-சாந்திப்பிரியா-

உபாசினி மஹராஜ் என்பவர் தெய்வீகத்துடன் இணைந்து இருந்த அவதார புருஷர்.  அவர் ஷீர்டி சீரடி சாயிபாபாவின் சீடர்.  ஒரு கட்டத்தில் அவருக்கு கடுமையான ஆன்மீக பயிற்சி அளித்து தமது வாரிசாக நியமிக்க ஷீர்டி சாயி பாபா அவர்கள் எண்ணினார் என்பது அவரது வாழ்க்கை சரித்திரத்தில் ஒரு முக்கியமான நிகழ்வாகும் .

ஸ்ரீ உபாசினி மஹராஜ் 1870 ஆம் ஆண்டு மஹாராஷ்டிரா மானிலத்தில் நாசிக்கில்  இருந்த சதாரா (Satara) எனும் இடத்தில் வாழ்ந்திருந்த ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர். சன்னியாச வாழ்க்கையில்  இணைவதற்கு முந்தைய வாழ்க்கையில், அவர் மகாராஷ்டிராவில் காஷிநாத் பண்டிட் என்று அழைக்கப்பட்டார்.  அவருக்கு பள்ளி செல்வத்திலும் படிப்பதிலும் ஆர்வம் ஏற்படவில்லை. ஆசானாக்களை செய்வதிலும்,  தியானம் செய்வதிலும்  அதிக ஆர்வம் இருந்தது. அவற்றை செய்ய அவர் சுடுகாடுகளை நாடிச் சென்றார். அதனால் கவலையுற்ற பெற்றோர்கள் ஒரு வேளை அவருக்கு திருமணம் செய்து விட்டால் அவர் திருத்துவார் என எண்ணி அவரை இளம் வயதிலேயே திருமணம் செய்ய வைத்தார்கள். அது பிடிக்காமல் சில நாட்களிலேயே அவர் வீட்டை விட்டு ஓடிவிட்டார். சில காலம் பொறுத்து குடும்ப நினைவால் வீடு திரும்பியதும் சில நாட்களில் அவர் மனைவி இறந்து விட்டார். ஆகவே அவருக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்கப்பட்டது.   ஆனால் மீண்டும் சில நாட்களிலேயே வீட்டை விட்டு வெளியேறி அங்கும் இங்கும் திரிந்து கொண்டு இருந்தபடி பிச்சை எடுத்து உண்டு  வந்தார். அப்போது ஒருமுறை சதாராவில் இருந்த காட்டுப் பகுதியில் ஒரு குகையில் சில நாட்கள் தியானத்தில் இருந்தபோது அவருக்கு சமாதி நிலை என்பது என்ன என்பது புரிந்தது. அங்கு இருந்தபோது அவருக்கு இனம் புரியாத ஒரு சாதுவின்  நிழல் உருவத்தைப் பார்க்கும்  பாக்கியம் கிடைத்தது.  அந்த சாது அவரிடம் ‘இனி காசிநாத் குளிர்ந்த தண்ணீரை அருந்தக் கூடாது, சுடுநீரை மட்டுமே அருந்த வேண்டும்’ எனவும் அறிவுரை செய்தார். பின்னர் அந்த சாது மறைந்து விட்டாராம் அப்படி விஜித்திரமாக அவருக்கு கட்டளை இட்டது ஷீரடி ஸ்ரீ சாயி பாபாவாகவே இருந்திருக்க வேண்டும் என்பதை பிற்காலத்தில் உணர்ந்து கொண்டார்.  மீண்டும் வீடு திரும்பினார். அடுக்கடுக்காக வீட்டில் பிரச்சனைகள், தந்தை மரணம் அடைந்தார். ஆகவே வீட்டில் உணவிற்கு வழி வேண்டும் என்பதற்காக  மருத்துவராக பணி புரிந்தார். அவருக்கு மூன்றாவது மனைவியும் அமைந்தாள்.  நாட்கள் செல்லச் செல்ல அவருக்கு வயிற்று உபாதை ஏற்பட்டது. பலரிடமும் மருத்துவம் செய்து கொண்டும் நிவாரணம் கிடைக்கவில்லை. முன்னர் அவருக்கு காட்சி தந்திருந்த இனம் புரியாத ஒரு சாதுவின் அறிவுரையைப் போலவே மருத்துவர்கள் அவர் சூடு நீரையே குடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.   வாழ்க்கையில் பல பிரச்சனைகளை எதிர் கொண்ட ஸ்ரீ  உபாசினி மஹராஜ், மீண்டும் வீட்டை விட்டு வெளியேறி ஆன்மீகத்தில் தீவீரமாக தன்னை இணைத்துக் கொள்ள விரும்பினார். சில சாதுக்களையும் மகான்களையும் சந்தித்த வண்ணம் இருந்தபோது  1910 ஆம் ஆண்டு  ஸ்ரீ நாராயண் பெட் மகாராஜைத் தொடர்பு கொண்டார்.  அங்கு அவருடன் இருந்தபோது ராஹுரியைச் சேர்ந்த குல்குர்னி மஹாராஜிடம் ஏற்பட்ட சந்திப்பு ஷீரடி ஸ்ரீ சாய் பாபாவிடம் செல்ல உதவியது.  ஷீரடி  ஸ்ரீ சாயி பாபாவுடனான அந்தத் தொடர்பு அவரது வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. 1910 ஆம் ஆண்டு ஷீர்டிக்கு சென்று ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவை சந்தித்தார். உன்னைத்தான் எதிபார்த்துக் காத்திருந்தேன் என்பதைப் போல அவரை அன்போடு வரவேற்ற ஷீர்டி ஸ்ரீ சாயிபாபா அவருக்கு ஆன்மீகப் பயிற்சி அளிக்கத் துவங்கினார்.  முதல் சுமார் நான்கு வருட காலத்திற்கு, ஒரு குறுகிய இடைவெளியில், பகவான் ஷீரடி  ஸ்ரீ சாயிபாபாவின்  கடுமையான கண்காணிப்பின்  கீழ் கண்டோபா ஆலயத்தில் ஸ்ரீ உபாசினி மஹராஜ்  கடுமையான  ஆன்மீக பயிற்சியை மேற் கொண்டார். ஷீர்டி சாயிபாபாவின் சீடர்கள் உபாசினி மஹராஜ்  மீது பொறமைக் கொள்ளும்  அளவு ஷீரடி ஸ்ரீ சாயிபாபா அவர் மீது அக்கறை செலுத்தி வந்திருந்தார். ஒருமுறை ஷீரடி சாயிபாபா ஒரு வருட காலத்திற்கு உபாசினி மஹராஜ் உணவை அருந்தக் கூடாது என்ற அளவிலான கடுமையான நிபந்தனையை இட்டார். அதையும் வெற்றிகரமாக கடைப் பிடித்து  அந்த அக்னி சோதனையில் இருந்து ஸ்ரீ உபாசினி மகாராஜ் தூய்மையான தங்கமாக வெளிப்பட, ஸ்ரீ ஷீரடி  சாயி பாபா அவருக்கு மகாராஜ் என்று பெயரிட்டார். தனது பக்தர்களுக்கு முன்பாக, ‘கருவூலத்தின் சாவிகளை’ ஸ்ரீ உபாசினி மகாராஜின் கைகளில் விட்டுச் செல்வதாக அறிவித்தார்.  அதில் இருந்தே  உபாசினி மஹராஜ் ஆன்மீகத்தில் எத்தனை மேன்மை அடைந்து இருந்திருக்க வேண்டும் என்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால்  சாயிபாபாவுடன் இருக்க மனதில்லாமல் உபாசினி மஹராஜ் ஒருநாள் இரவு ஷீரடி சாயிபாபாவை விட்டு பிரிந்து சென்று 1917 ஆம் ஆண்டில் சகோரியில் ஆஸ்ரமம் அமைத்துக் கொண்டார். ஆனாலும் ஷீரடி சாயிபாபாவிடம் சென்ற பல பக்தர்களை தம்முடைய சகோதரர் உபாசினி மஹாராஜையும் சந்தித்து விட்டு செல்லுமாறு ஷீர்டி சாயிபாபா அவரிடம் பக்தர்களை அனுப்பி வைப்பாராம் .

மிகவும் புரட்சிகரமான கருத்துக்களைக் கொண்டிருந்த உபாசினி மஹராஜ் பெண்களின் முன்னேற்றம் குறித்து புரட்சிகரமான செயல்களை செய்து உள்ளார். அந்தக் காலத்தில், பொதுவாகச் சமூகத்தில் பெண்களுக்கு சமஸ்கிருதம், வேத மந்திரங்களைக் கற்க சம உரிமைகள்/வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அதனால் மனம் வருந்திய  ஸ்ரீ உபசானி மஹராஜ், இளம் பெண்களுக்கு சமிஸ்கிருத மொழியைக் கற்றுக் கொடுத்ததும் இல்லாமல் அவர்களை பூஜைகளை செய்யவும், யாகங்களை செய்யவும்  பயிற்சி அளிக்கும் வகையில் கன்யாஸ்ரீகளின் ஸ்தாபனம்  ஒன்றை தமது ஆஸ்ரமத்தில் அமைத்து பயிற்சி அளித்தார்.   இந்தியாவில் கன்யாஸ்ரீகளுக்கு இதுபோன்ற பயிற்சி அளிக்கும் ஆஸ்ரமம் இது மட்டுமே. தனக்கு வாரிசாக கோதாவரி அம்மா என்பவரை நியமித்தார்.  1941 ஆம் ஆண்டு உபாசினி மஹராஜ் சமாதி அடைந்தார்.

கீழே உள்ள லிங்கில் உபாசினி மஹாராஜின் சிஷ்யை கோதாவரி அன்னை பற்றி படிக்கவும் :
https://santhipriya.com/2010/07/கோதாவரி-அன்னை-godavari-ma.html

 

-Santhipriya-

Shri Upasini Maharaj was one amongst the  few perfect masters who was in communion with the divine. He was a disciple of Shirdi Shri Sai Baba. At one point of time  Shirdi Shri Sai Baba is believed to be thinking of  announcing him as his successor by  giving him rigorous spiritual training. That was one of the most momentous periods in the life history of Shri Upasini Maharaj. 

Upasani Maharaj  was born in a village called Satara in Nashik district of Maharashtra in the year 1870, and  belonged to a pious brahmin family.  Prior to his entry into spiritual world, he was generally called as Kashinath Pundit.  He was not interested in studies or to go to schools and instead  spent most of his time in performing yogic skills like asana and meditation.  He preferred areas adjacent to the crematories for performing for his yogic practices. Therefore, his parents decided to get him married so that his mind would get attracted towards family life. Since forcefully  married at a very young age, one day feeling disgusted over the family life, he ran away from home and wandered all around for some periods of time, but returned home thereafter. By then his first wife died and he got married with another woman. Time passed smoothly when again he ran away from home disgusted in family life.  During one such periods of time, he even resorted  to begging  to fill his belly. While wandering places after places, once  he went into a forested place in Satara and stayed inside a cave and sat on meditation. At the end of his mystical trance, he understood  what was called the state of Samadhi. One day he suddenly  saw a stranger standing near him like a shadow. The unknown person in shadow advised him not to drink cold water and always drink only hot water. He instantly disappeared.  At later stage of life, Shri Upasini Maharaj realized that the stranger was none other than Shirdi Shri Saibaba alone.

He returned home when tragedy struck him again by the death of his father; hence he had to take up medical  profession to run the family when he married third wife after the demise of his second wife. He had to face unending  chain of struggles and ordeals in life including a severe heath issue in the form of continuous stomach ache. He consulted many doctors, but his ailment could not be cured. One of the doctors advised that he should not drink cold water and partake only hot water- similar to what the unknown stranger told him earlier when he was meditating in the cave in   Satara. Vexed again in life he decided to enter into the world  of spirituality and quit home and began meeting several Mahans and sadhus.  In the year 1910, he met one Mahan by name Narayan Bet Maharaj. During his stay with him,  he chanced met another person named Kulkarni, who advised him to go and surrender to Shirdi Shri Saibaba to pursue his spiritual goal.

The meeting with Shirdi Saibaba was the turning point in the spiritual journey of Shri Upasini Maharaj.  Shirdi Shri Saibaba warmly welcomed him into his lap and engaged him in meditation under very strict conditions which brought in great transformations in Shri Upasini Maharaj. He imparted spiritual doctrines from time to time. Shirdi Shri Saibaba’s marked favor to Shri Upasini Maharaj  made several of the devotees of Baba feeling jealous on Shri Upasini Maharaj. In the midst of training Shirdi Shri Saibaba imposed a condition that Shri Upasini Maharaj refrain from partaking  food of any kind for one year- absolute fasting. After persevering through a difficult, painful, or trying experience when Sri Upasini Maharaj emerged successful  like pure gold Shirdi Sri Sai Baba affectionately named him as  Maharaj and announced in public before his devotees that he was  leaving the ‘keys of the treasury’ in the safe hands of  Shri Upasini Maharaj.  It will speak about the height of spiritual mastery which Shri Upasini Maharaj had attained at that point of time. 

However, Shri Upasini Maharaj could not continue to stay with Shirdi Sai Baba, as he felt that his thinking and views remained fully chained. Therefore, he quit the place without even informing Shirdi Shri Saibaba. Even then  Shirdi Sai Baba who had kept a special place in his heart for Shri Upasini Maharaj and sent his devotees to Sakori to meet Shri Upasini Maharaj too who was like his brother.

Revolutionary in feelings and heart, Shri Upasani Maharaj spent most of his later part of his life for the advancement of women. Those were the periods when female remained suppressed force; women were not given  rights/opportunities to learn Sanskrit or to chant vedic mantras in the society. Feeling anguish over such restrictions Shri Upasani Maharaj set up an ashram especially for the upliftment of young girls called Kanya sthrees and taught Sanskrit language  to them, imparted training in  performing pujas and yagnas. The only ashram in India which is engaged in such an activity is the ashram of Shri Upasini Maharaj.  However, Shri Upasini Maharaj appointed one Godavari Amma as his successor before attaining  Samadhi in the year 1941.

Also read Gothavari Ma  disciple of  Upasini Maharaj in the following link:
https://santhipriya.com/2010/07/கோதாவரி-அன்னை-godavari-ma.html