துரியோதனன் ஆலயங்கள்

சாந்திப்பிரியா

துரியோதனன்  கௌரவர்களில் மூத்த சகோதரன். பாண்டவர்களை வஞ்சகமாக அழிக்க நினைத்தவன். பெண் என்றும் பாராமல்  துரௌபதியின்  சேலையை விலக்கி அவளது மானத்தை அனைவர் முன்னும்  அழிக்க நினைத்தவன். ஆனால் அவனுக்கும் சில நல்ல பண்புகள் இருந்துள்ளன.  துரியோதனுனுக்கு இந்தியாவின் சில மானிலங்களில் ஆலயங்கள் உள்ளன.அவற்றில் ஒன்றே கொல்லத்தில் உள்ள மலைநாடா எனும் இடத்தில் உள்ள மலைநாடா துரியோதனன் ஆலயம் ஆகும். சாஸ்தம்கோட்டரா என்ற இடத்தில் இருந்து 14 கிலோ தொலைவிலும், ஆலம்கடவு என்ற ஊரில் இருந்து 27 கிலோ தொலைவிலும் உள்ளது மலநாடு. அங்குதான் துரியோதனன், துரோணர், கர்ணண்,சகுனி மற்றும் பீஷ்மரும் பூஜிக்கப்படுகின்றனர். தெய்வச் சிலையே இல்லாமல் இருக்கும் அந்த ஆலயத்தில் உள்ள மண்டபத்தில் அமர்ந்து கொண்டு அவரை வழிபடுகிறார்கள்.  இவர்கள் அனைவரும் தெய்வமாக போற்றி வணங்கப்பட்டாலும் அந்த ஆலயத்தில் துரியோதனனை மட்டுமே மலயபூப்பன் என்ற பெயரில் வழிபடுகிறார்கள். துர்யோதனனுக்கு உத்திராக்கண்டிலும் சில ஆலயங்கள் உள்ளன.

கேரளாவில் துரியோதனன் ஆலயம் உள்ள கிராமத்தில் வசிக்கும் பலருக்கும்   துரியோதனன் என்ற அடைமொழிப் பெயர் உள்ளது. உள்ளுரைச் சேர்ந்த  குருவர் என்ற இனத்தவரே அந்த ஆலயத்தின் பிரதான பூஜாரியாக உள்ளார். அந்த ஆலயத்தை நிர்வாகிப்பது நாயர், குருவர் மற்றும் இசவா என்ற இனப் பிரிவை சேர்ந்த மக்கள்தான். இந்த ஆலயம் எழும்பியதைக் குறித்து கூறப்படும் உள்ளூர் கதை இது. பாண்டவர்களை தேடி அலைந்து கேரளா பகுதியில் இருந்த காட்டிற்குள் சென்ற துரியோதனன் களைப்படைந்தான். தாகம் எடுத்தது தண்ணீர் தேடி அலைந்தான். ஆனால் அவன்  சென்று இருந்த கிராமத்தில் தண்ணீரை இல்லை என்பதினால் யாருமே அவனுக்கு தண்ணீர் தரவில்லை. ஒரு மூதாட்டி மட்டும் தண்ணீருக்கு பதிலாக கள் (சாராயம்) கொடுத்து அவனது தாகத்தை போக்கினாள். அவளோ குருவா எனும் தாழ்ந்த ஜாதியை சேர்ந்தவள் என்றாலும் ஜாதி வித்யாசத்தை பார்க்காமல்  அதை வாங்கி குடித்தான். அந்த மூதாட்டிக்கு  அவரைக் கண்டதுமே அவர் பெரிய மன்னனாகவே இருக்க வேண்டும் என்ற  எண்ணம் வந்தது. அப்படி இருந்தும் ஜாதி வித்யாசம் இன்றி தான் கொடுத்த கள்ளை வாங்கி குடித்ததற்கு  அவனை பாராட்டினாள். ஆகவே துரியோதனன் அந்த பகுதி மக்கள் நலமாக இருக்க வேண்டும் என்பதற்காக அங்கிருந்த ஒரு மலையில் அமர்ந்து தவம் செய்தான். அவர்களுக்கு சிறிது நிலமும் தானம் செய்தான். ஆகவே அவனது பெருந்தன்மையை  மெச்சிய மக்கள் அவர் தவம் செய்த இடத்திலேயே அவருக்கு ஒரு ஆலயத்தை கட்டி அவரை வழிபடத் துவங்கினார்கள். இன்றும் அவரது பெயரில்தான் உளூர் மக்கள் வரிகளை செலுத்துகின்றார்களாம்.

துரியோதனனுக்கு கள் மற்றும் சாராயம் போன்றவை மிகவும் பிடிக்கும் என்பதினால் பண்டிகை தினத்தில் குடுவையில் கள் மற்றும் சாராயம் ஏந்தி வந்து அதை பிரசாதமாக  அளிக்கிறார்கள்.  கள் மற்றும் சாரயத்தை பிரசாதமாகப் படைத்தப் பின் மீதி உள்ளதை அவர்கள் பிரசாதமாக பருகி விடுவார்களாம். இப்படி ஒரு பழக்கம் உஜ்ஜயினியில் உள்ள காலபைரவர் என்ற ஆலயத்திலும் உள்ளது. ஆகவே இந்த பழக்கத்தைப் புதியது எனக் கூற முடியாது. கள் மற்றும் சாரயத்தை கொண்டு வர இயலாதவர்கள் கோழி, சிவப்பு பட்டுத் துணி அல்லது வெற்றிலைப் பாக்கைக் கொண்டு வந்து பூஜிப்பார்களாம். முன்பு அந்த ஆலயத்தில் மிருக பலி கொடுக்கும் பழக்கமும் இருந்தது. ஆனால் நாளடைவில் பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததினால் அந்தப் பழக்கம் நின்று விட்டது.  இவற்றைத் தவிற உள்ளுரில் விளையும் தானியம், மற்றும் பிற உணவு வகைகளும் பிரசாதமாகப் படைக்கப்படுகின்றன. மார்ச் மற்றும் ஏப்ரல் மாத இடையில் மலயாளத்தில் வரும் மீன மாதத்தில் இரண்டாவது வெள்ளிக்  கிழமை ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆலயத்துக்கு வந்து பூஜைகளை செய்கின்றார்கள்.

இதை போலவே உத்தராகண்டிலும் துரியோதனனுக்கு  சில இடங்களில் ஆலயங்கள் உள்ளன. உத்தராகண்டில்  ஜக்கோல் எனும் இடத்தில் உள்ள துரியோதனன் ஆலயத்தில் அந்த ஊரை சேர்ந்த மோரி எனும் மக்கள் வந்து வழிபடுகிறார்கள்.

அவரை தெய்வமாகவே கருதுகிறார்கள் என்பதினால் துரியோதனனை வழிபட்டால் தமது துயரங்கள் விலகும் என்பது அவர்கள் நம்பிக்கை. அந்த ஊரின் அருகில் ஓடும் நதி அந்த ஊர் மக்களின் கண்ணீரில் இருந்து வெளி வந்ததாம்.  துரியோதனன் இறந்தபோது  வருத்தத்தினால் அந்த மக்கள் ஆறுபோல விட்ட கண்ணீரால் அந்த நதி உருவாயிற்றம். அதன் பெயர் டோன் நதி என்பதாகும். அதனால்தான் அந்த நதியின் நீரை குடிப்பதற்கு பயன்படுத்துவதில்லை. அந்த ஊரை சேர்ந்தவர்கள் தாம் கௌரவர்கள் மற்றும் பாண்டவர்களின் வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்கின்றார்கள்.  அதை போல ஒசலா எனும் ஊரிலும் துரியோதனன் ஆலயம் உள்ளது. அந்த பகுதிக்கு துரியோதனன் ஒருமுறை வந்தபோது அந்த இடத்தின் பசுமை அவரது  மனதை  கவர, உள்ளூர் தெய்வமான மஹாசு என்பவரிடம் தனக்கு  ஒரு இடம் அங்கு தருமாறு வேண்டியதாகவும், அதனால்தான் உள்ளூர் மக்கள் அவருக்கு அங்கு ஆலயம் எழுப்பி வழிபடுவதாகவும்  கதை உள்ளது. அதை தவிர மலை முகடுகளில் சில இடங்களிலும் துரியோதனனுக்கு சில ஆலயங்கள் உள்ளனவாம்.

Temples for Duryodhana

Santhipriya

Duryodhana is the eldest of the Kaurava brothers. He tried to destroy Pandava brothers by deceit and attempted to outrage the modesty of Draupadi in public without even considering her to be a female.  However he was also possessed with few other good qualities.  There are few temples in India where Duryodan is worshiped. One such temple is in Kollam District in Kerala and is called Malanada Duryodhana Temple. Malanada is located at a distance of 14 km from Sasthamcottara and 27 km from Alamkadavu.  In the said temple besides Duryodhana others like Karna, Drona, Sakuni and Bhisma are also worshiped. This is the only temple in South India which is dedicated to Duryodan who is worshiped as Malayappooppan, but the temple has no idol but only a platform. This temple has no idols of Duryodhan and only a raised platform which is called Mandapam is built in which one can sit and meditate or pray to Duryodan.  Similarly there are few temples where Duryodhan is worshiped is in Uttarakhand in North India. 

Many in the village where the temple exist, have their surname as Duryodhana. The prime pundit of the temple belongs to the Kurava community though the temple is looked after by members from Nair, Kurava and Esava communities.  In respect of the legend of Kerala temple, it is said that Duryodhan went searching for the Pandavas in the southern forests of Kerala when they were in exile. He was extremely thirsty and asked for some water from the villagers, but since there was no water available in anyone’s home, no one could offer him water except an old lady from Kurava community, the lower caste, who offered him toddy instead of water. Unmindful of her caste, Duryodhan drank the toddy without any hesitation to quench his thirst. From his manners and the royal look, she thought that he must have been a great King and thanked him for having drank the toddy unmindful of her caste.  At the same time Duryodhan too was quite moved by her hospitality in hour of need. To show his gratitude, he sat there on a hill nearby and prayed to Lord Shiva for the well-being of the people living in that village. Further he gave some agricultural lands to villagers. Therefore in return gratitude, the villagers got a temple established for him in Malanada on the same place where he sat on meditation. The temple’s priest till date comes from the Kurava community and the villagers pay the property tax in the name of Duryodhan in honor of respect to him.

On the festive days, the devotees offer alcoholic products to Duryodhan as divine offering because Duryodhan liked alcoholic products. Duryodhana was very fond of   liquor and so on the day of the festival liquor used to be offered to him as prasad (divine offering). After offering alcohol, they consume the rest as divine offering.  A similar practice exist in the temple of Kalabhairava in Ujjain. So this habit cannot be said to be new. Those who could not bring alcohol came and worship with chicken, red silk cloth or betel nut. In the past, sacrifices were carried out in the temple. But over time, the practice came to a standstill as many protested.  Apart from these, locally grown cereals and other food items are also offered. In the month of Pisces in Malayalam, on the second Friday between March and April, thousands of people come to offer worship  in this temple.

Another biggest temple dedicated to Duryodan is in the State of Uttarakhand. This temple is situated in a place called Jakhol near Mori in Uttarakhand.  People of Mori Village believe that by worshiping Duryodan, who according to them was divine, their problems would be sorted out.  Mori’s local villagers claim that they are the ascendants of the Pandavas and Kauravas. As per a folklore the river Tamas flowing nearby has been formed by the tears of the local people who wept uncontrollably over the death of Duryodhana in the great war of Mahabharata and hence the water from the river is not used for drinking purposes. This river is called Tons river.  There exists a temple dedicated to him in Osla, Uttarakhand besides few more unknown temples for him in the hilly areas.  It is believed that Duryodhana once traveled to Uttarakhand and fell in love with its pristine natural beauty. He requested the local deity Mahasu for a valley to be granted to him next to the Himalayas.  Mahasu agreed and bestowed upon him this piece of land with a promise that Duryodhana would take care of the people in this region.