மலை மீதும், கீழுமாக உள்ள பெருமாள் விஷ்ணுவின் ஆலயத்தில் வால்மீகி முனிவருக்கு விஷ்ணு பகவான் நான்கு தோற்றங்களில் காட்சி தந்ததாகக் கூறுகிறார்கள். 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த ஆலயம் தோயகிரி சேஷ்திரம் என்றும் அழைக்கப்படுகிறது. தோயா என்றால் தண்ணீர் என்று அர்த்தமாம். இந்த மலையை சுற்றி ஏரி போன்று தண்ணீர் தேங்கி இருந்ததினால் இதற்கு அந்தப் பெயர் வந்து இருந்துள்ளது. சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு திருமங்கை ஆழ்வார் வந்த போது மலையைச் சுற்றி நீர் சூழ்ந்திருந்தது என்பதினால் அவர் ஆறு மாதங்கள் காத்திருந்து தண்ணீர் வடிந்ததும் அந்த ஆலயத்துக்கு சென்று உள்ளார் என்ற செய்தியில் இருந்து அன்று இருந்திருந்த நிலையைப் புரிந்து கொள்ள முடியும். ஆலயம் யாரால் அமைக்கப்பட்டது என்பது சரிவரத் தெரியவில்லை என்றாலும், இது சோழ மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம் என்பதற்கான சான்றுகள் அங்கு உள்ளன. இந்த ஆலயத்தில் ஆயிரம் தலை ஆதிசேஷன் மீது படுத்துக் கொண்டு ஸ்ரீ தேவி, பூதேவியுடன் ரங்கநாதராக பெருமாள் காட்சி தருக்கிறார். மூலவரை நீலமுகில்வண்ணன் என்றும் தாயாரை அணிமாமலர்மங்கை என்றும் அழைக்கின்றார்கள்.
இந்த மலை மீது மற்றும் மலையின் கீழுள்ள ஆலயத்தில் பெருமாள் தரும் காட்சிகள் என்ன?
- ஸ்ரீ சாந்த நரசிம்ஹர் – இருந்த திருக்கோலம்
- ஸ்ரீ சயன ரங்கநாதர் – கிடந்த திருக்கோலம்
- ஸ்ரீ திருவிக்கிரம – நடந்த திருக்கோலம் மற்றும்
மலை அடிவாரத்தில் காட்டிய நான்காம் கோலம்
- நீர்வண்ண பெருமாள் – நின்ற திருக்கோலம்
தல வரலாறு………
இனியும் தனது பக்தரை அலைய விடக் கூடாது என்று எண்ணிய விஷ்ணு பகவான், வால்மீகி முனிவர் கீழறங்கும் முன்னரே தானே ராமராகவும். லஷ்மி தேவியை சீதையாகவும், ஆதிசேஷனை லஷ்மணராகவும், கருடனை ஹனுமாராகவும் உருடுக்க வைத்து மலை அடிவாரத்தில் வால்மீகி முனிவருக்கு சீதாசமேத ராமர், லஷ்மணர் மற்றும் பாதத்தின் அடியில் ஹனுமான் என வால்மீகி விரும்பிய வடிவிலேயே கல்யாண ராமராக காட்சி தந்து அவரது மனக் குறையை நீக்கினாராம். அதன் பின்னரே அங்கு அந்த கோலத்தில் இருந்த தெய்வங்களின் ஆலயம் தோன்றி உள்ளது. ஆனால் அந்த ஆலயத்தைக் கட்டியவர் யார் என்பது தெரியவில்லை.
திருநீர்மலையில் விஷ்ணுவின் மூன்று அவதாரங்கள் சேர்ந்து நான்காவது அவதாரமாயிற்று என்பதினால் இந்த தலம் மிகப் புனிதமான தலமாக கருதப்படுகிறது. அது மட்டும் அல்ல அந்த நான்கு அவதாரங்களும் நான்கு வேதங்களைக் குறிப்பவை என்றும் கூறுகிறார்கள். இந்த தலத்தில் தரிசனம் செய்வது திருநறையூர் எனும் நாச்சியார் ஆலயம், திருக்குடந்தை மற்றும் திருவாலி, திருக்கோவிலூர் ஆகிய நான்கு தலங்களில் உள்ள கடவுள்களைக் கண்டதற்குச் சமம் என்று நம்பிக்கை உள்ளது. இன்னும் சிலர் இங்கு வந்து வழிபடுவது என்பது இது திருப்பதிக்கும் சென்று வழிபட்டதற்கு சமமானது என்று கூறுகிறார்கள்.
ஆலய மகிமை
இங்கு வந்து வணங்கி துதிப்பதின் மூலம்:
- திருநறையூர் எனும் நாச்சியார் ஆலயம்,திருக்குடந்தை மற்றும் திருவாலி, திருக்கோவிலூர் ஆகிய நான்கு தலங்களுக்கு சென்று வணங்கிய பலன் கிடைக்கும்
- மன அமைதி கிட்டி மனம் தெளிவு பெரும்.
- குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை கிட்டும்.
- இங்குள்ள ஆலய தீர்த்தத்தில் நீராடினால் தீராத நோய்கள் விலகும்
- திருமணத் தடைகள் அகலும்
திருநீர்மலை பிரதான சாலை
திருநீர்மலை,
குரோம்பேட்டை,
சென்னை-600 044
திருநீர்மலை திவ்ய தேசம் பெருமாள் கோவில் மலை அடிவாரத்தில் பெருமாளின் சந்நிதி ஒன்றும் மலை மேல் மூன்று சந்நிதிகளும் இருக்கின்றன 108 திவ்ய தேசங்களில் 61, இங்கு நான்கு நிலைகளிலும் பெருமாளைத் நின்றான், இருந்தான், கிடந்தான், நடந்தான் எனும் நிலையில் தரிசிக்கலாம். 100 அடி உயர மலையும் மலையடிவார சுற்றுப் பாதை முழுவதும் ஒரே புல எண் கொண்டு
பெருமாள் கோவிலுக்கு மட்டுமே சொந்தமான நிலம்.இக்கோவில் பல உப கோவிலையும் நன்செய், புன்செய் நிலங்கள் திருமண மண்டபங்கள், வணிக வளாகங்கள் கொண்டது வருட வருமானமே கோடிகளை தாண்டும் 3 வருடம் முன் வரை பரம்பரை அறங்காவலர் கண்காணிப்பில் திவ்வியமாக நிர்வகிக்கபட்டு வந்தது தற்போது அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் நேரடிக் கண்காணிப்பில் நிர்வாக அதிகாரி பி. சக்தி கவனித்து (கபாளிகரம்) செய்து வருகிறார்
1.மலை மற்றும் மலையடிவார சுற்றுப் பாதை முழுவதும் ஒரே புல எண் கொண்டு பெருமாள் கோவில் பெருமாளுக்கு மட்டுமே சொந்தமானது
நிர்வாக அதிகாரி பி. சக்தி வந்த சில நாட்களிலே மலையிலே கோயில் பின் பக்கம் ஏயேசு சபை அல்லோல்யா ஆரம்பிக்க மறைமுகமாக பணம் பெற்றுக்கொண்டு அவரின் ஆசிர்வாதத்தில் கிருத்துவ சபை நடந்து வருகிறது ஞாயிற்று கிழமைகளில் அவர்கள் நடத்தும் ஜெபக்கூட்டம் கோவில் மேலேய் பட்டாச்சார்யர்கள் அர்ச்சகர்கள் அரண்டு ஓடும் அளவில் அதிக சத்தத்துடன் ஒலிபெருக்கி உபயோகித்து தொல்லை கொடுக்கின்றனர் யாருடைய இடத்தில் யாரு ஆக்கிரமிப்பு செய்து அராஜகம் செய்வது .
2. மலையே கோவில் அதுதான் திருநீர்மலை ஆதற்கு சாட்சியாக மலையடிவாரம் சுற்றி நான்கு திசையிலும் பலி பீடக்கல் நடப்பட்டு சிறப்பு தினங்களில் பூசைகள் செய்யப்பட்டு வருகிறது அவற்றின் எல்லைக்குள்ளே மலையடிவாரத்தின் உடபகுதியிலே இறைச்சி கடை, கோழி கடை நடந்து வருகிறது அதனை தடுக்க வேண்டிய நிர்வாக அதிகாரி பி. சக்தி மௌனமாகவே இருக்கிறார் .அதன் காரணம் விசாரித்தால் அந்த கடைகளில் இருந்துதான் அவர் வீட்டுக்கே வார வாரம் அனுப்பபடுகிறதாம் .
3.இந்து கோவிலில் வேலை செய்பவர்கள் ஊழியர்கள் இந்துக்களாக இருக்க வேண்டும் என்பது கட்டாய விதி அதிலும் நிர்வாக அதிகாரி ஊரில் உள்ள இந்துக்களை வேலைக்கு வைக்காமல் அதே ஊரில் உள்ள மதம் மாறியவர்களை வேலைக்கு நியமித்து உள்ளார் வேலை செய்பவர்கள் பெயர் மட்டுமே இந்து ஆனாள் அவர்கள் திடீர் சபை கிருத்துவ கூட்டத்தினர்.
4. கோவில் அண்ணாதான உண்டியல் வருமானம் மாதவருமானம் கடந்த காலங்களில் சராசரி 70 ஆயிரம் முதல் ஒரு லட்சம் தற்போது 20 ஆயிரம் அதிக பட்சம் 25 ஆயிரம் மட்டுமே கணக்கு காட்டப்படுகிறது
5.பக்தர்களை