தெரிந்த ஆலயம், பலரும் அறிந்திடாத வரலாறு -22
ஆந்திரா 
ஸ்ரீ திரிகோடீஸ்வரச்வாமி ஆலயம்
சாந்திப்பிரியா

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள விஜயவாடாவில் இருந்து தொண்ணூறு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதே கோடப்பக்கோண்டா என்ற மலைப் பிரதேசம். அது மூன்று மலைகள் சூழ்ந்த இடமாகும். அந்த மூன்று மலைகளையும் பிரும்மா, சிவன், விஷ்ணு எனக் கருதுகிறார்கள். அங்கு திரிகோடீஸ்வரச்வாமி என்ற சிவன் ஆலயம் உள்ளது. அது கீ.பி. 1172 ஆம் ஆண்டு முதலேயே இருப்பதாகக் கூறுகிறார்கள். அந்த ஆலயம் அமைக்க மன்னன் கிருஷ்ணதேவராயர் நிறைய நிலம் தந்து உள்ளாராம். அந்த ஆலயம் அங்கு எழும்பியதைக் குறித்து கூறப்படும் கிராமியக் கதை சுவையானது. குலோத்துங்க சோழன் காலத்து கல்வெட்டில் அந்த ஆலயம் எழுந்த கதை உள்ளதாம்.

தக்ஷ்ய யாகத்தினால் ஏற்பட்ட பிரச்சனை தீர்ந்ததும் சாந்தமான சிவபெருமான் இந்த மலைப் பிரதேசத்தில் வந்து சுற்றித் திரிந்தாராம். அப்போது பிரும்மாவும் விஷ்ணுவும் அங்கு வந்து தமக்கு பிரும்மனைப் பற்றிய விளக்கம் கூற வேண்டும் என வேண்டிக் கொண்டார்களாம். ஆகவே அவர் தக்ஷிணாமூர்த்தியாக அங்கு வந்து தங்கி அவர்களுக்கு  உபதேசம் செய்தாராம். ஆகவேதான் அந்த இடத்தை திரிகோடீஸ்வரச்வாமி என அழைக்கிறார்களாம் .

இன்னொரு கதை என்ன என்றால் தக்ஷ்ய யாகத்தினால் ஏற்பட்ட பிரச்சனை தீர்ந்ததும் சாந்தமான சிவபெருமான் இந்த மலைப் பிரதேசத்தில் வந்து சங்கம்மா தேவரா என்ற பெயரில் சிறுவனாக சுற்றித் திரிந்தாராம் . அவர் தினமும் அந்த மலைப் பகுதியில் இருந்த சிவபெருமானின் பக்தரான சாலன்கையா என்பவர் வீட்டுக்குச் சென்று பாலை பிட்சையாகப் பெற்றுக் கொண்டு அருந்துவாராம். அவர் சிவபெருமானே என்பது  எவருக்கும் தெரியாது. அதே இடத்தில் இருந்த இன்னொரு மலைவாசி தம்பதியருக்கு ஆனந்தவல்லி என்ற பெண் பிறந்தாள். அவளும் சிவ பக்தை . அவளுக்கு திருமணத்தில் விருப்பம் இன்றி இறைவனின் பணியிலேயே கவனம் செலுத்தி வந்தாள். தினமும் ருத்ரா என்ற அந்த மலைப் பகுதியில் சென்று அங்கிருந்த கோடிஸ்வரஸ்வாமிக்கு அபிஷேகம் செய்துவிட்டு மீதி பாலை எடுத்து வருவாள். அவளுடைய பக்தியைக் கண்ட சிவபெருமான் அவளுக்கு சங்கம்மா தேவரா என்ற ரூபத்தில் தான் தங்கி இருந்ததை எடுத்துக் காட்டினார். ஆகவே அவளுக்கு பக்தி இன்னும் அதிகமாயிற்று. ஒரு நாள் அவள் சிவனுக்கு அபிஷேகம் செய்ய குடத்தில் தண்ணீரை எடுத்து கீழே வைத்துவிட்டு குளிக்கச் சென்றாள்.  ஆனால் அந்த குடத்தை ஒரு காக்கா வந்து மோதி கீழே தள்ளிவிட அவள் இனி அந்த இடத்தில் காகங்களே வரகூடாது என சாபம் தந்தாள். அது முதல் இதுவரை அந்த இடத்தில் ஒரு காக்கா கூட வருவது இல்லையாம்.

அதன் பின் அவளை சோதனை செய்ய சிவன் திருமணம் ஆகாத அவளை கர்பவதியாக்கினார் . ஆனாலும் அது குறித்து அவள் கவலைப்படவில்லை. தான் எப்படி கர்ப்பம் ஆனேன் எனக் கவலை படவில்லை. தனது சிவ பணியினைத் தொடர்ந்தாள். அவளுடைய தீவீர பக்தியைக் கண்டவர் அவளுக்கு தரிசனம் தந்தப் பின் அவள் வீட்டுக்கு தானும்  அவளுடன்  வருவதாகவும் ஆனால் தான் பின் தொடர்ந்து வருவதை அவள் திரும்பிப் பார்க்க கூடாது எனவும் கூறி அவளை சங்கம்மா தேவரா என்ற ரூபத்தில் பின் தொடர்ந்தார். ஆனால் அவர் தற்போது ஆலயம் உள்ள இடத்தை அடைந்தபோது ஆவலை அடக்க முடியாதவள்  திரும்பிப் பார்த்து விட்டாள். ஆகவே அவர் அங்கேயே சிவலிங்கமாக நின்றுவிட்டார். அதன் பின் அவளுடைய கர்ப்பமும்  கலைந்தது. தூங்கி எழுவது போல எழுந்தவள் தான் கர்பமாக இருந்தது போல அத்தனை நாளும் நினைத்தது வெறும் கனவே , தன்னை சிவபெருமான் சோதனை செய்து உள்ளார் என்பதை உணர்ந்தாள். அவள் வயிற்றில் இருந்த குழந்தை மறைந்து போயிற்று.  அதன்பின் அவளும் அங்கயே தங்கி இருந்து கடவுளுடன் கலந்து விட்டாள்.

ஆலயம் செல்லும் வழி:

12 km from Narsarao Pet, 13 km from Chilakaluri Pet (on NH 5), 90 km from Vijayawada and 350 km from Hyderabad.
How to go:
Air: Nearest airport is Gannavaram near Vijayawada
Rail: Nearest railhead Narsaraipet
Bus: Regular State buses from Hyderabad and major towns of A.P.
————————————————————-
செய்தியின்  ஆதாரம் மற்றும் படங்கள் நன்றி:– : http://www.kotappakonda.com