துலா புராணம்- 20
காவிரி ஆற்றின் மகிமை

சாந்திப்பிரியா

காவேரி கிளம்பியபோது தேவர்கள், கந்தர்வர்கள், ரிஷிகள் சாரணர், கிங்கர்கள், பித்ருக்கள், மகாத்மாக்கள் போன்ற அனைவரும் வானத்தில் குமுழி இருந்து பத்து திக்குக்களையும் பிரகாசப்படுத்திக் கொண்டு காவேரியின் பிரவாஹத்தைப் பாத்துக் கொண்டு நின்றார்கள். அப்ஸரைகள் ஆகாயத்தில் ஆடினார்கள். இந்திரனும் தேவர்களும் புஷ்பமாறி பொழிந்தார்கள். தேவ கணங்களால் துதிக்கப்பட்ட பிரும்மா, விஷ்ணு, மகேஸ்வரர் என அனைவரும் அங்கு வந்து காவேரியை வாழ்த்தினார்கள். இங்ஙனம் வரம் பெற்றவளும், மும்மூர்த்திகளின் வடிவமானவளும், ஜ்யோதி ஸ்வரூபவானவளுமான காவேரி சந்தோஷமாக வேதாரண்யத்துக்கு சென்று அங்கு அவள் சமுத்ரராஜனுடன் கலந்த வைபவத்துக்கும்  சென்று அந்த விவாஹத்தை சிறப்பாக நடத்தி வைக்க அங்கு சமுத்ரராஜனுடன் திருமணம் செய்து கொண்ட காவேரியை பிரும்மா கன்னிகாதானம் செய்து கொடுத்தார். அந்த உற்சவமும் வெகு சிறப்பாக நடந்தேறியது. அந்த வைபவத்தில் அவர்களை ஆசிர்வதித்த மகாவிஷ்ணு ‘பத்தாண்டு என் கதையைக் கேட்டால் கிடைக்கும் புண்ணியத்தை உன் சரித்திரத்தைக் கேட்பவர்கள் பெறுவார்கள்’ என்று வரம் தந்தார்.

 காவேரிக்கு அருள் புரியும் மும்மூர்த்திகள் 

இப்படியாக காவேரி மகாத்மியத்தைக் கூறி முடித்ததும் அரிச்சந்திரன் அகஸ்திய முனிவரை பத்தாயிரம் ஸ்வர்ண புஷ்பங்களாலும், திவ்ய தூப தீபங்களாலும் பூஜித்தார். அதன் பின் தானும் தனது பரிவாரங்களையும் சைனியங்களையும் அழைத்துக் கொண்டு காவேரி ஸ்னானம் செய்து விட்டு ஸ்ரீ ரங்கநாதரையும் பூஜித்து விட்டு வந்து அஸ்வமேத யாகத்தை செய்து முடிக்க வேண்டுமே என்பதாற்காக உடனடியாக காவேரி ஸ்னானம் செய்யக் கிளம்பிச் சென்றார்.

காவேரி ஆற்றில் ஸ்னானம் செய்யும் பக்தர்கள்  

 துலா காவிரிப் புராணம் முடிவுற்றது
முந்தைய பாகங்கள்