சம்பல்பூர்
சம்லேஸ்வரி தேவி
சாந்திப்பிரியா
புவனேஸ்வர் மாநில தலைநகரான ஒடிசாவிலிருந்து சம்பல்பூர் 320 கி.மீ தூரத்தில் உள்ளது. இது இந்தியாவின் அனைத்து முக்கிய இடங்களுக்கும் ரயில் மற்றும் பஸ் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. சம்பல்பூர் துணிகள், நடனங்கள், பாடல்கள் போன்றவற்றுக்கு பிரசித்தி பெற்ற நகரம் ஆகும். முக்கியமாக சம்பல்பூர் மேளங்கள் அற்புதமான ஒலி தருபவை. முன் ஒரு காலத்தில் இங்கிருந்து வைரங்கள் ஏற்றுமதியாகி உள்ளன. அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த நகரின் மஹா நதி ஆற்று நீர் தேக்கத்தின் அருகே அமைந்துள்ள ஒரு ஆலயமே சம்லேஸ்வரி மாதா எனும் தேவி ஆலயம் ஆகும். சம்லேஸ்வரி தேவியை ஆதி சக்தி, மகாலஷ்மி, மகா ஸரஸ்வதி, சமேலி, ஜகத்ஜனனி மற்றும் புவனேஸ்வரி என்ற பல பெயர்களில் வணங்குகின்றார்கள். அதனால்தான் அவளுக்கு செய்யப்படும் புஜையில் புவனேஸ்வரி மந்திரம் ஒரு முக்கிய மந்திரமாக உச்சாடனம் செய்யப்படுகின்றது. இன்னும் சிலர் பூரி ஜெகன்னாதரின் சகோதரியான சுபத்திரா தேவியே சம்லேஸ்வரி மாதா என்றும் நம்புகின்றார்கள். இந்த தேவியை ஒரிஸ்ஸா மற்றும் சத்தீஸ்காரில் உள்ள பெரும்பான்மையோர் வழிபடுகிறார்கள்.
சம்லேஸ்வரி தேவியின் சிலை கிரானைட் பாறையில் அமைந்துள்ளது. ஒரு யோனியைக் குறிக்கும் வகையில் தலைகீழான பாறையில் உருவம் உள்ளது. முகம் போன்ற அந்த பாறையின் உருவில் ஒரு ஆழமற்ற வெட்டு உள்ளது, அதையே தேவியின் வாய் பகுதி என்கின்றார்கள். சம்பல்பூரி மூக்கு ஆபரணம் அவளது கற்பனையான மூக்கிலிருந்து கீழே தொங்குகிறது. அதன் இருபுறமும் செயற்கையான கண்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒரு பெரிய கருங்கல்லில் உள்ள அந்த தேவியின் சிலை தும்பிக்கைப் போன்ற அமைப்புடன் உள்ளது. பன்னிரண்டு கற் தூண்களைக் கொண்டு சுமார் பத்து சதுர அடி அளவில் அமைந்திருக்கும் இரண்டு அடுக்கு அறைகள் அமைந்துள்ள அந்த ஆலயத்தில் நான்கு அடிகள் கீழே உள்ளது அந்த தேவியின் சிலை. தினமும் நான்கு முறை பூஜைகள் நடைபெறுகின்றது. காலை ஐந்து மணிக்கு திறக்கப்படும் ஆலயம் இரவு பத்து மணிக்கு மூடப்பட்டு விடுகின்றது. அங்கு அந்த தேவியைத் தவிற காளி, புவனேஸ்வரி, செவ்வாய் கிரகம், மங்கள துர்கை, ஹனுமான்,பலராமர்,பரசுராமர் போன்ற தெய்வங்களுக்கும் சிலைகள் உள்ளன.
புராணக் கதை ஒன்றின்படி அவள் இலங்கையை ஆண்டு வந்த இராவணன் வழிபட்டுக் கொண்டு இருந்த இலங்கேஷ்வரி என்றும் இராவணன் செய்து வந்த அக்கிரமான செயல்களைக் கண்டு மனம் வெறுத்துப் போனவள் எவருக்கும் தெரியாமல் அங்கிருந்துக் கிளம்பி நதியின் அடியில் இருந்த பாறைக் குகை ஒன்றில் சென்று குடி அமர்ந்து விட்டாளாம். துர்கையின் அவதாரமான இலங்கேஷ்வரியை இலங்கையில் இருந்து பகவான் ஹனுமார் தன்னுடையத் தோளில் ஏற்றிக் கொண்டு இன்றைய ஒரிசா நகருக்கு அழைத்து வந்து நதியின் அருகில் இருந்த பாறை குகையில் விட்டு விட அவளும் அந்த குகைக்குள் அமர்ந்து கொண்டாள்.
இன்றைய சம்பல்பூர் என்று அழைக்கப்படும் அந்த இடம் சவான் என்பவர்களின் பரம்பரையில் வந்த பலராம் தேவ் என்பவரால் பதினாறாம் நூற்றாண்டில் ஆளப்பட்டு வந்தது. நல்ல பலசாலியும் புத்தி கூர்மையும் கொண்ட மன்னன் அடிக்கடி மகா நதியைக் கடந்து வேட்டையாடிச் செல்வது வழக்கம். ஒரு முறை எப்பொழுதும் போல தன்னுடைய வேட்டை நாய்களை அழைத்துக் கொண்டு நதியைக் கடந்து சென்று வேட்டை ஆடிக் கொண்டு இருந்த பொழுது ஒரு அதிசயமான நிகழ்ச்சியைக் கண்டான். அங்கு ஓடியாடித் திரிந்த அருமையான சிறு முயல்களை வேட்டை நாய்கள் துரத்திச் சென்று பிடித்து வரும். ஆனால் அன்று அந்த முயலில் ஒன்று அந்த வேட்டை நாய்களை திருப்பி அடித்து விரட்ட வேட்டை நாய்கள் முயலைக் கண்டு பயந்து திரும்பி ஓடி வந்தன. துரத்தி வரும் முயலைக் கண்டு வேட்டை நாய்கள் ஏன் பயந்து ஓடி வருகின்றன என வியந்தான் மன்னன். சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த முயல் தூரத்தில் இருந்த ஒரு மரத்தடிக்குச் சென்று மறைந்து விட்டது. உடனே அவனும் அந்த இடத்தில் சென்று முயலைத் தேடினான். அது மறைந்து போன பொந்தும் அங்கு இல்லை. முயல் வந்ததிற்கான அறிகுறியும் இல்லை. என்ன வினோதம் இது என நினைத்தவாறே வீடு திரும்பினான் மன்னன். அன்று இரவு மன்னனுடைய கனவில் சாம்லேஸ்வரி தேவி தோன்றி தான் அந்த மகா நதியின் உள்ளே இருக்கும் பாறைகளின் குகையில் குடி இருப்பதாகவும் தன்னை வெளியில் எடுத்து பூஜிக்குமாறும் ஆணையிட்ட, அவன் கனவு கலைந்தது. மறுநாள் அந்த தேவியின் சிலையை நதிக்குள் இருந்துத் தேடி எடுத்து வந்து, எந்த இடத்தில் இருந்து நாய்களைத் துரத்தி அடித்த முயல் வந்ததோ அதே இடத்தில் சமலேஸ்வரி தேவிக்கு ஆலயம் அமைத்தான். ஆனால் பல ஆண்டுகளுக்குப் பின் அந்த ஆலயம் பழுதடைந்துப் போயிற்று. ஆகவே இது மன்னர் சத்ரா சாய் தியோ என்பவரால் 1657 ஆம் ஆண்டில் மீண்டும் கட்டப்பட்டதாம்.
அந்த ஆலய மகிமையை விளக்கும் வகையில் நிலவும் ஒரு கிராமியக் கதை இது. முன்பு ஒரு முறை அந்த ஆலயத்தைக் கொள்ளயடிக்க வேறு தேசத்தை சேர்ந்த மன்னனின் படை தளபதி தனது பெரும் படையினருடன், பசுக்களின் தோலினால் செய்யப்பட்டு இருந்த மேளத்தில் வித்யாசமான ஒலியை எழுப்பிய வண்ணம், இராட்சச மணி ஒன்றை அடித்துக் கொண்டே அந்த ஊருக்கு அவன் வந்தான். அந்த ஊரில் இருந்த அனைத்து ஆலயங்களையும் கொள்ளை அடித்தப் பின் அவற்றை முழுமையாக அழித்து விடும் மன நிலையில் வந்திருந்த அவன் அங்கு இரவு தங்கி இருந்த பொழுது, பால் விற்கும் ஒரு அழகான பெண் உடல் நிறைய ஏராளமாக நகைகளைப் போட்டுக் கொண்டு பால், மோர் என பல பொருட்களை இரவில் அவர்கள் தங்கி இருந்த கூடாரத்திற்கு வந்து விற்றுச் சென்றாளாம். அதை அருந்தியவர்கள் மறுநாள் தாங்க முடியாத வாந்தி பேதியினால் பீடிக்கப்பட்டு அவதியுற, அவர்களுக்கு காலரா நோய் பரவி சேனையினர் பெரும் அளவில் இறந்து போக, தப்பித்தால் போதும் என்று அந்த தளபதி மீதம் இருந்த சேனையுடன் தான் கொண்டு வந்திருந்த மேளம், மணி போன்றவற்றை அங்கேயே போட்டு விட்டு ஓடி விட்டானாம். சம்லேஸ்வரி தேவியே அந்த இளம் பெண் உருவில் வந்து அப்படி செய்து அந்த சேனையை அழித்தாள் என்ற நம்பிக்கை உள்ளது.
அதன் பின்னர் அந்த தேவியை முதன் முதலில் வணங்கித் துதித்து வந்தவர்கள் அங்கு வசித்து வந்த பழங்குடியினர் என்று கூறுகின்றார்கள். அந்த காலங்களில் பழங்குடியினர் மோகினிகளை வணங்கி வந்துள்ளார்கள். அதனால்தான் மோகினி மற்றும் யோகினி ஆலயங்கள் ஒரிஸா மாநிலத்தில் நிறையவே உள்ளன. மகா நதியில் வாழ்ந்திருந்த மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்துவிட்டு வரும் வரை தம்மைக் காக்க வேண்டும் என மோகினி என்ற உருவில் சமலேஸ்வரி தேவியை வேண்டுவார்களாம். அவளை அதனால் ‘சௌராசி சமேலி’ என்றும் அழைத்தனராம். சௌராசி என்றால் எண்பத்து நான்கு என்பது பொருள். எண்பத்து நான்கு தந்திரங்களிலும் பெரும் திறமைப் பெற்ற மோகினிகளை குறிக்கும் வகையிலான அந்தப் பெயரில், அனைத்து சித்திகளையும் பெற்றவள் அந்த தேவி என்பதாக நம்பப்பட்டு சௌராசி சமேலி என்று அவளை வணங்கி வந்தார்களாம். அந்த நம்பிக்கையின் அடிப்படையில்தான் அந்த ஆலயம் எழுப்பப்பட்ட பொழுது அந்த தேவிக்கு மனித பலி தர வேண்டும் என்று விரும்பி அதன் அடித்தளத்தின் அடியில் ஒரு கணவனையும் மனைவியையும் உயிருடன் புதைத்தனராம். அதைத் தவிற ஒவ் ஒரு வருடமும் மனித பலி கொடுக்கப்பட்டு வந்ததாகவும், பின்னர் மெல்ல மெல்ல அது மிருக பலியாக மாறி, இன்று பலிகள் தரப்படுவதே நிறுத்தப்பட்டு விட்டது என்றும் கூறுகின்றனர்.
Sambalpur
Samleshwari Devi
Santhipriya
Sambalpur is located at a distance of 320 km from the state capital of Bhubaneswar in Orissa. It is well connected by rail and bus to all the major destinations in India. Sambalpur is famous for its fabrics, dances and songs. Mainly the music played with Sambalpur trumpets attracts many. Once upon a time diamonds were also exported from here. Samleshwari Mata Temple is a beautifully constructed temple on the banks of the river called Maha Nathi (River). Goddess Samleshwari is worshiped by many names such as Adi Shakti, Mahalakshmi, Maha Saraswathi, Sameli, Jagatjanani and Bhuvaneshwari. That is why the Bhuvaneshwari mantra is included in the chants of mantras enchanted in the puja performed to the Devi. Few others believe that Samleshwari Devi is none other than Subhadra Devi, sister of Puri Lord Jagannath. Devi Samleshwari is worshiped by many people in Orissa and Chhattisgarh.
The statue of Goddess Samleshwari is seen on a large granite black rock which is an inverted stone appearing like trunk of an elephant. There is a shallow incision in the face-like rock, which is said to be the mouth of the goddess. The Sambalpuri nose rings hangs down from the imaginary nose made on the face. Artificial eyes are also set on either side of it. The statue of the Goddess is four feet below the temple which is located in a two storey room measuring about ten square feet with twelve stone pillars. Pujas are performed four times a day. The temple opens at five in the morning, and closes at ten at night. Apart from Samleshwari Devi there are idols of deities like Goddess Kali, Goddess Bhuvaneshwari, Lord of Mars, Goddess Mangala Durga , Lord Hanuman, Lord Malabar and Lord Parasurama.
According to a legend, she was Goddess Ilangeshwari Devi of Sri Lanka worshiped by Ravan of Ramayana fame, who ruled Sri Lanka. One day vexed with the atrocities of Ravan she left her abode without informing any one, went and sat in a cave near the Maha Nathi (River). It is said that Lord Hanuman carried her on his shoulder and left her on the banks of the present day Orissa’s Maha Nathi (River) near Sambalpur, where she went and hid herself in a cave. During 16th century Sambalpur was under the rule of one Shri Balaram Dev who belonged to the clan of Chauhan. It was the custom of the mighty and intelligent king to often hunt across the Great Maha River. Once, as usual, he was hunting aided by his hunting dogs across the river, which used to catch the running rabbits and bring them to the King who one day witnessed a strange event. Instead of the dogs chasing rabbits, a single rabbit chased away the dogs which ran back fearing to the rabbit. After a while when the rabbit ran into a bush, the King went and got the bush checked up only to find nothing inside. There was no trace of rabbit there. The King returned back to his palace and that night had a dream in which Samleshwari Devi appeared and told him that she was inside a cave and asked him to take her out and worship in a temple. The next day he got the place scanned by his staff and found the idol of the goddess from the river and built a temple to Goddess Samleshwari at the same place where the rabbit had chased away his fighter dogs. But many years later, the dilapidated temple was rebuilt in the year 1657 by a King known as Satra Sai Theo.
There is a folklore which is told on the greatness of the temple. Once upon a time, a commanding general of the army of the neighboring King attempted to invade Sambalpur to destroy the temples and vandalize the idols after looting the ornaments. He entered the city with a huge army beating drums fitted with cow skins which raised fearful sound, besides ringing a giant bell brought with them. The army stayed overnight in that city and during night a female milk seller adorned with lots of ornaments on her body sold milk and butter to his men and went away. Next morning those consumed them suffered with unbearable stomach pain and began vomiting, soon to get afflicted with the dreaded disease cholera leading to the death of many. The commander of the army afraid of this sudden development fled away from the city along with the remaining surviving army men. It was believed that Goddess Samleshwari Devi only came in the disguise of a young milk seller and destroyed the army of the invader.
It is said that the first people to worship the goddess after the temple was installed were the tribes who lived there. In those period of times the tribes were worshiping Mohinis called Yoginis. That is why there are a lot of Mohini and Yogini temples in the state of Orissa. Fishermen who lived by the side of Maha Nathi (River) worshiped Goddess Samleshwari in the form of Mohini to get protected while they ventured into the sea to catch fish. She was therefore nicknamed ‘Chourasi Sameli’. Chourasi means eighty-four. Since the Mohinis called Yoginis who were highly skilled in the art of eighty-four tantra, any one of the goddess who possessed all the eighty four Siddhas were worshiped as Chourasi Sameli and so believing that Goddess Samleshwari Devi too possessed the eight four siddha powers, they worshiped her in the form of a Mohini called Yogini. It was on the basis of belief that when the temple was built, a husband and wife were buried alive under its foundation, as human sacrifices. However gradually animal sacrifices replaced the human sacrifices and further period of time even animal sacrifices were ceased to be given.