ஸ்ரீ காளிக துர்கா
பரமேஸ்வரி ஆலயம்
சாந்திப்பிரியா 
ஸ்வேதா ஷேத்திரம் எனப்படும் BEL லேயவுட்டின் உள்ளே உள்ள ஆலயமே ஸ்ரீ காளிக துர்கா பரமேஸ்வரி ஆலயம். அந்த ஆலயத்தில் ஸ்ரீ காளிக துர்கா பரமேஸ்வரியைத் தவிர மகா கணபதி விஜய துர்க்கை, நர்தக கிருஷ்ணர், ஆஞ்சநேயர், நரசிம்மர், சனீஸ்வரர், சுப்பிரமணியர், நவக்கிரகம் மற்றும் பைரவிக்கும் சன்னதிகள் தனித் தனியே உள்ளன. பைரவியின் சன்னதிக்கு அடுத்து உள்ள சன்னதியில் தங்கப் பல்லி, வெள்ளிப் பல்லி இரண்டும் சுவற்றில் காட்சி தர, நடுவில் சிறிய மேரு மீது லஷ்மி வீற்று இருக்க சுற்றிலும் அஷ்ட லஷ்மிகளும் உள்ளனர்.
பைரவி 

நமக்கு வேண்டியதை இரண்டு ரூபாய் செலவிலான ஆலய விசேஷ காகிதத்தில் எழுதி பைரவியின் கையில் கட்டிவிட்டால் நினைப்பது விரைவில் நடைபெறும் என்பது நம்பிக்கை. பைரவியே அங்கு ஸ்ரீ காளிக துர்கா பரமேஸ்வரியின் யஷினியாக இருப்பதாகவும், நமது கோரிக்கைகளை அவள் காளிக துர்க்கையிடம் கொண்டு சென்று அதை நிறைவேற்றித் தருகிறாள் என்கின்ற  ஐதீகம் உள்ளது. இந்த ஆலயத்தை காலம் சென்ற திரு ராமு சாஸ்திரிகள் என்பவர் கட்டி உள்ளதாகவும், அவருக்கு கனவில் தோன்றிய காளிக துர்கா தனக்கு அங்கு ஆலயம் அமைக்குமாறு கூறியதாகவும் அதனால் அவர் அங்கு இந்த ஆலயத்தை அமைத்தார் என்றும் அங்குள்ளவர் கூறினார்.

ஆலயத்துக்குள் நுழையும்போதே நமக்கு நல்ல நிம்மதி கிடைத்து விட்டது போல ஒரு மன உணர்வு ஏற்படுவதின் காரணம் அந்த பூமியில் உள்ள துர்கையின் ஆகர்ண சக்தியே என்று நம்புகிறார்கள். ஆலயம் ஞாயிற்றுக் கிழமைகளில் நிறம்பி வழிகிறதாம். ஆலயத்தில் துர்கையின் சன்னதியின் வெளியில் எலுமிச்சை பழ மூடியில் என்னை ஊற்றி விளக்கு ஏற்றி  வழிபடுகிறார்கள்.

இந்த ஆலயத்துக்கு சதாசிவ நகர் போலிஸ் நிலைய சாலையில் சென்றவண்ணம் ராமையா மருத்துவமனையை தாண்டிச் சென்று மின் ரோடு வந்ததும் இடதுபுறம் சென்றால் அந்தப் பாதை வித்யாரன்யபுரத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. ஆலயத்துக்கு முன்னாள் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் பாதை வேலைகள் நடப்பதினால் சீராக இல்லை என்றாலும் அந்த ஆலயத்துக்குச் செல்ல நல்ல சாலை உள்ளது.
ஆலய விலாசம்
Sri Durga Parameshwari Temple
Durgadevi Layout, Thindlu,
Vidyaranyapura,
Bangalore – 560097.
Karanataka
Phone : +91-80-23640048
Email:
info@parameshwaritemple.org