
ஒருமுறை துரியோதனன் பீமனுக்கு விஷம் வைத்த உணவை தந்துவிட்டான். அதை உண்ட பீமனும் மயங்கி விழுந்துவிட அவனை கயிற்றினால் நன்கு கட்டிப் போட்டு கடலில் தள்ளி விட்டார்கள். பீமனும் கடலில் முழுகினான். ஆனால் அவர்கள் அசாதாரண சக்தி பெற்றவர்கள் என்பதினால் மூச்சு உடனேயே நிற்பது இல்லை. பல மணிநேரம் மூச்சை அடக்கிக் கொண்டு இருக்க முடியும் என்பதினால் பீமன் இறக்கவில்லை. நீருக்கு அடியில் கிடந்தவனை அங்கு இருந்த பாம்புகள் கடித்துத் தின்னத் துவங்கின. அதுவே நல்லதாகிவிட்டது. அந்த பாம்புகள் கடித்ததினால் விஷம் விஷத்தை முறியடிக்கும் என்பது போல பீமனின் விஷம் முறிந்து அவன் நினைவு பெற்றான். உடனேயே தன பலத்தினால் கயிற்றை அறுத்துக் கொண்டு கையில் கிடைத்த பாம்புகளை அழிக்கத் துவங்கினான். பாம்புகள் கலவரம் அடைந்து தம் தலைவியான வாசுகியிடம் ஓடிச் சென்று யாரோ ஒரு மனிதன் தன் இனத்தை அழிக்கிறான் எனக் கூற வாசுகியும் மாட்டார் நாகங்களை அழைத்துக் கொண்டு அங்கு வந்தாள். அதில் ஆர்யகா என்ற நாகமும் ஒன்று.ஆர்க்கயாவின் மகனுக்குப் பிறந்தவள்தான் குந்தி தேவி. ஆகவே ஆர்யகாவுக்கு அவர்கள் அனைவரையும் நன்கு தெரியும். அவள் கிருஷ்ணருக்குப் பிடித்த வாசுகியை அழைத்துச் கொண்டு பீமனிடம் சென்று அவனிடம் நடந்தது அனைத்தையும் கூறினால். பீமனும் தனது தவறை உணர்ந்து கொண்டு மன்னிப்புக் கேட்டான்.

ஆகவே அந்த நாகங்கள் பீமனுக்கு ஒரு விசேஷ பானத்தைத் தந்து அதைக் குடித்தப் பின் அவனுக்கு எந்த விஷமும் ஒன்றும் செய்யாது என்ற வரமும் தந்து அனுப்பினார்கள். மேலும் அவனுக்கு பத்தாயிரம் யானைகளின் பலத்தையும் தந்தனர். அதன்பின் அவர்கள் அவனுடன் துணைக்குச் சென்று அவனை ஹஸ்தினாபுரத்தில் விட்டுவிட்டு வந்தார்கள். அதனால்தான் பீமனால் மகாபாரத யுத்தத்தில் ஒரு லட்ஷ வீரர்களை கொல்ல முடிந்ததாம்.