துளசிச் செடியும்

சாலிக்கிராமமும்

சாந்திப்பிரியா

துளசிச் செடியை பூஜிக்காத இந்துக்கள் கிடையாது. அநேகமாக அனைவருடைய இல்லங்களிலும் வளர்க்கப்படும் அந்த செடி தெய்வீக செடி மட்டும் அல்ல, மருத்துவக் குணம் கொண்டதும் ஆகும். அதனால்தான் அனைத்து கோவில்களிலும் துளசி தீர்த்தம் பிரசாதமாக அந்த காலத்தில் இருந்தே கொடுக்கப்பட்டு வந்துள்ளது. துளசியை பகவான் விஷ்ணுவின் அவதாரமாகவே கருதுகின்றனர். அதற்குக் காரணம் பகவான் விஷ்ணு துளசியை மணந்தவர் என்பதினால் துளசி உள்ள இடத்தில் பகவான் விஷ்ணுவும் இருப்பார் என்பது ஐதீகம். பகவான் சிவபெருமானுக்கு வில்வம் எப்படி பிடித்தமானதோ அது போல பகவான் விஷ்ணுவிற்கும் பிடித்தது துளசி இலைகள். இராம துளசி என்ற இளம் பச்சை நிற துளசியும் கிருஷ்ண துளசி என்ற கரும் துளசியும் உள்ளன. அவைகள் அந்தப் பெயர் பெற்றதின் காரணம் தெரியவில்லை. கார்திகை மாதத்தில் பதினோறாம் நாள் அன்று துளசி பகவான் விஷ்ணுவை மணப்பதாக ஐதீம் இருப்பதினால் அன்று துளசி பூஜை விமர்சையாக கொண்டாடப்படுகின்றது. கார்திகை மாதங்களில் துளசி இலைகளை தானம் தந்தால் ஆயிரம் பசுவை தானம் செய்ததின் பலன் உண்டாம். பண்டைய கால மக்களின் நம்பிக்கையின்படி விஷ்ணு பகவான் வைகுண்டவாசி என்பதினால் துளசியை தினமும் பூஜித்து வந்தால் வைகுண்டம் என்ற சொர்கத்தை மரணத்திற்குப் பின் அடையலாம் என்ற நம்பிக்கை உண்டு. அதனால்தான் மரணம் அடையும் தறுவாயில் வாயில் துளசி தீர்த்தம் ஊற்றுவது வழக்கத்தில் இருந்தது.

துளசி பற்றிய கூறப்படும் கிராமியக் கதை இது. ஒரு கதையின்படி பகவான் விஷ்ணுவிற்கு மூன்று மனைவிகள் உண்டு. அவர்கள் கங்கை தேவி, மகாலஷ்மி தேவி மற்றும் சரஸ்வதி தேவி என்பவர்கள். ஒரு நாள் அவர்கள் மூவரும் பகவான் விஷ்ணுவுடன் அமர்ந்தபடி பேசிக் கொண்டு இருந்த பொழுது கங்காதேவி பகவான் விஷ்ணுவை நோக்கி எதோ ஜாடைக் காட்ட அதை கவனித்த சரஸ்வதி தேவி அவளை தவறாகப் புரிந்து கொண்டு அவள் மீது பாய்ந்து தலைமுடியைப் பிடித்திழுத்து சண்டை இடத் துவங்கினாள். அதைக் கண்டு அந்த சண்டையில் குறுக்கிட்டு சமாதானம் செய்ய முயன்ற மகாலஷ்மி தேவிக்கும் சரஸ்வதி தேவிக்கும் சண்டை வந்து விட்டது. அப்படி ஏற்பட்ட சண்டையில் சரஸ்வதி தேவி மகாலஷ்மி தேவியை பூமியில் ஒரு செடியாகப் பிறக்கக் கடவது என சாபமிட்டு விட்டாள். அதைக் கேட்டு வருத்தமுற்ற கங்காதேவி சரஸ்வதி தேவியை பூமியில் ஒரு நதியாகப் பிறக்குமாறு சாபமிட்டாள். அதைக் கேட்டு கோபமுற்ற சரஸ்வதி தேவியோ, தன்னைப் போலவே கங்கா தேவியும் பூமியில் மற்றொரு நதியாக பிறக்க சாபமிட்டாள். இப்படியாக ஒருவர் மாற்றி ஒருவராக மூவரும் சாபமிட்டுக் கொண்டார்கள். அவற்றை எல்லாம் கவனித்த பகவான் விஷ்ணு மகாலஷ்மி தேவியை பூமியில் அனைவரும் வணங்கும் விதத்திலான ஒரு செடியாக துளசி என்ற பெயரில் பிறப்பாள் எனவும் அவளை அனைவரும் வணங்குவர் எனவும், சாப காலம் முடிந்து அவள் மீண்டும் வரும் வரை அவள் பக்கத்திலேயே தான் ஒரு கல்லைப் போல வாசம் செய்து கொண்டு இருக்கப் போவதாகவும் கூறி தனக்கு சரஸ்வதி தேவியை விட மகாலஷ்மி தேவி மீது அதிக நெருக்கம் இருந்ததை வெளிப்படுத்தினார். முடிவில் துளசிச் செடியாகப் பிறந்த மகாலஷ்மி தேவி சாப விமோசனம் பெற்று அவருடன் இணைந்தாள்.

இன்னொரு கிராமியக் கதை இது. முன்னொரு காலத்தில் தர்மத்வஜா என்ற ஒரு மன்னனின் மகளாக மகாலஷ்மி தேவி பிறந்தாள். அவள் ஒரு சாபத்தின் காரணமாக சில மனத் துயரங்களையும், உடல் துயரங்களையும் அனுபவிக்க பூமியிலே இருமுறை பிறக்க நேரிட்டது. அவள் அதன்படி முதல் முறை பூமியில் பிறந்து தன்னுடைய பூர்வ ஜென்ம சாபத்தை விலக்கிக் கொண்டு மீண்டும் பகவான் விஷ்ணுவை மணக்க ஆசைப்பட்டு தர்மத்வஜாவின் மகளாகப் பிறந்தாள். அவளுக்கு துளசி என்ற பெயரிட்டு வளர்த்தனர்.  துளசி என்றால் சமிஸ்கிருதத்தில் எடை போட முடியாதவள் என்ற அர்த்தம். அதே நேரத்தில் மாயவனான பகவான் கண்ணணும் ராதை தந்திருந்த ஒரு சாபத்தினால் பூமியில் ஜல்ஹன்தரா என்ற ஒரு அரக்கனாகப் பிறந்து இருந்தார். அவருக்கும் துளசிக்கும் விவாகம் நடந்தது. ஜல்ஹன்தரா செய்திருந்த தப வலிமையால் அவன் பகவான் சிவபெருமானிடம் இருந்து எவராலும் கொல்ல முடியாத வரத்தைப் பெற்று இருந்தான். அந்த வரத்தின்படி அவன் மனைவி என்று வரை பதிவிரதையாக இருக்கின்றாளோ அது வரை அவனை எவராலும் கொல்ல முடியாது. அவன் மிகவும் கொடுமைக்காரன், முரடன். அதனால் மனைவியை மிகவும் கொடுமைப்படுத்தினான். காலம் ஓடியது. ஜல்ஹன்தரா இறக்க வேண்டிய தருணம் வந்தது. அதே நேரத்தில் மகாலஷ்மி தேவி முதல் சாபத்திற்கு விமோசனம் பெற வேண்டிய நேரம். அப்பொழுது பகவான் விஷ்ணுவானவர் ஜல்ஹன்தரா உருவில் வந்து அவன் வீட்டில் இல்லாத நேரத்தில் அவள் கற்பை சூறையாடினர்.  மகாலஷ்மி தேவியின் கற்பு கலைந்தது, ஜல்ஹன்தரா கொல்லப்பட்டு அழிக்கப்பட்டான். பகவான் கிருஷ்ணர் அவதாரத்தில் இருந்த பகவான் விஷ்ணுவும் சாப விமோசனம் பெற்றார்.

ஆனால் இன்னொரு சாபம் அவருக்கும் துளசி உருவில் அவதரித்து இருந்த மகாலஷ்மி தேவிக்கும் பாக்கி இருந்ததினால் அதற்கேற்ப துளசி தன்னை கற்பழித்து விட்ட பகவான் விஷ்ணு கல்லாகக் கடவது என சாபமிட்டாள். பகவான் விஷ்ணு தன் நிஜ உருவைக் காட்டி அவள் இரண்டாவது சாபத்தை அனுபவிக்க பூமியிலே மீண்டும் துளசிச் செடியாக பிறப்பாள் எனவும் அப்பொழுது சாலிக்கிராமம் என்ற பெயரில் தான் அவளுடன் இருப்பேன் எனவும், சாபம் முடிந்ததும் மீண்டும் இணைவோம் என்று கூறி விட்டு சாலிக்கிராமக் கல்லாக மாறினார். சாப காலம் முடிந்ததும் மீண்டும் இருவரும் இணைந்தனர்.

 

Story of Thulsi plant and Saligrama

Santhipriya

One would hardly find a Hindu who does not worship Thulsi Plant.  It is considered to be not only a sacred plant, but also has medicinal values, hence the water immersed with Thulsi leaves were given as temple prasad ever since temples were established even from ancient times. The general belief has been that Lord Vishnu resides near Thulsi plant in invisible form.  Like how Vilva leaves are dear to Lord Shiva, the Thulsi leaves are dear to Lord Vishnu, hence the garland made of Thulsi is offered to Lord Vishnu in the Vaishnavite temples.  Two varieties of Thulsi plants are seen, one has light green leaves called as Rama Thulsi while the other has blackish green leaves called Krishna Thulsi.  The reason for calling them so is not known. Lord Vishnu reportedly married Goddess Mahalakshmi on the eleventh of Tamil calendar month of Karthigai when she was in the form of Thulsi plant, and hence that day is considered to be auspicious and Thulsi Pooja is performed seeking favour from the Lord.  Also the belief has been that if one donated thulsi leaves in the month of Karthigai, it would be equal to gifting one thousand cows.  The belief has also been that those who daily perform Thulsi pooja would go to heaven after their death. Hence thulsi water is poured into the mouth of those dead would take their soul to Swarga (Vaikund).

There is an interesting folklore on Thulsi plant.  As per that story, Lord Vishnu had three wives who were Goddess Ganga, Goddess Mahalakshmi and Goddess Saraswathi. One day when Lord Vishnu was conversing something with all three of them, Goddess Ganga made some gesture to Lord Vishnu which was noticed by Goddess Saraswathi and who misunderstood the gesture and pounced on Goddess Ganga angrily and fought physically. When Goddess Mahalakshmi attempted to intervene to end the fight, irked by her intervention, Goddess Saraswathi cursed Goddess Mahalakshmi to born as a plant in earth.  Saddened by the unnecessary curse given to Goddess Mahalakshmi, irritated Goddess Ganga cursed Goddess Saraswathi to become a river and run in the earth.  Angered by the curse of Goddess Ganga, Goddess Saraswathi cursed her to become another river and flow on earth. Thus all the three Goddesses cursed each other for no real reason. Watching the commotion and curses exchanged, Lord Vishnu immediately said that Goddess Mahalakshmi would take birth as Thulsi plant in earth which would be worshiped by everyone as sacred plant.  Once her curse ended, he would join her again thus indicating that he was closer to Goddess Mahalakshmi than to Goddess Saraswathi. As prophesied by Lord Vishnu, Goddess Mahalakshmi got birth as Thulsi plant and again got married to Lord Vishnu at the end of the curse.

There is yet another folklore over Thulsi plant. Once Goddess Mahalakshmi had to be born the daughter of a King called Dharmadvaja.  She had to take birth twice in earth and undergo severe mental stress and humiliations in life on account of two curses incurred by her. First she   took birth as daughter of the King Dharmadvaja with an intent to get remarried to Lord Vishnu on earth. She was named Thulsi. Thulsi in Sanskrit meant, the one who cannot be assessed in any manner.  At the same time Lord Krishna too took birth on earth on account of a curse given by his consort Radha. He was born as asura Jalhanthara and got married to Thulsi.  Jalhanthara carried a boon from Lord Shiva that he cannot be killed by any one till his wife remained chaste. Jalhanthara was very rude and ruffian and tortured his wife. Time moved and appropriate period to get killed knocked the door of Jalhanthara and to end the curse on Goddess Mahalakshmi. Utilizing the opportunity, Lord Mahavishnu went to Goddess Mahalakshmi in the guise of Jalhanthara and outraged her modesty thereby making her loose her chastity. Angered by his act, Goddess Mahalakshmi cursed him to become a stone before Lord Vishnu appeared before her in his true form. Meanwhile Jalhanthara too got killed and both Goddess Mahalakshmi and Lord Krishna in the form of Jalhanthara got relieved of their curses. On the advice of Lord Vishnu, she immediately took the second birth against the remaining curse and became a Thulsi plant in earth and Lord Vishnu too took birth as Saligrama Stone.  At the end of their curses both of them got remarried again.