கேது ஆலயம்
நீலகண்டேஸ்வரர்
சாந்திப்பிரியா 
 
வழி : குரு அல்லது சூரியன் ஆலயத்தில் இருந்து மீண்டும் திரும்பி மெயின் ரோட்டிற்கு வந்து (ளுர் 113) இடப்புறம் திரும்பி குன்றத்தூர் வழி செல்ல வேண்டும். அதில் மௌலிவாக்கம் பஸ் நிலையத்துக்கு அடுத்து கெருகம்பாக்கம் பஸ் நிலையம் வரும். அந்த பஸ் நிலையத்தில் எந்த கடைக்காரரைக் கேட்டாலும் பக்கத்துத் தெரு வழியே கேது ஆலயம் செல்லும் வழியை காட்டுவார்கள்.
வரலாறு:- இந்த ஆலயமும் சோழர்கள் காலத்தைய ஆலயமே. சுமார் 1500 வருடங்களுக்கு முற்பட்ட ஆலயம் எனக் கூறுகின்றனர். ஆலயம் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. கிராமத்தின் ஒரு ஒதுக்குப்புறத்தில் உன்ன இந்த ஆலயம் பிரசித்தி பெற்றது.

தேவர்களும் அசுரர்களும் கடலைக் கடைந்து அமிருதம் எடுத்த போது அதில் வெறியேறிய கொடிய விஷத்தை சிவபெருமான் விழுங்கி விட அவர் தொண்டை நீல நிறமாயிற்று. அப்போது அவர் தனது உடல் சூட்டைப் போக்கிக் கொள்ள குளுமையான இடம் தேடி இந்த இடத்துக்கு வந்தார். அந்த இடம் ரம்மியமானது. என்றுமே குள10மையாக உள்ள இடம். அவர் அங்கு வந்து உறங்க அவர் விட்ட மூச்சினால் வெளியேறிய விஷக் காற்றை அங்கு அவர் எதிரில் அமர்ந்து இருந்த நந்தி தேவர் உறுஞ்சி வெளியில் விட்டாராம். வெளியில் காவலுக்கு அமர்ந்து இருந்தார் அமிருதம் கடைந்த பின் மோகினி அதாரம் எடுத்த விஷ்ணுவினால் எற்பட்ட விவகாரத்தினால் பாம்பின் உடலாக மாறிய கேது. அந்த காற்றின் விஷத்தை தான் அடக்கிக் கொள்ள (பாம்புக்கு வாயில் விஷத்தை வைத்துக் கொள்ளும் சக்தி உண்டு) சிவன் நலமடைந்தார். கண் விழித்த சிவபெருமானை கேது சென்று வணங்க அன்று முதல் அவர் அந்த இடத்திலேயே தன்னுடன் தங்கி தனி சன்னதியில் அமர்ந்து இருந்து அங்கு வந்து வழிபடும் மக்களுக்கு அறிவும்ää ஆற்றலும் ஆன்மீகம் எண்ணமும் தந்து கொண்டு இருக்கட்டும் என ஆசிர்வதிக்க அந்த இடம் கேதுவை வணங்கும் நவக்கிரகத்தின் ஒரு தலமாக சோழ மன்னர்களால் கட்டப்பட்டது.

ஆலயம் இரண்டு அடுக்குகளாக உன்ளன. முதலில் வருவது திருநாகேஸ்வரர் சன்னதி ( படம்-2) . அதில் இடப்புறத்தில் வினாயகர் சன்னதி இருக்க அடுத்து சிவபெருமான்- லிங்க வடிவில் வீற்று உள்ளார்.

வலப்புறத்தில் உள்ள சன்னதியில் தஷிணா மூர்த்திää பைரவர்ää மகாவிஷ்ணு மற்றும் துர்கை அமர்ந்து உள்ளனர். சிவபெருமானின் வலதுபக்க சன்னதியில் வாயிலை நோக்கி காமாட்சி அம்மன் அமர்ந்து உள்ளார். சிவனுக்கு எதிர்புறத்தில் நந்திக்கும் சன்னதி இருக்க அவர் சிவபெருமானைப் பார்த்தபடி அமர்ந்து உள்ளார்.

வெளியில் வந்தால் ஆலயத்தின் இடப்புறத்தில் கேதுவிற்கு தனிச் சன்னதி உள்ளது ( படம்-1) . ஆலயத்தில் உள்ள சிவபெருமானுக்கு பூஜை செய்த பின் கேதுவுக்கும் அந்த தீபத்தினால் ஆரத்தி எடுத்தப் பின்னரே பக்தர்களுக்கு கல்பூரத் தட்டு காட்டப்படும்.