மஹாவித்யா  –  (3)  

சின்னமஸ்தா   தேவி

சாந்திப்பிரியா

 

மஹா வித்யாவின் இன்னொரு தேவி சின்னமஸ்தா ஆவாள். அவளும் பயங்கரமான உருவம் கொண்டவள்அவள் வெட்டப்பட்ட தலையுடன் , ரத்தம் பீறிட, அதை அவளது தலையும், இரண்டு பெண்களும்  குடித்துக் கொண்டு இருக்கும் கோலத்திலும்   சில நேரத்தில் கையில் மனித கபாலங்கள் கோர்த்த மாலையும், கழுத்தில் பாம்பு மாலையும் அணிந்து  காலின்  அடியில் வைத்துள்ள  காளியின் உருவிலும் காட்சி தருகிறாள். ஆனால் சின்னமஸ்தா  காளி அல்ல.
அவள் வெட்டப்பட்ட தலையுடன் காட்சி தரும் வகையிலான உருவம் கொண்டதற்கு பல கதைகள் உள்ளன. ஒரு கதையின்படி பார்வதி தன்னுடைய காவல் தேவதைகளான விஜயா மற்றும் ஜெயாவுடன் நதியில் குளிக்கச் சென்றாள். அப்போது அவளுக்கு காம உணர்வு தோன்றியது. அதைக் கட்டுப்படுத்த முடியாதவள் தன்னை எவரும் அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என கரிய நிறம் அடைந்தாள். வெகு நேரம் காம உணர்வில் இருந்தவள் தன்னை மறந்து சிவ பெருமானை நினைத்தபடி அவர் சிந்தனையில் இருந்தாள். வெளி வந்தும் தன்னை மறந்து நிர்வாண கோலத்தில் இருந்தாள். அவளுடைய காவல் தேவதைகள் நதியில் இருந்து நிர்வாண கோலத்திலேயே வெளிவர பார்வதிக்கும் மற்றும் அவர்களுக்கும் பசி அதிகமானது. உண்ண ஒன்றுமே இல்லை. பார்வதியிடம் அவர்கள் பசி, பசி எனக் கதற அவர்களது நிலையை கண்டவள் தனது தலையையே தன் விரலால் வெட்டிக் கொண்டு அதி இருந்து பீறிட்ட ரத்தத்தை வெட்டப்பட்ட தன் தலையை குடிக்க வைத்து மற்ற இரு தேவதைகளின் வாயிலும் விழ வைத்தாளாம்.
இன்னொரு கதையின்படி ஒரு முறை பார்வதி சிவபெருமானுடன் தகாத முறையில் பார்வதி உறவு கொண்டு எழுந்ததும், அவள் உடலில் இருந்து அந்த காவல் தேவதைகள் வெளியே வந்து பசி எனக் கூற அவள் அவர்களது நிலையை கண்டவள் தனது தலையையே வாளினால் வெட்டிக் கொண்டு அதில் இருந்து பீறிட்ட ரத்தத்தை வெட்டப்பட்ட தன் தலையை குடிக்க வைத்து மற்ற இரு தேவதைகளின் வாயிலும் விழ வைத்தாளாம்.
மூன்றாவது கதையின்படி தேவர்களை துன்புறுத்திக் கொண்டு இருந்த அசுரனை வதம் செய்தபின் ரத்தவெறி அடங்காமல் அவர்களை சுடுகாடுவரை துரத்தி வந்து அவள் கோபத்தை அடக்க வேண்டும் என்றே அந்த சுடுகாட்டில் மன்மதனும் ரதியும் உறவு கொண்டு படுத்திருந்த இடத்தை அடைந்து அவர்கள் மீது நிர்வாண கோலத்தில் நின்றபடி நடனமாடிக்கொண்டு அந்த வெறியில் தன் தலையையே வெட்டிக் கொண்டு அதில் இருந்து வெளிவந்த ரத்தத்தை அங்கிருந்த நிர்வாண காவல் தேவதைகள் வாயில் ஊற்றினாளாம். அவள் தன்னுடைய கழுத்தில் பாம்பை வைத்துக் கொண்டு இருக்க அவளுடைய கையில் அதன் பின்னால்தான் அவள் கோபம் தணிந்து தன் நிலைக்கு வந்தாளாம்.
இப்படியாக தன்னுடைய தலையை வெட்டிக் கொண்டு நின்று கொண்டு தந்த யோகினி ரூபமே சின்னமஸ்தா என்பது. சின்னா என்றால் வெட்டப்பட்ட என்பது பொருள். மஸ்தா என்றால் தலை என அர்த்தமாம் . நிர்வாண கோலத்தில் நின்றபடி பீறிட்டு வெளிவந்த ரத்தத்தை மற்றவர்களுக்கும் தரும் கோலம் என்பது தன்னை வேண்டி நிற்பவர்களுக்கு அவர்களுக்குத் தேவையானவற்றை அள்ளித் தருதல்  என்பதும், தன்னிடம் உள்ள சக்தியை தன்னை வேண்டுபவர்களுக்கு   தருவது என்பதை விளக்கும் தாத்பர்யம். நிர்வாணம் என்பது ஆசாபாசமற்ற நிலை. ஆண் பெண் உறவுகள் கொண்டு உள்ள நிலையில் தான் உள்ளதும் அந்த நிலை தம்முடைய உடலுக்கும் ஆன்மாவுக்கும் சம்மந்தமே இல்லாத நிர்வாண நிலை என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டவேஏன் என்றால் அவளுடைய ஆன்மா சிவனை நோக்கியே இருந்தது. உடல் வெளித் தோற்றம் மட்டுமே. சுடுகாட்டில் உள்ள கோலமும் தன்னுடைய ஆத்மாவுக்கும் இறப்போ பிறப்போ இல்லாத நிலை என்பதை காட்டவேஅவ்வபோது அவள் அவதரித்தது  வெவேறு உடல்களிலே தவிர சிவனுடன் உள்ள அவள் ஆத்மா  மடிவதில்லை என்பதைக் காட்டவே. அவளுடைய யந்திர ஆராதனையையும் மிக கவனமாகச் செய்தால் பல நன்மைகளைத் தருவாள். எதிரிகள் மீதான பயம் ஒழியும். வீட்டிலும் தீயவை வராது. அவளை சித்தி கொண்டால் பல அபூர்வ சக்திகள் கிடைக்குமாம்.
பல நூற்றண்டுகளுக்கு முற்பட்ட அவளுடைய முக்கியமான ஒரு ஆலயம் ஜார்கண்ட் மாநிலத்தில் பொகாரோ என்ற நகரில் இருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.