மஹாவித்யா – (11)


புவனேஸ்வரி  தேவி


சாந்திப்பிரியா 

மகா வித்யாவின் நான்காவது தேவியே புவனேஸ்வரி தேவி. புவனம் அதாவது உலகை ஆள்பவளே அவள் என்பதினால் அவள் புவனேஸ்வரி என்ற பெயர் கொண்டாள். அவள் தோன்றிய கதை எது. ஒரு முறை பராசக்த்தி மூலம் பிரபஞ்சம் தோன்றியபோது சந்திரனும் சூரியனும் மட்டுமே தேவலோகத்தில் இருந்தனர். அவர்களைக் கண்ட ரிஷிகள் (அவர்களுக்குப் பின் தோன்றியவர்கள்) தாம் அவர்களுக்கு ஒரு கிரகத்தை தருவதாகவும் அதை வைத்துக் கொண்டு மூன்று உலகையும் படைக்குமாறு கேட்டுக் கொள்ள சூரியன் தனது சக்தியினால் மூன்று உலகைப் படைத்தார். அந்த மூன்று உலகங்களுக்கும் அதிபதியாக பராசக்தி தனது சக்தியை ஒரு தேவியாக ஆக்கித் தர அந்த அவதாரத்தின் பெயர் புவனேஸ்வரி என ஆயிட்று. அந்த அவதாரத்தில் அவள் தானே மூன்று தேவிகளின் சக்தியாக- சரஸ்வதி, லஷ்மி மற்றும் பார்வதியாக – மாறினாள்.

அதனால்தான் அவள் ஞான சக்தியாக உள்ளாள். அவளை ஆராதிப்பத்தின் மூலம் பிறப்பு இல்லாத நிலை பெற்று மோட்ஷத்தைப் பெறலாம், மனதில் அமைதி தோன்றி வாழ்க்கை வளம் பெரும். பாபங்கள் விலகும், துன்பங்கள் மறையும் என்று நம்புகிறார்கள். அவளுக்கு நான்கு கைகள். அழகு சொட்டும் முகம். பார்பதற்கு திரிபுர சுந்தரி போலவே காட்சி தருவாள். கைகளில் பாசாங்கமும், அங்குசமும் கொண்டு காட்சி தருகிறாள். சில நேரங்களில் அவள் பல  கைகளுடன், பல ஆயுதங்களை கையில் வைத்துக் கொண்டும், தாமரை மலர்மீது ஒய்யாரமாக நிர்வாண கோலத்தில் அமர்ந்தபடியும் காட்சி தருவாளாம் .