நன்னிலம்

மதுவனேஸ்வரர்

ஆலயம்

-சாந்திப்பிரியா

திருவாரூர் மாவட்டத்தின் கும்பகோணம் மற்றும் மாயவரத்தில் இடைப் பகுதியில் உள்ளதே நன்னிலம் எனும் சிற்றூர். நன்னிலம் என்றால் நல்ல நிலம் அல்லது நல்லதைத் தரும் நிலம் என்று பொருள்படும். அங்குள்ள மதுவனேஸ்வரர் ஆலயம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட ஆலயம் என்று கூறுகின்றார்கள். குன்றின் மீதும், கீழுமாக ஆலயம் அமைந்து உள்ளதினால் இதை மாடக் கோவில் என்று அழைக்கின்றார்கள். மேலும் கீழும் இரு பாகங்களாக கட்டப்பட்டு உள்ள மாடிக் கோவில் என்பதே மாடக் கோவில் என்பதாயிற்று. முடிகொண்டான் ஆற்றின் தென்கரையில் சோழ மன்னன் கோச்செங்கட் சோழன் என்பவர் அமைத்துள்ள ஆலயம் இது.

இரண்டு ராஜகோபுரத்தைக் கொண்ட ஆலயத்தில் நுழைந்தவுடன் வெளிப் பிராகாரத்தில் காணப்படுவது பிரம்மபுரீஸ்வரர் சன்னதி. அதில் உள்ளது பகவான் பிரும்மா ஸ்தாபித்ததாகக் கூறப்படும் பெரிய சிவலிங்கம் ஆகும். அந்த சிவலிங்கத்தை பகவான் பிரும்மா ஸ்தாபித்ததினால் அதை பிரம்மபுரீஸ்வரர் என்கின்றார்கள். அந்த சன்னதியை ஒட்டினாற்போல் அகத்தியர் வழிபட்ட அகத்தீஸ்வரர் சன்னதி உள்ளது. ஆலய கீழ் பகுதியில் சித்தி வினாயக பெருமான், முருகப் பெருமான், தேவி மகாலட்சுமி, சண்டிகேஸ்வர பகவான், சனீஸ்வர பகவான், பைரவ பகவான், சூரிய பகவான் மற்றும், நவகிரகங்களுக்கு தனியே சன்னதிகள் உள்ளன.

பிரம்மபுரீஸ்வரர் சன்னதியை ஒட்டினாற்போல அமைக்கப்பட்டு உள்ள படிகளில் ஏறிச் சென்றால் குன்றின் மேல் பகுதியில் பகவான் மதுவனேஸ்வரர் மற்றும் தேவி மதுவனேஸ்வரியின் சன்னதியைக் காண முடியும். குன்றின் மீது சோமாஸ்கந்தர் சன்னதியும் உள்ளது. சன்னதியில் கிழக்கு நோக்கி பார்த்தபடி அமர்ந்துள்ள பகவான் மதுவனேஸ்வரர் ஸ்வயம்புவாக அவதரித்தவர் என்கின்றார்கள். இந்த ஆலயத்தின் தேவ தீர்த்தத்தில் மாசி மாதம் (பிப்ருவரி) நீராடி வணங்க துன்பங்கள் நீங்கும் என்றும், பிரதோஷ காலங்களில் வழிபட்டால் செல்வம் பெருகும் என்றும் இந்த ஆலயத்து தல புராணம் கூறுகின்றது.

கிருதா யுகத்தில் பிருஹத்ராஜன் என்ற மன்னன் செய்த தவப் பயனாக சிவபெருமான் இத்தலத்தில் தேஜோ லிங்கமாய் காட்சி தந்ததும் அல்லாமல் அவரது கோரிக்கைக்கு இணங்கி ஆலயத்தின் வடக்குப் பக்கத்தில் தனது சூலாயுதத்தால் ஒரு குளத்தை உருவாக்கி, தன் தலையில் இருந்து வெளிவந்த கங்கை நீரை அதில் நிறப்பினாராம். தேஜோ லிங்கம் என்பது ஜோதி வடிவிலான தோற்றம் ஆகும்.

நன்னிலத்தில் உள்ள மதுவனேஸ்வர் ஆலயத்தின் கதை திருச்சியில் உள்ள திருவானைக்காவல் ஆலயத்துடன் ஒரு வகையில் ஒட்டியது ஆகும். புராணக் காலத்தில் இரண்டு சிவ கணங்கள் கைலாசத்தில் சிவபெருமானுக்கு சேவை செய்தபடி இருந்தன. அவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று ஏதாவது ஒரு வகையில் சண்டை போட்டபடியே இருந்து வந்தன. அவர்கள் இருவருமே சிவபெருமானுக்கு சேவை செய்வதில் போட்டி போட்டுக் கொண்டு இருந்ததினால் இருவருக்கும் பொறாமை இருந்தது. ஒருநாள் அவர்கள் இடையே ஏற்பட்ட சண்டையில் ஒருவருக்கு ஒருவர் சாபம் கொடுத்துக் கொண்டார்கள். அதன்படி அவர்கள் இருவருமே அடுத்த பிறவியில் சிலந்தி மற்றும் யானையாக திருவானைக்காவல் ஆலய பகுதியில் பிறவி எடுத்து ஒரு நாவல் மரத்தடியில் இருந்த சிவலிங்கத்தின் அருகில் இருந்தன. சிவலிங்கத்தின் மேல் பகுதியில் சிலந்தி இருக்க, யானையோ சிவலிங்கத்தின் அருகில் வசித்து வந்தது. சிவலிங்கத்தின் மேல் மரத்தின் காய்ந்த சருகுகள் விழாமல் சிலந்தி வலைக் கட்டி பாதுகாக்க, யானையோ காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டு வந்து வழிபட்டது. ஆனால் காய்ந்த இலைகள் மற்றும் சருகுகள் கிடந்த சிலந்தி வலையை அசிங்கமாகக் கருதி யானை தினமும் அதன் மீது தண்ணீரை பீச்சியடித்து அதை அழித்து விட்டுச் செல்லும். ஆனால் அந்த சிலந்தியோ மீண்டும் மீண்டும் வலை பின்னி வழிபாட்டைத் தொடரும். இப்படியாக தினந்தோறும் யானையின் தொந்தரவு தொடர்வதைக் கண்டு கோபமுற்ற சிலந்தி, அந்த யானையின் துதிக்கையில் புகுந்து கொண்டு போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. சாப விமோச்சனம் பெற்ற அவை இரண்டும் மீண்டும் தேவ கணங்களாயின. ஆனால் அந்த சிலந்தி மீண்டும் ஒரு பிறவி எடுத்து பூமியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. பெரும் சிவ பக்தனான அந்த மன்னனின் ஆட்சி காலத்தில் அவன் எழுபதுக்கும் மேற்பட்ட மாடக் கோவில்களை நிர்மாணித்தார். ஆனால் பூர்வ ஜென்ம உணர்வினால் அவருக்கு யானைகள் மீது வெறுப்பு இருந்ததினால் அவர் கட்டிய ஆலயங்கள் அனைத்தையுமே பூமிக்கு மேல் மாடிப் பகுதியில், யானைகள் ஏறிச் செல்ல இயலாத வகையில் குறுகிய படிகளில் ஏறிச் சென்று தரிசிக்கும் வகையில் அமைத்தான். ஆகவே அந்த ஆலயங்கள் மாடக் கோவில்கள் என அழைக்கப்பட்டன. நன்னில கிராமத்தில் உள்ள மதுவனேஸ்வரர் திருக்கோவிலும் அந்த கோச்செங்கட் சோழன் கட்டிய ஒரு மாடக் கோவில் ஆகும்.

இந்த ஆலயம் குறித்த இரண்டு கதைகள் சுவையானவை. அதில் முதல் கதை இது. துவாபர யுகத்தில் விஸ்வரூபன் எனும் கொடிய அசுரன் தேவர்களை கொடுமைப்படுத்தி வந்தான். அதனால் கோபமுற்ற தேவேந்திரன் அவனுடன் யுத்தம் செய்து அவனைக் கொன்றார். ஆகவே விஸ்வரூபனின் தந்தையான துவிஷ்டா எனும் முனிவர் ஒரு யாகம் செய்து அந்த தீயில் இருந்து இன்னொரு மகனை வெளிவரச் செய்து இந்திரனுடன் போர் புரிந்து தேவேந்திரனை அழிக்க ஏற்பாடு செய்தார். அவனே விருத்திராசூரன் என்பவன் ஆவான். முற் பிறவியில் தேவகணமாக இருந்து விஷ்ணு பகவானுக்கு சேவை செய்து கொண்டு இருந்த விருத்திராசூரன் ஒரு சமயத்தில்  பார்வதி தேவி கொடுத்த சாபத்தினால் அடுத்த ஜென்மத்தில் அசுர குலத்தில் விருத்திராசூரன் எனும் பெயரில் பிறப்பு எடுக்க வேண்டி இருந்தது. இயற்கையிலேயே தேவர்கள் மீது துவேஷம் கொண்டு யாக குண்டத்தில் இருந்து பிறந்த அசுரன் என்றாலும் முன்ஜென்ம புண்ணியத்தினால் இறை பக்தி கொண்டிருந்தவன். அதே நேரத்தில் தேவலோகத்தில் தேவேந்திரரும் சில தவற்றை செய்து வந்தார். அதனால் பல தேவ முனிவர்களும், தேவர்களும் இந்திர லோகத்தை விட்டு வெளியேறத் துவங்க தேவேந்திரனின் பலம் குறைந்தது. அந்த தருணத்தையே எதிர்பார்த்துக் காத்திருந்த விருத்திராசூரன் தேவேந்திரனை தாக்கி அழிக்கத் துவங்கினான். அவனது பலத்துக்கு ஈடு கொடுக்க முடியாத தேவேந்திரன் திணறத் துவங்க தேவர்கள் உயிருக்கு பயந்து சிவபெருமானிடம் ஓடி சென்று தமக்கு பாதுகாப்பு தருமாறு வேண்டினார்கள்.

சிவபெருமானும் அவர்களிடம் கூறினார் ‘தேவர்களே விருத்திராசூரன் மரணம் அடையும் தருமணம் இன்னும் வரவில்லை. அவன் தக்க நேரத்தில் விஷ்ணு பகவானின் அருளினால் கொல்லப்படுவான். அதுவரை நீங்கள் அனைவரும் தேனிகளாக மாறி அருகில் உள்ள வனத்தில் குடியேறுங்கள். அங்கு எனக்கு தேன் அபிஷேகம் செய்து பூஜித்து வரும் காலத்தில் விருத்திராசூரனுடைய அழிவும் நடைபெறும்’

தேவர்கள் உடனடியாக தம்மை தேனீக்களாக்கிக் கொண்டு நன்னிலத்தில் தற்போது மதுவனேஸ்வரர் ஆலயம் உள்ள இடத்தில் இருந்த பெரிய வனத்தில் குடியேறினார்கள். அங்கு ஸ்வயம்புவாக அவதரித்து இருந்த சிவலிங்கத்தின் மீது கூடு கட்டிக் கொண்டு அதில் இருந்து தேனை சிவலிங்கத்தின் மீது கொட்ட வைத்து அபிஷேகம் செய்து வழிபட்டார்கள்.

வருடங்கள் ஓடின. விருத்திராசுரனுக்கும் பகவான் இந்திரனுக்கும் இடையிலான போர் ஓயவில்லை, தொடர்ந்து கொண்டே இருந்தது. ஆகவே அதனால் மனம் வெறுப்புற்ற விருத்திராசூரனுக்கு மனதில் இறைவீக எண்ணம் தோன்றத் துவங்கியது. அதுவே அவனை அழிக்க தக்க திருமணம் என்பதை உணர்ந்து கொண்ட விஷ்ணு பகவான் உடனடியாக தாதிஸீ முனிவரின் உடல் எலும்பை பெற்றுக் கொண்டு வந்து அதில் ஆயுதம் செய்து அவனைக் கொல்லுமாறு தேவேந்திரனுக்கு ஆணையிட, அவரும் அதை போலவே தாதிஸீ முனிவரின் எலும்பை பெற்றுக் கொண்டு வந்து விருத்திராசுரனைக் கொன்றார். அதைக் கண்ட தேவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து வெற்றியைக் கொண்டாடி சிவபெருமான் தமக்கு காட்சி தாது தம்மை ஆசிர்வதிக்க வேண்டும் என வேண்டினார்கள். அவர்களது வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சிவபெருமானும் அவர்களுக்கு மதுவனேஸ்வரர் எனும் உருவில் அந்தக் காட்டில் காட்சி தந்ததும் அல்லாமல் தனது துணைவியையும் மதுவனேஸ்வரியாக காட்சி தர வைத்து தேனீக்களாக இருந்த தேவர்களை ஆசிர்வதிக்க அவர்கள் தமது பழைய உருவை அடைந்து மகிழ்ச்சியோடு தமது இருப்பிடங்களுக்கு திரும்பிச் சென்றார்கள்.

அங்குள்ள தேனிக்கள் சிவபெருமானுக்கு தேன் அபிஷேகம் செய்து பூஜிப்பதாக நம்பிக்கை உள்ளதினால் அந்த ஆலய வளாகத்துக்குள் உள்ள தேனீக்களை எவரும் விரட்டுவதில்லையாம். அதை போலவே விருத்திராசுரனை அழித்ததினால் ஏற்பட்ட பிரும்மஹத்தி தோஷத்தைக் களைந்து கொள்ள தேவேந்திரன் சிவபெருமான் ஸ்வயம்புவாக அவதரித்து இருந்த பல ஆலயங்களுக்கும் சென்று அவரை வழிபட்டபோது இந்த ஆலயத்துக்கும் வந்து சிவபெருமானை வழிபட்டதாகவும் இறுதியாக தேவேந்திரனுக்கு இந்த ஆலயத்தில் இருந்து சில மைல் தொலைவில் இங்கிருந்த வனத்தின் தொடர்ச்சியான வனப் பகுதியில் இருந்த ஆரண்யேஸ்வரர் ஆலயத்தில் அந்த தோஷம் தொலைந்ததாக வரலாறு கூறப்படுகின்றது.

தேவர்கள் தேனீக்கள் வடிவம் கொண்டு இங்கு தங்கி இறைவனை வழிபாட்டு வந்திருந்ததினால்தான் இந்த ஆலயத்தின் பெயரும் மதுவனேஸ்வரர் என்று ஆயிற்று. மது என்றால் தேன் என்பது அர்த்தம். அவருடைய நாயகியான பார்வதி தேவியும் இங்கு குடியேறி மதுவனநாயகி எனும் பெயரைப் பெற்றாள். இன்னொரு ஐதீகம் என்ன என்றால் தேனீக்கள் உருவில் அங்கிருந்த தேவர்களுடைய தேனீக்களை போன்ற ரீங்காரம் தேனீக்களின் சப்தம் அல்லவாம். தேனிக்களின் ரீங்கார ஒலியானது தேவர்கள் நான்கு வேதங்களையும் ஓதிக்கொண்டு இருக்கும் சப்தமாம். அதனால் இந்த ஆலய சன்னதியில் வழிபடும் காலத்தில் நம் உடல் அந்த வேத ஒலிகளின் ஓசைகளை ஈர்ப்பதினால் பல பாபங்களை தொலைந்து கொள்வதாக ஐதீகம் உண்டு.

இந்த ஆலயம் இங்கு எழுந்ததற்கான இரண்டாவது கதை இது. தேவர்கள் தேனீக்களாகி வாழ்ந்த துவாபர யுகத்திற்கு முன்னால் திரேதா யுகத்தில் நடைபெற்றதாக கூறப்படும் கதை இது. திரேதா யுகத்தில் ஒருமுறை வாய் பகவானுக்கும், தெய்வீக நாகமான ஆதிசேஷனுக்கும் ஒரு பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களில் யார் பெரியவர் என்ற வாதம் முற்றி அதை வெளிப்படுத்தும் விதமாக தெய்வீக நாகமான ஆதிசேஷன் மேருமலையை முற்றிலுமாக சுற்றி அணைத்துக் கொண்டு அதை தூக்கிக் கொண்டு செல்லுமாறு வாய் பகவானிடம் கூறிற்று. வாய் பகவானும்அந்த மலையை தூக்க முயல பயங்கரமாக மலையை சுற்றி இருந்த ஆதிஷேஷனின் உடலை அசைக்கத் துவங்க அண்டமே நடுங்கலாயிற்று. உடனே தேவர்கள் அனைவரும் தெய்வீக நாகமான ஆதிசேஷனிடம் சென்று அந்த மலையில் சிறு இடைவெளியை தந்து வாயுபகவானின் பலத்தைக் காட்ட வழிதருமாறு வேண்டிக் கொள்ள மேரு மலையின் சிறு பகுதியை காட்டியபடி தமது உடலை ஆதிசேஷனாரும் சுற்றி இருக்க வாய் பகவான் அந்த மலையை அப்படியே தூக்கிக் கொண்டு சென்றபோது அதில் இருந்து சிறு பாகம் தற்போது மதுவனேஸ்வரர் ஆலயம் இருந்த அடர்ந்த வனப்பகுதியில் விழுந்து சிறு மலைமுகட்டை ஏற்படுத்தியதாம். அங்கு உடனடியாக சிவபெருமானும் ஸ்வயம்புவாக வந்தமர்ந்தாராம். சிவபெருமானே வேண்டும் என்றே வாய் பகவான் மற்றும் தெய்வீக நாகமான ஆதிசேஷனின் போட்டியை நடத்தி அங்கு சோழன் மன்னன் மூலம் மதுவனேஸ்வரர் ஆலயம் அமைக்க வழி வகுத்தார் என்பது பண்டிதர்களின் கருத்தாகும்.

திருவாரூர் மாவட்டத்தின் கும்பகோணம் மற்றும் மாயவரத்தில் இடைப் பகுதியில் உள்ளதே நன்னிலம் எனும் சிற்றூர். நன்னிலம் என்றால் நல்ல நிலம் அல்லது நல்லதைத் தரும் நிலம் என்று பொருள்படும். அங்குள்ள மதுவனேஸ்வரர் ஆலயம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முற்பட்ட ஆலயம் என்று கூறுகின்றார்கள். குன்றின் மீதும், கீழுமாக ஆலயம் அமைந்து அமைந்து உள்ளதினால் இதை மாடக் கோவில் என்று அழைக்கின்றார்கள். முடிகொண்டான் ஆற்றின் தென்கரையில் சோழ மன்னன் கோச்செங்கட்சோழன் என்பவர் அமைந்துள்ள ஆலயம் இது.

இரண்டு ராஜகோபுரத்தைக் கொண்ட ஆலயத்தில் நுழைந்தவுடன் வெளிப் பிராகாரத்தில் காணப்படுவதே பிரம்மபுரீஸ்வரர் சன்னதி. அதில் காணப்படுவது பகவான் பிரும்மா ஸ்தாபித்ததாகக் கூறப்படும் பெரிய சிவலிங்கம் ஆகும். அந்த சிவலிங்கத்தை பகவான் பிரும்மா ஸ்தாபித்ததினால் அதை பிரம்மபுரீஸ்வரர் என்கின்றார்கள். அந்த சன்னதியை ஒட்டினாற்போல் அகத்தியர் வழிபட்ட அகத்தீஸ்வரர் சன்னதி உள்ளது. ஆலயம் மேலும் கீழுமாக குன்றின் மீது இரு பகுதிகளாக உள்ளதினால் கீழ்ப் பகுதியில் சித்தி வினாயக பெருமான் , முருகப் பெருமான் , தேவி மகாலட்சுமி, சண்டிகேஸ்வர பகவான் , சனீஸ்வர பகவான், பைரவ பகவான், சூரிய பகவான் மற்றும் , நவகிரகங்களுக்கு தனியே சன்னதிகள் உள்ளன.

பிரம்மபுரீஸ்வரர் சன்னதியை ஒட்டினாற்போல அமைக்கப்பட்டு உள்ள படிகளில் ஏறிச் சென்றால் குன்றின் மேல் பகுதியில் பகவான் மதுவனேஸ்வரர் மற்றும் தேவி மதுவனேஸ்வரியின் சன்னதியைக் காண முடியும். குன்றின் மீது சோமாஸ்கந்தர் சன்னதியும் உள்ளது. கிழக்கு நோக்கி பார்த்தபடி இங்குள்ள சன்னதியில் அமர்ந்துள்ள பகவான் மதுவனேஸ்வரர் ஸ்வயம்புவாக அவதரித்தவர் என்கின்றார்கள். இந்த ஆலயத்தின் தேவ தீர்த்தத்தில் மாசி மாதம் (பிப்ருவரி) நீராடி வணங்க துன்பங்கள் நீங்கும் என்றும், பிரதோஷ காலங்களில் வழிபட்டால் செல்வம் பெருகும் என்றும் இந்த ஆலயத்து தல புராணம் கூறுகின்றது.

கிருதா யுகத்தில் பிருஹத்ராஜன் என்ற மன்னன் செய்த தவப்பயனாக சிவபெருமான் இத்தலத்தில் தேஜோ லிங்கமாய் காட்சி தந்ததும் அல்லாமல் அவரது கோரிக்கைக்கு இணங்கி ஆலயத்தின் வடக்குப் பக்கத்தில் தனது சூலாயுதத்தால் ஒரு குளத்தை உருவாக்கி, தன் தலையில் இருந்து வெளிவந்த கங்கை நீரை அதில் நிறப்பினாராம். தேஜோ லிங்கம் என்பது ஜோதி வடிவிலான தோற்றம் ஆகும்.

நன்னிலத்தில் உள்ள மதுவனேஸ்வர் ஆலயத்தின் கதை திருச்சியில் உள்ள திருவானைக்காவில் ஆலயத்துடன் ஒரு வகையில் ஒட்டியது ஆகும். புராணக் காலத்தில் இரண்டு சிவ கணங்கள் கைலாசத்தில் சிவபெருமானுக்கு சேவை செய்தபடி இருந்தன. அவை இரண்டும் ஒன்றுடன் ஒன்று ஏதாவது ஒரு வகையில் சண்டை போட்டபடியே இருந்து வந்தன. அவர்கள் இருவருமே சிவபெருமானுக்கு சேவை செய்வதில் போட்டி போட்டுக் கொண்டு இருந்ததினால் இருவருக்கும் போட்டியும் பொறாமையும் இருந்தது. ஒருநாள் அவர்கள் இடையே ஏற்பட்ட சண்டையில் ஒருவருக்கு ஒருவர் சாபம் கொடுத்துக் கொண்டார்கள். அதன்படி அவர்கள் இருவருமே அடுத்த பிறவியில் சிலந்தி மற்றும் யானையாக திருவானைக்காவல் ஆலய பகுதியில் பிறவி எடுத்து ஒரு நாவல் மரத்தடியில் இருந்த சிவலிங்கத்தின் அருகில் இருந்தன. சிவலிங்கத்தின் மேல் பகுதியில் சிலந்தி இருக்க, யானையோ சிவலிங்கத்தின் அருகில் வசித்து வந்தது. சிவலிங்கத்தின் மேல் மரத்தின் காய்ந்த சருகுகள் விழாமல் சிலந்தி வலைக் கட்டி பாதுகாக்க, யானையோ காவிரியில் இருந்து தன் துதிக்கை மூலம் நீரும் பூவும் கொண்டு வந்து வழிபட்டது. ஆனால் காய்ந்த இலைகள் மற்றும் சருகுகள் கிடந்த சிலந்தி வலையை அசிங்கமாகக் கருதி யானை தினமும் அதன் மீது தண்ணீரை பீச்சியடித்து அதை அழித்து விட்டுச் செல்லும். ஆனால் அந்த சிலந்தியோ மீண்டும் மீண்டும் வலை பின்னி வழிபாட்டைத் தொடரும். இப்படியாக தினந்தோறும் யானையின் தொந்தரவு தொடர்வதைக் கண்டு கோபமுற்ற சிலந்தி, அந்த யானையின் துதிக்கையில் புகுந்து கொண்டு போராட கடைசியில் இரண்டும் மடிந்தன. சாப விமோச்சனம் பெற்ற அவை இரண்டும் மீண்டும் தேவ கணங்களாயின. ஆனால் அந்த சிலந்தியோ மீண்டும் ஒரு பிறவி எடுத்து பூமியில் கோச்செங்கட் சோழன் என்ற அரசனாகப் பிறந்தது. பெரும் சிவ பக்தனான அந்த மன்னனின் ஆட்சி காலத்தில் அவன் எழுபதுக்கும் மேற்பட்ட மாடக்கோவில்களை நிர்மாணித்தார். ஆனால் பூர்வ ஜென்ம உணர்வினால் அவருக்கு யானைகள் மீது ஈர்ப்பு இல்லாமல் இருந்ததினால் அவர் கட்டிய ஆலயங்கள் அனைத்தையுமே பூமிக்கு மேல் மாடிப் பகுதியில், யானைகள் ஏறிச் செல்ல இயலாத வகையில் குறுகிய படிகளில் ஏறிச் சென்று தரிசிக்கும் வகையில் அமைத்தான். ஆகவே அந்த ஆலயங்கள் மாடக் கோவில்கள் என அழைக்கப்பட்டன. நன்னில கிராமத்தில் உள்ள மதுவனேஸ்வரர் திருக்கோவிலும் அந்த கோச்செங்கட் சோழன் கட்டிய ஒரு மாடக் கோவில் ஆகும்.

இந்த ஆலயம் குறித்த இரண்டு கதைகள் சுவையானவை. அதில் முதல் கதை இது. துவாபர யுகத்தில் விஸ்வரூபன் எனும் கொடிய அசுரன் தேவர்களை கொடுமைப்படுத்தி வந்தான். அதனால் கோபமுற்ற தேவேந்திரன் அவனுடன் யுத்தம் செய்து அவனைக் கொன்றார். ஆகவே விஸ்வரூபனின் தந்தையான துவிஷ்டா எனும் முனிவர் ஒரு யாகம் செய்து அந்த தீயில் இருந்து இன்னொரு மகனை வெளிவரச் செய்து இந்திரனுடன் போர் புரிந்து தேவேந்திரனை அழிக்க ஏற்பாடு செய்தார். அவனே விருத்திராசூரன் என்பவன் ஆவான். முற் பிறவியில் தேவகணமாக இருந்து விஷ்ணு பகவானுக்கு சேவை செய்து கொண்டு இருந்த விருத்திராசூரன் ஒரு சமயத்தில் சிவபெருமானின் மனைவியான பார்வதி தேவி கொடுத்த சாபத்தினால் அடுத்த ஜென்மத்தில் அசுர குலத்தில் விருத்திராசூரன் எனும் பெயரில் பிறப்பு எடுக்க வேண்டி இருந்தது. இயற்கையிலேயே தேவர்கள் மீது துவேஷம் கொண்டு யாக குண்டத்தில் இருந்து பிறந்த அசுரன் என்றாலும் முன்ஜென்ம புண்ணியத்தினால் விஷ்ணு பகவான் மீது இந்த ஜென்மத்திலும் இறை பக்தி கொண்டிருந்தவன். அதே நேரத்தில் தேவலோகத்தில் தேவேந்திரரும் சில தவற்றை செய்து வந்தார். அதனால் பல தேவ முனிவர்களும், தேவர்களும் இந்திர லோகத்தை விட்டு வெளியேறத் துவங்க தேவேந்திரனின் பலம் குறைந்தது. அந்த தருணத்தையே எதிர்பார்த்துக் காத்திருந்த விருத்திராசுரன் தேவேந்திரனை தாக்கி அழிக்கத் துவங்கினான். அவனது பலத்துக்கு ஈடு கொடுக்க முடியாத தேவேந்திரன் திணறத் துவங்க தேவர்கள் உயிருக்கு பயந்து ஓடி சிவபெருமானிடம் சென்று தமக்கு பாதுகாப்பு தருமாறு வேண்டினார்கள்.

சிவபெருமானும் அவர்களிடம் கூறினார் ‘தேவர்களே விருத்திராசூரன் மரணம் அடையும் தருமணம் இன்னும் வரவில்லை. அவன் தக்க நேரத்தில் விஷ்ணு பகவானின் அருளினால் கொல்லப்படுவான். அதுவரை நீங்கள் அனைவரும் தேனிகளாக மாறி அருகில் உள்ள வனத்தில் குடியேறுங்கள். அங்கு எனக்கு தேன் அபிஷேகம் செய்து பூஜித்து வரும் காலத்தில் விருத்திராசுரனுடைய அழிவும் நடைபெறும்’

தேவர்கள் உடனடியாக தம்மை தேனீக்களாக்கிக் கொண்டு நன்னிலத்தில் தற்போது மதுவனேஸ்வரர் ஆலயம் உள்ள இடத்தில் இருந்த பெரிய வனத்தில் குடியேறினார்கள். அங்கு ஸ்வயம்புவாக அவதரித்து இருந்த சிவலிங்கத்தின் மீது கூடு கட்டிக் கொண்டு அதில் இருந்து தேனை சிவலிங்கத்தின் மீது கொட்ட வைத்து அபிஷேகம் செய்து வழிபட்டார்கள்.

வருடங்கள் ஓடின. விருத்திராசுரனுக்கும் பகவான் இந்திரனுக்கும் இடையிலான போர் ஓயவில்லை, தொடர்ந்து கொண்டே இருந்தது. ஆகவே அதனால் மனம் வெறுப்புற்ற விருத்திராசூரனுக்கு மனதில் இறைவீக எண்ணம் தோன்றத் துவங்கியது. அதுவே அவனை அழிக்க தக்க திருமணம் என்பதை உணர்ந்து கொண்ட விஷ்ணு பகவான் உடனடியாக தாதிஸீ முனிவரின் உடல் எலும்பை பெற்றுக் கொண்டு வந்து அதில் ஆயுதம் செய்து அவனைக் கொல்லுமாறு தேவேந்திரனுக்கு ஆணையிட, அவரும் அதை போலவே தாதிஸீ முனிவரின் எலும்பை பெற்றுக் கொண்டு வந்து விருத்திராசுரனைக் கொன்றார். அதைக் கண்ட தேவர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்து வெற்றியைக் கொண்டாடி சிவபெருமான் தமக்கு காட்சி தாது தம்மை ஆசிர்வதிக்க வேண்டும் என வேண்டினார்கள். அவர்களது வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சிவபெருமானும் அவர்களுக்கு மதுவனேஸ்வரர் எனும் உருவில் அந்தக் காட்டில் காட்சி தந்ததும் அல்லாமல் தனது துணைவியையும் மதுவனேஸ்வரியாக காட்சி தர வைத்து தேனீக்களாக இருந்த தேவர்களை ஆசிர்வதிக்க அவர்கள் தமது பழைய உருவை அடைந்து மகிழ்ச்சியோடு தமது இருப்பிடங்களுக்கு திரும்பிச் சென்றார்கள்.

அங்குள்ள தேனிக்கள் சிவபெருமானுக்கு தேன் அபிஷேகம் செய்து பூஜிப்பதாக நம்பிக்கை உள்ளதினால் அந்த ஆலய வளாகத்துக்குள் உள்ள தேனீக்களை எவரும் விரட்டுவதில்லையாம். அதை போலவே விருத்திராசுரனை அழித்ததினால் ஏற்பட்ட பிரும்மஹத்தி தோஷத்தைக் களைந்து கொள்ள தேவேந்திரன் சிவபெருமான் ஸ்வயம்புவாக அவதரித்து இருந்த பல ஆலயங்களுக்கும் சென்று அவரை வழிபட்டபோது இந்த ஆலயத்துக்கும் வந்து சிவபெருமானை வழிபட்டதாகவும் இறுதியாக தேவேந்திரனுக்கு இந்த ஆலயத்தில் இருந்து சில மைல் தொலைவில் இங்கிருந்த வனத்தின் தொடர்ச்சியான வனப் பகுதியில் இருந்த ஆரண்யேஸ்வரர் ஆலயத்தில் அந்த தோஷம் தொலைந்ததாக வரலாறு கூறப்படுகின்றது.

தேவர்கள் தேனீக்கள் வடிவம் கொண்டு இங்கு தங்கி இறைவனை வழிபாட்டு வந்திருந்ததினால்தான் இந்த ஆலயத்தின் பெயரும் மதுவனேஸ்வரர் என்று ஆயிற்று. மது என்றால் தேன் என்பது அர்த்தம். அவருடைய நாயகியான பார்வதி தேவியும் இங்கு குடியேறி மதுவனநாயகி எனும் பெயரைப் பெற்றாள். இன்னொரு ஐதீகம் என்ன என்றால் தேனீக்கள் உருவில் அங்கிருந்த தேவர்களுடைய தேனீக்களை போன்ற ரீங்காரம் தேனீக்களின் சப்தம் அல்லவாம். தேனிக்களின் ரீங்கார ஒலியானது தேவர்கள் நான்கு வேதங்களையும் ஓதிக்கொண்டு இருக்கும் சப்தமாம். அதனால் இந்த ஆலய சன்னதியில் வழிபடும் காலத்தில் நம் உடல் அந்த வேத ஒலிகளின் ஓசைகளை ஈர்ப்பதினால் பல பாபங்களை தொலைந்து கொள்வதாக ஐதீகம் உண்டு.

இந்த ஆலயம் இங்கு எழுந்ததற்கான இரண்டாவது கதை இது. தேவர்கள் தேனீக்களாகி வாழ்ந்த துவாபர யுகத்திற்கு முன்னால் திரேதா யுகத்தில் நடைபெற்றதாக கூறப்படும் கதை இது. திரேதா யுகத்தில் ஒருமுறை வாய் பகவானுக்கும், தெய்வீக நாகமான ஆதிசேஷனுக்கும் ஒரு பெரிய வாக்குவாதம் ஏற்பட்டது. அவர்களில் யார் பெரியவர் என்ற வாதம் முற்றி அதை வெளிப்படுத்தும் விதமாக தெய்வீக நாகமான ஆதிசேஷன் மேருமலையை முற்றிலுமாக சுற்றி அணைத்துக் கொண்டு அதை தூக்கிக் கொண்டு செல்லுமாறு வாய் பகவானிடம் கூறிற்று. வாய் பகவானும்அந்த மலையை தூக்க முயல பயங்கரமாக மலையை சுற்றி இருந்த ஆதிஷேஷனின் உடலை அசைக்கத் துவங்க அண்டமே நடுங்கலாயிற்று. உடனே தேவர்கள் அனைவரும் தெய்வீக நாகமான ஆதிசேஷனிடம் சென்று அந்த மலையில் சிறு இடைவெளியை தந்து வாயுபகவானின் பலத்தைக் காட்ட வழிதருமாறு வேண்டிக் கொள்ள மேரு மலையின் சிறு பகுதியை காட்டியபடி தமது உடலை ஆதிசேஷனாரும் சுற்றி இருக்க வாய் பகவான் அந்த மலையை அப்படியே தூக்கிக் கொண்டு சென்றபோது அதில் இருந்து சிறு பாகம் தற்போது மதுவனேஸ்வரர் ஆலயம் இருந்த அடர்ந்த வனப்பகுதியில் விழுந்து சிறு மலைமுகட்டை ஏற்படுத்தியதாம். அங்கு உடனடியாக சிவபெருமானும் ஸ்வயம்புவாக வந்தமர்ந்தாராம். சிவபெருமானே வேண்டும் என்றே வாய் பகவான் மற்றும் தெய்வீக நாகமான ஆதிசேஷனின் போட்டியை நடத்தி அங்கு சோழன் மன்னன் மூலம் மதுவனேஸ்வரர் ஆலயம் அமைக்க வழி வகுத்தார் என்பது பண்டிதர்களின் கருத்தாகும்.

ஆலயத்தின் சில படங்கள்