மஹாவித்யா  –  (9)  
கமலாம்பிகா தேவி
சாந்திப்பிரியா 

மகா வித்யாவின் பத்தாவது அவதாரம் கமலாம்பிகா தேவி. தாமரை மலர் மீது அமர்ந்து கொண்டு தங்க நிறத்தில் ஜொலிப்பவளுக்கு நான்கு யானைகள் நதியில் இருந்து நீரை அவள் மீது ஊற்றிய வண்ணம் நின்றுள்ளன. வாழ்கையில் வளம் பெற்று செல்வம் பெருகவும் , குடும்ப நலம் பெறவும் , அதிருஷ்டம் பெறவும் அவளை ஆராதிக்கின்றனர். சாந்தமான தேவி அவள். அவளே ஆரம்பமும் முடிவுமானவளாம். அவள் லஷ்மி தேவி போல தோற்றம் தந்தாலும் லஷ்மி அல்ல. அவளுக்கும் லஷ்மி தேவிக்கும் உள்ள வித்யாசம் லஷ்மி தேவி தன் கையில் இருந்து பணத்தை கொட்டியபடி காட்சி தருவாள், கமலத்மிக அதை செய்யவில்லை. கமலாத்மிகா தோன்றியதற்கு விசேஷமான காரணங்கள் இல்லை என்றாலும் சாந்தமான தேவியாக தான் உள்ளதைக் கட்டும் நோக்கத்துடனேதான் பார்வதி கமலாம்பிகாவாக காட்சி தந்தாள்.