மண்டசூர்

பசுபதிநாதர் ஆலயம் 

சாந்திப்பிரியா

மத்தியப் பிரதேசத்தில் பல ஆலயங்கள் உள்ளன. அவற்றில் புகழ் பெற்றவை சிவன் மற்றும் சக்தி ஆலயங்கள். அதில் ஒன்றுதான் மண்டசூர் எனும் நகரில் உள்ள பசுபதிநாதர் சிவாலயம் ஆகும். மண்டசூர் என்பது இந்தூரில் இருந்து சுமார் 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது . நேகபாளத்தில் உள்ள பசுபதிநாதரைப் போன்றதே இந்த ஆலயமும் ஆகும். இந்த சிவலிங்கத்தில் எட்டு சிவபெருமானின் முகங்கள் காணப்படுகின்றன. நான்கு பக்கங்களையும் நோக்கி உள்ள ஒவ்வொரு பகுதியிலும் மேலே ஒரு சிவ பெருமானின் உருவமும், அதன் கீழ் பகுதியிலேயே இன்னொரு சிவபெருமானும் இருக்க, இப்படியாக அந்த சிவலிங்கத்தில்  நான்கு பக்கங்களிலும் எட்டு சிவபெருமானின் முகங்கள் காணப்படுகின்றன. 1945 ஆம் ஆண்டிற்கு முன் குவாலியர் மன்னரின் ஆட்சியில் இருந்த மண்டசூரில்  மிகப் பெரும் அளவில் ஜைன மற்றும் இந்து மத வழிபாட்டுத் தலங்களின் கல்வெட்டுக்களே உள்ளன என்பதினால் இந்துக்களை விட முஸ்லிம் பெருமக்களே பெருமளவில்  இருந்துள்ளார்கள் என்ற செய்தியும் வியப்பைத் தருகின்றது.

இந்த ஆலயத்தை தொட்டபடி சிவானா என்ற பெரிய நதி ஓடுகின்றது. இந்த ஆலயத்திற்குள் காணப்படும் சிவலிங்கம் சுமார் எட்டு அடி உயரமும், பத்து  அடி குறுக்களவும் கொண்ட அற்புதமான  சிவலிங்கம் ஆகும்.  ஒரு வித ஊதா வண்ண பளிங்குக் கல்லில் செதுக்கப்பட்டுள்ள அந்த சிலையின்  மொத்த எடை நாலரை டன்னுக்கும் அதிகமாம். மொத்தம் எட்டு முகங்கள் உள்ள சிவலிங்கத்தில் மேல்புறத்தில் காணப்படும் சிவபெருமான் ஒருபுறம் சிறு குழந்தை போலவும், அதற்கு அடுத்த பகுதியில் வாலிபராகவும், அதற்கு அடுத்த பகுதியில் நடுத்தர வயதானவர் தோற்றத்திலும் அதற்கு அடுத்த பக்கத்தில் கிழவர் உருவிலும் காணப்படுகின்றார். ஆகவே அவர் இதை அஷ்டாங்க, அதாவது நான்கு முகங்களை கொண்ட  பசுபதிநாதர் என்கின்றார்கள்.  ஆனால் கீழ் பகுதியில் உள்ள சிலையின் உருவங்கள் நன்கு செதுக்கப்பட்டு இருக்கவில்லை.  ஆலயத்திற்கு நான்கு திசைகளையும் நோக்கிவண்ணம் நான்கு நுழை வாயில்கள் உள்ளன. அதிகாலை ஐந்தரை மணிக்கு ஆலயம் திறக்கப்பட்டு நதியில் இருந்து எடுத்து வந்த நீரினால் ஜல அபிஷேகம் செய்யப்படுகின்றது. அதன் பின் ஆரத்தி.  மழை காலங்களில் நதி நீர் பெருக்கெடுத்து ஓடி ஆலயத்திற்குள்ளும் நுழைந்து சிவ பெருமான் சிலையின் பாதிப் பகுதியை மூடிக் கொள்வதினால் வருண பகவான் சிவபெருமானுக்கு ஜல அபிஷேகம் செய்வதாக நம்புகின்றனர். சிற்பக்கலையின் அடிப்படையில் ஆராய்ச்சி செய்ததில் அந்த சிவலிங்கம் ஆறு அல்லது ஏழாம் நூற்றாண்டை சேர்ந்தது என கருதப்படுகின்றது. அதே ஆலயத்தின் இன்னொரு பகுதியில் அதே அளவிலான இன்னொரு சிவலிங்கம் உள்ளது. அதன் விஷேசம் என்ன எனில் ஒரே அளவிலான, ஒரே மாதிரியான சிற்பத்தைக் கொண்ட ஆயிரத்தி எட்டு சிறு சிவலிங்கங்கள் அதில் செதுக்கப்பட்டு உள்ளன. 

அத்தகைப் போலவேதான் இந்த ஆலயமும்  எப்போது நிறுவப்பட்டது என்ற செய்தியை உறுதியாக கூறிட முடியவில்லை. நேபாள புராணங்களான மகாத்மயா மற்றும் ஹிம்வத்கந்தா என்பனவற்றின் கூற்றுப்படி பசுபதிநாதர் சிலை அமைந்த கதை இப்படியாக உள்ளது.   ஒருமுறை கைலாய மலையில் வாழ்வது சிவனுக்கு மிகவும் அலுத்து விட்டதால் அதிலிருந்து விடுபடும் பொருட்டு ஒரு நாள் புதிய இடமொன்றைத் தேடி அலைந்து முடிவாக காத்மாண்டு  பள்ளத்தாக்கில் சென்று வசிக்கலானார். மற்ற தெய்வங்கள்அவரை கண்டுபிடிப்பதற்குள், அவர் அங்கு பசுபதி என்ற பெயரில் விலங்குகளின் கடவுளாகப் புகழ் பெற்றுப் போற்றப்பட்டார். பிற தெய்வங்கள் அவரைத் தேடி அங்கு வந்த போது தன்னை ஒரு பெரிய மான் வடிவில் மாற்றிக் கொண்டார். அந்த நிலையில் அங்கு வந்த  திருமால் அவரை மான் என்று நினைத்து அவரது கொம்புகளை திடீரெனப் பிடித்ததில் அவை துண்டுகளாக உடைந்து சிதறின. பின்னர் திருமால் பாக்மதி ஆற்றங்கரையில் ஒரு கோவிலை நிறுவி அங்கு உடைந்த மான் கொம்புகளைக் கொண்டு லிங்கச் சிலையை உருவாக்கினார். அந்த சிலையின் உருவ சிவலிங்கமே நேபாளத்தில் உள்ள பசுபதி நாதர் ஆலயத்தில் உள்ளது. மண்டசூரில் உள்ள  சிவலிங்கத்தின் உருவம் கூட  நேபாள நாட்டில்  உள்ள பசுபதிநாதர் சிலை வடிவிலேயே அமைக்கப்பட்டு உள்ளதாம். ஆனால் அதை யார், எதற்க்காக வடிவமைத்தார்கள்  என்பது தெரியவில்லை. ஆனால் இன்னொரு செய்தியின்படி இந்த ஆலயம்  மகாபாரத காலத்திலிருந்தே இருப்பதாக நம்பப்படுகிறது.

மண்டசூரில் உள்ள  ஆலயத்தைப் பற்றிய கதை இது. சிவானா நதிக் கரையில் ஒரு வண்னான் தினமும் துணிகள் துவைக்க  வருவான். அவன் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்த பாறை மீதே துணிகளை துவைப்பான். இப்படியாக செய்து கொண்டு இருந்தவனின் கனவில் ஒரு நாள் சிவ பெருமான் தோன்றி, நீ தினமும் என் தலை மீதே துணிகளை துவைக்கின்றாய். இந்த நதியில் முழ்கி உள்ள என்னை வெளியில் எடுத்து ஆலயம் கட்டு’ என ஆணையிட மறு நாள் நதிக் கரைக்குச் சென்று அந்த பாறையை நகர்த்த முயற்சித்த பொழுது அதன் அடிப்புறம் பல சித்திரங்கள் செதுக்கப்பட்டு இருப்பதைப் போல உணர்ந்தவன் தன் கிராமத்து மக்களை அழைத்து வந்து சிவபெருமானின் கனவைப் பற்றிக் கூறி, அந்த பாறையில் எதோ சிற்பங்கள் உள்ளது போல உணர்ந்ததைக் கூறினான்.  அந்த மக்களும் அதை நம்பியதால் பெரிய கயிற்றைக் கட்டி அந்த பாறையை வெளியே இழுக்க எத்தனையோ முயன்றும் அது வெளி வரவில்லை. நாளை பார்க்கலாம் என் திரும்பி சென்று விட்டனர். அன்று இரவு மீண்டும் அந்த வண்ணான் கனவில் சிவபெருமான் தோன்றி தன்னை இழுக்க அத்தனை சிரமப்படுவதை விட இரண்டு மாடுகளைப் பூட்டிய கயிற்றால் தன்னை வெளியே எடுக்குமாறு கூற மறு நாள் மக்களிடம் அந்த கனவைக் குறித்துக் கூறிய பின் இரண்டு மாடுகள் பூட்டிய வண்டியில் கயிற்றைக் கட்டி அந்த பாறையை இழுக்க எந்த விதமான பிரச்சனையும் இன்றி பாறை வெளி வந்தது. என்ன ஆச்சரியம்? வெளியில் வந்தது பாறை அல்ல எட்டு முகங்களைக் கொண்ட சிவலிங்கம். அதை வெளியே எடுத்து உள்ளுர் மக்களின் உதவியுடன் அதே இடத்தில் ஆலயம் அமைத்தான். இந்த கதை வாய் மொழிக் கதையாகவே உள்ளது. ஒவ்வொரு மழைக் காலத்திலும் சிவன் நதியின் நீர் மட்டம்  மிகவும் உயர்ந்து ஆலயத்துக்குள்ளும் நுழைந்து விடுகின்றது.  சிவபெருமானின் புனித சிவலிங்கம் ஆலயத்துக்குள் நுழைந்து பெருகி நிற்கும் அந்த நீரில் தலைவரை முழுகி இருக்குமாம்.  இந்த நிகழ்வு  ஜலாபிஷேக்  என்று அழைக்கப்படுகிறது, அதாவது கடவுளை நீர் வழிபடுவதாகும்.

Mandsour

Pashupatinath Temple

Santhipriya

There are many temples in Madhya Pradesh dedicated to Lord Shiva and Sakthi. One of them has been the Pashupatinath Shiva Temple in Mandsour.  Mandsour is located at a distance of about 200 km from Indore. The temple is similar in all respects to Pashupatinath temple in Nepal. The uniqueness of this Shiva Ling is the eight faces of Lord Shiva in various ages sculpted on four sides of it.  Each the four sides of the Shiva lingam has  an image of Lord Shiva at the top and another Lord Shiva at the lower level of the same Shiva Ling.  It is also surprising to note that Mandsour, which was ruled by the Gwalior king before 1945, has a large number of Jain and Hindu shrines, and that there are more Muslims than Hindus, but still this temple has come up.

A large river called Sivana flows touching this temple. The Shiva ling found inside the temple is a magnificent Shiva ling, eight feet high and ten feet in diameter. The Shiva Ling is in deep purple colour marble weighing more than four and a half tons. The Shiva ling with total of eight faces, has the face of Lord Shiva carved in different postures in each side, like a small child,  a teenager, a middle aged and on the last side as a sage. So this Shiva Ling is called Astanga Ling, i.e. the four-faced. But the images of the Shiv Ling on the lower level are not well carved out.

The temple has four entrances facing the four directions and opens at 5.30 am, anointed with water taken from the river and then the ritual of Arathi follows.  It is believed that Lord Varuna along with other divines anoint Lord Shiva with water as the river overflow during the rainy season and enter the temple to cover half of the idol of Lord Shiva. According to sculptural research, the Shiva ling is believed to be dated back to sixth or seventh century. In another part of the same temple, there is another Shiva ling of the same size. What is special about it is that one thousand and eight small Shiva ling, all of them in the same size has been carved out on it.

Nobody is able to tell the period in which this temple has been established though some believe that it is connected to the Pashupatinath temple of Nepal, where according to the legends the self-manifested Shiva Ling has been enshrined with the following story. Once upon a time, Lord Shiva   tired of staying in Mount Kailash, left the abode and wandered in search of a new place to escape from the attention of all other divines.   He finally found a new place in Kathmandu Valley and settled there in the form of a huge deer, which began to be worshiped by the animal there as Pashupati, i.e. the god of animals. The divines who were searching for Lord Shiva reached there and Lord Vishnu who accompanied the divines suspected that Lord Shiva would be in disguise of the deer and suddenly grabbed his horns as the deer tried to run away.  The horns shattered into pieces and deer disappeared. Later, Lord Vishnu established a temple on the banks of the Baghmati river and made a Shiv ling with the broken pieces of the horns of the deer which is stated to be the Shiva Ling in the Pashupatinath Temple in Nepal.

According to the folklore, later some years, Lord Shiva too manifested in the same form in Mandsour and hid himself inside the river Sivana.  On the banks of   river Sivana, washer men used to clean the clothes. One of the washer men used to clean the clothes over a particular rock in the river for many years.  One day Lord Shiva appeared in his dream and told him that he was washing the clothes over his head and instead he be taken out and worshiped. The next day when he went to the river bank and tried to move the rock in to order to take it out, he felt that the rock was sculpted with some images. He rushed to the villagers, told of the same and brought them to pull out the rock from the river.  No matter how many attempts were made to pull the rock out by tying a big rope,  it did not come out.  Tired, everyone went back to try the next day. Again Lord Shiva appeared in the dream of the same washer man and told him to tie the rope with a cart pulled by two bullocks and ask pull him out.   Next day  when the villagers tied the rope in the cart driven by two buffalos the rock came out from the river without any problem.   The villagers were aghast to fine the rock to be the  same Shiva Ling with eight faces  as enshrined in the temple.  The locals then built the temple on the same spot.   Every monsoon, due to the floods   the water level of  river Shiva rises and enters into the temple to immerse  the Shiva by the rising water. The water level recedes only after few days and this phenomenon is   called Jalabishek i.e anointing the Shiva Ling with holy water by the divines with the help of rain God.