தெரிந்த ஆலயம், பலரும் அறிந்திடாத வரலாறு -21
ஆந்திரா ஞான
சரஸ்வதி ஆலயம்
சாந்திப்பிரியா
தெலுங்கானா பகுதியில் உள்ள நிசாமாபாத் எனும் நகரில் இருந்து சுமார் நாற்பது கிலோ தொலைவில் உள்ளது பசாரா எனும் சிறிய கிராமம். ஹைதிராபாத்தில் இருந்து சென்றால் சுமார் இருநூறு கிலோ தொலைவு வரும். அங்கு உள்ளதே வரலாற்றுப் புகழ் பெற்ற ஞான சரஸ்வதி ஆலயம். நமக்கு எல்லோருக்குமே கூத்தனூரில் உள்ள சரஸ்வதி ஆலயம் பற்றி மட்டுமே தெரியும். ஆனால் ஆந்திராவில் உள்ள இன்னொரு சரஸ்வதி ஆலயமான இந்த இடத்தைப் பற்றி பலருக்கும் தெரிந்து இருக்க முடியாது.
இந்த ஆலயத்துக்கும் குழந்தைகள் படிப்பு வளரவேண்டும், நல்ல கல்வி அறிவு கிடைக்க வேண்டும் என வேண்டுவார்கள். தேர்வு நேரங்களில் புத்தகம், பேனா , பென்சில் என அனைத்தையும் கொண்டு வந்து சரஸ்வதி முன் வைத்து வணங்குவார்கள். கோதாவரி நதிக் கரையில் அமைந்துள்ள அந்த மூன்று ஆலயத்தில் உள்ள தேவிகளின் சிலைகள் வந்த வரலாறு அதிசயமானது. அதன் கதை கீழே உள்ளது.
முன்னொரு காலத்தில் வியாச முனிவர் இந்த இடத்தில்தான் வந்து அந்த ஆலயத்தில் மேல் பகுதி மழைக் குன்றில் உள்ள ஒரு குகையில் தங்கி தவத்தில் இருந்ததாகவும் அப்போது அவர் மூன்று பிடி மண்ணை கோதாவரி ஆற்றில் இருந்து எடுத்து வந்து வைத்துக் கொண்டு அதையே தன் மனதில் தேவிகளாக நினைத்து சரஸ்வதியின் முகத்தை மஞ்சள் பொடியாழ் பூசி வணங்கி வந்தார். காலவாக்கில் அந்த மணல் பிடிகள் சரஸ்வதி, லஷ்மி மற்றும் காலி தேவதைகளாகி விட்டன. பூமிக்குள் புதைத்து கிடந்த அவற்றை கர்நாடகத்தை ஆண்டு வந்த ஒரு மன்னன் தன் கனவில் கிடைத்த ஆணையின்படி அவற்றை கண்டு பிடித்து வெளியில் எடுத்து அந்த தேவிகளுக்கு மூன்று ஆலயங்களை பக்கத்துப் பக்கத்தில் அமைத்தானாம். அது மட்டும் அல்ல ராமாயணத்தை எழுதிய வால்மீகி முனிவரும் கூட இங்கு வந்துதான் ராமாயணத்தை எழுதியதாகக் ஒரு கிராமக் கதையை கூறுகிறார்கள்.
1956 -57 ஆம் ஆண்டுகள் வரை எவரும் சரிவர கவனிக்காமல் சிதைத்து கிடந்த அந்த ஆலயம் அதன் பின்னரே புதுப்பிக்கப்பட்டு பொலிவு பெற்று இன்று பலரும் சென்று வணங்கும் வழிபாட்டுத் தலமாகி உள்ளது.
ஆலய விலாசம் கீழே உள்ளது:-