சாந்திப்பிரியா                                                       

–  7

……..ஸ்ரீ ஒம்காரீஸ்வரர்  ஆலயம்

மூன்றாவது கதை என்ன என்றால் ஒருமுறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நடந்தபோது ஒம்காரேஸ்வரத்தில் நடந்த போரில் பாதாளத்தில் இருந்த சிவபெருமான் நர்மதை நதியின் உள்ளே இருந்து வெளியில் ஜ்யோதிர் லிங்க வடிவில் வெளி வந்து தேவர்களுக்கு அதிக சக்தியைத் தந்து அவர்களை வெற்றி பெற வைத்தாராம். அதனால்தான் ஒம்காரேஸ்வரர் ஜ்யோதிர் லிங்க ஆலயமாயிற்றாம்.

இங்குள்ள ஆலயம் ஐந்து தளங்களை (அடுக்குகளாக) கொண்டதாக இருக்க ஒவ்வொரு அடுக்கிலும் ஒவ்வொரு சிவலிங்க வடிவில் சிவபெருமான் காட்சி தருகிறார். அவை ஓம்காரேஸ்வர், மகாகாளேஸ்வர், சித்தேஸ்வர், கும்பேஸ்வர் மற்றும் த்வஜேஸ்வர் என்ற பெயரில் பூஜிக்கப்படுகின்றன.

ஓம்காரேஸ்வரர் ஆலயத்துக்கு செல்பவர்கள் அந்த மலையை சுற்றி ஓடும் நர்மதை ஆற்றில் ஒரு படகில் சவாரி செய்து பிரதர்ஷனம் செய்வார்கள். ஆலயத்துக்குச் செல்ல இரண்டு பாலங்களையும் அமைத்திருக்கிறார்கள். அதில் ஒன்று நேரடியாக மலை உச்சியில் உள்ள ஓம்காரேஸ்வரர் ஆலயத்துக்கு செல்லும் வகையில் இருக்க, பழைய பாலம் மூலம் செல்பவர்கள் மலை அடிவாரத்துக்குச் சென்று ஒவ்வொரு அடுக்கிலும் உள்ள சிவலிங்கத்தையும் தரிசித்தவாறு படிக்கட்டில் மேலே ஏறிச் செல்ல வேண்டும். இரண்டு பாலங்களுக்கும் இடையே உள்ள தூரமும் அதிகம், வழியும் வேறானதாகும்.இன்னும் இரண்டு கரைகளுக்கும் இடையே உள்ள நதியை படகு மூலம் கடந்து ஆலயத்துக்கு செல்கிறார்கள்.

பாதுகாப்பை முன்னிட்டு சிவலிங்கத்தின் முன்னால் தடுப்பு கம்பிக் கதவைப் போட்டு இருப்பதினால் அதன் இடுக்கு வழியேதான் சிவலிங்கத்தை தொட்டு வணங்கவும், அபிஷேக ஜலம் விடவும் முடிந்தது. மேலும் அதன் அருகில் செல்ல யாரையும் அனுமதிப்பது இல்லையாம். நாங்கள் விசேஷ ஏற்பாடு மூலம் சென்றதினால் மிக அருகில் இருந்து கூட்டம் இல்லாமல் ஜோதிர்லிங்கத்தை வணங்கி பூஜை செய்ய முடிந்தது. அதன் பின் அங்கிருந்துக் கிளம்பி மகேஸ்வர் எனும் இடத்துக்கு சென்றோம்.

ஆலயத்தின் படங்கள்
சன்னதியில் சிவலிங்கம்  
நேரடியாக மலை உச்சியில் உள்ள 
ஆலயத்துக்கு செல்லும் பாலம் 
படகு மூலம் நதியைக் கடந்து ஆலயம் 
உள்ள பகுதிக்கு செல்லும் வழி. தூரத்தில் 
தெரிவது இன்னொரு நடைப் பாலம் 
 
 
படகு மூலம் நதியைக் கடந்து ஆலயம் 
பகுதிக்கு செல்லும் வழி
………தொடரும்