சாந்திப்பிரியா
சமிஸ்கிருத மொழியில் எழுதப்பட்டு உள்ள ரகுவம்சம், குமார சம்பவம், சிசுபால வதம், நைடதம், மற்றும் கிராதர்ஜீனியம் ஆகிய ஐந்து நூல்களையும் பஞ்ச காவியம் என்று கூறுவார்கள். அவற்றில் சிசுபால சரிதம் என்பது எட்டாம் நூற்றாண்டில் மகா எனும் கவிஞரினால் இயற்றப்பட்டுள்ளது. இது மகாபாரதத்தில் வரும் ஒரு கதை ஆகும் . மகா என்பவர் முன்னர் குஜராத்தின் பகுதியில் இருந்த ஆனால் தற்போது ராஜஸ்தான் மானிலத்தில் உள்ள பகுதியை ஆண்டு வந்த வர்மாலதா என்ற மன்னனின் அரசவைக் கவிஞராக இருந்தவர். அவர் இழற்றிய இந்த சிசுபால வதம் அல்லது சிசுபால சரிதம் எனப்படும் இந்த நூல் 20 காண்டங்களைக் கொண்டு 1800 செய்யுள்களாக இயற்றப்பட்டு உள்ளது. அவர் இயற்றி உள்ள இந்த பாடலில் உள்ள வார்த்தைகள் முன் பின் இருவழியிலும் ஒத்த அதாவது ஒரே எழுத்துக் கோப்பைக் கொண்டுள்ள செய்யுளாக எழுதப்பட்டு உள்ளது என்பதற்கு ஒரு உதாரணம் இந்த பாடல்.
सकारनानारकासकायसाददसायका ।
रसाहवावाहसारनादवाददवादना ॥
रसाहवावाहसारनादवाददवादना ॥
மொத்தம் பதினாறு அட்ஷரங்களைக் கொண்டு உள்ள இந்த செய்யுளின் (பாடல்) இரண்டு வரிகளையும் எட்டு ஏட்டு அட்ஷரங்களாக நான்கு வரிகளில் அவற்றை பிரித்து எழுதுங்கள்.
இப்போது வார்த்தைகளைப் படித்துப் பாருங்கள். இடமிருந்து வலம், வலமிருந்து இடம், மேல் இருந்து கீழ் என எப்படி படித்தாலும் ஒரே வார்த்தை வருவதைப் போல உள்ளதை “கத ப்ரத்யாகதம்” என்கிறார்கள். மாக எனும் அந்த கவிஞன் ஒரு வார்த்தை, இரண்டு வார்த்தை என்றில்லாமல் ஒரு ஒரு பெரிய வாக்கியத்தையே இப்படி செய்துள்ளார் என்பது இந்த காவியத்தின் சிறப்பாகும்.
சிசுபாலன் என்பவர் சேதி எனும் ஒரு நாட்டை ஆண்டவர். இந்த நாடு மகாபாரத காலத்தில் இருந்தது. சிசுபாலனை ராவணனின் மறு பிறவி என்பார்கள். சிசுபாலனைப் பற்றிய குறிப்புகள் மகாபாரதம், வில்லிபுத்தூர் பாரதம், மற்றும் பாகவதங்களிலும் உள்ளன. மேலும் சிசுபாலன் பகவான் கிருஷ்ணரின் தந்தையின் சகோதரியின் மகன். கிருஷ்ணர், சிசுபாலனின் தாயாருக்கு கொடுத்த வாக்கின்படி சிசுபாலன் செய்த நூறு தவறுகளை பொறுத்திருந்து பார்த்தப் பின், கிருஷ்ணர் குறிப்பிட்டு இருந்த எல்லைகளைக் கடந்தபோது, அதாவது 100 பிழைகளை மீறிய போது, எல்லா அரசர்களின் முன்னிலையில் சிசுபாலனை தனியாக போருக்கு அழைத்து அவரை கிருஷ்ணர் தனது சக்கராயுதத்தால் கொல்கிறார். இந்த சரித்திரம் படிக்க மட்டும் அல்ல மிகவும் விறுவிறுப்பாக உள்ளது. ஒருவர் தனது பந்த பாசம் மற்றும் உறவுகளையும் மீறி உலகத்தின் நன்மைக்காக தனது கடமையை செய்ய வேண்டும் என்பதை எடுத்துரைக்கும் காவியமாக உள்ளது. இனி அந்தக் கதையைப் படியுங்கள்.
……..தொடரும்