கின்றது என்பதாகவே ஒவ்வொரு ஸ்லோகத்தின் மூலமும் விளக்கி உள்ளார்).
———–
-82-
करीन्द्राणां शुण्डान् कनककदलीकाण्डपटली-
मुभाभ्यामूरुभ्यामुभयमपि निर्जित्य भवती ।
सुवृत्ताभ्यां पत्युः प्रणतिकठिनाभ्यां गिरिसुते
विजिग्ये जानुभ्यां विबुधकरिकुम्भद्वयमसि ॥
கரீந்த்ராணாம் ஶுண்டான் கனககதலீகாண்டபடலீ-
முபாப்யாமூருப்யாமுபயமபி நிர்ஜித்ய பவதீ ।
ஸுவ்ருத்தாப்யாம் பத்யு: ப்ரணதிகடினாப்யாம் கிரிஸுதே
விதிஜ்ஞ்யே ஜானுப்யாம் விபுதகரிகும்பத்வயமஸி ॥
இந்த ஸ்லோகத்தை 1000 முறை என
16 நாட்கள் பாராயணம் செய்தால்
நீரில் மிதக்கும் வகையிலான சக்தியை பெறலாம்
ஹே பராசக்தி
உனது தொடைகள் இரண்டும் யானைகளின் துதிக்கைகள் மற்றும் பளபளக்கும் வாழைத் தண்டுகளை விட அதிக அழகுடன் உள்ளன. நீ அடிக்கடி உனது கணவனை வணங்கித் துதித்தாலும் உனது முழங்கால் முட்டி எந்த பாதிப்பிற்கும் உள்ளாகாமல் ஐராவத யானையின் இரண்டு கும்பங்களுக்கும் மேலான அளவில் வலுவாக உள்ளன.
- (விளக்கம்:
இந்த ஸ்லோகத்தின் மூலம் ஆதி சங்கரர் பராசக்தியின் தொடைகள் மற்றும் முன் கால்களின் மேன்மையை புகழ்ந்து உள்ளார். அவர் கூறுகின்றார் ‘ஓ, பராசக்தி, யானையின் மென்மையான தும்பிக்கைகள் மற்றும் தங்கம் போல மின்னும் வாழை மர தண்டுகள் உங்கள் அழகான தொடைகளுக்கு எந்த வகையிலும் இணை ஆகாது என்பதை நீங்கள் ஆழமாக நிரூபித்துள்ளீர்கள். உங்கள் கணவரின் காலடியில் நீங்கள் மீண்டும் மீண்டும் விழுந்து வணங்கினாலும், உங்கள் மென்மையான கால் முட்டி இன்னும் அதன் வலுவான தன்மையை இழக்காமல் உள்ளது என்பதின் மூலம் , உங்கள் கால் முட்டியானது தெய்வீக யானை ஐராவதத்தின் கடினமான முன் கோளங்களை (தலையின் மேல் பகுதி) விட சிறப்பானவை, வலுவானவை என்பது அர்த்தம் ஆகின்றது. - இந்த ஸ்லோகத்தின் மூலம் ஆதி சங்கரர் மறைமுகமாக சில அறிவுரைகளை வீட்டில் உள்ள ஸ்திரீகளுக்கு தெரிவித்து உள்ளார்.
- அவர் கூறி உள்ளது என்ன என்றால் ‘எந்த நிலையிலும் கணவனே கண்கண்ட தெய்வம் என்பதே திருமணம் ஆன ஸ்த்ரீகள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் ஆகும். அதனால்தான் பராசக்தியே ஆனாலும் தனது கணவரான பரமேஸ்வரருக்கு முட்டிக் கால் போட்டு அடிக்கடி நமஸ்கரிக்கின்றார்.
- இந்த ஜகத்தை படைத்த பராசக்தி எப்படி சிவபெருமானுக்கு முட்டிக் கால் போட்டு நமஸ்காரம் செய்தாள் என்ற எண்ணம் வரக் கூடாது. பராசக்தி சிவபெருமானுக்கு நமஸ்காரம் செய்யவில்லை. தன்னுடைய கணவனுக்குத்தான் நமஸ்காரம் செய்து உள்ளாள். ஆகவே திருமணம் ஆன எந்த பெண்ணுக்கும் அவளுடைய கணவனே முதல் தெய்வம் என்பதை மனதில் ஆழமாகக் கொள்ள வேண்டும்.
- சௌந்தர்யலஹரியின் பல ஸ்லோகங்கள் தேவியின் அங்க அழகை விவரமாக விவரித்து உள்ளன. அவை வெளிப் பார்வைக்கு விரசமாக தோற்றம் அளிக்கலாம். ஆனால் அதை படிக்கும் உண்மையான பக்தர்கள், தனது தாயார் ஸ்தானத்தில் உள்ள அன்னை சாமுத்ரிகா லஷணத்தை பிரதிபலிக்கின்றாள் என்பதை உணர்வார்களே தவிர அன்னையின் அழகை வேறு கோணத்தில் பார்க்க மாட்டார்கள்.
- சாமுத்ரிகா லட்சணம் என்பது ஒருவரின் உடல் அமைப்புகளை பற்றி கூறும் சாஸ்திரம் ஆகும். ஆண்கள் மற்றும் பெண்களுடைய உடலின் ஒவ்வொரு பகுதியும். எவ்வாறான அளவில்,எந்த கோணத்தில்,இருக்க வேண்டும் என்பது பற்றி அகஸ்திய முனிவரால் எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் சிலைகளை செதுக்கும் சிறப்பிகளும் மற்றும் சிற்பங்களை வரையும் கலைஞர்களும் அந்த அளவீடுகளைப் பின்பற்றுகிறார்கள்.
- ஆதி சங்கரர் ஒரு பரிசுத்தமான யோகி. அவர் தியான நிலையில் இருந்தபோது பராசக்தியையும் பரமேஸ்வரரையும் நேரடியாக பார்த்தபோது, அவர்கள் எப்படி அவருக்கு தோற்றம் அளித்தார்களோ அவற்றைத்தான் ஸ்லோகங்களில் விளக்கிக் கூறி உள்ளார்.
- பராசக்தி இந்த ஜகத்திற்கே தாயார் என்பதினால், ஒரு பிறந்த குழந்தை தனது தாயாரின் அழகை அதன் மனதிற்குள்ளேயே, அது என்ன என்று தெரியாமல் ரசிப்பதை போலவேதான் ஆதி சங்கரரும் அன்னையின் உருவத்தை ஒரு குழந்தையாக இருந்தவாறு விளக்கி உள்ளார்).
———-
-83-
पराजेतुं रुद्रं द्विगुणशरगर्भौ गिरिसुते
निषङ्गौ जङ्घे ते विषमविशिखो बाढमकृत ।
यदग्रे दृश्यन्ते दशशरफलाः पादयुगली-
नखाग्रच्छद्मानः सुरमकुटशाणैकनिशिताः ॥
பராஜேதும் ருத்ரம் த்விகுணஶரகர்பௌ கிரிஸுதே
நிஷனகௌ ஜனகே தே விஷமவிஶிகோ பாடமக்ருத ।
யதக்ரே த்ருஶ்யந்தே தஶஶரபலா: பாதயுகலீ-
நகாக்ரச்சத்மான: ஸுரமகுடஶாணைகனிஶிதா: ॥
இந்த ஸ்லோகத்தை 1000 முறை என
12 நாட்கள் பாராயணம் செய்தால்
முழு இராணுவத்தையும் அடக்கி வைத்திருக்கும்
அளவிலான சக்தியைப் பெறுவார்கள்.
ஹே பராசக்தி
உனது கூர்மையான நகங்களை வெளிப்படுத்தும் கணுக் கால்கள், பரமேஸ்வரரை வெற்றி கொள்ள (தவத்தைக் கலைக்க) மன்மதன் வைத்திருந்த அம்புக் கூட்டில் (அம்பு வைக்கும் கூடு) காணப்படும் அம்பு போன்று உள்ளது. பரமேஸ்வரரை வெற்றி கொள்ள தன்னுடைய ஐந்து அம்புகளும் போதாமல், தேவர்கள் வணங்கும் போது அவர்கள் தலையில் இருந்த கிரீடத்தினால் கூர்மையாக சாணை தீட்டப்பட்டதை போல ஆகி விடும் உனது பத்து கணுக்கால் விரல் நகங்களை பத்து அம்புகளாக பாவித்துக் கொண்டான் போல உள்ளது.
- (விளக்கம்:
இந்த ஸ்லோகத்தில் ஆதி சங்கரர் பராசக்தியின் கால் விரல்களில் உள்ள நகங்களின் அழகு எப்படி சிவபெருமானை ஆட்கொண்டுள்ளது என்பதை வர்ணிக்கிறார். ஆதி சங்கரர் இந்த ஸ்லோகத்தில் கூறி உள்ளார். ‘ஓ பராசக்தி, மன்மதன் சிவனின் தவத்தைத் அழிக்கும் விதத்திலான செயலை எப்படிச் செய்வது என்ற குழப்பத்தில் இருந்தபோது திடீரென்று உன் முழங்காலுக்கு கீழே உள்ள கால்களை பார்த்தார், அதன் தோற்றம் அவருக்கு சிக்கலை உடைக்க ஒரு தீர்வை தந்தது; உன் ‘முழங்காலுடன் சேர்ந்த கால் நகங்களைப்’ போன்ற அம்புகளைத் தயார் செய்தார்; பூக்களால் ஆன அம்புகளை ஒதுக்கி வைத்தார்; அன்பையும் காம உணர்வையும் கொண்ட முழங்காலுடன் சேர்ந்த கால் நகங்களைப் போன்ற வடிவ அம்புகளை எய்தார்; அந்த அம்பு சிவனின் உறுதியை தகர்த்து உன்னுடன் இணைய வழி வகுத்தது; சிவன் முதலில் அது உன் முழங்கால் என்று நினைத்தார்; அடுத்த நொடி மன்மதன் மீது கோபமடைந்து அவனை எரித்தார்; ஆனால் உன் வேண்டுகோளின் பேரில் அவனை உயிர்ப்பித்தார்’. - இந்த ஸ்லோகத்தின் உள் அர்த்தம் என்ன என்றால் ‘முதலில் என்ன செய்தும் சிவபெருமானின் தவத்தைக் கலைக்க முடியாமல் என்ன செய்வது எனக் குழம்பிய மன்மதன், பராசக்தியின் கணுக்கால் விரல்களை ஒரு கணம் நோக்கிய வண்ணம் யோசனையில் இருந்தபோது, பராசக்தியின் கணுக்கால் விரல் நகத்தின் அழகு பரமேஸ்வரரை அவள் மீதான மோகத்தில் வீழ்த்தி விடும் என்ற உண்மையை புரிந்து கொண்டு விடுகின்றான்.
- ஆகவே பராசக்தியின் முழங்காலுடன் சேர்ந்த கூர்மையான நகங்களுடன் கூடிய கணுக்கால் விரல் போல தன்னிடம் உள்ள காதல் அம்பை செய்தான்; அந்த மலர் அம்பை சிவபெருமான் மீது வீசினான்; அவர் தவம் கலைந்து ஒரு க்ஷணம் பராசக்தியை பார்க்க அவள் மீது பெரும் ஆசை கொண்டு விடுகின்றார். அடுத்த க்ஷணம் தன் தவத்தை கலைத்து விட்டானே என்ற கோபத்தில் மன்மதனையும் மூன்றாவது கண்ணை திறந்து பார்த்து எரித்து விடுகின்றார் என்றாலும் பராசக்தியின் வேண்டுகோளுக்கு இணங்கி அவனுக்கு மீண்டும் உயிர் தருகின்றார்’.
———–
-84-
श्रुतीनां मूर्धानो दधति तव यौ शेखरतया
ममाप्येतौ मातः शिरसि दयया धेहि चरणौ ।
ययोः पाद्यं पाथः पशुपतिजटाजूटतटिनी
ययोर्लाक्षालक्ष्मीररुणहरिचूडामणिरुचिः ॥
ஶ்ருதீநாம் மூர்தானோ தததி தவ யௌ ஶேகரதயா
மமாப்யேதௌ மாத: ஶிரஸி தயயா தேஹி சரணௌ ।
யயோ: பாத்யம் பாத: பஶுபதிஜடாஜூடதடினீ
யயோர்லாக்ஷாலக்ஷ்மீரருணஹரிசூடாமணிருசி: ॥
இந்த ஸ்லோகத்தை 1000 முறை என
365 நாட்கள் பாராயணம் செய்தால்
கூடு விட்டுக் கூடு பாயும் வித்தை சித்தி ஆகும்
ஹே பராசக்தி
உனது புனிதமான கால்களை என் தலை மீது வைத்து அருள் புரிய வேண்டுகின்றேன். ஏன் எனில் உனது கால்களை பூக்களாக வேதங்களின் சிகரமான உபநிஷத்துக்கள் தலையில் சூடிக் கொள்கின்றன; சிவபெருமானின் தலையில் இருந்து பாயும் கங்கை நீர் உனது பாதத்தை புனிதமாக்குகின்றது; விஷ்ணுவின் தலை கிரீடத்தில் உள்ள சிந்தாமணியில் இருந்து விழும் ஒளி உனது பாதங்களை சிவப்பு நிறத்தில் ஜொலிக்க வைக்கின்றன.
- (விளக்கம்:
ஆதி சங்கரர் இந்த ஸ்லோகத்தில் கூறி உள்ளார் ‘ஓ பராசக்தியே, வேதங்களும் உபநிடதங்களும் உன் பாதங்களை தாம் தலையில் சூட்டிக் கொள்ளும் பூக்களைப் போலக் கருதி உன்னை போற்றி வணங்குகின்றன; சிவனின் ஜடா முடியிலிருந்து வெளி வந்து விழும் கங்கை நீர் உன் பாதங்களுக்கு அபிஷேகம் செய்கின்றது; விஷ்ணுவின் கிரீடத்தின் மீது பதிக்கப்பட்ட ரத்தினங்கள் உன் பாதங்களில் ஒளிக் கதிர்களை வீசுகின்றன. அப்போது உனது பாதங்கள் சிவப்பாகத் தெரிகின்றன; ஓ, தேவியே, அத்தகைய மேன்மையான உனது பாதங்கள் என் தலை மீது வைக்கப்பட்டு என்னைப் புனிதப்படுத்தட்டும்’. - பொதுவாக, சிவனின் ஜடாமுடியிலிருந்து கீழே பாயும் கங்கை நீர் பராசக்தியின் பாதங்களில் விழுவதில்லை, ஆனால் சிவன் தனது தலையை அவள் பாதங்களுக்கு அருகில் வைத்து மரியாதை செலுத்தும் போதெல்லாம் கங்கை நீர் அவள் பாதங்களில் பாய்கிறது. அந்த நேரத்தில் அன்னையின் பாதங்களில் பாயும் கங்கை நீர் பராசக்தியின் பாதங்களை தொட்டு நமஸ்கரிப்பதை போல உள்ளது என்று எண்ணுகின்றதாம்.
- ‘பாத பிரக்ஷணம்’ என்ற சடங்கின் கணவர் மனைவிக்கு நமஸ்கரிப்பார்கள். இந்த சடங்கு தெய்வங்களுக்கு மட்டுமே உண்டு. அந்த சடங்கின்போது அனைத்து தெய்வங்களும்-அவர்கள் பிரதான தெய்வங்களாக இருந்தாலும் சரி, தேவர்கள் மற்றும் பிற தெய்வ கணங்களாக இருந்தாலும் சரி, அனைவரும் பராசக்தியின் முன் விழுந்து மரியாதை செலுத்துகிறார்கள். அப்போது அவர்களின் தலைகள் அவளுடைய பாதங்களைத் தொடுகின்றன.
- மேலும், தெய்வ, தேவதைகளும் மற்றும் அவர்களது கணவர்களும் மகிழ்ச்சியான மனநிலையில் இருக்கும்போது, தேவிக்கு ‘பிராணய கோபம்’ என்று அழைக்கப்படும் தற்காலிக கோபம் வரும். அந்த கோபத்தை அடக்க, தேவியின் துணைவர் அவள் முன் விழுந்து நமஸ்கரித்து அவளது கோபத்தைத் தணிப்பார்களாம். இரண்டு சடங்குகளும் கணவர்களை இழிவுபடுத்துவதற்காக நடப்பவை அல்ல, ஆனால் அவை ஜீவாத்மாவை பரமாத்மாவுடன் இணைக்கும் நிலை என்று அழைக்கப்படுகின்றன.
- இந்த ஸ்லோகத்தின் மூலம் ஆதி சங்கரர் பராசக்தியிடம் ‘தனது தலையின் மேல் அவளது கால்களை வைத்து, அருள் புரியுமாறும், அதன் மூலம் தனக்கு உடனடியாக முழுமையான விடுதலை கிடைக்கும், என்பதாகவும் கெஞ்சுகிறார்.
———
-85-
नमोवाकं ब्रूमो नयनरमणीयाय पदयो-
स्तवास्मै द्वन्द्वाय स्फुटरुचिरसालक्तकवते ।
असूयत्यत्यन्तं यदभिहननाय स्पृहयते
पशूनामीशानः प्रमदवनकङ्केलितरवे ॥
நமோவாகம் ப்ரூமோ நயனரமணீயாய பதயோ-
ஸ்தவாஸ்மை த்வந்த்வாய ஸ்புடருசிரஸாலக்தகவதே ।
அஸூயத்யத்யந்தம் யதபிஹனநாய ஸ்ப்ருஹயதே
பஶூனாமீஶான: ப்ரமதவனகனகேலிதரவே ॥
இந்த ஸ்லோகத்தை 1000 முறை என
12 நாட்கள் பாராயணம் செய்தால்
பூதங்கள் மீதான பயம் நீங்கும
ஹே பராசக்தி
நீ நந்தவனத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போது, கண்களுக்கு ஆனந்தத்தை தருவதாகவும், பிரகாசமாகவும், ஈரத்துடன் உள்ள மருதாணி போடப்பட்டு இருந்த உனது அழகிய பாதங்களினால் அசோக மரங்களை எட்டி உதைக்கின்றாய். அதை பார்க்கும் பரமசிவனோ, அந்த அசோக மரங்கள் மீதே பொறாமை கொள்கின்றார். உனது பாதங்கள் தன் மீது மட்டுமே பட வேண்டும் என்று ஆசை கொள்கின்றார். அப்படிப்பட்ட புனிதமான அந்த பாதங்களை நாங்கள் நமஸ்கரிக்கின்றோம்.
- விளக்கம்:
சில புராணத்தில், ‘ஒரு மரம் கனி கொடுக்க வேண்டும் என்றால் ஒரு பெண் அதை உதைக்க வேண்டும்’ என்று கூறப்பட்டு உள்ளதாக படித்தேன். - அசோக மரங்கள் பராசக்தியினால் படைக்கப்பட்டவைதான். தாவரங்களுக்கும், செடி கொடிகளுக்கும் மனிதர்களைப் போலவே சொந்த வாழ்க்கை மற்றும் உணர்வுகள் குறித்த சிந்தனைகள் கொண்டு உள்ளன என்பதாக ஆன்மீகப் பெரியோர்கள் கூறுவது உண்டு. அவற்றின் உணர்ச்சிகளும், உணர்வுகளும் நமது கண்ணுக்குத் புலப்படாதவைகள் மற்றும் நம்மால் கேட்க முடியாதவை, மானிடர்களினால் புரிந்து கொள்ள முடியாத வகையில் இருக்குமாம்.
- சில தெய்வங்கள், மரங்கள் மற்றும் விலங்குகளின் அல்லது ஜடப் பொருள்களின் பிரார்த்தனைகளை கூட தெய்வங்கள் ஏற்றுக் கொண்டு, அவற்றுக்கு அருள் புரிந்து, அவற்றின் உண்மையான தோற்றத்தைக் கொடுத்த கதைகள் நம் புராணங்களிலும் பிற நூல்களிலும் உள்ளன. அவற்றுக்கு சாப விமோசனம் அளித்து அடுத்த பிறவியில் மானிடப் பிறவியில் பிறக்கவும் அருள் புரிந்துள்ளார்கள்.
- இந்தச் சூழலில், கடந்த கால பாபங்களின் விளைவாக மரங்களாக்கி இருந்த அசோக மரங்களின் பிரார்த்தனைகளை ஏற்று அந்த மரங்களுக்கு சாப விமோசனம் அளிக்க பராசக்தி அவற்றை உதைத்து இருக்கலாம். சில செயல்களை குறிப்பிட்ட காரணங்களுக்காக சில முறைகளில்தான்-கால்களால் உதைப்பது போன்ற செயல்கள் மூலம், அகலிகை ராமபிரானின் கால்களால் உதைக்கப்பட்டு சாப விமோசனம் பெற்ற கதையைப் போல – தெய்வங்கள் செய்கின்றன என்பதை புராணங்களில் நாம் படித்து உள்ளோம்.
- சிவபெருமானின் பொறாமை என்பது முற்றிலும் தத்துவார்த்தமானது. இந்த பிரபஞ்சத்தையே படைத்தவள் பராசக்தி, ஆகவே அந்த மரங்களும் அவள் படைத்தவைகளே எனும்போது அவற்றை அவள் உதைப்பதை பார்த்து சிவபெருமான் ஏன் பொறாமைப் படவேண்டும்?
- சிவபெருமானும் உலக நன்மைக்காக சில செயல்களை செய்யும்போது அவருக்கும் சில பாவங்கள் ஏற்படுகின்றன; இதற்கு ஒரு சிறந்த உதாரணம் பைரவராக இருந்தபோது, பிரம்மாவின் தலையை வெட்டி எறிந்த சிவபெருமான் பிரும்மஹத்தி தோஷத்தை அடைந்தார். அந்த தோஷத்திலிருந்து விடுபட அவர் காசிக்குச் செல்ல வேண்டியிருந்தது. அங்கு காசி விசாலாக்ஷி ஆட்சி செய்கிறார்.
- எனவே, பல்வேறு காரணங்களுக்காக தனக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய பல தோஷங்களிலிருந்து விடுபட பராசக்தி தன்னை முதலில் உதைக்க வேண்டும் என்று சிவபெருமானும் எதிர்பார்த்துக் காத்திருந்து இருக்கலாம்.
- சிவபெருமான் நிலையான சக்தி உள்ளவர், பராசக்தியோ இயக்க ஆற்றல் சக்தி கொண்டவள். எனவே, சிவபெருமான் மனித குலத்தின் நன்மைக்காக ஏதாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் எனில் அவரது துணைவி பராசக்தியின் சக்தி வேண்டும்.
- ஆகவே இங்கே அவளுடைய பாதத்தினால் உதைபடுவது என்பதை ‘தூண்டுதல்’ என்ற வடிவத்தில் பார்க்க வேண்டும். பராசக்தி துணை இன்றி சிவ பெருமானால் ஒரு விரலைக் கூட இயக்க முடியாது என்று கூறப்படுகிறது. எனவே, பராசக்தி எப்போதுமே தன்னுடன் இருந்தவாறு தனது சக்தியை தூண்டிக் கொண்டே இருந்தால்தான் தன்னால் மனித குலம் மற்றும் பிரபஞ்சத்தின் நன்மைக்காக எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும் என்று சிவபெருமான் நினைப்பது தவறா?
———-
-86-
मृषा कृत्वा गोत्रस्खलनमथ वैलक्ष्यनमितं
ललाटे भर्तारं चरणकमले ताडयति ते ।
चिरादन्तःशल्यं दहनकृतमुन्मूलितवता
तुलाकोटिक्वाणैः किलिकिलितमीशानरिपुणा ॥
ம்ருஷா க்ருத்வா கோத்ரஸ்கலனமத வைலக்ஷ்யனமிதம்
லலாடே பர்தாரம் சரணகமலே தாடயதி தே ।
சிராதந்த:ஶல்யம் தஹனக்ருதமுன்மூலிதவதா
துலாகோடிக்வாணை: கிலிகிலிதமீஶானரிபுணா ॥
இந்த ஸ்லோகத்தை 1000 முறை என
21 நாட்கள் பாராயணம் செய்தால் அனைத்து வித
பேய் மற்றும் பிசாசுகளின் மீதான பயம் நீங்கும்
ஹே பராசக்தி
ஒருமுறை உனது கணவரான பரமேஸ்வரர் விளையாட்டாக உன்னை வேறு ஒரு பெண்ணின் பெயரைக் கூறி அழைக்க, அதனால் நீ கோபம் அடைய, உன் அருகில் வந்தவர், வெட்கப்பட்டு தனது தலையை குனிந்து கொண்ட போது, ஆசனத்தில் அமர்ந்து இருந்தவள் கோபத்துடன் அவரை தள்ளி விட்டு எழுந்தபோது தாமரை மலர் போன்ற உனது பாதம் அவர் நெற்றி மீது பட்டு விட, அதனால் உன் காலில் இருந்த சிலம்பு கணகணவென ஒலியை எழுப்ப, தன்னை எரித்து விட்ட சிவபெருமான் மீது பகை கொண்டு இருந்த மன்மதன், உனது சலங்கை ஒலியின் சப்தம் தனது வெற்றி முழக்கம் போல நினைத்து மகிழ்ந்தான்.
- விளக்கம்:
இந்த ஸ்லோகத்தின் மூலம் ஆதி சங்கரர் இப்படியாகக் கூறி உள்ளார் ‘ஓ பராசக்தி நீ தனிமையில் இருக்கையில் உன்னை சீண்டும் விதமாக உனது கணவர் தனக்கு இன்னொரு மனைவி உள்ளதை போல வேறு பெயரைக் கூறி உன்னை அழைத்தபோது நீ கோபமுற்றாய். அப்போது உன் கை கால்களை நீ உதறிக் கொண்டே எழுந்து அவரை தள்ளிய போது, தவறுதலாக உனது பாதம் அவரது நெற்றிக் கண்ணில் பட்டுவிட்டது. அப்போது உன்னுடைய காலில் கட்டி இருந்த சலங்கை கலகலவென ஒலியை எழுப்பியது. அந்த காட்சியைக் கண்ட மன்மதன், தன்னை எரித்த சிவபெருமானின் மூன்றாவது கண் அவமானப்பட்டு விட்டதை போல எண்ணி தானும் அந்த சப்தத்துடன் சேர்த்து சிரித்து தனது மனதில் சிவபெருமான் மீது இருந்த கோபத்தை அழித்துக் கொண்டான்’ - ஆதி சங்கரரின் இந்த ஸ்லோகத்தை, இதற்கு முன் உள்ள ஸ்லோகத்தோடு இணைத்துப் பார்க்க வேண்டும். அசோக மரத்தை பராசக்தி உதைத்ததைக் கண்டு பொறாமை அடைந்த பரமேஸ்வரர் அந்த பாதம் தன்னையும் உதைக்காதா என்ற சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தார். ஒருநாள் வேண்டும் என்றே பராசக்தியின் பெயரை வேறு பெயராக உச்சரிக்க, தான் இருக்க இன்னொரு பெண்ணுடன் அவருக்கு பிரேமையா என்று பராசக்தி கோபம் அடைகிறாள்.
- இந்த ஸ்லோகத்தில் கூறப்பட்டு உள்ள ‘கோத்ரஸ்கலனம்’ (गोत्रस्खलनम) என்பது கணவன் மனைவிகளிடையே உள்ள அந்தரங்கமான விளையாட்டு ஆகும். மனைவியை வேண்டும் என்றே வேறு பெயரில் அழைப்பது, அவளது பிறந்த வீட்டைக் குறித்து வேண்டும் என்றே எதையாவது குறை கூறுவது என்றெல்லாம் செய்து அவளை சீண்டி அவள் கோபத்தைக் கிளறுவது. மனைவியிடம் தனக்கு உள்ள பிரேமையை வெளிப்படுத்தும் ஒரு வகையிலான விளையாட்டு; பிறகு அவளை சமாதானம் செய்து தன்னோடு அணைத்துக் கொள்வது போன்ற காம ரசத்திலான விளையாட்டு என்பார்கள். அவள் அருகில் அமர்ந்து இருந்த பரமேஸ்வரர் எதை எதிர்பார்த்தாரோ அதுவே நடப்பதை கண்டு தன்னை அறியாமல் நாணமுற்று தனது தலையை குனிந்து கொண்டபோது, கை கால்களை உதறிக் கொண்டே எழுந்து அவரை தள்ளிய போது பராசக்தியின் பாதங்கள் அவர் நெற்றியில் இருந்த மூன்றாம் கண்ணின் மீது மீது பட்டுவிட்டது. அப்போது அவளது காலில் கட்டி இருந்த சலங்கை ஒலி கலகலவென சப்தம் போட்டது.
- அந்த சப்தத்தைக் கேட்ட மன்மதனோ தன்னை எரித்த சிவபெருமான் அவமானம் அடைந்து விட்டார் என்ற எண்ணத்தில் சலங்கை ஒலி சப்தத்துடன் தானும் சேர்ந்து தானும் சிரித்தான். அவனது சிரிப்போ சலங்கை ஒலியின் ஓசையோடு கலந்து விட்டதினால் யாருக்கும் சந்தேகம் எழவில்லை. இப்படியாக மனமதனுக்கும் சிவபெருமான் மீது இருந்த கோபம் அழிந்தது.
- இந்த ஸ்லோகத்தின் அர்த்தம் மேலே உள்ள விளக்கத்தைக் கொண்டதுதான் என்பது மேலோட்டமாக பார்த்தால் தெரியும். ஆனால் அதில் மறைந்து உள்ள தத்துவம் தெரியாது. சிவபெருமான் இன்றி பராசக்தி இல்லை, பராசக்தி இன்றி சிவபெருமான் இல்லை. அவர்கள் ஒன்றாக இருக்கும்போது மட்டுமே இந்த பிரபஞ்சத்தில் உயிர்களின் இயக்கம் உள்ளது என்பதை சலங்கை ஒலியின் சப்தம் மூலமும், மன்மதனின் சிரிப்பின் மூலமும் எடுத்துக் காட்டப்பட்டு உள்ளது.
- அசோக மரங்களின் மீது பட்ட பராசக்தியின் பாதங்கள் தன் மீது படவில்லையே என்று சிவபெருமானின் மனதில் இருள் சூழ்ந்த ஏக்கம் தோன்றுகின்றது. பரமேஸ்வரர் அவளை சீண்டும் விதமாக வேறு பெயரில் அழைக்கும்போது அதே போன்ற ஏக்கம் பராசக்தியின் மனதிலும் தோன்றுகின்றது.
- ஆகவே இருவரின் ஏக்கமும் உலகம் இருளை நோக்கிச் செல்லும் நிலையைக் குறிக்க, இந்த பிரபஞ்சமே துயரில் ஆழ்ந்து விடுமோ (கலிகாலம் உடனடியாக தோன்றி விடுமோ) என்று எண்ணும் மன்மதன், தவறுதலாக பராசக்தியின் கால்கள் சிவபெருமானின் நெற்றியில் பட்டபோது வேண்டும் என்றே அவளது காலில் இருந்த கொலுசை தட்டி ஓசையிட வைத்து, தானும் சேர்ந்து அதோடு சிரித்தபோது, கொலுசின் ஓசையோடு, அவன் அவர்களுக்காக தனது சிரிப்பின் மூலம் வெளிப்படுத்திய காம உணர்வினால் பரமேஸ்வரரும் பராசக்தியும், ‘அனைவர் முன் நிலையிலும் நாம் இருவரும் சின்ன குழந்தையைப் போல நடந்து கொண்டு விட்டோமே’ என்று வெட்கமுற்று கலகலவென சிரித்தபடி ஒருவருடன் ஒருவர் மீண்டும் ஒன்றிணைகின்றார்கள்.
- அவர்கள் இருவரும் இணைந்த நிலையைக் காட்டுவதே சலங்கை ஒலியின் சப்தமும் மன்மதனின் சிரிப்பும் ஒன்றாக இணைந்து வெளிப்படுத்திய நிலை. அவர்கள் மீண்டும் இணைந்தவுடன் உலகை சூழ இருந்த இருள் விலகி மீண்டும் பிரகாசம் தோன்றுகின்றது. இதுவே இந்த ஸ்லோகத்தின் உள் அர்த்தம் ஆகும்)
———–
-87-
हिमानीहन्तव्यं हिमगिरिनिवासैकचतुरौ
निशायां निद्राणं निशि चरमभागे च विशदौ ।
वरं लक्ष्मीपात्रं श्रियमतिसृजन्तौ समयिनां
सरोजं त्वत्पादौ जननि जयतश्चित्रमिह किम् ॥
ஹிமானீஹந்தவ்யம் ஹிமகிரினிவாஸைகசதுரௌ
நிஶாயாம் நித்ராணம் நிஶி சரமபாகே ச விஶதௌ ।
வரம் லக்ஷ்மீபாத்ரம் ஶ்ரியமதிஸ்ருஜந்தௌ ஸமயிநாம்
ஸரோஜம் த்வத்பாதௌ ஜனநி ஜயதஶ்சித்ரமிஹ கிம்॥
இந்த ஸ்லோகத்தை 1000 முறை என
16 நாட்கள் பாராயணம் செய்தால்
அனைத்து வித பாம்புகளை அடக்கும் சக்தி கிடைக்கும்
ஹே பராசக்தி
இமயமலையில் வீற்று இருக்கும் தேவி, விடியற்காலை, பகல், சந்தியா காலம் மற்றும் இரவு என எந்த நேரமும், தாமரை மலர்களை போன்ற உனது பாதங்கள் மலர்ந்து உள்ளதை போன்றே தோற்றம் தருகின்றது. அது உன்னையே வணங்கி துதிக்கும் பக்தர்களுக்கு அழிவற்ற செல்வத்தை தருகின்றது. ஆனால் லட்சுமி தேவி வாசம் செய்யும் தாமரைப் பூவோ பனியால் உதிர்கின்றது; இரவில் மூடிக் கொள்கின்றது; காலை சூரிய ஒளி பட்டால் மட்டுமே மலர்கின்றது என்பதினால் லஷ்மி தேவி வாழும் தாமரை மலரை விட, தாமரை மலர் போன்ற உனது பாதங்கள் உயர்வானவை என்பதை கூறத்தான் வேண்டுமா
- விளக்கம்:
இந்த ஸ்லோகத்திலும் ஆதி சங்கரர் பராசக்தியின் பாதங்களின் மகிமையை எடுத்துக் காட்டி உள்ளார். ஆதி சங்கரர் இந்த ஸ்லோகத்தில் இப்படியாக தத்துவார்த்தமாக தேவியின் பாதங்களை புகழ் பாடி உள்ளார் ‘பராசக்தியின் பாதங்கள் நிலையானவை, அவளை ஆராதிக்கும் அனைவருக்கும் செழிப்பு தருபவை. இரவோ, பகலோ எந்த நேரத்திலும் அவை பனிபடந்த இமய மலையில் உள்ள, மலந்த தாமரைப் பூக்களைப் போலவே காட்சி தருகின்றன. அவள் பாதங்கள் உதிர்ந்து போகும் தாமரைப் பூக்களை போன்ற இதழ்களைக் போன்றவை அல்ல, அது என்றும் வாடாத, நிலையான தங்கத் தாமரைப் பூக்கள்’. - செல்வத்தை அள்ளித் தரும் லட்சுமி தேவி வாசம் செய்யும் இடம் தாமரைப் பூ. லட்சுமி தேவியின் வாசஸ்தலமான அந்த தாமரைப் பூவை மட்டுமே பூஜிப்பதினால் ஒருவருக்கு செல்வப் பிராப்தி கிடைத்து விடுமா என்றால் அது கிடைக்காது, ஆனால் அதில் வசிக்கும் லட்சுமி தேவியை பிரார்த்தனை செய்தால் மட்டுமே கிடைக்கும்.
- இரண்டாவது தாமரை மலர் நிரந்தரமானது அல்ல, அது ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வாடி விடுகின்றது என்பதினால் லட்சுமி தேவி ஒரு தாமரை மலரில் இருந்து இன்னொரு தாமரை மலருக்கு தனது வாசஸ்தலத்தை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டி உள்ளது.
- பனியில் தாமரை மலரின் இலைகள் கருகி விடுகின்றன, இரவில் மூடிக் கொண்டு விடுகின்றது, மாலை சூரிய உதயத்தில்தான் மலர்கின்றது என்பதை எல்லாம் பார்க்கும்போது அந்த தாமரை மலரைப் போன்ற மனத்தைக் கொண்டிராமல் நிலையான மனதுடன் லட்சுமி தேவியை வேண்டிக் கொண்டால் மட்டுமே அவளது அருள் கிடைக்கும் என்பதான மறைமுக செய்தி இதில் கூறப்பட்டு உள்ளது.
- அதே நேரத்தில் பராசக்தியின் பாதங்களையும் தாமரை மலருக்கு ஒப்பானவை என்பதாக ஆதி சங்கரர் குறிப்பிட்டு உள்ளது தாமரை மலரைப் போன்று அழகான தோற்றத்தைத் தருபவை அன்னையின் பாதங்கள் என்பது பொருள் ஆகும். தாமரை மலரைப் போன்ற அழகிய மலர் அன்னையின் பாதங்கள் என்றாலும் அந்த பாதங்களின் அழகோ அல்லது தன்மையோ அனைத்துமே நிலையானது, எந்த சந்தர்ப்பத்திலும் அதன் அழகோ அல்லது தன்மையையோ மாறுவதில்லை என்பதின் மூலம் என்ன கூறப்பட்டு உள்ளது என்றால் உண்மையான பக்தன் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பராசக்தியை தியானித்துக் கொண்டே இருக்கலாம். அதற்கு நேரமோ காலமோ கிடையாது. அவனது மௌனமான ஆராதனையை ஏற்கும் அன்னையின் பரிபூரண அருள் அவனுக்கு நிச்சயமாக கிடைக்கும்.
———-
-88-
पदं ते कीर्तीनां प्रपदमपदं देवि विपदां
कथं नीतं सद्भिः कठिनकमठीकर्परतुलाम् ।
कथं वा बाहुभ्यामुपयमनकाले पुरभिदा
यदादाय न्यस्तं दृषदि दयमानेन मनसा ॥
பதம் தே கீர்தீநாம் ப்ரபதமபதம் தேவி விபதாம்
கதம் நீதம் ஸத்பி: கடினகமடீகர்பரதுலாம் ।
கதம் வா பாஹுப்யாமுபயமனகாலே புரபிதா
யதாதாய ந்யஸ்தம் த்ருஷதி தயமானேன மனஸா ॥
இந்த ஸ்லோகத்தை 1008 முறை என
180 நாட்கள் பாராயணம் செய்தால்
அனைத்து வித மிருகங்களை அடக்கும் சக்தி கிடைக்கும்
ஹே பராசக்தி
உன்னுடைய திருமணத்தின்போது கவிஞர்கள் வர்ணிக்கும் ஆமையின் ஓடு போல உள்ள அந்த பாதங்களை வணங்கி துதிக்கும் பக்தர்களை, அவர்களுக்கு நேரிடும் ஆபத்துகளில் இருந்து நீ காத்து அருள்கின்றாய். அந்த பாத நுனியை உனது கணவர் சிவபெருமான் மென்மையாக பற்றி மிக பத்திரமாக கருங் கல்லை போன்ற அம்மிக் கல்லில் எப்படி வைத்தார் என்பதும், கவிஞர்கள் எதற்காக உனது பாதங்களை ஆமையின் ஓட்டுடன் வர்ணித்தார்கள் என்பதும் தெரியவில்லையே.
- விளக்கம்:
இந்த ஸ்லோகத்தில் ஆதி சங்கரர் சில வித்தியாசமான கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளார். - முதலாவது, மனத் தூய்மையுடன் பராசக்தியின் பாதங்களை வணங்குபவர்கள், அனைத்து ஆபத்துகள் மற்றும் பிரச்சனைகளிலிருந்தும் முழுமையாகப் பாதுகாக்கப்படுகிறார்கள். மானிடர்களாக பிறவி எடுத்த எந்த ஒருவருமே தமது கடந்த கால கர்ம வினைகளை கடந்துதான் செல்ல வேண்டும் என்றாலும் மனத் தூய்மையுடன் அவள் பாதங்களை வணங்கினால் அந்த கர்ம வினைப் பயன்கள் அதிக மன வேதனையை ஏற்படுத்தாது. ஆகவே பராசக்தியின் பாதங்களில் ஒருவர் முழு நம்பிக்கை வைத்திருக்க வேண்டும் என்பதை மறைமுகமாக இது குறிக்கிறது.
- இரண்டாவதாக, எதற்காக அவளுடைய பாதம் ஆமையின் ஓட்டுடன் ஒப்பிடப்பட்டு உள்ளது? எந்தவொரு ஆபத்தையும் எதிர் கொள்ளும்போது ஆமை தனது அனைத்து உறுப்புகளையும் தனது ஓட்டின் உள்ளுக்குள் இழுத்துக் கொண்டு விடும். அதை போலவேதான் தங்கள் பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு ஒரு தீர்வைக் காண வேண்டும் என்றால், தங்கள் எண்ணங்கள் அனைத்தையும் நம்பிக்கையோடு பராசக்தியின் பாதங்களில் இணைத்து விட வேண்டும்.
- நமக்குள்ள ஆபத்துக்களைக் கடக்க நமது முழு மனதையும் அன்னையின் பாதங்களில் செலுத்தி, அவளிடம் தீர்வு கேட்டு வழிபடுகையில், ஆமையின் ஓடுகளை போன்ற அவளுடைய பாதங்கள் வலிமையான ஒரு தீர்வை தந்து நம்மைக் காத்து அருள்கின்றது. அதே நேரத்தில் அவளுடைய அருளை நாடுபவர்கள் மனத் தூய்மையுடன் அவளது பாதங்களை ஆராதித்தால் மட்டுமே பயனையடைய முடியும். ஆமையின் கூடு எளிதில் ஊடுருவ முடியாதது. ஆமை வலிமையான மனத்தைக் கொண்ட பிராணி அவளுடைய பாதங்களும் எளிதில் ஒருவரது எண்ணங்களினால் ஊடுருவக்கூடியவை அல்ல, அதற்கு தூய்மையான மன நிலை மற்றும் அவள் மீது உறுதியான நம்பிக்கை வேண்டும்.
- திருமணச் சடங்குகளின் போது, மணமகளின் வலது கால் நுனியை மணமகன் மெதுவாகப் பிடித்து, ஒரு கல்லின் மீது வைக்கும் ஒரு குறிப்பிட்ட சடங்கு உள்ளது. அம்மி மீது காலை வைக்கும் சடங்கின் அர்த்தம் இதுதான். ‘அம்மிக் கல்லைப் போல மணமகள் மனம் கலங்காமல் உறுதியாக இருக்க வேண்டும். இல்லற வாழ்வில் அவளுக்கு ஏற்படும் இடர்களைப் பொறுத்துச் சகித்துக் கொள்ள வேண்டும். எது வந்தாலும் மனம் குலையாமல் அனைத்தையும் மன உறுதியோடு ஏற்றுக் கொள்ள வேண்டும்’ அனைத்து உலோகத்தையும் விடக் கல் உறுதியானது, வளைக்கவோ, உருக்கவோ முடியாதது என்பதினால் இந்த பாவனைக்கு மிக உறுதியான கல்லான அம்மியை பயன்படுத்துகின்றார்கள்.
- அந்த சடங்கை சிவபெருமான் செய்வதாக இங்கு காட்டி உள்ள ஆதி சங்கரர், அதன் மூலம் என்ன எடுத்துக் காட்டுகின்றார் என்றால் ‘அன்னையின் பாதங்கள் மிருதுவானது என்றாலும் அவை ஆமையின் ஓடுகளை போலவும், அம்மிக் கல்லை போலவும் உறுதியானவை. ஆகவே பராசக்தியின் மிருதுவான பாதங்களை வழிபடுவதின் மூலம் கடினமான கற்கள் போன்ற எந்த விதமான தடைகளையும் எளிதில் கடந்து செல்ல அவளது பாதங்கள் உதவிடும்’ என்பதை எடுத்துக் காட்டி உள்ளார். இந்த மூன்றுமே இந்த ஸ்லோகத்தின் உள் அர்த்தம் ஆகும்.
——–
-89-
नखैर्नाकस्त्रीणां करकमलसंकोचशशिभि-
स्तरूणां दिव्यानां हसत इव ते चण्डि चरणौ ।
फलानि स्वःस्थेभ्यः किसलयकराग्रेण ददतां
दरिद्रेभ्यो भद्रां श्रियमनिशमह्नाय ददतौ ॥
நகைர்னாகஸ்த்ரீணாம் கரகமலஸங்கோசஶஶிபி-
ஸ்தரூணாம் திவ்யாநாம் ஹஸத இவ தே சண்டி சரணௌ ।
பலானி ஸ்வ:ஸ்தேப்ய: கிஸலயகராக்ரேண தததாம்
தரித்ரேப்யோ பத்ராம் ஶ்ரியமனிஶமஹ்னாய தததௌ ॥
இந்த ஸ்லோகத்தை 1000 முறை என
30 நாட்கள் பாராயணம் செய்தால்
நோய் நொடிகள் விலகும்
ஹே பராசக்தி
தேவலோகத்தில் உள்ள கற்பக விருட்ஷங்கள் தமது மரத்தில் உள்ள துளிர் இலைகளினால் தேவலோகத்தினர் விரும்பியதை தருகின்றன; ஆனால் நீயோ சந்திரன் போல ஒளிர் விடும் உனது பாத விரல்களினால் தேவலோகத்தினருக்கு மட்டும் அல்ல, பூமியில் வறுமையில் வாடும் அனைவருக்குமே அவர்கள் கேட்ட வரத்தை தந்து அருள் புரிகின்றாய்; தேவலோகத்தினரின் கரங்கள் தாமரை மலர்களுக்கு ஒப்பானது என்பார்கள். காலையில் சூரியனைக் கண்டால் மலரும் தாமரைப் பூ, இரவில் தோன்றும் சந்திரனைக் கண்டால் தமது இதழ்களை மூடிக் கொண்டு விடும்; அதனால்தானோ என்னவோ சந்திரனைப் போன்று ஜொலிக்கும் உனது பாத விரல்களின் நகத்தைக் கண்டால், தாமரை மலரைப் போன்ற கைகளைக் கொண்ட தேவலோகத்தினர் உன்னை வணங்குவதை போல தமது கைகளை உடனே மூடி வைத்துக் கொண்டு விடுகின்றார்கள்.
- விளக்கம்:
இந்த ஸ்லோகத்திலும் ஆதி சங்கரர் பராசக்தியின் பாதங்களில் உள்ள விரல் நகங்கள் எவ்வாறு இரவில் தோன்றும் சந்திர ஒளி போல ஜொலிக்கின்றன, எவ்வாறு எந்த பேதமும் இன்றி-ஒருவர் தேவலோகத்தில் இருந்தாலும் சரி, பூமியில் இருந்தாலும் சரி, தன்னை வேண்டி நின்றால் அவர்களுக்கு அருள் புரிவதில் தயக்கமே காட்டவில்லை என்பதாக கூறுகின்றார். - தேவலோகத்தில் உள்ள கற்பக மரங்களோ தேவலோகத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே அவர்கள் விரும்பியதை கொடுக்கின்றன என்பதை சுட்டிக் காட்டி தேவலோகத்தினருக்கும் அன்னையின் கருணைக்கும் இடையிலான வித்தியாசத்தை எடுத்துக் காட்டி உள்ளார்.
- மேலும் சந்திரனைக் கண்டால் தாமரை மலர்கள் மூடிக் கொண்டு விடும். தேவலோகத்தில் உள்ளவர்கள் கைகள் தாமரை மலருக்கு ஒப்பானவை என்றாலும் கூட அன்னையின் பாத விரல்களில் உள்ள சந்திரனைப் போல ஒளிர் விடும் நகங்களைக் கண்டால், தமது இருக் கரங்களில் எதை வைத்து இருந்தாலும் அவற்றை தூக்கி எறிந்து விட்டு, இரண்டு கரங்களையும் கூப்பியபடி அன்னையை வணங்குவார்களாம் என்பதான கருத்தை ஆதி சங்கரர் இந்த ஸ்லோகத்தின் மூலம் வெளிப்படுத்தி உள்ளார்).
——-
-90-
ददाने दीनेभ्यः श्रियमनिशमाशानुसदृशी-
ममन्दं सौन्दर्यप्रकरमकरन्दम् विकिरति ।
तवास्मिन् मन्दारस्तबकसुभगे यातु चरणे
निमज्जन्मज्जीवः करणचरणः षट्चरणताम् ॥
ததானே தீனேப்ய: ஶ்ரியமனிஶமாஶானுஸத்ருஶீ-
மமந்தம் ஸௌந்தர்யப்ரகரமகரந்தம் விகிரதி ।
தவாஸ்மின் மந்தாரஸ்தபகஸுபகே யாது சரணே
நிமஜ்ஜன்மஜ்ஜீவ: கரணசரண: ஷட்சரணதாம் ॥
இந்த ஸ்லோகத்தை 1000 முறை என
30 நாட்கள் பாராயணம் செய்தால்
சூனியங்கள் வைத்திருந்ததால் அவை விலகும்
ஹே பராசக்தி
உனது பாதங்கள் ஆதரவற்றவர்களின் நியாயமான தேவைகளை நிரந்தரமாக நிறைவேற்றும் திறன் கொண்டவை. தெய்வீக மலர்கள் அமிர்தத்தை சுரப்பதை போலவே, உனது பாதங்களும் ஒருவரின் விருப்பத்தை நிறைவேற்ற அமிர்தம் போன்ற உனது அருளை வழங்கிக் கொண்டே உள்ளன. ஓ, தேவி, நான் ஆறு அம்சங்களைக் கொண்ட மானிடன் என்றாலும், நான் ஆறு கால்களைக் கொண்ட வண்டாக மாறி என் அனைத்து புலன்களுடன் உனது பாதங்களில் சரணடைய ஆசைப்படுகிறேன்.
- (விளக்கம்:
இந்த ஸ்லோகத்தில் ஆதி சங்கரர் கூறும் செய்தி மிகவும் எளிமையானது, ‘பராசக்தியிடம் நிபந்தனையின்றி சரண் அடைந்தால், அவளுடைய ஆசீர்வாதங்களை நிரந்திரமாக பெறலாம்’. அவரும் அதையே செய்ய விரும்பினார்; பராசக்தியின் பாதங்களில் நிபந்தனை இன்றி சரணடைந்து அவளுடைய பாதங்களுடன் ஒன்றிணைந்து, முக்தி அடைய விரும்பினார். - சாதாரண மக்களைப் போன்று வேறெந்த ஆசைகளும் அவருக்கு இல்லை, உலகின் எந்த தேவைகளுமே இல்லாதவர். சொந்த பந்தங்கள் இல்லை. காரணம் அவர் முற்றும் துறந்த முனிவர். ஆறு கால்களைக் கொண்ட வண்டுகள் உண்ண மலர்கள் எப்படி அமிர்தத்தை சுரந்து கொண்டே உள்ளனவோ, அதே போன்றே பராசக்தியின் பாதங்களும் அமிர்தம் போன்ற அருளை தனது பக்தர்களுக்கு அளித்துக் கொண்டே உள்ளாள் என்பதை இந்த ஸ்லோகம் கூறுகிறது.
- எனவே, ஆதி சங்கரர் ஆறு கால் தேனீயாக மாறி, அனைத்து புலன்களுடன் அவள் பாதங்களில் சரணடைய விரும்பியதின் காரணம், அமிர்தத்தை உறிஞ்ச அல்ல, இந்த பிரபஞ்சமேயான பராசக்தியின் அங்கமான, பேரானந்த நிலையிலான அமைதியை தரும் பாதங்களில் நிலையாக ஒன்றிணைய விரும்பினார்).
———
-91-
पदन्यासक्रीडापरिचयमिवारब्धुमनसः
स्खलन्तस्ते खेलं भवनकलहंसा न जहति ।
अतस्तेषां शिक्षां सुभगमणिमञ्जीररणित-
च्छलादाचक्षाणं चरणकमलं चारुचरिते ॥
பதன்யாஸக்ரீடாபரிசயமிவாரப்துமனஸ:
ஸ்கலந்தஸ்தே கேலம் பவனகலஹம்ஸா ந ஜஹதி ।
அதஸ்தேஷாம் ஶிக்ஷாம் ஸுபகமணிமஞ்ஜீரரணித-
ச்சலாதாசக்ஷாணம் சரணகமலம் சாருசரிதே ॥
இந்த ஸ்லோகத்தை 1000 முறை என
45 நாட்கள் பாராயணம் செய்தால்
நிலங்கள் மற்றும் செல்வங்களை பெறலாம்
ஹே பராசக்தி
உன் வீட்டு தாடகத்தில் உள்ள அன்னப் பறவைகள், உன் இரண்டு கால்களும் அடி மேல் அடியெடுத்து நடக்கும் அழகினைக் கண்டு, தானும் அதை போன்றே நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில், துள்ளித் துள்ளி நடந்து, உனது நடை அழகை பின்பற்றி நடக்க முயல்கின்றன. நீ நடக்கும் பொழுது உனது கால்களில் அணிந்துள்ள கொலுசில் பதிக்கப்பட்டு உள்ள பத்மராகக் கற்கள் எழுப்பும் ஓசையானது, அந்த அன்னப் பறவைகளுக்கு நடைப் பயிற்சியை சொல்லித் தருவது போல் அமைந்து உள்ளது.
- (விளக்கம்:
இந்த ஸ்லோகத்திலும் ஆதி சங்கரர் பராசக்தியின் பாதங்களின் மகிமையைப் புகழ்ந்து உள்ளார். பொதுவாகவே பெண்களின் நடை அழகின் பாணியை அன்னப் பறவைகள் அல்லது மன்னர்களின் அழகிய யானைகள் நடக்கும் பாணியுடன் கவிஞர்கள் ஒப்பிடுவது உண்டு. இருப்பினும், இந்த ஸ்லோகத்தில், ஆதி சங்கரர் அந்த கருத்தை மாற்றி அமைத்து உள்ளார். ‘பராசக்தியின் தோட்டதில் உள்ள அன்னப் பறவைகள், பராசக்தியைப் போல தாமும் அழகாக நடக்க விரும்பி, அவள் ஒவ்வொரு முறையும் அவளது தோட்டத்தைச் சுற்றி நடக்கும்போது, அவள் பின்னால் சென்றவாறு இருந்தவண்ணம், அவள் ஒவ்வொரு அடியெடுத்து வைக்கும் முறையும், அவளது கால்களில் அணிந்திருக்கும் கொலுசுகள் வெளிப்படுத்தும் சப்தத்தில் கவனம் செலுத்தி, அதிலிருந்து நடையின் பக்குவத்தை அறிந்து கொள்கின்றன’ என்பதாகக் கூறி உள்ளார். - இந்த விளக்கம் இந்த ஸ்லோகத்தின் எளிமையான அர்த்தமாகத் தோன்றலாம், ஆனால் இதில் அடங்கி உள்ள தத்துவார்த்தமான அர்த்தம் வேறு ஆகும். இந்த ஸ்லோகத்தின் மூலம் ஆதி சங்கரர் என்ன கூறி உள்ளார் என்றால் ‘பராசக்தியை வழிபாடு செய்பவர்கள் அல்லது அவளை தியானிப்பவர்கள் பராசக்தியின் பாதங்களில்தான் கவனம் செலுத்தி வழிபட வேண்டும். எப்படி அன்னப் பறவைகளுக்கு நடை அழகு பயிற்சிக்கான பாடங்களை அவளது பாதங்களில் அணிந்து உள்ள கொலுசுகள் மெல்ல மெல்ல வெளிப்படுத்துகின்றனவோ, அதே போலவேதான் தேவியை ஆராதிக்கும் மற்றும் தியானிக்கும் பக்தர்களுக்கும், தேவி அருள் மழையை மெல்ல மெல்ல அவளது பாதங்கள் மூலம் வெளிப்படுத்துகிறாள் என்பதினால்தான் அவளது பாதங்களின் மீது கவனம் செலுத்தி தியானிக்க வேண்டும் என்கின்றார்).
———-
-92-
गतास्ते मञ्चत्वं द्रुहिणहरिरुद्रेश्वरभृतः
शिवः स्वच्छच्छायाघटितकपटप्रच्छदपटः ।
त्वदीयानां भासां प्रतिफलनरागारुणतया
शरीरी शृङ्गारो रस इव दृशां दोग्धि कुतुकम् ॥
கதாஸ்தே மஞ்சத்வம் த்ருஹிணஹரிருத்ரேஶ்வரப்ருத:
ஶிவ: ஸ்வச்சச்சாயாகடிதகபடப்ரச்சதபட: ।
த்வதீயாநாம் பாஸாம் ப்ரதிபலனராகாருணதயா
ஶரீரீ ஶருனகாரோ ரஸ இவ த்ருஶாம் தோக்தி குதுகம் ॥
இந்த ஸ்லோகத்தை 2000 முறை என
45 நாட்கள் பாராயணம் செய்தால்
மன்னனாகலாம், சுற்றி உள்ள தீமைகள் அழியும்
ஹே பராசக்தி,
நீ அமர்ந்து உள்ள உனது கட்டிலின் நான்கு கால்களாக ஈசன், பிரும்மா, விஷ்ணு மற்றும் ருத்திரர் வீற்று இருக்க உனது மஞ்சத்தின் மேல் விரிப்பாக சதாசிவன் இருக்க, அவர் வெள்ளை ஆடையை அணிந்தவராக இருந்தாலும் உனது சிவந்த உடலழகின் தாக்கத்தினால் அவரும் சிவப்பாகவே காணப்பட்டு ஆனந்தத்தைத் தருகின்றார்.
- விளக்கம்:
பிரபஞ்சம் பராசக்தியினால் படைக்கப்பட்டது என்பது நமக்குத் தெரியும். பராசக்தியும் பரமேஸ்வரரும் ஒன்றிணைந்த ரூபமே சதாசிவ ரூபம் ஆகும். பராசக்தி இந்த பிரபஞ்சத்தை படைக்க எண்ணியதும் முதலில் தன்னுள் இருந்து சதாசிவனை வெளியேற்றுகின்றாள். வெளிவந்த சதாசிவன், ஈஸ்வரனை தன்னுள் இருந்து படைக்க, ஈஸ்வரன் பிரபஞ்சத்தின் மூன்று முக்கிய செயல்களுக்காக பிரம்மாவை படைக்கும் தொழிலுக்கும், மக்களைக் காக்கும் தொழிலுக்கு விஷ்ணுவையும், அழிக்கும் தொழிலிற்கு ருத்ரனையும் படைத்தார். ஆனால் பராசக்தியின் பகுதியான அந்த ஐந்து தெய்வங்களும் பராசக்தியிடமிருந்து சக்திகளைப் பெறாமல் சுயாதீனமாக செயல்பட முடியாது. சதாசிவனே தன்னை ஈஸ்வரராக ஒரு உருவம் எடுத்துக் கொண்டு சதாசிவனில் இருந்து வெளி வந்து அந்த ரூபத்தில் மூன்று தெய்வங்களையும் படைக்கின்றார். - பராசக்தியும், சதாசிவனும் இருவரும் ஒன்றிணைந்த தெய்வம் ஆகும் என்பதினால் அவை இரண்டும் நிரந்தரமாக இரண்டு தனித்தனி தெய்வங்களாக இருக்க முடியாது. ஈஸ்வரனின் பங்கு, படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் போன்ற முக்கியமான செயல்களைச் செயல்படுத்த மூன்று முதன்மை தெய்வங்களை படைப்பதோடு நின்று விடுகின்றது.
- ஆனால் அந்த நான்கு தெய்வங்களும் எப்போதும் பராசக்தியுடன் அல்லது அவளைச் சுற்றி இருக்க விரும்பினாலும் அவள் அருகில் அவர்களால் சுதந்திரமாக சென்று நிற்க முடியாது. ஆகவே பராசக்தி மணித்வீபத்தில் உள்ள தனது இருப்பிடத்திற்கு சென்றதும் ஈஸ்வரன், பிரம்மா, விஷ்ணு மற்றும் ருத்ரன் எனும் நால்வரும் அவள் அமர்ந்திருக்கும் கட்டிலின் கால்களாக தம்மை மாற்றிக் கொள்கின்றார்கள். அதே நேரத்தில் சதாசிவரோ அன்னை அமரும் கட்டிலின் மேல் கம்பளமாக தன்னை மாற்றிக் கொண்டு விடுகின்றார். இப்படியாக அவர்கள் விரும்பியபடியே அனைவரும் எப்போதும் பராசக்தியுடன் அவளது வீட்டில் இருக்கின்றார்கள்).
———
-93-
अराला केशेषु प्रकृतिसरला मन्दहसिते
शिरीषाभा चित्ते दृषदुपलशोभा कुचतटे ।
भृशं तन्वी मध्ये पृथुरुरसिजारोहविषये
जगत्त्रातुं शम्भोर्जयति करुणा काचिदरुणा ॥
அராலா கேஶேஷு ப்ரக்ருதிஸரலா மந்தஹஸிதே
ஶிரீஷாபா சித்தே த்ருஷதுபலஶோபா குசதடே ।
ப்ருஶம் தன்வீ மத்யே ப்ருதுருரஸிஜாரோஹவிஷயே
ஜகத்த்ராதும் ஶம்போர்ஜயதி கருணா காசிதருணா ॥
இந்த ஸ்லோகத்தை 1000 முறை என
45 நாட்கள் பாராயணம் செய்தால்
மனக் கவலைகள் அகன்று நினைத்தது நடக்கும்
ஹே பராசக்தி
நீ பரமேஸ்வரரின் மனதிற்கும், வாக்குக்கும் கூட எட்டாதவளாக உள்ளாய். இயற்கையிலேயே சுருண்ட முடியுடன், அழகிய புன்சிரிப்பு கொண்டவளான உனது மனமோ காட்டில் உள்ள வாகைப் பூக்களை விட மிருதுவானது; உனது ஸ்தனங்களோ கல்லை விட அதிக பாரமாக உள்ளன; மெல்லிய இடையும், பருத்த பின் பாகத்தையும் மயக்கம் தரும் உதடுகளையும், சிவந்த உடலோடும் காணப்படும் நீ இந்த பிரபஞ்சத்தை ரட்ஷிக்க வந்த பரமேஸ்வரி அல்லவா.
- (விளக்கம்:
இந்த ஸ்லோகத்திலும் ஆதி சங்கரர் மீண்டும் ஒருமுறை பராசக்தியின் அழகை, சுருக்கமாக கூறி உள்ளார்.
———
-94
कलङ्कः कस्तूरी रजनिकरबिम्बं जलमयं
कलाभिः कर्पूरैर्मरकतकरण्डं निबिडितम् ।
अतस्त्वद्भोगेन प्रतिदिनमिदं रिक्तकुहरं
विधिर्भूयो भूयो निबिडयति नूनं तव कृते ॥
கலனக: கஸ்தூரீ ரஜனிகரபிம்பம் ஜலமயம்
கலாபி: கர்பூரைர்மரகதகரண்டம் நிபிடிதம் ।
அதஸ்த்வத்போகேன ப்ரதிதினமிதம் ரிக்தகுஹரம்
விதிர்பூயோ பூயோ நிபிடயதி நூனம் தவ க்ருதே ॥
இந்த ஸ்லோகத்தை 2000 முறை என
45 நாட்கள் பாராயணம் செய்தால்
நினைத்தவற்றை அடையலாம்
ஹே பராசக்தி
நமது கண்களுக்கு தெரியும் சந்திரனின் இருண்ட பகுதியே வாசனை திரவியமான கஸ்தூரிப் பொடியாகும்; சந்திர பிம்பமோ நீர் நிறைந்த மரகத ரத்தினத்தால் ஆன குடம் போன்றது ஆகும்; பச்சைக் கற்பூரம் எனும் இன்னொரு வாசனை திரவியம் அந்தக் குப்பியின் விளிம்புவரை நிறைந்துள்ளது. நீங்கள் குளித்த பின்னர் காலியாகி விடும் அந்த வாசனை வஸ்துக்களை மீண்டும் மீண்டும் உங்களுக்காக பிரும்மா நிரப்பி வைக்கின்றார்.
- விளக்கம்:
இந்த ஸ்லோகத்தின் மூலம் ஆதி சங்கரர் பராசக்தியை வணங்கித் துதிப்பதற்கான, அல்லது அவளை தியானிக்க தகுந்த காலம் எது, அவளது பரிபூரண அருளை பெறுவதற்கான சிறந்த கால கட்டம் எது என்பதை மறைமுகமாக உணர்த்தி உள்ளார். - ஒரு பக்ஷம் என்பது பௌர்ணமியின் இருபுறமும் இருக்கும் காலம். இந்து நாட்காட்டியின்படி ஒரு பக்ஷம் என்பது இரண்டு பதினைந்து நாட்களைக் கொண்டது. முதல் பக்ஷம் என்பது பௌர்ணமியில் துவங்கி அமாவாசை வரையிலான முதல் 15 நாட் காலம்; இரண்டாம் பக்ஷம் என்பது அமாவாசை துவங்கி பௌர்ணமி வரையிலான 15 நாட் காலம் ஆகும்.
- அமாவாசைக்கும் பௌர்ணமிக்கும் இடைப்பட்ட பதினைந்து நாட்கள் சுக்ல பக்ஷம் அல்லது வளர்பிறை காலம் என்பதாகும். அதே போலவே பௌர்ணமிக்கும் அமாவாசைக்கும் இடைப்பட்ட பதினைந்து நாட்கள் கிருஷ்ண பக்ஷ அல்லது சந்திரனின் மறைவு காலம் (தேய்பிறைக் காலம்) என்று அழைக்கப்படுகிறது.
- பராசக்தியானவள் வளர்பிறை அல்லது சுக்ல பக்ஷ காலமான 15 நாட்கள் தனது தர்பாரில் அமர்ந்து கொண்டு பக்தர்களுக்கு அனுக்கிரஹம் செய்யத் துவங்குகிறாள் என்றும், அடுத்த 15 நாட்களான சந்திரனின் மறைவு காலத்தில், அதாவது கிருஷ்ண பக்ஷ காலத்தில் அவள் ஸ்நானத்திற்கு சென்று விடுவதால் அந்த கால கட்டத்தில் அவளை யாராலும் நெருங்க முடியாது என்பதினால் அவளது பரிபூரண கடாட்ஷம் அந்த கால கட்டத்தில் கிடைப்பது இல்லை என்பதும் ஐதீகம்.
- பௌர்ணமி முடிந்ததும் அன்னை ஸ்நானத்திற்கு சென்று ஒவ்வொரு நாட்களிலும் ஒவ்வொரு வாசனை திரவியங்களில் ஸ்நானம் செய்வாள் (தேய்பிறைக் காலம்).
- 15 நாட்களுக்கு பின்னர் மீண்டும் அலங்காரம் செய்து கொண்டு அமாவாசையின் அடுத்த நாட்களில் இருந்து தனது தர்பாரில் அமர்ந்து கொண்டு பக்தர்களை ஆசிர்வதிக்க துவங்குகிறாள்.
- இதில் இருந்து பராசக்தியின் பரிபூரண அருள் அமாவாசையின் அடுத்த நாள் துவங்கி பதினைந்து நாட்கள் (வளர்பிறை காலம்) கிடைக்கும் என்பது விளங்குகின்றது.
- அந்த கால கட்டத்தில்தான் பிரும்மா மீண்டும் அன்னை ஸ்நானம் செய்து விட்டு காலியாக்கி வைத்துள்ள மரகத ரத்தினத்தால் ஆன குடங்களில் மீண்டும் வாசனை திரவியங்களை நிரப்பி வைக்கின்றார் என்பதாக ஐதீகம் உள்ளது).
———-
-95-
पुरारातेरन्तःपुरमसि ततस्त्वच्चरणयोः
सपर्यामर्यादा तरलकरणानामसुलभा ।
तथा ह्येते नीताः शतमखमुखाः सिद्धिमतुलां
तव द्वारोपान्तस्थितिभिरणिमाद्याभिरमराः ॥
புராராதேரந்த:புரமஸி ததஸ்த்வச்சரணயோ:
ஸபர்யாமர்யாதா தரலகரணானாமஸுலபா ।
ததா ஹ்யேதே நீதா: ஶதமகமுகா: ஸித்திமதுலாம்
தவ த்வாரோபாந்தஸ்திதிபிரணிமாத்யாபிரமரா: ॥
இந்த ஸ்லோகத்தை 108 முறை என
3 நாட்கள் பாராயணம் செய்தால்
உடல் ரணங்கள் நிவர்த்தி ஆகும்
ஹே பராசக்தி,
திரிபுரா எனும் மூன்று உலகங்களையும் எரித்த பரமேஸ்வரரின் பட்டத்து மஹரிஷியாக நீ இருக்கின்றாய் என்பதினால், பஞ்சேந்திரியங்களை வென்றவர்களினால் மட்டுமே உன் மண்டபத்தில், உன் அருகில் வந்து பூஜை செய்ய முடியும்; அதனால் தேவேந்திரனுக்கு கூட அந்த பாக்கியம் கிட்டவில்லை; அவர்களும் உனது மண்டபத்தின் நுழை வாயிலில் துவாரகா பாலகர்களாக உள்ள அணிமா போன்ற எட்டு சித்திகளோடு சமமாக நிற்க வேண்டி உள்ளது
- விளக்கம்:
இந்த ஸ்லோகத்தின் மூலம் ஆதி சங்கரர் என்ன கூறி உள்ளார் எனில் ‘பராசக்தியின் அருகில் எளிதில் சென்று எவராலும் பூஜை செய்ய முடியாது; அவளது உத்தரவு இன்றி யாரும் உள்ளே செல்ல முடியாது. ஆகவே பராசக்தியின் அருகில் சென்று பூஜை செய்ய வைராக்கியம் வேண்டும்; அந்த வைராக்கியம் வேண்டும் என்றால் முதலில் பஞ்சேந்திரியங்கள் எனப்படும் ஐந்து புலன்களையும் முற்றிலும் அடக்கி வைத்துக் கொள்ள வேண்டும்; பஞ்சேந்திரியங்களை அடக்கி வைத்துக் கொண்டு உள்ளவர்களால் மட்டுமே அவளை பூஜிக்க முடியும் என்பதினால் எவன் ஒருவன் தேவியின் பரிபூரண அருளை பெற விரும்புகிறானோ அவர்கள் தமது ஐம்புலன்களையும் அடக்கி வைத்துக் கொண்டு அவளை ஆராதிக்க வேண்டும். - பஞ்சேந்திரியங்களை அடக்கி வைத்துக் கொள்ள முடியவில்லை என்பதினால்தான் தேவலோக அதிபதியான இந்திரன் கூட திரிபுரா எனும் மூன்று நகரங்களையும் அழித்த பரமேஸ்வரரின் பட்டத்து ராணியான பராசக்தி அமர்ந்து உள்ள மண்டபத்தில், அவள் அருகில் நின்று கொண்டு அவளை பூஜை செய்ய முடியாமல் உள்ளது. அவரும் பராசக்தி மண்டபத்தின் நுழை வாயிலில் காவலுக்கு உள்ள அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராத்தி, பிரகாமியம், ஈசத்துவம், மற்றும் வசித்துவம் போன்ற அஷ்ட சித்தி தேவதைகளுடன்தான் நின்று கொண்டு அன்னையை தரிசிக்க வேண்டி உள்ளது’).
———–
-96-
कलत्रं वैधात्रं कतिकति भजन्ते न कवयः
श्रियो देव्याः को वा न भवति पतिः कैरपि धनैः ।
महादेवं हित्वा तव सति सतीनामचरमे
कुचाभ्यामासङ्गः कुरवकतरोरप्यसुलभः ॥
கலத்ரம் வைதாத்ரம் கதிகதி பஜந்தே ந கவய:
ஶ்ரியோ தேவ்யா: கோ வா ந பவதி பதி: கைரபி தனை: ।
மஹாதேவம் ஹித்வா தவ ஸதி ஸதீனாமசரமே
குசாப்யாமாஸனக: குரவகதரோரப்யஸுலப: ॥
இந்த ஸ்லோகத்தை 1000 முறை என
10 நாட்கள் பாராயணம் செய்தால்
அறிவாற்றல் பெருகும்
ஹே பராசக்தி,
பிரும்மாவின் பத்தினியாகிய சரஸ்வதியை எத்தனை வித்வான்கள் (அறிஞசர்கள், புலவர்கள்) தம் வசமாக்கிக் கொண்டு சரஸ்வதி கடாட்ஷம் பெற்றவர்களாகி உள்ளார்கள்; லஷ்மி தேவியை எத்தனை பெரும் செல்வந்தர்கள் தம் வசமாக்கிக் கொண்டு லஷ்மி கடாட்ஷம் பெற்றவர்களாகி உள்ளார்கள்; ஆனால் பராசக்தி உன்னை மட்டும் சிவபெருமானைத் தவிர யாராலும் தம் வசமாக்கிக் கொள்ள முடியவில்லை; உன் கை மற்றும் கால்களை சிவப்பாகும் மருதாணி மரம் கூட தன்னிடம் வசியம் செய்து வைத்துக் கொள்ளவில்லையே
- விளக்கம்:
எத்தனை, எத்தனை வித்வான்கள், அறிஞசர்கள் மற்றும் புலவர்கள் நாவில் சரஸ்வதி வசிக்கிறாள் என்பதை பெருமையாக கூறுவார்கள். அதை போலவேதான் எத்தனை பெரும் செல்வந்தார்கள், வசதி படைத்தோர்கள் வீடுகளில் லட்சுமி தேவி வாசம் செய்கின்றாள் என்பதாக கூறுவார்கள். அதனால் லக்ஷ்மியும், சரஸ்வதியும் பதிவிரதைகள் அல்ல என்பதல்ல. அவர்கள் இருவரையும் முறைப்படி வணங்கித் துதிப்பவர்கள் அவர்களை எளிதில் தன் வசமாக்கிக் கொள்ள முடியும் என்பது தத்துவம் ஆகும். - ஆனால் முறைப்படி வணங்கித் துதித்தாலும் பராசக்தியை தன் வசமாக்கிக் கொள்ளும் எந்த செயலும் எவரிடமும் கிடையாது. பராசக்தி தனது கணவரான பரமேஸ்வரனைத் தவிர வேறு யாரிடமும் நெருக்கம் காட்டுவதில்லை. மனதளவில் கூட அவளை யாராலும் தம் வசப்படுத்த முடியாது; அவளும் எவருடைய வீட்டிலும் சென்று வாசம் செய்வதில்லை. ஆனால் அதற்காக தன்னை வேண்டுபவர்களுக்கு பரிவு காட்டுவதில்லை என்பது அர்த்தம் அல்ல. உண்மையான மனதுடன் தன்னை வேண்டி நிற்கும் பக்தர்களுக்கு தனது கருணையை அள்ளிக் கொடுப்பவள் பராசக்தி.
- பராசக்தியின் கைகளிலும் கால்களிலும் பூசிக் கொள்ளும் மருதாணி இலைகளின் மரங்கள் கூட அன்னையிடம் நெருக்கம் காட்ட முடிவதில்லை என்பதாக ஆதி சங்கரர் கருதுகின்றார். அவளை ஆராதிப்பவர்கள் அனைவருமே அவளது பாதங்களில் கலந்து விட வேண்டும் (அதாவது ஆத்ம விடுதலை) என்பதற்காக அவளை ஆராதிக்கின்றார்கள் என்பதினால்தான் அவள் தனித்துவமான தெய்வமாக காணப்படுகிறாள். இந்த கருத்துக்களைத்தான் இந்த ஸ்லோகம் எடுத்துக் காட்டுகின்றது).
———
-97-
गिरामाहुर्देवीं द्रुहिणगृहिणीमागमविदो
हरेः पत्नीं पद्मां हरसहचरीमद्रितनयाम् ।
तुरीया कापि त्वं दुरधिगमनिःसीममहिमा
महामाया विश्वं भ्रमयसि परब्रह्ममहिषि ॥
கிராமாஹுர்தேவீம் த்ருஹிணக்ருஹிணீமாகமவிதோ
ஹரே: பத்னீம் பத்மாம் ஹரஸஹசரீமத்ரிதனயாம் ।
துரீயா காபி த்வம் துரதிகமனி:ஸீமமஹிமா
மஹாமாயா விஶ்வம் ப்ரமயஸி பரப்ரஹ்மமஹிஷி ॥
இந்த ஸ்லோகத்தை 1000 முறை என
8 நாட்கள் பாராயணம் செய்தால்
உடல் பலமும் ஆண்மைத் தன்மையும் பெருகும்
ஹே பராசக்தி
ஆகம வேத பாடங்களை நன்கு கற்றறிந்த அனைவருமே நீயே சரஸ்வதி, நீயே மஹாலக்ஷ்மி மற்றும் நீயே பார்வதி என்று உன்னை பல்வேறு தேவிகளாக வர்ணிக்கிறார்கள். ஆனால் நீயோ நான்காவது தேவியான மஹா மாயாவாக இருந்தபடி எவருடைய மனதிற்கும், வாக்கிற்கும் எட்டாதவளாக இருந்து கொண்டு, இந்த பிரபஞ்சத்தையே ஆட்சி செய்து வருகிறாய்
- விளக்கம் :
இந்த ஸ்லோகத்தில் ஆதி சங்கரர் பராசக்தியை குறித்துக் கூறுகையில் அவள் மூன்று பெண் தெய்வங்களான பார்வதி, லஷ்மி மற்றும் சரஸ்வதி என்பவர்களின் எவரும் இல்லை, அவர்களுக்கு அப்பாற்பட்ட நான்காவது தெய்வமான மஹா மாயா என்பதை போல ஒரு தோற்றத்தை தருகின்றார். - உண்மையில் மஹா மாயா என்பவள் யார்? ‘சில புராணங்களில் மஹா மாயா என்பவளை பெண் தெய்வங்களில் மிக உயர்ந்த தெய்வம் என்பதாக கூறப்பட்டு உள்ளது; இந்த உலகமே மாயை என்பதால் அவளே அந்த மாயையின் உருவம்; அவளே உலகைப் படைத்தவள்; படைத்தல், காத்தல் மற்றும் அழித்தல் என்ற மூன்று செயல்களையும் செய்ய வைப்பவள்; அவள் குணங்கள் அற்றவள்; அவளது ஆற்றல்கள் எவருக்கும் தெரியாது; துர்கை அவளுடைய அவதாரம்; பார்வதி அவளுடைய அவதாரம்; லட்சுமி அவளுடைய அவதாரம்; காளி அவளுடைய அவதாரம் என்றெல்லாம் கூறப்பட்டு உள்ளது. அனைத்து தெய்வங்களும் பராசக்தியின் வெளிப்பாடுகள் மட்டுமே. அவற்றில் இருந்தே மஹா மாயா என்பவள் அனைத்து தெய்வங்களையும் பிரதிபலிப்பவள் என்பது விளங்கும்.
- மஹா மாயா மிக உயர்ந்த தெய்வம். அவள் எல்லையற்றவள்; பிறப்பற்றவள்; மரணமற்றவள்; காலத்திற்கும் இடத்திற்கும் அப்பாற்பட்டவள்; என்பதாக கூறப்பட்டு உள்ளது. அவளே அக்னிக்குப் பின்னால் உள்ள சக்தி; வாயுவுக்குப் பின்னால் உள்ள சக்தி; சூரியனுக்குப் பின்னால் உள்ள சக்தி; வசுக்களுக்குப் பின்னால் உள்ள சக்தி; இந்திரன், பிருஹஸ்பதி மற்றும் வருணனுக்குப் பின்னால் உள்ள சக்தி அவளே என்றெல்லாம் அவளைக் குறித்து கூறி உள்ளார்கள்’.
- இவற்றை எல்லாம் பார்க்கும்போது ஆதி சங்கரர் இந்த உலகைப் படைத்த, அனைத்து தெய்வங்களையும் படைத்த பராசக்தியின் இன்னொரு தோற்றமே மஹா மாயா என்பதாக மறைமுகமாக கூறி உள்ளார் என்றே அறிந்து கொள்ள வேண்டும்.
- மகாலட்சுமி அஷ்டகத்தில் உள்ள ஒரு ஸ்லோகம் மகா மாயாவைப் பற்றி இவ்வாறு கூறுகிறது:-‘ஓ தேவி, நீ ஆரம்பமோ முடிவோ இல்லாதவள். ஆதி காலத்தில் இருந்தே உள்ள மிகப் பெரிய சக்தி நீ; யோகிகளின் மனதில் இருக்கும் மகாலட்சுமியே, ஒவ்வொருவருடைய உணர்விலிருந்தும் பிறந்த தெய்வீக நெருப்பு நீயே’.
- லட்சுமி நாராயண ஹ்ருதயம் இவ்வாறு கூறுகிறது:-‘ஓ தேவி, ஆதி காலம் முதலே உள்ள மாயை நீ ; பிரபஞ்சத்தின் முட்டை நீ ; உருவம் உள்ளவளும், உருவமற்றவளும் நீயே; நீயே சிவனை ஆதரிப்பவள்; நீயே பிரம்மா, விஷ்ணு மற்றும் ருத்ரனுடன் இருப்பவள் ஆவாய்; வேதங்களின் புரிதலுக்கு அப்பாற்பட்டவள் நீ என்பதினால்தான் உன் மகத்துவத்தை எவராலும் விவரிக்க முடியவில்லை; அனைத்து நிலையும் இவ்வாறு இருக்கும்போது, மந்த புத்தியுள்ள என்னால் எப்படி உன் மகத்துவத்தை விவரிக்க முடியும்?’
- ஸ்ரீ சுக்தம் இவ்வாறு கூறுகிறது:-‘ஓ தேவி, நீ அக்னிக்குப் பின் உள்ள சக்தி, வாயுவுக்குப் பின் உள்ள சக்தி, சூரியனுக்குப் பின் உள்ள சக்தி, வசுக்களுக்குப் பின் உள்ள சக்தி; இந்திரன், பிரகஸ்பதி மற்றும் வருணனுக்குப் பின் உள்ள சக்தி நீயே ஆவாய்; அனைத்திற்கும் பின் உள்ள, எங்கும் நிறைந்த தெய்வம் நீயே’.
——-
-98-
कदा काले मातः कथय कलितालक्तकरसं
पिबेयं विद्यार्थी तव चरणनिर्णेजनजलम् ।
प्रकृत्या मूकानामपि च कविताकारणतया
कदा धत्ते वाणीमुखकमलताम्बूलरसताम् ॥
கதா காலே மாத: கதய கலிதாலக்தகரஸம்
பிபேயம் வித்யார்தீ தவ சரணனிர்ணேஜனஜலம் ।
ப்ரக்ருத்யா மூகானாமபி ச கவிதாகாரணதயா
கதா தத்தே வாணீமுககமலதாம்பூலரஸதாம் ॥
இந்த ஸ்லோகத்தை 1000 முறை என
30 நாட்கள் பாராயணம் செய்தால்
உடல் வியாதிகள் குணமாகும்
ஹே பராசக்தி
பிறவியிலேயே ஊமையாக இருந்தவனுக்கு கூட உன் மீது ஸ்துதி பாடும் அளவிற்கான சக்தி கொடுத்தாய். கவிகள் பாடும் பாடலுக்கு தேவையான அருள் தரும் சரஸ்வதியின் தாம்பூலம் போன்ற, சிவந்த நிறத்திலான, உனது பாதத்திலுள்ள மருதாணி அலம்பிய அமிர்தம் போன்ற தீர்த்தத்தை குடிக்க எனக்கு எப்போது அருள் புரிவாய்?
- விளக்கம்:
இந்த ஸ்லோகத்தில் ஊமைக்குக் கூட பேசும் சக்தியைத் தந்த பராசக்தியின் மேன்மை குறித்து ஆதி சங்கரர் விளக்கி உள்ளார். அந்த ஊமை யார் என்பவரைக் குறித்து இரண்டு விதமான கதைகள் உள்ளன. - முதலாம் கதை இது:- கோகர்ண ஷேத்திரத்திற்கு சமீபத்தில் உள்ள மூகாம்பிகை ஷேத்திரத்தில் பிறப்பிலேயே ஊமையாகவும் பேச முடியாமலும் இருந்த பிராமண குமாரர் ஒருவர் தன்னால் பேச முடியவில்லையே என்ற ஏக்கத்தில், மூகாம்பிகை ஆலயத்தில் சென்று தனது இரண்டு கைகளையும் சிரசில் வைத்துக் கொண்டு தனக்கு பேச்சு வர வேண்டும் என்று வேண்டிக் கொள்ள, அந்த அன்னையோ தனது காலில் அலங்கரிக்கப்பட்டு இருந்த மருதாணியோடு அவர் முன் தோன்றி, சிவந்து இருந்த தனது காலை அலம்பிக் கொண்டு அந்த நீரை பருகுமாறு கூறினாளாம். அதைக் குடித்த அந்த பிராமண பாலகரின் வாயும் நாக்கும் சிவந்து விட்டதாம். அடுத்து அவருக்கு பேச்சு ஆற்றல் வந்து விட அவர் அன்னையை பல்வேறு ஸ்தோத்திரங்களினால் போற்றி பாடத் துவங்கி விட்டாராம். அந்த கிரந்ததையே ‘மூக பஞ்ச சதீ’ என்பதாக வித்வான்கள் கூறுவார்கள். {ஆதாரம் & தகவலுக்கு நன்றி : 1955 ஆம் ஆண்டில் வெளியாகி உள்ள ஸ்ரீ தேதியூர் சுப்ரமணிய சாஸ்திரிகளால் தமிழாக்கம் செய்யப்பட்ட ஸ்ரீ சங்கர பகவத் பூஜ்யபாதாள் அருளிய சௌந்தர்யா லஹரி எனும் புத்தகம்}.
- இரண்டாவது கதை இது :– ‘மூக பஞ்சஷதி’ என்பது காஞ்சிபுரத்தின் காமாக்ஷி தேவிக்கு ஐந்நூறு வசனங்கள் கொண்ட பாடலாகும், இது மூக்கா கவியால் (பின்னர் காஞ்சி காமகோடி பீடத்தின் 20வது சங்கராச்சாரியாரான மூக சங்கரேந்திர சரஸ்வதி) இயற்றப்பட்டது. காது கேளாத-ஊமையாகப் பிறந்த மூக்கா (ஊமை என்று பொருள்) தேவி காமாக்ஷியின் கருவறையில் பல மணி நேரம் செலவழித்து, தன் அருளைத் தன் மீது பொழியும்படி வேண்டினார். இறுதியாக தேவி அவ்வாறு செய்தபோது, மூக்கா பேசவும், கேட்கவும் மட்டுமின்றி, தன்னிச்சையாக கவிதையில் பொங்கி எழுந்த ‘மூக பஞ்சஷதி’யைப் பாடும் அளவுக்கு ஞானம் பெற்றவர் ஆனார். காஞ்சி காமகோடி பீடத்தின் 19 வது பீடாதிபதியான ஜகத்குரு ஸ்ரீ மார்த்தாண்ட வித்யாகனேந்திர சரஸ்வதியால், அவருக்குப் பிறகு மடம் ஏறும்படி மூக்கா கோரப்பட்டார். இன்றும் கூட, ‘மூக பஞ்சஷதி’ என்பது பேச்சுக் குறைபாடு உள்ளவர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து வித்யாக்களிலும் (அறிவின் கிளைகள்) தேர்ச்சி பெற விரும்புவோருக்கு பரிந்துரைக்கப்படும் ஒரு சக்திவாய்ந்த பாடலாகும்).
{ஆதாரம் தகவலுக்கு நன்றி :(https://panchadravida-com.translate.goog/mooka-panchashathi?_x_tr_sch=http&_x_tr_sl=en&_x_tr_tl=ta&_x_tr_hl=ta&_x_tr_pto=tc )} - ‘மூக பஞ்சஷதி’ மற்றும் ‘மூக பஞ்ச சதீ’ என்கின்ற இரண்டுமே காமாக்ஷி தேவிக்கு ஐந்நூறு வசனங்கள் கொண்ட ஒரே ஸ்லோகம்தான்.
———–
-99-
सरस्वत्या लक्ष्म्या विधिहरिसपत्नो विहरते
रतेः पातिव्रत्यं शिथिलयति रम्येण वपुषा ।
चिरं जीवन्नेव क्षपितपशुपाशव्यतिकरः
परानन्दाभिख्यम् रसयति रसं त्वद्भजनवान् ॥
ஸரஸ்வத்யா லக்ஷ்ம்யா விதிஹரிஸபத்னோ விஹரதே
ரதே: பாதிவ்ரத்யம் ஶிதிலயதி ரம்யேண வபுஷா ।
சிரம் ஜீவன்னேவ க்ஷபிதபஶுபாஶவ்யதிகர:
பரானந்தாபிக்யம் ரஸயதி ரஸம் த்வத்பஜனவான் ॥
இந்த ஸ்லோகத்தை 1000 முறை என
15 நாட்கள் பாராயணம் செய்தால்
ஒருவருக்கு மனத் துணிவும் அச்ச
உணர்வின்மையும் கிடைக்கும்
ஹே பராசக்தி
உன்னை பூஜித்து துதிப்பவன் பிரும்மா பொறாமைப்படும் அளவில் சரஸ்வதியின் கடாக்ஷம் பெற்ற அறிவாற்றலும், விஷ்ணு பொறாமைப்படும் அளவில் லட்சுமி கடாக்ஷம் பெற்ற செல்வந்தனாகவும் இருக்கின்றான். அவனது அழகோ மன்மதனின் மனைவியான ரதியை தோற்கடிப்பதாக உள்ளதினால் மன்மதனால் வெறுக்கப்படுகின்றான். உனது பக்தன் சிரஞ்சீவியாகவே இருந்தவாறு பந்த பாசங்களில் இருந்து விடுபட்டு பரமானந்த இன்பத்தை அனுபவிக்கின்றான்.
- விளக்கம் :
இந்த ஸ்லோகத்தின் மூலம் ஆதி சங்கரர் மேலோட்டமாக என்ன கூறி உள்ளார் என்றால் ‘பராசக்தியை வழிபாடு செய்பவன் உலகின் அனைத்து பந்தங்களில் இருந்து விடுதலை அடையும் முன் வாழ்க்கையின் மிக மேன்மையான நிலையை அடைகிறான்; அதன் பின் பராசக்தியின் தீவிரமான வழிபாட்டினால் அவன் ஒரு யோகி போன்ற நிலையை அடைந்து விடுகின்றான். அந்த நிலையை அடைபவன் மீது பிரும்மா மற்றும் விஷ்ணு போன்ற தெய்வங்களும் பொறாமைக் கொண்டு விரோதியைப் போல அவனைப் பார்ப்பார்கள். அதன் காரணம் பிரும்மாவின் மனைவியான சரஸ்வதி அவன் நாக்கில் குடி இருப்பதினால் ஞானத்தில் சிறந்தவனாகின்றான்; பெரும் பொருள் மற்றும் செல்வத்தை அடையும் அவன் வீட்டிலோ விஷ்ணுவின் மனைவியான லக்ஷ்மி குடி இருப்பாள் என்பார்கள். அதை தொடர்ந்து அவன் முகப் பொலிவையும், உடல் அழகையும் பெறுகின்றான். அந்த நிலையில் உள்ள அவனைக் காணும் மன்மதனின் மனைவியான ரதியோ அவனை பார்த்துக் கொண்டே இருக்க நினைக்கிறாள் என்பதினால் மன்மதனும் அவன் மீது பொறாமை கொள்கின்றான். - இந்த ஸ்லோகத்தில் கூறப்பட்டுள்ள உள் அர்த்தங்கள் நுட்பமானவை, அவை அனைத்துமே மிகைப்படுத்தப்பட்டு, மேலோட்டமாக விளக்கப்பட்டுள்ளது. உண்மையில், இதில் காணப்படும் தத்துவங்கள் மிக வித்தியாசமானது. வாழ்க்கையில் அனைத்தையும் அடைந்து விட்டவர்கள் வாழ்க்கையில் இறுதியில் அமைதியான முடிவை அடைய பராசக்தியின் அருளை வேண்டி நிற்கின்றார்கள், அவர்கள் அதற்காகவே பராசக்தியிடம் பிரார்த்தனை செய்கிறார்கள். இந்த ஸ்லோகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பிரம்மா, விஷ்ணு மற்றும் மன்மதன் என்ற பெயர்களில் ஆதி சங்கரர் குறிப்பிட்டு உள்ளவர்கள்- கற்றறிந்த ஆளுமைகள் மற்றும் கல்வியறிவு பெற்றவர்களிடையே உள்ள போட்டியாளர்கள்; செல்வந்தர்களிடையே காணப்படும் போட்டியாளர்கள்; பொது வாழ்க்கையில் பிரபலமான ஆளுமைகளிடையே காணப்படும் போட்டியாளர்கள் என்பவர்கள் ஆவர். அந்த தெய்வங்களின் பெயர்கள் ஒரு உதாரணமாகவே கூறப்பட்டு உள்ளன.
- இந்து தெய்வங்கள் தனித்துவமான தன்மைகளைக் கொண்டவர்கள், அவர்கள் சாதாரண குடிமகனின் எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளுக்கு அப்பாற்பட்டவர்கள், அவரவர்கள் சில குறிப்பிட்ட செயல்களை நிறைவேற்றுவதற்காக மட்டுமே தோன்றியவர்கள் என்பதினால் அவர்கள் மனதில் எந்த உணர்ச்சிகளோ, ஆசா பாசங்களோ இருக்க முடியாது. ஏன் என்றால் மானிடர்களும், தெய்வங்களும் வெவ்வேறு வகையான உலகத்தை சேர்ந்தவர்கள்.
- ஆதி சங்கரர் கூறி உள்ளது என்னவென்றால், மேலான ஞான நிலையை எட்டும் பராசக்தி உபாசகன், வாழ்க்கையில் எந்த தேவையும் இல்லாமல் இருக்கின்றார். உலகில் எந்த பந்தங்களும் இல்லாத நிலையை அடைந்ததும் மனதில் அழிவற்ற இளமையை பெறுகின்றார். அது ஜீவாத்மாவை பரமார்த்தத்துடன் இணைக்கும் நிலை மற்றும் பேரின்பத்தின் உச்ச நிலை என்பதாகும்.
- ஆகவே சௌந்தர்யலஹரியில், மேலே கூறப்பட்டு உள்ள 98 ஸ்லோகங்களின் அர்த்தங்களையும் மேலோட்டமாகப் பார்க்காமல், அதில் புதைந்து உள்ள ஆழமான அர்த்தங்களை நன்கு அறிந்து கொண்டால் மட்டுமே, ஆதி சங்கரர் போன்ற மாபெரும் மஹான், பரிபூரணமான யோகி எத்தனை புனிதமான மனதுடன் அன்னையை வர்ணித்து உள்ளார் என்பது புரியும்).
———
-100-
प्रदीपज्वालाभिर्दिवसकरनीराजनविधिः
सुधासूतेश्चन्द्रोपलजललवैरर्घ्यरचना ।
स्वकीयैरम्भोभिः सलिलनिधिसौहित्यकरणं
त्वदीयाभिर्वाग्भिस्तव जननि वाचां स्तुतिरियम् ॥
ப்ரதீபஜ்வாலாபிர்திவஸகரனீராஜனவிதி:
ஸுதாஸூதேஶ்சந்த்ரோபலஜலலவைரர்க்யரசனா ।
ஸ்வகீயைரம்போபி: ஸலிலனிதிஸௌஹித்யகரணம்
த்வதீயாபிர்வாக்பிஸ்தவ ஜனநி வாசாம் ஸ்துதிரியம் ॥
இந்த ஸ்லோகத்தை 1000 முறை என
16 நாட்கள் பாராயணம் செய்தால்
ஒருவருக்கு அனைத்து விருப்பங்களும் நிறைவேறும் நிறைவேறும்
ஹே பராசக்தி,
நீ கொடுத்த வாக்கு வலிமையினாலேயே உன்னை நான் இந்த துதியால் புகழ்வது –கற்பூர ஆராத்தியினால் சூரியனை ஆராதிப்பதை போலவும், சந்திர காந்த கல்லின் நீரால் சந்திரனுக்கு அர்க்கியம் தருவதை போலவும், சமுத்திர நீரைக் கொண்டே கடலுக்கு தர்ப்பணம் செய்வதை போலவும் –உள்ளது.
- விளக்கம்:
இந்த ஸ்லோகத்தை எழுதி முடித்ததும் (சௌந்தர்ய லஹரி) ஆதி சங்கரர் அன்னையிடம் கூறுகின்றார் ‘இந்த பெருமை எனக்கு உரியது அல்ல. என்னால் செய்ய முடிந்த அனைத்திற்குமே நீதான் காரணகர்த்தாவாக இருக்கின்றாய் என்பதால் எனது திறமை அனைத்தும் உன்னுடைய திறமையாகும் என்பதினால் நீதான் பெருமைக்கு உரியவள்’. - ஆதி சங்கரர் மிக்க தன்னடக்கத்துடன் அன்னையிடம் கூறுகின்றார் ‘உனக்கு நான் நன்றி கூறுவது எப்படி உள்ளது என்றால் கடலில் இருந்து எடுக்கப்பட்ட நீரால் கடலுக்கே தர்ப்பணம் செய்வதை போன்றது; சந்திரகாந்தக் கல்லில் (marble stone) இருந்து சுரக்கும் நீரால் சந்திரனுக்கே அர்க்கியம் தருவதை போன்றது; கற்பூர விளக்கு ஏற்றி சூரிய பகவானை வழிபடுவது போன்றது’. அவற்றுக்கு இங்கு நேரடியாக முக்கியத்துவம் இல்லை என்றாலும், அவற்றை தனது செயலுடன் ஒப்பிடுவதற்காக குறிப்பிடுகிறார்.
- தன்னை உணர்ந்த எந்த ஒரு ஞானியும் (ஆத்ம விடுதலை அடைந்த ஞானி) தனது திறனைப் பற்றியோ அல்லது ஆன்மீக சாதனையைப் பற்றியோ எவரிடமும் பெருமை பேச மாட்டார். ஏனெனில் அவர் அன்றாட வாழ்க்கையின் சாதாரண கவலைகளுக்கு அப்பாற்பட்டவர். அவர் தெய்வங்களின் பாதங்களுடன் இணைந்து விடும் நிலையான ஆத்ம விடுதலையிலும் அதற்கு அப்பாலும் மட்டுமே கவனம் செலுத்துகிறார். அவர் வழிபடும் தெய்வீகத்தின் பாதங்களில் தன்னை இணைத்துக் கொள்கிறார். எனவே ஆதி சங்கரரும் தனது திறமைக்கான பெருமையை பராசக்திக்கே உரியது என்று கூறுவதில் காரணம் பராசக்தி தான் தன்னை இயக்குகின்றாள், அவள் கையில் தான் ஒரு கருவி மட்டுமே என்கின்றார்).
॥ சௌந்தர்யலஹரி ஸ்லோக விளக்கம் நிறைவடைந்தது॥
॥ ஓம் தத்ஸத் ॥