அப்ரமேய ஸ்வாமி 
மற்றும்  
நவநீத கிருஷ்ணன் ஆலயம்
சாந்திப்பிரியா
 அப்ரமேயர் 
கர்நாடகாவில் புராண பெருமை பெற்ற ஸ்தலங்கள் நிறையவே உள்ளன. அதில் உள்ள இன்னொரு புகழ் பெற்ற ஆலயமே நவநீத கிருஷ்ணன் மற்றும்  அப்ரமேய ஸ்வாமி ஆலயம். இந்த ஆலயம் பெங்களூரின் கெங்கேரியைத் தாண்டி மைசூருக்கு செல்லும் பாதையில் உள்ள தொட்டமல்லூர் எனும் கிராமத்தில் உள்ளது . தேசிய நெடுஞ் சாலையில் மைசூரை நோக்கி செல்லும்போது இடது பக்கம் மாலூரைத் தாண்டி அப்ரமேய ஸ்வாமி ஆலயம் செல்லும் வளைவைக் காணலாம். இந்த ஆலயத்தின் எதிர்புறத்தில் செல்லும் சாலையில்தான் நாடி நரசிம்மர் ஆலயமும்  உள்ளது. 

கர்நாடகாவில் புராண பெருமை பெற்ற ஆலயங்கள் நிறையவே உள்ளன. அதில் உள்ள இன்னொரு புகழ் பெற்ற ஆலயமே பகவான் நவநீத கிருஷ்ணன் மற்றும்  பகவான் அப்ரமேய ஸ்வாமி ஆலயம். இந்த ஆலயம் பெங்களூரின் கெங்கேரியைத் தாண்டி மைசூருக்கு செல்லும் பாதையில் உள்ள தொட்டமல்லூர் எனும் கிராமத்தில் உள்ளது . தேசிய நெடுஞ் சாலையில் மைசூரை நோக்கி செல்லும்போது இடது பக்கம் மாலூரைத் தாண்டி பகவான் அப்ரமேய ஸ்வாமி ஆலயம் செல்லும் வளைவைக் காணலாம். இந்த ஆலயத்தின் எதிர்புறத்தில் செல்லும் சாலையில்தான் பகவான் நாடி நரசிம்மர் ஆலயமும்  உள்ளது.

பகவான் அப்ரமேயர் ஆலயம் 3000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும், இல்லை இது 1500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் கூறுகிறார்கள். ஆனால் ஆலயத்தின் கட்டிட அமைப்பைப் பார்க்கும் போது இந்த ஆலயம் நிச்சயமாக 1000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதில் சந்தேகமே இல்லை. காரணம் ராஜராஜ சோழன் ஆண்ட காலத்தில் அதாவது  980 ஆம் ஆண்டுகளில் இங்கு நந்த தீபம் ஏற்றும் சேவைகள் நடைபெற்று உள்ளன என்பதற்காக ஆதாரங்கள் கிடைத்து உள்ளன.  இதை வைஷ்ணவ பக்தர்கள் வைஷ்ணவ திவ்ய ஷேத்திரம் என்று போற்றிப் புகழ்கிறார்கள். ஆலயம் பெரும் பாறாங்கல் பாறையினால் கட்டப்பட்டு உள்ளது.

இந்த ஆலய மகிமை குறித்து கூறப்படும் ஒரு கதையில் ஒரு காலத்தில் தெற்கு அயோத்தியா மற்றும் சதுர் வேத மங்களபுரா என அழைக்கப்பட்ட இந்த தென் இந்தியப் பகுதியில் பகவான் ராம பிரான் வந்து  தங்கி இருந்தார் எனவும், அப்போது அவர் யாகங்களும், ஹோமங்களும் செய்து இங்கு பகவான் அப்ரமேயரை வணங்கித் துதித்தார் என்றும் கூறுகிறார்கள்.

 பகவான் அப்ரமேயர் என்றால் அளவில்லாமல் கொடுப்பவர் என்று அர்த்தமாம். இந்த ஆலயத்தில் பகவான் அப்ரமேயர், பகவான் ராமர் மற்றும் பகவான்  கிருஷ்ணர் போன்ற மூவருமே உள்ளார்கள். பகவான் ராமபிரான் மனித உருவில் இங்கு வந்து வாழ்ந்த போது, பகவான் விஷ்ணுவான அப்ரமேயரை வழிபட வேண்டி வந்தது. முதலில் இங்கு பகவான் ராமபிரானுக்கு சன்னதி கிடையாது. பகவான் அப்ரமேயருக்கு  ஆலயம் தோன்றிய வெகு காலத்துக்குப் பிறகே சன்னதி அமைத்து உள்ளது.   இந்த ஊரின் அருகில் உள்ள மேல்கோட்டை எனும் இடத்தில் உள்ள பகவான் யோக நரசிம்மர் ஆலயத்தில் உள்ள சிலையை பகவான் கிருஷ்ண பகவான் ஸ்தாபித்ததாகவும், பகவான் விஷ்ணுவை அங்கு பகவான் பிரும்மா வந்து வழிப்பட்டதாகவும் சில புராணக் கதைகள் உள்ளன. மேலும் அங்கு அவரை உற்சவ மூர்த்தியாக பகவான் ராமபிரானின் பிள்ளையான குசா (லவ-குசா சகோதரர்கள் )  வழிபட்டபோது அந்த உற்சவ மூர்த்தி பகவான் ராமபிரியா என்று அழைக்கப்பட்டு இருந்ததாகவும் ஆகவே அந்த செய்தியை  இந்த ஆலயத்துடன் சம்மந்தப்படுத்திப் பார்த்தால், இங்குள்ள பகவான் அப்ரமேயரை, பகவான்  ராமப்பிரியா என்றும் சிலர்  கூறுவதினால் ஒரு வேளை இங்குள்ள பகவான் அப்ரமேயர் சிலையைக் கூட பகவான்  கிருஷ்ணரே ஸ்தாபனம் செய்து இருக்கலாம் என்றும், தன்னை ஸ்தாபித்த பகவான்  கிருஷ்ணனுக்கு கவுரவம் அளிக்க வேண்டும் என்பதற்காக பகவான் நவநீத கிருஷ்ணனுக்கும் வியாச முனிவர் மூலம் இங்கு சன்னதி அமைக்க பகவான் விஷ்ணுவே ஏற்பாடு செய்து இருக்கலாம் எனவும் நம்ப இடம் உள்ளது.

ஒரு புராணக் கதையின்படி கிருதேய யுகத்தில் விஜயபாலா என்ற மன்னன் பகவான் விஷ்ணுவை அப்ரமேய வடிவில் பூஜித்து வந்துள்ளதாகவும், த்ரேதா யுகத்தில் கான்வ முனிவர் பகவான் அப்ரமேயரை  வழிபட்டுளதாகவும், புலவர் கபிலரே பகவான் அப்ரமேயரின் பெருமையைப் பரப்பி வந்துள்ளார் என்பதாகவும் சில கதைகள் உள்ளன. இங்கு ராமானுஜர் வந்து வழிபாட்டு சேவை செய்து உள்ளார்.

ஆக இங்கு பல ரிஷி முனிவர் இருந்துள்ளார்கள் என்பது நிச்சயமாகத் தெரிகின்றது. ஆகவே வியாசர் இங்கு பகவான் நவநீத கிருஷ்ணரை ஸ்தாபனம் செய்து இருக்கலாம் என்றும் சில கதைகள் உள்ளன.   ராஜராஜ சோழன் ஆண்ட காலத்தில் இந்த ஆலயம் விரிவாக்கப்பட்டுள்ளது என்று சரித்திரக் குறிப்புக்கள் இங்கு கிடைத்து உள்ளதாம்.  ஆலய சுவற்றின் வெளிப்புறத்தில் (அப்ரமேயர் மற்றும் தாயார் சன்னதிக்கு செல்லும் இடைப் பகுதி பிராகாரத்தில்) கல் பாறைகளை உற்றுப் பார்த்தால் பல செய்திகளை செதுக்கி இருப்பது தெரியும்.   இந்த ஆலயத்தின் புராணக் கதையை குறித்து கூறப்படும் அனைத்துமே வாய்மொழிக் கதைகளாகவே வந்துள்ளன. பிரும்மாண்ட  புராணத்தில் ஷேத்திர மகாத்மியம் எனும் பாகத்தில் பகவான் அப்ரமேயரின் பெருமைகளைப் பற்றி குறிப்பிடப் பட்டு உள்ளதாம்.

இந்த ஆலயம் இரண்டு அடுக்கு ஆலயங்களாக உள்ளது. ஆலயத்தில் நுழைந்த உடன் எதிரில் தெரிவது பகவான் அப்ரமேயர் ஆலயம் . அற்புதமான உருவ அமைப்பில் சாலிக்கிராம கல்லில் வடிவமைக்கப்பட்டு உள்ள மூலவர் தனது கைகளில் சங்கு மற்றும் சக்கராத்தை ஏந்தியும் மீதி உள்ள இரண்டு கைகளை இரண்டு முத்திரைகளைக் காட்டியவாறும் நின்றுள்ள கோலத்தில் காட்சி தருகிறார். ஆனால்  உத்சவ மூர்த்தியிலோ பகவான் அப்ரமேயர் தனது இரண்டு மனைவிகளான ஸ்ரீ தேவி மற்றும் பூதேவி தாயாருடன் காட்சி தருகிறார். 

அந்த ஆலய சன்னதியை விட்டு வெளியில் வந்து இடது புறமாக பிராகாரத்தில் பின்புறம் சென்றால் சில படிக்கட்டியில் ஏறிச் சென்று அரவிந்தவல்லித் தாயாரை தரிசிக்க வேண்டும். இங்குள்ள தாயாரைப் பற்றியும்  உள்ள சிறு செய்தி என்ன என்றால், இந்த ஆலயத்தின் வடமேற்குப் பக்கத்தில் இருந்த விஷ்ணு தீர்த்தம் என்ற குளத்தில்தான் தாயார் தோன்றினாராம். அதற்குக் காரணம் ஒரு சாபவிமோசனம் பெறவே இங்கு தாயார் வந்து எழுந்தருள வேண்டி இருந்ததாம்.   ஆகவே விஷ்ணு தீர்த்தத்தில் தாயாரின் சிலை கிடைத்து இருந்ததினால் அவர் அங்கு அவர் தோன்றியதான  ஐதீகம் இருந்திருக்கலாம். அதனால்தான் தாயாரும் அப்ரமேயரான விஷ்ணுவின் பின்புற சன்னதியில் நின்றவாறு உள்ளார்.

அங்கிருந்தே அதே பிராகாரத்தில் சென்றால் எதிர் மூலைப் பகுதியில் உள்ள பகவான் நவநீத கிருஷ்ணரை தரிசிக்கலாம். இங்கு கிருஷ்ண தவழும் நிலைக்கான தோற்றத்தில், ஒரு குழந்தைப் போலக் காட்சி தருகிறார். குழந்தை இல்லாதவர்கள்  இங்குள்ள சன்னதியில் அவருக்கு அர்ச்சனை செய்து குழந்தைப் பிறந்தால் தொட்டில் போடுவதாக வேண்டிக் கொண்டு செல்வார்கள். குழந்தை பிறக்க வேண்டும் என  வேண்டிக் கொண்டு இங்கு வந்து சிறு மரக்கட்டையிலான தொட்டிலைக் கட்டுகிறார்கள். 

அந்த பிராகாரத்திலேய தொடர்ந்து நடந்து வந்தால் பகவான் ராமபிரான் சீதை மற்றும் பகவான் லஷ்மணரோடு இருப்பதைக் காணலாம். சீதையுடன் பகவான்  ராமபிரான் அமர்ந்து இருக்க பகவான்  லஷ்மணர் கை கூப்பி அவர்களை வணங்கி நிற்க பகவான் ஹனுமார் கீழே அமர்ந்து அவர்களை கும்பிட்டவாறு உள்ளார். பகவான் அப்ரமேயர் ஆலயத்துக்கு செல்பவர்கள் பகவான் ராமர் சன்னதியையும் தரிசிக்காமல் வந்தால் அது நல்ல பலனைத் தராது, காரணம் பகவான் விஷ்ணுவை தரிசித்து வணங்கிய பகவான் ராமரும் விஷ்ணுவின் அவதாரம் என்பதினால் ராம அவதாரத்தில் இருக்கும் தன்னையும் வழிபட வேண்டும் என பகவான் விஷ்ணு விரும்புவாராம். அந்த சன்னதிக்கு அடுத்து உள்ள சன்னதியில் பகவான் வேணுகோபல ஸ்வாமி சங்கையும், சக்கரத்தையும் கையில் ஏந்திக் கொண்டு, இடது கையில் புல்லாங்குழலை வைத்தவாறு காட்சி தருகிறார். அடுத்த சன்னதியில் பகவான் சுதர்ஷன நரசிம்மரும் காட்சி தருகிறார்.  இந்தப் பகுதியை சுற்றி உள்ள ஆலயங்கள் பெரும்பாலானவை பகவான் நரசிம்மரின் பல அவதாரங்களை எடுத்துக் காட்டும் ஆலயங்களாக உள்ளன. ஆகவேதான் பகவான்  விஷ்ணு அவதாரங்களை காட்டும் இந்த பகுதியே வைஷ்ணவ தலம் என்று கூறுகிறார்கள்.

இந்த ஆலயம் உள்ள மாலூரைக் குறித்தும் ஒரு அற்புதமான கதை உள்ளது. முன்னொரு காலத்தில் இங்கு ஒரு பெரிய நதி ஓடிக் கொண்டு இருந்ததாகவும், இந்தப் பகுதியை ஆண்டு வந்த தமிழ் மன்னனை ஒரு யுத்தத்தில்  தோற்கடித்த பகை மன்னன் அவனைக் கொல்லாமல்  கை கால்களை மட்டும் வெட்டி முடமாக்கி விட்டு சென்றுவிட்டானாம். ஆனால் அந்த மன்னன் பெரும் கடவுள் பக்தி கொண்டவன். ஆகவே அவன் மனம் தளராமல் இங்கு பகவான் பாசுரங்களை துதித்தவாறு அந்த நதிக் கரையிலேயே கிடக்க அதிசயமாக அவன் கைகால்கள் மீண்டும் முளைத்தனவாம். ஆகவே  தானியங்கள் முளை விழுந்து வளர்ந்து செடியாவதைப் போல  மீண்டும் அவயங்கள் முளைக்கக் காரணமான அந்த ஊரை முளை வந்த   ஊர் எனக் கூறி முளையூர், முலயூராகி, முளையூர் பேச்சு வாக்கில் மலயூராகி, மாலூராகி உள்ளது.

ஸ்ரீ தேவி, பூ தேவி சமேத  அப்ரமேயர் 
அரவிந்தவல்லித் தாயார் 
நவநீத கிருஷ்ணர் 
அந்த பிராகாரத்திலேய தொடர்ந்து நடந்து வந்தால் ராமபிரான் சீதை மற்றும் லஷ்மணரோடு இருப்பதைக் காணலாம். சீதையுடன்  ராமபிரான் அமர்ந்து இருக்க லஷ்மணர் கை கூப்பி அவர்களை வணங்கி நிற்க ஹனுமார் கீழே அமர்ந்து அவர்களை கும்பிட்டவாறு உள்ளார். அப்ரமேயர் ஆலயத்துக்கு செல்பவர்கள் ராமர் சன்னதியையும் தரிசிக்காமல் வந்தால் அது நல்ல பலனைத் தராது, காரணம் விஷ்ணுவை தரிசித்து வணங்கிய ராமரும் விஷ்ணுவின் அவதாரம் என்பதினால் ராம அவதாரத்தில் இருக்கும் தன்னையும் வழிபட வேண்டும் என விஷ்ணு விரும்புவாராம். அந்த சன்னதிக்கு அடுத்து உள்ள சன்னதியில் வேணுகோபல ஸ்வாமி சங்கையும், சக்கரத்தையும் கையில் ஏந்திக் கொண்டு, இடது கையில் புல்லாங்குழலை வைத்தவாறு காட்சி தருகிறார். அடுத்த சன்னதியில் சுதர்ஷன நரசிம்மரும் காட்சி தருகிறார்.ஒரு விசித்திரமான உண்மை என்ன என்றால், இந்தப் பகுதியை சுற்றி உள்ள ஆலயங்கள் பெரும்பாலானவை நரசிம்மரின் பல அவதாரங்களை எடுத்துக் காட்டும் ஆலயங்களாக உள்ளன. ஆகவேதான் விஷ்ணு அவதாரங்களை காட்டும் இந்த பகுதியே வைஷ்ணவ தலம் என்று பெருமைப்படுவதில் என்ன குறைக் காண முடியும்.
இந்த ஆலயம் உள்ள மாலூரைக் குறித்தும் ஒரு அற்புதமான கதை உள்ளது. முன்னொரு காலத்தில் இங்கு ஒரு பெரிய நதி ஓடிக் கொண்டு இருந்ததாகவும், இந்தப் பகுதியை ஆண்டு வந்த தமிழ் மன்னனை ஒரு யுத்தத்தில்  தோற்கடித்த பகை மன்னன் அவனைக் கொள்ளாமல் கை கால்களை மட்டும் வெட்டி முடமாக்கி விட்டு சென்றுவிட்டானாம். ஆனால் அந்த மன்னன் பெரும் கடவுள் பக்தி கொண்டவன். ஆகவே அவன் மனம் தளராமல் இங்கு பகவான் பாசுரங்களை துதித்தவாறு அந்த நதிக் கரையிலேயே கிடக்க அதிசயமாக அவன் கைகால்கள் மீண்டும் முளைத்தனவாம். ஆகவே  தானியங்கள் முளை விழுந்து வளர்ந்து செடியாவதைப் போல  மீண்டும் அவயங்கள் முளைக்கக் காரணமான அந்த ஊரை முளை வந்த   ஊர் எனக் கூறி முளையூர், முலயூராகி, முளையூர் பேச்சு வாக்கில் மலயூராகி, மாலூராகி உள்ளது.
மிகப் பெரிய ராஜகோபுரத்தைக் கொண்டு உள்ள ஆலயத்தின் நுழை வாயிலின் வெளியில் சுமார் முப்பது அடி உயர துஜஸ்தம்பம் காணப்படுகின்றது. ஆலயம் காலை எட்டு முதல் பன்னிரண்டு வரை திறந்துள்ளது என்றாலும் அநேகமாக பன்னிரண்டரை வரை சன்னதிகள் திறந்தே உள்ளன. மீண்டும் மாலை ஐந்தரை மணிக்கு திறக்கும் ஆலயம் எட்டரை அல்லது ஒன்பது மணிக்கு மூடப்பட்டு விடுகின்றது.
ஆலய விலாசம்:
APRAMEYA AND NAVANEETHA KRISHNA TEMPLE,
Channapatna Taluk,
Dodda Mallur,
Bangalore District,
Pin :571501
Telephone: Sri Embar Venu :   09448077348

Lord Aprameyar and Lord Navaneetha Krishna

Santhipriya 

There are many legendary temples in Karnataka. One such famous temple is Lord Navaneetha Krishnan and Lord Aprameya Swamy Temple, which  is located in the village of Doddamallur on the way to Mysore from Kengeri. On the National Highway towards Mysore, on the left hand side, you can see a curve leading to Malur in which when you travel you will reach Lord Aprameya Swamy Temple. Lord Nadi Narasimha Temple is located on the opposite side of the road from the temple.

The temple of Lord Aprameya is stated to be 3000 years old, while few  opine it to be 1500 years old. However looking at the architectural structure , there is no doubt that this temple may have been 1000 years. The reason attributed to the claim is that is that there is evidence that the Nanda Deep (Oily lamp) festival has been performed during the reign of Rajaraja Chola  in the year 980.  Devotees belong to Vaishnava sect  revere it as Divya Desam temple.   The temple has been built  with huge boulders.

According to one of the legends, Lord Rama  once resided in this southern part, then known as Southern Ayodhya or Chathur Vedapura and performed  Yagya and havan and worshiped Lord Aprameya.

Lord Aprameya means  one who bestow in plenty. The temple is dedicated to Lord Aprameya though idols of  Lord Rama and Lord Krishna are also enshrined. When Lord Rama was in human form, he visited this place to worship Lord Aprameya. Initially there was no sanctum for Lord Rama and only several years later the sanctum of   Lord Rama also came up. There is a local lore according to which the idol of Yoga Narasimha was enshrined by Lord Krishna in Melkote and Lord Brahma came there and worshiped him.  Hence there is opinion that even the statue of Lord Aprameya may have been enshrined by Lord Krishna. The sons of Lord Rama who were Lava and Kusa worshiped the procession deity of Lord Aprameya in this temple calling it as Lord Ramapriya. Since Lord Krishna reportedly enshrined the idol of Lord Vishnu  in this temple , Lord Vishnu  through Maharishi Vyasa enshrined the idol of Lord Krishna in honor of him.

According to a legend, one of the Kings namely Vijayabala worshiped Lord Vishnu in the form of Lord Aprameya in Kretha Yuga and in the Thretha Yuga, Maharishi Kanva worshiped Lord Aprameya and spread his glory to others. Even Sage Ramanujan had reportedly worshiped the Lord here and offered his services in this temple.  

It is certain that  many Rishis and Sages have come and penanced here. Therefore the belief has been that Maharishi Vyasa may have established Lord Navaneetha Krishna and worshiped him here. Historical records show that the temple was expanded during the reign of Rajaraja Chola. On the outer wall of the temple (in the courtyard between Lord Aprameya and the shrine of his consort)   one can see inscriptions in unknown language. Most of the stories told on this temple are word of mouth spread lores only. However it appears that some references are found in the texts in the Brahmanda Purana.

The temple is  two tired one. Upon entering the temple, one can see the temple of Lord Aprameya. The magnificent form of the prime deity has been carved in the Saligrama stone. The Lord has a conch and a chakra in his hands and the remaining two hands display two seals on a standing posture. But in the procession deity the Lord is seen with his two consorts Sree Devi and Bhoo Devi. 

If you come out of the sanctum  and go towards the back side,  you have to climb few stairs to have the darshan of Goddess Aravindavalli, consort of the Lord.  The  idol of the Goddess was found buried inside the Vishnu Theertham (Temple pond). She had come here to  penance to get rid of her sins  and may have left her human body inside the tank. Hence she has been enshrined in the back yard of the temple so goes the lore. 

From there itself you can view Lord Navaneetha Krishna in the opposite corner. In his sanctum Lord Krishna appears as a child in  crawling posture. Those who do not have children when  come here and offer prayers taking a pledge that they would donate a wooden cradle, they are sure to be blessed so say the priest. As a mark of promise they hang a small cradle in front of the Lord.  

As you continue to walk  through the passage you can see Lord Rama  Sita  seated on a throne while Lord Lakshmana is seen standing offering his obeisance and Lord Hanuman seated with folded hands and  bowing his head to them. Unless one returns back without  worshiping Lord Rama, the benefit of worshiping in that temple would not be derived since Lord Rama is incarnation of Lord Vishnu and therefore Lord Vishnu desires that he be worshiped in the form of Lord Rama also in that temple. In the sanctum next to is  Lord Venugopala Swamy who while holding conch and  Chakra (Wheel) in the right hand  hold  a flute on his left hand. Lord Sudarsha Narasimha is seen in the next sanctum. Most of the temples around the Lord Aprameya temple are of Lord Narasimha temples in many forms. Hence this site is considered to be Vaishnavite site.

There is also a wonderful story about Malur where this temple exist. It is said that once upon a time there was a big river flowing here and in a war between two Kings, the King of other area defeated the Tamil King who was the ruler here and cut off his hands and legs to make him remain maimed instead of killing him and went away. The Tamil  king was very pious and god fearing and remained by the bank of the river praying to the Lord  with hymns. In an act of miracle he got back his hands and legs into his body. Therefore similar to how the seeds sprout and grow into plants in the fields, since he received back his limbs like sprouting on the bod,  the place was began to be called Mulaiyoor meaning sprouted, which over period of time kept on changing as malaiyoor , malayur and then finally as Malur so say the locals.

APRAMEYA AND NAVANEETHA KRISHNA TEMPLE,
Channapatna Taluk,
Dodda Mallur,
Bangalore District,
Pin :571501
Telephone: Sri Embar Venu :   09448077348