தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் இருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருவிசைநல்லூர் எனும் சின்ன கிராமத்தில் உள்ளது ஆயிரம் ஆண்டுகள் பழமையான சதுர்கால பைரவர் ஆலயம். இதை சிவயோகிநாதர் ஆலயம் என்றும் யோகநந்தீஸ்வரர் ஆலயம் என்றும் சிலர் கூறுகிறார்கள். ஆலயம் தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தின் பராமரிப்பில் உள்ளது. இங்குள்ள மூலவர் சிவயோகநாதர் என்றாலும் நான்கு யுகங்களுக்கு அதிபதியாக அவரே நியமித்த தனது அவதாரமான பைரவருக்கே இங்கு அதிக முக்கியத்துவம் தர வேண்டும் என சிவபெருமான் எண்ணியத்தினால் இங்கு பகவான் பைரவர் நான்கு யுகத்தின் தோற்றத்தில் சதுர்முக பைரவராக காட்சி தருகிறார். இந்த ஆலயத்துக்கு வந்து சிவபெருமானை வழிபட்டப் பின் சதுர்கால (நான்கு யுக) பைரவர்களை வணங்கித் துதிக்காவிடில் பக்தர்களது கோரிக்கை நிறைவேறாது என்பது நம்பிக்கை ஆகும். இந்த ஆலய வரலாறு சுவையானது.
முன்னொரு காலத்தில் இந்த ஆலயம் உள்ள பகுதியில் சத்ய யுகத்தில் ஒரு நல்ல பண்டிதர் வாழ்ந்திருந்தார். சதா காலமும் சிவபெருமானின் நாமத்தை உச்சரித்து வந்தவண்ணம் இருந்த பெரும் சிவபக்தராக அவர் இருந்தாலும், கொடுமையானவர், யாருக்கும் ஒரு பைசா கூட தானம் செய்யாதவர். அவர் தவறு செய்யும்போதும் கூட சிவபெருமானின் நாமத்தை உச்சரித்தபடி இருப்பார். அப்படிப்பட்டவர் ஒருமுறை பரம ஏழை பிராமணர் ஒருவர் இவரிடம் வந்து யாசகம் கேட்டபோது அவரை துரத்தியது மட்டும் அல்லாமல் அடித்து உதைத்தார். அவர் அடித்த அடியில் அந்த ஏழை பிராமணர் மரணம் அடைந்து விட்டார். ஆனாலும் ஆத்திரம் அடங்காத பண்டிதர் அவரை ஒரு கயிற்றில் கட்டி தெருவழியே இழுத்துச் சென்று ஊர் எல்லையில் போட்டுவிட்டு திரும்பினார். வெகு காலத்துக்குப் பிறகு அந்த பண்டிதர் மரணம் அடையும் நிலைக்கு சென்றதும், சிவபெருமானின் நாமத்தை உச்சரித்தபடியே இருந்ததினால் அவர் மரணம் அடைந்ததும் அவர் உயிரை சிவலோகத்துக்கு அழைத்துச் செல்ல சிவகணங்கள் வந்தார்கள். அப்படிப்பட்ட பெருமைக்கு கொண்டவராக அவர் இருந்தார்.
அதே நேரத்தில் பல தீங்குகளை வாழ்க்கையில் செய்திருந்த அந்த உயிருக்கு கடுமையான சித்திரவதையுடன் கூடிய தண்டனைக்கு கொடுக்க எண்ணிய யமலோக கணங்கள் அவரை பிடித்துச் செல்ல வந்தார்கள். ஆனால் அங்கிருந்த சிவகணங்கள் அவர்களுடன் சண்டை இட்டு அவர்களை அடித்து துரத்தினார்கள். ஆகவே எம கணங்கள் எம தர்மராஜரிடம் சென்று தமக்கு ஏற்படுத்த அவமானத்தைக் கூற கோபமுற்ற எமராஜர் தானே நேரில் சென்று அந்த உயிரை சிவகணங்களிடம் இருந்து பறித்துக் கொண்டு சித்திரவதை லோகத்துக்கு அந்த உயிரை இழுத்துச் செல்லலானார். யமராஜரின் பலத்துக்கு ஈடு கொடுக்க முடியாத சிவகணங்கள் ஓடோடிச் சென்று தெய்வீக மாடான நந்திதேவரிடம் முறையிட தெய்வீக மாடு உருவத்தில் இருந்த நந்தி தேவர் கோபமுற்றார். சிலிர்த்தெழுந்தவர் உடனே அங்கிருந்து கிளம்பிச் சென்று யமராஜரை தடுத்து நிறுத்தி அவருடன் யுத்தம் செய்து அவரை கீழே தள்ளி தனது கால் குழம்பினால் அழுத்த யமராஜர் அவருடன் சண்டை போட பலம் இன்றி மூர்ச்சையானார்.
தூரத்தில் நின்றவாறு பயந்தவண்ணம் அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்த தேவகணங்கள் யமராஜர் மரணம் அடைந்து விட்டால் பூலோகத்தில் மரணமே நிகழாமல் மேலும் மேலும் உயிரினங்கள் தோன்றிக் கொண்டே இருந்து உலகையே அழித்து விடும் என அச்சம் கொண்டு சிவபெருமானிடம் ஓடிச் சென்று நிலைமையைக் கூற, கருணை கொண்ட சிவபெருமானும் உடனே அவர்களுடன் அந்த இடத்துக்கு சென்று, கோபமுற்ற தெய்வீக மாடான நந்தி தேவரின் கோபத்தை குளிரச் செய்து யமராஜரைக் காப்பாற்றினார்.
இன்னொரு கதையின்படி ஒருமுறை ஏற்பட்ட சாபத்தினால் பிரும்ம தேவர் பூமியில் ஒரு மஹாயோகியின் புதல்வராகப் பிறக்க வேண்டி இருந்தது. அந்த யோகி எப்போதும் தன்னுடன் ஆறு சிஷ்யர்களை வைத்துக் கொண்டு தான் செல்லும் இடத்துக்கெல்லாம் அவர்களையும் அழைத்துச் செல்லலானார். அந்த யோகி மாபெரும் சிவபக்தர். இன்னொரு கதையின்படி அந்த ஆறுபேரும் பிரும்மாவும், அவருடன் பிறந்த குழந்தைகள் ஆவார் என்று கூறுகிறது. எது எப்படியோ, ஆறு சிஷ்யர்களுடன் அந்த யோகி அனைத்து இடங்களுக்கும் சென்றவாறு இருந்தார். ஒருநாள் சிவபெருமானின் நேரடி தரிசனத்தைக் காண விரும்பிய அந்த யோகி பெரும் தவத்தை மேற்கொண்டார். அவருடன் அவரது சீடர்களும் தவத்தில் அமர்ந்து கொண்டார்கள். அந்த தவத்தினால் உலகமே தகிக்கலாயிற்று. உயிரினங்கள் அழியத் துவங்கின. அதனால் கவலைக்கு கொண்ட தேவர்கள் சிவபெருமானிடம் சென்று முறையிட அவரும் அங்கு சென்று தனது தலை முடியில் இருந்த கங்கை நதியை அவர்கள் மீது பாயச் செய்து அவர்களது தவத்தின் வெப்பத்தை தணித்து அவர்கள் முன் காட்சி தந்தார். அது மட்டும் அல்ல அவர்களது தவத்தின் வலிமையை பாராட்டி அவர்களை தன்னுள் இழுத்துக் கொண்டு அங்கேயே ஒரு சிவலிங்க உருவில் அமர்ந்து கொண்டார். அந்த சிவலிங்கமே சிவயோகிநாதர் ஆலயத்தில் உள்ள சிவலிங்கம் ஆகும். அவர்களை அவருக்குள் இழுத்துக் கொண்டதின் அடையாளமாக அந்த சிவலிங்கத்தில் தலை பகுதியில் ஏழு முடிகள் போன்ற தோற்றம் காணப்படுகின்றது ஒரு அதிசயம் ஆகும். அந்த சிவ யோகிகளை சிவபெருமான் தன்னுள் அடக்கிக் கொண்டு அங்கேயே ஆலயத்தில் அமர்ந்து கொண்டதினால் அந்த ஆலய மூல மூர்த்தியை சிவலோகநாதர் என அழைக்கின்றார்கள். நடந்த அந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் மாமுனிவரான அகஸ்திய முனிவர் அங்கிருந்து பார்த்ததாக நம்பிக்கை உள்ளது.
அங்கு சிவலிங்க உருவில் தன்னை பிரதிஷ்டை செய்து கொண்ட சிவபெருமான், அனைவரிடமும் தான் சத்ய யுகத்தில் புராதனீஸ்வரர் எனவும், த்ரேதா யுகத்தில் வில்வரானேஸ்வரர் எனவும், துவாபர யுகத்தில் யோகனந்தீஸ்வரர் எனவும் கலி யுகத்தில் சிவயோகிநாதர் எனவும் தோற்றம் தர உள்ளதாகவும் கூறி விட்டு மறைந்தார். சத்ய யுகத்தில் தோன்றிய இந்த ஆலயம் அது முதல் இன்றளவும் நான்கு யுகங்களிலும் இருந்து வருவதில் இருந்தே அனைத்து ஆலயங்களை விட அதன் மேன்மை மிக அபாரமானது என்பதை புரிந்து கொள்ள முடியும்.
திருவிசைனல்லூர் ஆலயத்தில் எழுந்தருளிய சிவபெருமான், சிவகணங்களுக்கு எதிராக யுத்தம் புரிந்த யமராஜரை துரத்தி அடித்த தெய்வீக மாடான நந்தி தேவர் அமர்ந்துள்ளதால் அதற்க்கு பெருமை தரும் விதமாக மாட்டின் உருவான ரிஷப ராசிக்காரர்கள் அந்த ஆலயத்தில் வந்து வழிபட்டால் அவர்களது அனைத்து பூர்வ ஜென்ம பாபங்கள் அனைத்தும் அதுவே ரிஷப ராசியினரின் பரிகாலஸ்தலமாகும் என்றும் அருள் புரிந்தார்.
இங்குள்ள ஆலயத்தின் இன்னொரு சிறப்பு என்ன என்றால் தெய்வீக மாடான நந்தியின் முகம் நேராக இல்லாமல் வேறு பக்கத்தை நோக்கி சற்றே திரும்பிய நிலையில் காணப்படுவதாகும். இதற்கான ஒரு வாய்மொழிக் கதையும் உள்ளது. முதலில் கூறிய கதையில் வரும் பண்டிதர் தனக்கு மரண வேளை வந்துவிட்டதை உணர்ந்தார். எம கணங்கள் தன்னை நோக்கி வந்து கொண்டு இருந்ததையும் கண்டவர் சிவபெருமானே ….சிவபெருமானே எனக் கதறியவாறு சிவபெருமான் இளைப்பாறிக் கொண்டு இருந்த இந்த இடத்துக்கு ஓடிவந்தார். சிவபெருமான் பல நேரங்களில் இந்த ஆலயம் உள்ள இடத்திற்கு வந்து ஒய்வு எடுப்பது வழக்கம் என்பதையும், அப்போது தெய்வீக மாடான நந்தி தேவர் அவருக்கு காவலாக அமர்ந்திருப்பார் என்பதையும், அவர்கள் எவருடைய கண்களுக்கும் புலப்படாத நிலையில் அங்கு இருப்பார்கள் என்பதையும் அந்த பண்டிதர் அறிந்து இருந்தார். ஆகவேதான் இங்கு ஓடி வந்தார். அவர் சப்தத்தைக் கேட்ட தெய்வீக மாடான நந்தி தேவர் சற்றே தலையை திருப்பி குரல் வந்த திசையை நோக்கி பார்க்க அந்த பண்டிதர் மரணம் அடைந்து விழுந்தார்.
பண்டிதர் குரல் வந்த திசையை நோக்கி தெய்வீக மாடான நந்தி தேவர் பார்த்த பிறகே சிவகணங்களும், எம கணங்களும் எம தேவரும் தெய்வீக மாடான நந்தி தேவரும் சண்டை இட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்த நிலையில் பல ஆயிரம் வருடங்களுக்குப் பிறகு இந்த ஆலயம் எழும்பியபோது சிவபெருமான் ஸ்வயம்புவாக சிவலிங்க உருவில் அமர, தெய்வீக மாடான நந்தி தேவரும் எம பயம் நீக்கும் நிகழ்ச்சியை எடுத்துக் காட்டும் விதத்தில் தன் தலையை சற்றே திரும்பிய நிலையில் இங்கு காட்சி தந்தார்.
பகவான் சிவபெருமான் தனது வாகனமான தெய்வீக மாடான நந்தி தேவருடன் அந்த ஆலயத்தில் அமர்ந்தவுடன் தேவ கணங்களின் வேண்டுகோளின்படி தனது முக்கியமான அவதாரமான பகவான் பைரவரை அழைத்து வாழ்க்கையின் நான்கு நிலைகளையும் – குழந்தை, இளைஞர், திருமணமானவர் மற்றும் முதியவராக – எடுத்துக் காட்டும் விதத்திலும் (இதே நிலையில் சிவபெருமானே மத்யப் பிரதேசத்தின் மன்சூர் எனும் கிராமத்தில் பசுபதிநாதர் ஆலயத்தில் காணப்படுகின்றார்), அதே நேரத்தில் நான்கு யுகங்களிலும் நான்கு குணங்களைக் கொண்ட பகவான் பைரவராக காட்சி தந்து கொண்டு இருக்க வேண்டும் என்றும், அந்த நிலையில் அங்கு வருகை தரும் பக்தர்களை தன் சார்பில் காத்தருள வேண்டும் எனவும் கூற பகவான் பைரவரும் அங்கு சதுர்க்கால பைரவர் அதாவது நான்கு காலங்களை ஆளும் பகவான் பைரவராக அங்கு வந்து அமர்ந்து கொள்ள பகவான் சிவபெருமானும் அவருக்கு அவை அனைத்துக்கும் தேவையான சக்திகளையும் அளித்தார். இப்படியாக அங்குள்ள பகவான் பைரவர் ஞான பைரவர் ரூபத்தில் கல்வி மற்றும் வேலை வாய்ப்பைக் கொடுப்பவராகவும், ஸ்வர்ணகட்ஷ பைரவர் ரூபத்தில் செல்வம் மற்றும் அனைத்து பொருட்களை தருபவராகவும், உன்மத்த பைரவர் ரூபத்தில் வளமான வாழ்க்கை மற்றும் சீரான உடல் நலம் தருபவராகவும், முடிவாக மோட்ஷத்தைத் தரும் யோக பைரவராகவும் காட்சி தருகிறார். இந்த ஆலயத்தை பகவான் பைரவருக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அமைந்திருக்குமாறு பகவான் சிவபெருமான் ஆணையிட்டு இருந்ததினால் இந்த ஆலயம் சதுர் கால பைரவர் என்றே அழைக்கப்பட்டு பெருமை பெறுகின்றது.
இங்குள்ள தெய்வீக மாடான நந்தி தேவரின் சிலை ஆலயத்தின் கொடி மரத்தின் முன்பாகவே அமைந்துள்ளது இன்னொரு அதிசயம் ஆகும். எந்த ஒரு ஆலயத்திலும் மூலவர் முன் அமர்ந்துள்ள தெய்வீக மாடான நந்தி தேவர் கொடி மரத்துக்கு அடுத்து மூலவரை நோக்கிய நிலையில்தான் அமர்ந்து இருப்பார். இதன் காரணம் எந்த இடத்தில் தெய்வீக மாடான நந்தி தேவர் தனது தலையை திருப்பிக் கொண்டு அமர்ந்திருந்தாரோ அங்கேயே தம்மை அவர் பிரதிஷ்டை செய்து கொண்டதாகக் கூறுகிறார்கள். கொடி மரம் மூலவரின் அறையில் இருந்து எத்தனை தூரத்தில், எங்கு அமைந்திருக்க வேண்டும் என்ற சாஸ்திர விதிமுறை உள்ளதினால் தெய்வீக மாடான நந்தி தேவர் தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருந்த இடத்தில் இருந்து அதன் பின்புறத்தில் கொடிமரத்தை அமைக்கவில்லை என்பதாக பண்டிதர் கூறினார்.
இந்த ஆலயத்தின் தெற்கு பக்கத்தில், 700 ஆண்டுகளுக்கு முற்பட்ட, வான்வெளி சாஸ்திர அடிப்படையில் ஒரு சோழ மன்னனால் அமைக்கப்பட்டு உள்ள ஒரு அதிசயமான கடிகாரம் உள்ளது. ஆறு முதல் ஆறு என்ற எண்களுடன் பன்னிரண்டு மணிநேரத்தை பிரித்து வைத்து உள்ள அந்த கடிகாரத்தில் மத்தியில் ஒரு சிறு இரும்பு தண்டு உள்ளது. நேரமாக நேரமாக நகர்ந்து கொண்டே இருக்கும் சூரிய ஒளி அந்த இரும்புத் தண்டின் மீது விழும்போது அந்த தண்டின் நிழல் அப்போது உள்ள நேரத்தை துல்லியமாகக் காட்டும். இது பெரிய அதிசயம் ஆகும்.
மற்ற சிவாலயங்களில் விஷ்ணு பகவான் தனியே காணப்படுவார். ஆனால் இங்குள்ள ஆலயத்திலோ தனி சன்னதியில் பகவான் லட்சுமி நாராயணன் எனும் பெயரில் அவர் தனது மனைவியான மஹாலஷ்மி தேவியுடன் சேர்ந்து காட்சி தருகிறார். பகவான் விஷ்ணு மஹாலக்ஷ்மியை திருமணம் செய்து கொள்வதற்கு முன்னதாக இங்கு வந்து தனது திருமணத்துக்கான ஆசிகளை சிவபெருமானிடம் இருந்து பெற்றுக் கொண்டு சென்றதாக பண்டைக்கால கதை உள்ளது. ஆகவேதான் பகவான் லட்சுமி நாராயணனை ஏகாதசி மற்றும் சனிக்கிழமைகளில் இங்கு வந்து வழிபட்டால் குழந்தைப் பேறு இல்லாதவர்களுக்கும் குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை ஆகும்.
ராமாயணக் கதையுடனும் இந்த ஆலயம் சம்மந்தம் கொண்டுள்ளது. சீதா தேவியை ராவணன் கவர்ந்து கொண்டு சென்றபோது அவனுடன் வானத்தில் யுத்தம் செய்த தெய்வீக பறவை ஜடாயுவின் ஒரு சிறகு இந்த ஆலயமுள்ள இடத்தில் விழுந்ததாகவும், அது விழுந்த வேகத்தில் பூமிக்குள் துளைத்துக் கொண்டு செல்ல பூமியின் உள் இருந்து வேகமாக நீர் அதன் வழியே பீறிட்டுக் கொண்டு வெளி வந்தது. அதன் பின் அதுவே பெரிய நீர்த்தேக்கமாக மாறியதாம். ஆகவே அதன் பெயர் ஜடாயு தீர்த்தம் என ஆயிற்று என்பதாகக் கூறுகிறார்கள்.
ஆலயத்தின் சில புகைப்படங்கள்
இந்த ஆலயம் பகவான் பைரவர் ஆலயம் என்பதைக் காட்டவோ என்னவோ ஆலயம் திறந்தவுடன் வாயிலில் எப்போதும் கூட்டமாக நாய்கள் அமர்ந்திருக்குமாம். பகவான் பைரவர் வாகனம் நாய்கள் அல்லவா.