
சாந்திப்பிரியா 
ஆலய வரலாற்றைப் பற்றி எழுத நிறைய செய்திகளை கண்டறிய வேண்டி உள்ளது.   அந்த  இடங்களுக்கு விஜயம் செய்திருந்த சிலரிடம் நேரில் கேட்டும், சிலவற்றை  படித்தும் தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது.  ஒரு காலத்தில் இந்தியாவை விட  சிறப்பான இந்துக்களின் புராதான ஆலயங்கள் இலங்கையில் இருந்துள்ளன என்பதைக்  கேட்கும்போது ஆச்சர்யமே மேலோங்குகின்றது.  ஆனால் ஆராய்ச்சியாளர்கள் சிலர்  அதற்குக் காரணம் ஒரு காலத்தில் இலங்கையும் இந்தியாவின் தென் பகுதியும்  நடந்து செல்லும் வகையிலும், படகுகளில் செல்லும் அமைப்புடனும் இருந்ததாகக்  கூறுகிறார்கள். அதனால்தானோ என்னவோ பல புராதான வரலாற்று சிறப்பு மிக்க  ஆலயங்கள் அங்கு அமைந்துள்ளன.  மேலும் இராமாயண காலத்தில் இந்தியாவிற்கும்  இலங்கைக்கும் நெருங்கிய தொடர்ப்பும் இருந்துள்ளது. அதன் தாக்கத்தினால் கூட  இந்த நிலை எழுந்திருக்கலாம்.  ஆகவே அதற்கெல்லாம் செல்வது எளிதல்ல  என்பதினால் குறைந்தபட்ஷம் அவற்றைப் பற்றிய வரலாற்று சிறப்பையாவது  தெரிந்து  கொள்ளலாமே என  நெடுநாட்களாக நான் நினைத்து இருந்த திரிகோண மலையில் உள்ள  திருக்கோனேஸ்வர ஆலய மான்மியம் மற்றும் வரலாறு குறித்து சில நாட்களில் எழுத  உள்ளேன்.