கலியுகம்

-சாந்திப்பிரியா-

கலி புருஷன் யார் என்பதைக் குறித்தோ அல்லது கலி என்றால் என்ன என்றோ புராணங்களில் தெளிவாக கூறப்படவில்லை. அவற்றில் கலிகாலம் என்பது என்ன என்பதைக் குறித்தே கூறப்பட்டு உள்ளது.  ஸ்ரீமத் பாகவதப் புராணத்திலும் இன்னும் சில நூல்களிலும் மட்டுமே கலி மனிதனின் உருவை பற்றிக் கூறப்பட்டு உள்ளது.  நாய் போன்ற முகத்தில், நீண்ட மூக்கை கொண்டு, அகோரமான பற்களைக் காட்டியபடி, மூக்கை துளைக்கும் அளவிலான நாற்றம் கொண்டபடி இருக்கும் கலி புருஷன் நீண்ட புதர் போன்ற கூந்தலை கொண்டவர், இடுப்பில் சிவப்பு நிற உடை உடுத்தி, தங்க நிற ஆடைகளையும் அணிந்த கோலத்தில் உள்ளவர். நீண்ட நாக்கும் அகோரமான முகமும் கொண்டவர்.

ஆன்மீக பார்வையில் கலி என்பது ஒரு இருண்ட கால நிலையை குறிக்கும் சொல் ஆகும். மற்றபடி கலி என்றால் தோஷம், சண்டை, வாதம் என்ற பல பொருள் உண்டு. கலியின் யுகம் என்பது பாபம் செய்தவர்களின் பூமியாக, தீய ஆதிக்கம் நிறைந்த, நேர்மையற்ற மற்றும் குழப்பம் மிக்க பூமியாக இருக்கும் என்பதினால் கலியுகம் என்ற பட்டப் பெயரை பெற்றது.

சில நூல்களின்படி கலி என்பவர் பெண் என்று கூற இன்னும் சிலர் ஆண் என்றும் கூறுகின்றார்கள். ஆனால் கலி புருஷன்   அசுரர் மற்றும் ராக்ஷஸ குணங்களைக் கொண்டவர் என்றும் கிருஷ்ண பகவான் மறையும் முன் தோன்றிய அவள் /அவன் வாழ்க்கை இந்த பூமியில் ஒரு பரிதாபமான நிலையில் இருக்கும் என்று சாபம் பெற்றதினால்தான் கலி யுகம் பேரழிவைக் கொண்டதாக இருக்கும் என்பது தெரிந்தது.

கிராமங்களில் கூறப்படும் புராணக் கதைகளின்படி கலி என்பது அவளோ அல்லது அவனோ அல்ல. ஒரு தேவகணமும் அல்ல, ஒரு அரக்கனும் இல்லை. ஆனால் ஒரு கண்ணுக்கு தெரியாத பேகன் (Pagan) என்பவர் என்கின்றார்கள்.  பேகன் எனப்படும் அந்த உருவத்திற்கு எந்த ஒரு குறிப்பிட்ட மதமும் இல்லை (பேகன்கள் எனப்படுபவர் பண்டைய மதத்தைப் பின்பற்றுபவர்கள், பல தெய்வங்களை வணங்குபவர்). கலி என்பவர் சிற்றின்ப ஆசைகள் மற்றும் பொருட்கள் மீது நாட்டம் கொண்டவர். அவருக்கு பிடித்தது பகடை போன்ற சூதாட்டம், விபச்சாரிகள்.  தங்க வியாபாரிகளுடன் கூடி மகிழ்வது போன்ற செயல்களில் நாட்டம் கொண்டவர். அனைத்து எதிர்மறைகளின் ஆளுமை வடிவமே கலி என்பவர் ஆகும். அவர் கோபம் மற்றும் ஹிம்சை எனும் அரக்கர்களுக்கு பிறந்தவர். அவர் தனது குழுவினருடன் சேர்ந்து மக்களிடையே மதச்சார்பற்ற மனநிலையை உருவாக்குகிறார்.   இதனால் இந்த கலியுகத்தில் ஜாதி, மதம், ஏழை, பணக்காரர் போன்ற என்ற பாகுபாடும் இன்றி அனைவரையும் தம் பிடியில் கொண்டு வந்து அனைவரது வாழ்க்கையையும் பல வழிகளிலும் சீரழிக்கின்றார். 

கலியனுக்கு இவ்வளவு அதிகாரத்தை யார் கொடுத்தது என்ற கேள்வி எழலாம். அதை விளக்கும் கதை ஒன்று உள்ளது. ஒருமுறை அர்ஜுனனின் பேரனான பரீக்ஷித் என்ற மன்னன் சென்று கொண்டு இருந்தபோது கலியினால் துன்புறுத்தப்பட்ட பசுவைக் கண்டதும் அந்த பசுவை பாதுகாக்க   எண்ணி உடனடியாக அங்கு சென்று கலியுடன் யுத்தம் செய்து கலியை அடக்கினான். யுத்த முடிவில் கலியனை கொல்லப் போனபோது கலியன் மன்னன் பரிக்ஷித்திடம் சரணடைந்து கெஞ்சினான். சரணடைந்தவர்களை கொல்லக்கூடாது என்கின்ற தர்ம நியதியை மீறாதவர் மன்னன் பரீக்ஷித் என்பதினால் கலியிடம் அவன் சூதாட்டம், குடி, விபச்சாரம் மற்றும் விலங்குகளை வதைக்கும் இடங்கள் என நான்கு இடங்களில் வசிக்க அனுமதித்தார். ஆனால் கலியன் மேலும் வேண்டிக் கொண்டதினால் அவனை தங்கம் உள்ள இடத்திற்கும் சென்று தங்க அனுமதித்தார். கலியின் உயிரை மரணத்திலிருந்து காப்பாற்ற விதி ஏன் அப்படி ஒரு நிலையை உருவாக்கியது என்றால், நான்கு யுகங்களின் ஒவ்வொரு நான்காவது யுகமும் கலியின் பிடியில் இருக்கும்.   ஒவ்வொரு முறை தோன்றும் அந்த கலி யுகத்தில் கலியின் தாக்கத்தை   ஒரு முடிவிற்கு கொண்டு வந்து மீண்டும் சத்ய யுகத்தை மலர்ச்சி செய்ய மஹாவிஷ்ணு ஒரு அவதாரம் எடுப்பார் என்பதாக பரமாத்மாவின் தெய்வ நியதி இருந்தது. அதனால்தான் எப்படி அகிலத்திரட்டு நூலில் குறோணி எனும் அசுரனின் ஆறு சதை பிண்டங்களும் எப்படி அடுத்தடுத்து பிறப்பு எடுத்தன என்பது விளக்கப்பட்டு உள்ளதோ அதை போலவேதான் ஒரு கலி யுகத்தில் மரணம் அடையும் கலி அதே ராக்ஷஸ, தீய குணங்களுடன் இருக்குமாறு மீண்டும் மீண்டும் மறு பிறப்பு தரப்படுகின்றது.  இந்த தெய்வ நியதியும் நமக்கு விளங்காத தெய்வ விளையாட்டு ஆகும். 

கலியுகத்தில் பிறப்பு எடுக்கும் முன் நள தமயந்தி வாழ்ந்திருந்த காலத்தில் புஸ்கரா எனும் மானிட உருவம் எடுத்த கலி அவர்களை வாழ விடாமல், பல கொடுமைகளையும் தீமைகளையும் செய்தார். அடுத்து மஹாபாரத யுகத்தில் துரியோதனனாக பிறப்பு எடுத்து செய்யக் கூடாத தீமைகளை செய்து தான் பின்னிய வலையில் தானே வீழ்ந்து, பகவான் கிருஷ்ணர் நடத்திய நாடகத்தில் அழிந்தார் என்பதாக அவரைக் குறித்துக் கூறுகின்றார்கள். அது மட்டும் அல்லாமல் ராவணன் போன்ற முக்கிய அசுரனாகவும் அவர் அவதாரம் எடுத்துள்ளார், மேலும் அய்யாவழி நூலில் கூறப்பட்டு உள்ள குரோனியைப் போன்றவர் ஆகும்.

கலியுகத்தில் கலியின் தாக்கம் எவ்வாறாக இருக்கும் என்பது குறித்து கல்கி புராணத்தில் கீழ் கண்டவாறு கூறப்பட்டு உள்ளது.   ‘கலியுகத்தில் கலி புருஷன் அனைத்து மக்களின் மனதை யும் தீய எண்ணங்களைக் கொண்டவர்களாக மாற்றி விடுவார். கலியுக மக்கள் ஒருவருக்கொருவர் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வதையும், சச்சரவுகளை ஏற்படுத்திக் கொள்வதையும்   வழக்கமாக கொண்டிருப்பார்கள். அவர்கள் தங்கள் வம்சத்தினரை ஏற்பாடு பட்டாவது உயர் நிலையில் வைக்க முயல்வார்கள்.  தத்தமது தலைமுடியை அழகுபடுத்திக்க கொள்வதிலும், சிறந்த ஆடைகளை அணிந்து கொள்வதிலும், விலையுயர்ந்த ஆபரணங்களால் தங்களை அலங்கரித்துக் கொள்வதிலும் அதிக நேரத்தை வீணடித்துக் கொள்வார்கள். கலியுகத்தில், செல்வந்தர்கள் அதிகமாக மதிக்கப்படுவார்கள்.   வட்டிக்குக் கடன் கொடுத்து செழுமையாக வாழ்பவர்கள் சமூகத்தின் தூண்கள் என பாராட்டப்படுபவர்களாக இருப்பார்கள். ஆன்மீகவாதிகள் பொருளாசை மற்றும் பிற ஆசைகளில் ஈடுபடுவார்கள் என்பதினால்    முதியோர்களையும் ஆன்மீகத் தலைவர்களையும் சற்றும் அச்சம் இன்றி மக்கள் இழிவுபடுத்திப் பேசுவார்கள். 

கலியுகத்தில் உலக நிலைமை எப்படி இருக்கும் என்றால் நாட்டை ஆள்பவர்கள் கொடுங்கோல் ஆட்சி புரிவார்கள். தர்மம் அழிந்து அதர்மம் தலை தூக்கும். குடும்பங்கள் மீது வாழ முடியாத அளவிலான வரிச் சுமைகள் இருக்கும். தெய்வ நம்பிக்கைகள் குறைந்து கொண்டே போகும். இறை வழிபாடு தவறான முறையில் நடைபெறும். ஆலயங்கள் சூறையாடப்படும், மக்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு இருக்காது, கற்பு சூறையாடப்படும். பாலின ஒழுக்கமின்மை சமூகத்தில் ஏற்கப்படும், ஒருவரை ஒருவர் ஏமாற்றுதல் அதிக அளவில் இருக்கும், சூது, வாது, பொய்மை, மற்றும் பொறாமை போன்றவை ஓங்கும். அரசே மக்களை துன்புறுத்துவார்கள், மக்கள் உணவுக்காக வேறு நாடுகளுக்கு இடம் பெயர்வர். அதனால் கலிகாலத்தை இருண்ட காலம் எனலாம்.

பூமியானது அக்கிரமமான நிலை அமையக் காரணமாக இருப்பவனே கலி புருஷன் என்கின்றார்கள். தேவலோகத்தில் இருக்கும் கலி புருஷனும் தெய்வீக சக்தி போன்ற தீய சக்திகளை உள்ளடக்கிக் கொண்டுள்ள ஒரு கணம்தான். அவரை படைத்ததும் பிரபஞ்சத்தை உருவாக்கிய அதே பிரும்ம தேவன்தான் என்கின்றார்கள். அதன் காரணம் யுக யுகமாக வெளிப்படவேண்டிய யுகங்களின் கடைசியில் எழும் கலியுகம், கலியின் பிடியினால் சீரழிந்த நிலையை எட்டியதும், அதன் ஆயுள் முடிவில் அது அழிக்கப்பட்டால்தான் அடுத்து சத்திய யுகம் தோன்ற முடியும். பிரபஞ்சத்தில் நடைபெறும் இறைவனது நாடகமும் நடந்து கொண்டிருக்க வேண்டும், யுக யுகமாக கலியுகமும் தோன்றிக் கொண்டே இருக்கும், கலி புருஷனும் மஹா விஷ்ணு பகவானால் அழிக்கப்பட்டுக் கொண்டே இருப்பார்   எனும் இந்த தெய்வ தத்துவத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியாது, அது நமது எண்ணங்களுக்கு அப்பாற்பட்டது ஆகும்.

கலி புருஷன் ஒருவரால் மட்டும் எப்படி உலகெங்கும் அராஜக நிலையை கொண்டு வர முடியும்? கலி புருஷன் என்பவன் யார்?

தற்போது நடப்பது கலிகாலம் என்கின்றார்கள். பகவான் கிருஷ்ணர் மறைந்த பின்னர் கலியுகம் துவங்கி விட்டதாக ஸ்ரீமத் பாகவதப் புராணத்திலும் மேலும் சில புராணங்களில் குறிப்பு உள்ளதாக கூறப்படுகின்றது. அவற்றை எல்லாம் படிக்கும்போது இன்றைய காலகட்டத்தில் இருந்து சுமார் 5200 ஆண்டுகளுக்கு முன்னர், பகவான் கிருஷ்ணரின் மறைவிற்கு பிறகு கலி யுகம் பிறந்திருக்க வேண்டும் என்பதினால் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கும் தற்காலம் கலியுகத்தின் 5200 வது ஆண்டாகும் என நினைக்கத் தோன்றுகின்றது.

எப்படி தெய்வங்கள் தமது உடலில் இருந்து தெய்வீக சக்திக் கதிர்களை வெளிப்படுத்துகின்றதோ, எப்படி தெய்வீக சக்திக் கதிரலைகள் வீசும் ஆலயங்களில் செல்லும் மக்களின் மனம் அமைதி அடைகிறதோ, அதை போலவேதான் கிருஷ்ண பகவானால் படைக்கப்பட்டதாக கூறப்படும் கலி புருஷன், தனது உடலுக்குள் இருந்து மனித எண்ணங்களைக் கட்டுப்படுத்தும் எதிர்மறைப் பண்பு நிறைந்த கதிரலைகளை கடலலைகளைப் போல வெளிப்படுத்திக் கொண்டே இருப்பார்.  அந்த சக்தி வாய்ந்த எதிர்மறை எண்ண கதிரலைகள் மக்களை சென்றடைந்து, அவர்கள் மனதை ஆக்ரமித்துக் கொண்டு, அவர்களது சிந்தனைத் திறன்களை தீய ஆதிக்கம் கொண்டவைகளாக மாற்றும்போது, முதலில் கூறிய அனைத்து தீய சூழ்நிலையும் ஏற்பட்டு கலியுகம் எனும் இருண்ட காலத்திற்கு உலகம் தள்ளப்பட்டு விடுகின்றது.

தெய்வ சக்திகள் எப்படி நமது கண்களுக்கு புலப்படாமல் வெளிப்படுகின்றதோ, அதை போலவே பூமியும் அந்தந்த யுகத்திற்கு ஏற்ற வகையில் குணாதிசயங்களை வெளிப்படுத்திக் கொண்டே இருக்கின்றது. கலியுகத்தில் பூமியினால் வெளிப்படுத்தப்படும் தீய குணாதிசயங்களை கிரகித்துக் கொள்ளும் மானிடர்களின் குணாதிசயமும் தீய எண்ணங்களைக் கொண்டதாக ஆகி விடுகின்றது. இதனால்தான் கலியுகம் பாவ பூமியாகி, குற்றங்கள் பெருகிக் கொண்டே இருக்கும்.     

அதே சமயம் பிரபஞ்சத்தில் மக்களை காத்து ரட்ஷிக்க அனுப்பப்பட்டு உள்ள தெய்வங்களும்   தத்தமது தெய்வீகக் கதிர்களை வெளிச் செலுத்தியும், பல ஆன்மீக குருமார்களை தோற்றுவித்து, அவர்கள் மூலம் தொடர்ந்து நேர்மறை எண்ணங்களைக் கொண்ட கதிரலைகளை உலகெங்கும் பரவச செய்து மக்களை ஆன்மீக வழிமுறையில் செல்ல வழி வகுத்தவண்ணம் கலி புருஷனின் எதிர்மறை அலைகளை கட்டுப்படுத்தி வருவார்கள். 

இப்படியாக கலியுகத்தில் தெய்வங்களின் நேர்மறை எண்ணங்களை கொண்ட கதிரலைகளும், கலி புருஷனின் எதிர்மறை எண்ணங்களைக் கொண்ட கதிரலைகளும் ஒன்றுடன் ஒன்று நமது கண்களுக்கு புலப்படாத வகையில் யுத்தம் புரிந்த வண்ணம் இருந்தாலும், பிரும்மன் வழி வகுத்துள்ள நியதியின்படி கலி புருஷனின் கதிரலைகளே கலியுகத்தில் பெருமளவு வெற்றி பெற்று வரும் என்பதில்தான் இறைவனின் சூட்சமம் உள்ளது. 

பரம்பரை பரம்பரையாகப் கூறப்பட்டு வரும் வாய்மொழிக் கதைகளையும், அனைத்து நூல்களையும் படித்தால், பிரபஞ்சத்தை இயங்கத் துவங்கிய பொழுதே பிரும்ம தேவர் சத்ய, திரேதா, துவாபர மற்றும் கலியுகம் என்று நான்கு யுகங்களை படைத்து ஒவ்வொரு யுகமும் குறிப்பிட்ட குணங்களைக் கொண்டதாக இருக்கும் எனும் நியதியை நிர்ணயித்தார்.  சத்ய யுகத்திலே மக்கள் தார்மீக நெறிகளைக் கடைப் பிடித்தவண்ணம் நேர்மையான குணாதிசயங்களோடு இருப்பார்கள் என்றும் திரேதா யுகத்தில், சத்திய யுகத்தில் நிலவிய உண்மை மற்றும் நேர்மையில் நான்கில் ஒரு பங்கை பிரபஞ்சம் இழக்கும் என்றும் துவாபர யுகம் தோன்றும்போது அதில் சத்ய யுகத்தில் இருந்த நேர்மை மற்றும் தார்மீக வழிமுறை பாதி கூட இருக்காது என்றும் கலியுகமோ நான்கில் ஒரு பங்கு மட்டுமே நேர்மையை கடைபிடிக்கும் மக்களைக் கொண்டதாக இருக்கும் எனவும் நியதியை நிர்ணயித்தார். அதாவது கலி யுகம் என்பது பாபம் செய்தவர்களின், தீய எண்ணங்களைக் கொண்டவர்களது பூமியாக இருக்கும்.

எதனால் கலியுகத்தின் தன்மையை தீய எண்ணங்களைக் கொண்டவர்களது பூமியாக அமைத்தார் என்றால் நேர்மை, தர்மம், மற்றும் உண்மை என்பவை கொண்ட பூமி, மற்றும் தீமைகளும் பாவங்களும் நிறைந்த பூமி என இரண்டு குணாதிசயங்களை கொண்ட பூமியில் வாழ்ந்து, நன்மை மற்றும் தீமை என்பவற்றின் குணாதிசயங்களை புரிந்து கொண்டால் மட்டுமே வாழ்க்கை என்பது என்ன என்பது விளங்கும் என்பதை யுக யுகமாக அவதரிக்கும் உலக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அப்படி ஒரு நிலைமையை வைத்து இருந்தார். ஒவ்வொரு கலி யுகத்திலும் பல்வேறு தெய்வ அவதாரங்கள் தோன்றி வந்தாலும் அவர்களால் கலி புருஷனின் செயலை தடுத்து முடியாத நிலையின் உச்சக் கட்டத்தை அடையும்போது- அதாவது கலியுகத்தின் ஆயுள் முடிய வேண்டிய கால கட்டத்தில், வாழ முடியாத நிலையில் தள்ளப்பட்டு விட்ட மக்களுக்கு அபயம் அளிக்கும் வகையில் மஹாவிஷ்ணு கல்கியின் அவதாரமாக ஒரு அரசன் போன்று தோன்றி, குதிரை மீதேறி கையில் வாள்களுடன் வந்து கலி புருஷைக் கொன்று, கலியுகத்தை முடிவுக்கு கொண்டு வருவார், கலியுகத்தை அழித்து சத்ய யுகத்தை மலரச் செய்வார்.  தற்போது உள்ள கலியுகம் இதோடு முடிந்து விடாது. ஒவ்வொரு யுக சக்கரத்தின் நான்காம் சுற்றிலும் அது மீண்டும் மீண்டும் தோன்றி, அழிந்து கொண்டுதான் இருக்கும். இதுவே தெய்வத்தின் ஒரு லீலை ஆகும். 

இதை ஆன்மீகப் பார்வையில் கூறுவதென்றால் கலியுக சீர் குலைவு என்பது நமது கண்களுக்குப் புலப்படாமல் நடைபெற்றுக் கொண்டு வரும் தெய்வ மற்றும் அசுரன் மூலம் வெளிப்படும் கதிர் அலைகளின் யுத்தமே ஆகும்.  இதைத்தான் சாமான்ய மக்களுக்கும் புரியும் வகையில் இருக்க வேண்டும் என்பதற்காக கலி புருஷன் மற்றும் கல்கி அவதாரம் என்ற பெயர்களுடன் உலகில் உலாவரும் மானிடர்களாகக் காட்டி, உருவகக் கதைகளை கூறி மக்களுக்கு புரிய வைத்தார்கள். உலகில் அதர்ம வழியில் அராஜக ஆட்சி புரிந்து வரும் ஆட்சியினரை கலி புருஷர்கள் என்பதாகக் கூறலாம். மக்களை ஆன்மீக வழியில் ஈர்த்து நல்வழிபடுத்தும் ஆன்மீக மஹான்கள் மற்றும் மானிடர்களுக்கு ஆன்மீக போதனைகளை செலுத்த மானிட உருவில் அவதார புருஷர்களாக தோன்றும் தெய்வங்களை கல்கி அவதாரத்தின்   நிழல் உருவங்கள் என்பதாகக் கூறலாம். இயற்கையினால் பேரழிவு மற்றும் செயற்கை பேரழிவு ஏற்பட்டு, உலக   நாடுகள் பலவும் அழிந்து, மக்களும் மடிந்து போகும்போது, அவற்றினால் சலிப்பு அடையும் மக்கள் ஆன்மீக வழிமுறைகளில் செல்லத் துவங்கி மீண்டும் புதுப் பொலிவுடன் புதிய உலகை நிர்மாணிப்பார்கள். அதையே சத்ய யுகத்தின் துவக்கம் என்பார்கள். 

சத்ய யுகத்தின் கால அளவு 1,728,000 ஆண்டுகள் என்றும், திரேதா யுகத்திற்கு ஆயுள் 1,296,000 என்றும், துவாபர யுகத்தின் ஆயுள் 864,000 என்றும் இறுதியாக நான்காவது யுகமான கலியுகத்தின் ஆயுள் 432,000 ஆண்டுகள் என்றும் பிரும்ம தேவர் நிர்ணயித்தார். அந்த நான்கு யுகங்களும் சேர்ந்த சுழற்சியை சதுர் யுகம் என்றும், 71 சதுர் யுக சுழற்சியை மன்வந்தர அல்லது கல்ப என்றும் கூறுகின்றார்கள். கல்பத்தில் பரப்பிரும்மன் படைத்த அதே பிரபஞ்சத்தை அனைத்து படைப்புக்கள் மற்றும் பிரும்ம தேவர் முதல் அனைத்து தெய்வங்களையும் தன்னுள் இழுத்துக் கொண்டு பிரபஞ்சத்தை அழித்தப் பின் மீண்டும் ஒரு புதிய பிரபஞ்சத்தை வெளிப்படுத்துகின்றார்.  அதிலும் கலியுகம் என்பது இருக்கும் என்பதாக புராண நூல்கள் விவரிக்கின்றன. இப்படியாகவேதான் பிரபஞ்சம் மீண்டும், மீண்டும் தோன்றி மறைந்து கொண்டே உள்ளது.

Kali Yuga

-Santhipriya-

There is no clear definition in the Puranas on who Kali or Kali Purush is, but lots have been said about Kali Yug. Shrimad Bhagavata and few other Hindu texts however define the features of Kali as Dark complexioned, dog like faced personality with a long nose, gnashing the protruded teeth, long bushy hair, shining gold and red clothes adorning the waist and gold jewelries all over his body. He has a long tongue and an ugly face and smells rotten when go near him.

Kali, in spiritual view refers to dark period in the universe. Otherwise the general meaning of Kali is blemish, fight, arguments (disharmony in the society) in many ways and meanings. The age of Kali is called  Kali Yuga because it would be the land of sinners, evil minded, dishonest folks and in general land (universe) in chaotic condition.

Kali according to some scriptures is feminine Gana while some viewed him as male. Kali is known to be possessed with Demonic and Asuric qualities and emerged after Lord Krishna left the universe, but not before he got cursed that she/he would live till the end of time in a miserable state on this earth. This is the reasons why the effects of Kali is disastrous.

According to local lores Kali is neither she, nor He, further not a demon, or Gana, instead is an invisible Pagan meaning she/he has no religion (The original pagans were followers of an ancient religion that worshiped several gods which is shortly called polytheistic) and enjoy in sensual pleasures and material goods. He is attached to irreligious deeds like playing dice like games, enjoying with prostitutes and gold merchants. Kali Purush is the personified form of all the negatives that characterize the Age of Kali. He was born to the demons Krodha (Anger) and Himsha (Envy). He, along with his entire clan, drives the irreligious mind-set among the people of Kali. This is precisely the reason why irrespective of caste, creed or religion, poor or rich every one of the folks in Kali Yuga are affected by the influence of Kali in Kali Yuga in one way or the other thus making life miserable in many ways.

One may wonder who has given him so much power. It is said in our scriptures, once King Parikshit, the grandson of Arjuna found a cow (personification of dharma) getting tormented by Kali. So immediately king Parikshit went to the cow’s defense and not only subdued Kali, but was about to kill him. Instantly Kali surrendered and pleaded for mercy. Therefore king Parikshit spared Kali and gave him four options to stay: places of gambling, drinking, prostitution and animal slaughter. When Kali begged for some more place, king Parikshit allowed him to live in the place of gold. King Parikshit could have easily killed Kali, but did not do so because he followed the rules of dharma strictly- not to kill the one surrendered. Why destiny spared the life of Kali from death is because the Supreme had designed that every fourth of the Yugas would be gripped by the effects of Kali and Lord Vishnu would also manifest to bring an end to Kali’s influence to usher in the new era called Satya Yuga, hence Kali was not once for all killed by King Parikshit and Kali made to meet death at the hands of Lord Vishnu and reborn again and again afresh at the beginning of Kali Yuga similar to how Kroni’s flesh pieces took birth one after the other in Akilathirattu.

Before taking birth in Kaliyuga, he had taken birth in the universe in the name of Pushkara and with his evil acts gave endless tortures to Nala and Damayanti couple to the extent they could not lead a peaceful life. He is also said to have been born as Duryodhana who met his death, getting caught in the web of his own evil acts and killed by the act of Lord Vishnu who was in human form as Lord Krishna. He has also incarnated as prominent monsters, such as Ravana, and is similar to Kroni, who can be considered his Ayyavazhi mythological counterpart.

The below excerpt from the Kalki Purana describes the actions of people of Kaliyuga as a consequence to the actions of Kali. ‘Kali Purusha will reign the entire age of Kali and would continue to pollute the minds of people. The people of Kali-yuga would be accustomed to quarrelling and fight amongst themselves.  They may go to any lengths to groom their hair, wear the best of clothes, and decorate themselves with costly ornaments. In Kali-yuga, a person with a lot of money would naturally be respected as a great soul. If a person earns his livelihood by lending money on interest, he would be considered a pillar of society. The glorified souls and religious heads of Kali-yuga would be attached to home and property. In Kali-yuga, people will blaspheme spiritual masters or other elderly person without hesitation.

The nations would be ruled with tyranny. Dharma would perish and Adharma would be rule of the land. Temples would be looted, ritualistic practices would be abandoned and worship done as each one wished. There would be no security to the lives of the folks and women would be the targets to dishonor (Rape). Gender immorality would be accepted in society, cheating would be order of the day. Gambling, disharmony, lies, and jealousy would be rampant. The government would persecute the folks. Enormous tax burdens and difficult to survive would force folks to flee the land in search of newer places. Therefore the period of Kali is called the period of darkness or land of anarchy’.

The one who would be responsible for spreading such anarchy in the Kali Yuga is called Kali Purush who is also a Gana from deva Loga but possessed with certain evil powers. He too is reportedly created by the creator who emerges in the last of the Yugas in the cycle of Yugas, but getting killed to enable to dawn Satya Yuga again for comfort of the folks in the universe and in furtherance of the divine drama in play in the universe. This divine philosophy of emergence of Kali Yuga in the Yuga cycles and Kali getting killed by Lord Maha Vishnu too is difficult to understand and stay beyond our comprehension.

How does Kali Purush bring disaster all over the universe at the same time and who is Kali Purush?

There is a general perception that the present period is part of Kali Yuga which has commenced after Lord Krishna left the space. This is stated so in Sreemath Bhagavata Purana and other Hindu texts of yester centuries. If what has been stated is correct, then we can safely assume that we are in the 5200th cycle of Kali Yuga as Lord Krishna reportedly shed his body and disappeared from the land 5200 years ago from now.    

Similar to how the divine positive energies are released by the divines and how in the temples the divine energies radiated by the divines calm down the minds and chill down the feelings and emotions of the worshipers, Kali Purush, reportedly created by Lord Krishna before he departed the space, release from his body negative energy rays like tidal waves to corrupt the mind and heart of the folks which in turn make them display acts negative in nature thus creating an foul atmosphere all over the universe as stated in the initial paras.  

Just as Kali Purush radiate negative rays, the earth too on her part release negative waves specific to Kali Yuga to ensure that the folks in the Yuga absorb them and behave accordingly. Hence the Kali Yuga which dawns at the end of each of Yuga cycles would be evil dominated land.

At the same time the divines who have been sent to the universe to protect the folks too would continue to emit their own positive divine rays, to counter the negative energy rays of Kali Purush absorbed by the folks. Besides directly doing it, the divines also create several spiritual masters to bring the distracted folks back into the fold of spirituality with positive sermons and divine acts.

Thus in the Kali Yuga continuous war goes on between the negative rays released by the Kali Purush and the positive divine rays released from divines who remain invisible, as part of the pre-determined action plan of Lord Brahma. In Kali Yuga ultimately Kali Purush gains the upper hand in the unequal fight between divine and negative rays for mysterious reasons of the Supreme.

If we read the texts and oral stories transmitted by generations, it would become clear that while activating the universe, Lord Brahma foreknew that the moral characteristics of the folks may decline from good to worse in each of the Yugas and therefore imbibed the qualities of honesty and truth as the moral characteristics of the folks who were created in the Satya Yuga. In the Treta Yuga, the universe would lose one-fourth of the truth and honesty that prevailed in Satya Yuga. Dwapara Yuga would lose further one-half of honesty compared to Satya Yuga and Kali Yuga would be left with only one-fourth of honesty, the simplest expression of Kali Yuga would be evil dominated land where dishonesty and chaos would have demolished honesty and truth because of the Yuga specific nature.

The Kali Yuga was set as evil dominated land in order to facilitate the folks experience marvelous atmosphere to live in and experience the awful atmosphere of hell.  In each of the Kali Yuga, even the presence of several divines in the universe initially fails to stem the tide of evilness which when reach its peak, Lord Mahavishnu reportedly manifest in the form of Kalki- again a King like figure sitting on a white horse with swords in hand to kill Kali Purush to end the Kali Yuga and pave way for the dawn of Satya Yuga. Therefore where we live is not the end of Kali Yuga, it would continue to dawn at the end of every Yuga cycle as drafted in the divine play.  

With simplified metaphorical stories, the spiritual masters explain this phenomenon – fight between divine energy rays and negative energy rays of Kali Purush- as  fight between Evil asura Kali purusha and Lord Kalki in human form even though they may not be seen by folks in human form. The spiritual masters who preach the folks on the evil effects of Kali are to be considered as the shadow forms of Lord Kalki in the universe and those of the rulers who are tyrants and keep their folks under greatest stress are considered as ambassadors of Kali Purush. How then the end of Kali Purush happen? Catastrophic loss all over the nations due to the ill effects of Kali causing atomic wars, biological wars with deadly germs, internal sabotage causing huge destruction of properties and death of folks in thousands and beyond, frequent calamities of nature destroying the nations all of which continue to happen one after the other in short intervals. Frustrated with such developments, the folks would turn spiritual and raise up to build a new nation and regenerate the land thereby signaling the end of Kali Yuga.

Lord Brahma set 1,728,000 years for the first Yuga called Satya Yuga, 1,296,000 for the next Yuga called Thretha Yuga, 864,000 for the third Yuga called Dwapara Yuga and finally the fourth Yuga called Kali Yuga was assigned 432,000 years.  All the four Yugas would be called as Chathur Yugas and seventy one blocks of Chathur Yugas to be called as Manvantara. According to Hindu cosmology at the end of seventy one Kali Yugas or seventy one Manvantaras which is called a  Kalpa, Lord Shiva  destroy the universe when the divines including Lord Brahma and other creations merge into Parabrahman’s body and disappear. After dissolution of the Universe, Parabrahman would once again recreate the cosmos along with Lord Brahma who would as before re-create the universe. This is a recurring cycle of cosmic creation.