
108) கிரேக்கியத்தின் அன்று பண்டிதர்களினால் கூறப்படும் பொதுவான கதை கருடபுராணத்தில் கருடாழ்வாருக்கு திருமால் கூறியதான கதையின் அடிப்படையில் அமைந்து உள்ளது. அந்தக் கதை இது : –

110) அனைத்து பிறவிகளிலும் மானிடப் பிறவியே சிறந்தது என்றாலும் மானிடனாக பிறந்தவர்களில் மண், பெண், பொன் ஆசை போன்றவற்றைக் கொண்டவர்கள், அதர்ம வழி நடந்து,சுயநலக்காரனாக இருந்து தீவினைகளைச் செய்தவர் போன்றவர்கள் நரகத்தை அடைகின்றனர். எனவேதான் கல்வியும், வித்தையும் கற்றவனையும் கூட முடிந்தால் ஞானத்தைப் பெற வேண்டும் என்பார்கள். அந்த ஞானமே தீமைகளை அழிக்க உதவுகின்றன. ஆனால் அந்த ஞானத்தைப் பெறுவதற்கு நன்மைகளை செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும்.
111) ஆகவேதான் பெரியவர்கள் கூறுவார்கள் பிறந்த ஒவ்வொருவரும் தமது வாழ்விலே நல்ல காரியங்களையும் புண்ணியக் காரியங்களையும் செய்தபடி இருக்க வேண்டும். ஒவ்வொரும் இந்த மானிட வாழ்வில் செய்த பாவ புண்ணியங்களே அவர்களது மரணத்துக்குப் பின்னும் அவர்களுடன் தொடர்ந்து செல்லும் என்பதே அதன் காரணம். எனவேதான் தான தர்மங்களைப் பக்தி சிரத்தையோடு செய்பவன் பெரும் நன்மையை அடைகிறான். உள்ளத் தூய்மையோடு, பக்தியுடன் தான தர்மங்கள் செய்வது, முக்திக்கு வழி வகுக்கும்.
112) தாம் பிறந்த பூமியிலே எத்தனை நாட்கள் வாழ்ந்திருந்தாலும் பிறந்தவர்கள் என்றாவது இறப்பது நிச்சயம், இந்த பூமியிலே பிறந்த எந்த ஜீவனுக்கும் அதன் உடல் நிலையானதல்ல என்பதை எவருமே நினைத்துப் பார்ப்பது இல்லை. இந்த பூமியிலே பிறந்து இறந்தவர்களது உயிர்களை பிடித்துக் செல்லும் எமன் யாரையும் விட மாட்டார் என்ற உண்மையை மனிதன் உணர்ந்து கொண்டால் அந்த பயத்திலாவது அறநெறிப்படி வாழ்ந்திடுவான். அவன் தர்மங்களை ஒழுங்காகச் செய்து வருவானாகில், அந்த நன்னெறிக் கர்மாக்களே அவனை இறந்த பின்னரும் காப்பாற்றும். தனக்குரிய கர்மங்களை எவன் ஒருவன் முறைப்படி செய்கிறானோ, அவனே எல்லா விதத்திலும் மேன்மையடைவான். பிறப்பே கர்ம வினையினால் உண்டானது என்பதினால் மீண்டும் இந்த பூமியிலே பிறவாமலிருக்க நல்ல காரியங்களையே செய்ய வேண்டும்.
113) ஒருவர் இறந்த பின் அவர்களது உடலில் உள்ள ஆத்மா கட்டை விரல் அளவுக்கு சுருங்கி அதற்கு கர்மா செய்து முடிக்கப்படும்வரை வான்வெளியில் மிதந்தவாறு இருக்கும். யமதர்ம ராஜன் ஒவ்வொருடைய ஆயுட்காலமும் முடிந்ததும் அந்த ஜீவனைப் பிடித்து வரும்படி மூன்று யமதூதர்களை அனுப்பி வைப்பார். அவர்களும் இறந்து போனவரது உடலில் இருந்து வெளியேறிய ஜீவனை யமதர்ம தேவர் முன் கொண்டு சென்று நிறுத்தியதும், யமதர்மரோ அவர்களது கணக்கு வழக்குகளை ஆராயுமாறு சித்ரகுப்தரிடம் கூறி விட்டு, மீண்டும் அந்த ஆத்மாவை பூமியிலே கொண்டு சென்று அந்த ஆத்மாவின் பங்காளிகள் செய்யும் பன்னிரண்டு நாட்கள் கர்மாவில் கலந்து கொள்ள வைத்தப் பின் தம்மிடம் அழைத்து வருமாறு தூதர்களிடம் கூறுவார். அந்த பன்னிரண்டாவது நாளன்று சித்ரகுப்தரிடம் இருந்து பாவ புண்ணிய கணக்குகள் யமராஜரிடம் வந்து விடும். அவற்றை ஆராய்ந்து பூமியிலே அந்த ஆத்மாவின் பங்காளிகள் செய்த கர்மாவின் பலனுக்கு ஏற்ப கணக்குகளை மாற்றி அமைத்துக் கொண்ட பின் அந்த ஜீவனை சொர்கத்துக்கோ அல்லது நரகத்துக்கோ அனுப்பி வைக்க முடிவு செய்வார்.
114) யமகிங்கர்கள் அனைத்து ஆத்மாவையும் ஒரே மாதிரி அழைத்துச் செல்வதில்லை. வேத சாஸ்திர புராணங்களை கற்றறிந்திருந்தவர்களின் ஆத்மாவை தேவ விமானத்தில் ஏற்றிக் கொண்டு தேவலோகத்துக்கு செல்வார்கள். தான தர்மங்களை செய்தவர்களின் ஆத்மாவை தேவகுதிரை மீது ஏற்றி தேவலோகத்துக்கு அழைத்துச் செல்வார்கள். சொர்கத்துக்கு செல்பவர்கள் வழி நெடுக தேவலோகத்தில் அங்குள்ள மனதுக்கு இதமான காட்சிகளைக் கண்டு மனம் மகிழ்வார்கள். தெய்வங்களைக் காண்பார்கள். அப்சரஸ்களையும் அவர்கள் ஆடும் அற்புதமான நடனங்களையும் கண்டு களிப்பார்கள்.

தேவலோகத்தில் வழி நெடுக மனதுக்கு இதமான
காட்சிகளைக் கண்டு மனம் மகிழ்வார்கள்
117) இறந்து போனவனின் ஜீவனோ அந்த உடலை விட்டு வெளியேறியதுமே மீண்டும் உடலுக்குள் நுழைய முடியாமல் போன நிலையில் அது வாழ்ந்த வீட்டின் வாயிலுக்குச் சென்று கதறிக் கொண்டு நிற்கும். கர்மா துவங்கி தகனமும் துவங்க தேகம் முழுவதும் எரிந்து சாம்பலானவுடன் ஜீவனுக்குப் பிண்டத்தாலான பிரேத சரீரம் உண்டாகும். அதையே பிரேத சரீரம் என்பார்கள்.
118) கர்மா தொடங்கிய நாள் முதல் இறந்தவர்களின் கர்த்தாக்கள் சடங்குகளை முறையோடு, பக்தி பூர்வமாக செய்ய வேண்டும். அப்படி செய்தால்தான் அந்த ஜீவனுக்கு நல்ல முக்தி கிடைக்கும். இறந்தவனின் மகன் அல்லது கர்மாவை செய்பவன் கல் ஊன்றிய நாள் முதல் ஒவ்வொரு நாளும் போடும் பிண்டத்தால் அடுத்த பன்னிரண்டு நாட்களில் அந்த ஜீவன் படிப்படியாக தனது பிரேத சரீரத்தை பெற்றுக் கொள்ளும்.
120) பிண்ட உருவைப் பெற்ற பதினொன்றாம் நாளிலும், பன்னிரண்டாம் நாளிலும் புத்திரனால் செய்யப்பட்ட கர்மாக்களின் மூலம் கொடுக்கப்பட்டவற்றை உண்டு பிரேத சரீரத்தை அடைந்த ஜீவனை, பதின்மூன்றாம் நாளன்று மறுபடியும் யமகிங்கரர்கள் யமலோகத்துக்கு இழுத்துச் செல்ல, அந்த ஜீவனோ பூமியை திரும்பித் திரும்பிப் பார்த்தவாறு அழுது கொண்டே யமலோகத்துக்குச் செல்லும். பயங்கரமான பாதையில் வாள் போன்ற இலைகள் கொண்ட செடி கொடிகள், கொதிக்கும் மணல் போடப்பட்டு இருக்கும் வழியில் அவை செல்ல வேண்டும்.
121) அந்த வழியில் அழைத்துச் செல்லப்படும் ஜீவனின் துன்பம் சொல்ல முடியாததாகும். அந்த ஜீவன் புலம்பிக் கொண்டே செல்லும். ‘வாழ்ந்து கொண்டு இருக்கையில் சர்வேஸ்வரன் இருக்கிறான் என்பதை உணரவில்லை, நன்றியை செய்தால் சொர்க்கம், தீமைகளை செய்தால் நரகம் என்பதை உணரவில்லை. அது தெரியாமல் சாது சன்யாசிகளை ஏளனம் செய்து அவமானப்படுத்தி இருக்கிறேனே. நல்ல செயல்களை செய்யவில்லை.ஏகாதசி விரதம் இருக்கவில்லை. அவற்றின் பயனை இப்போது அனுபவிக்கின்றேனே’ என்றெல்லாம் புலம்பியவாறு செல்லும் ஜீவனை யமகிங்கரர்கள் யமபுரிக்கு அழைத்துச் செல்வர்.

123) எந்த ஜீவனுக்கு கர்மாக்கள் முறையாக செய்யப்படவில்லையோ அந்த ஜீவன் யம தூதர்களால் பாசக் கயிற்றால் பிணைக்கப்பட்டு அவர்களிடம் வழி எங்கும் உதைப்பட்டுக் கொண்டு செல்லும். ஜீவன் தன் மனைவி மக்களுடன் உலகில் வாழ்ந்த காலத்தில் அடைந்த இன்பத்தை எண்ணி எண்ணி துன்பமுறும். தான் செய்த தவறுகளை, அதர்ம காரியங்களை நினைத்துக் கண்ணீர் வடிக்கும். தன்னால், தன் பொருளால் சுகத்தை அனுபவித்த மனைவி மக்கள் எவரும் தற்போது தன்னுடன் வரவில்லையே, மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு பொன்னையும் பொருளையும் சேர்த்தோம். இப்போது நாம் செய்த தவறினால் நரகத்துக்கு செல்கிறோமே என அலறித் துடிக்கும்.