ஆலமரத்து அடியில் கேட்ட சக்தி தேவியின் கதைகள் -25

குஜராத்தில் சக்தி தேவியான

மெல்டி தேவியும்

அவளுடைய அதிசய ஆலயமும் 
சாந்திப்பிரியா 

குஜராத் மாநிலம் சக்தி வழிபாட்டுக்கு பிரசித்தி பெற்ற இடம். அங்கு சக்தி தேவியை பல ரூபங்களில் வழிபடுகிறார்கள். அப்படிப்பட்ட சக்தி தேவியில் ஒருவளே மெல்டி மாதா எனும் தேவி. மெல்டி மாதாவை செளராஷ்டிரத்தில் தென் பகுதியில் உள்ள மக்கள் மிக அதிகம் பூஜிக்கின்றார்கள். மெல்டி மாவுக்கு நிறைய ஆலயங்கள் குஜராத்தில் உள்ளன. மெல்டி மாதா யார்?

ஒரு முறை அமராசூர் என்ற அசுரன் அனைவரையும் , முக்கியமாக தேவர்களை மிக அதிக அளவில் துன்புறுத்தி வந்தான். அவன் பல அறிய வரங்களைப் பெட்டரு இருந்ததினால் அவனை தேவர்களால் வெற்றி கொள்ள முடியாமல் தேவியிடம் சென்று முறையிட்டனர். தேவி தன்னைக் கொல்ல வருவதைக் கண்டவன் ஓடிச் சென்று அசுத்தமான இடத்தில் ஒளிந்து கொண்டானாம். ஆகவே தேவிகளான சரஸ்வதி, லஷ்மி மற்றும் காளி போன்ற மூவரும் தமது உடலில் இருந்து தூசியை தட்டி அதை ஒரு தேவியாக மாற்றினர். அவளே மெல்டி மாதா என்பவள். அவள் ஒரு ஆண் ஆட்டின் மெது ஏறி அமர்ந்து கொண்டு அந்த அசுரனைத் துரத்த அவன் ஓடிச் சென்று ஒரு இறந்து கிடந்த உடலில் புகுந்து கொண்டு கிடந்தானாம். தேவி அவனை அங்கும் துரத்தி சென்று அதற்குள் புகுந்து அவனை வெளியில் இழுத்துக் கொன்றாளாம். மேலும் அந்த தேவி தேவலோகத்தில் இருந்து நேரடியாக பூமிக்கு வந்தாளாம். ஆலய தேவியின் வாகனம் ஆண் செம்மறி ஆடு . இது தேவியைப்பற்றி வம்சாவளியாக கூறப்பட்டு வரும் ஒரு கிராமியக் கதை.

ஆனால் அந்த தேவி குஜராத்திய மக்களினால் மிகவும் போற்றப்படுகிறாள் என்பதற்கு சாட்சியே பல இடங்களிலும் உள்ள பிரசித்தி பெற்ற அவள் ஆலயங்கள். அப்படிப்பட்ட ஒரு புகழ் பெற்ற ஆலயம் வடக்கு குஜராத்தில் மேஹாசனா என்ற மாவட்டத்தில் உள்ள ரமோசனா என்ற ஊரில் உள்ளது. அதுவே மெல்டி மாதாவின் முதல் ஆலயம் என்கிறார்கள். அங்குள்ள தேவி பக்தர் தாயாபாய் படேல் என்பவருக்கு அவருடைய பதினொன்றாவது வயதிலேயே தேவி காட்சி தந்து தன்னுடைய தீவீர பக்தராக்கிக் கொண்டு விட்டாள். அவர் தன்னுடைய பன்னிரெண்டாம் வயது முதல் அந்த ஆலயத்திலேயே தங்கி சேவை செய்கின்றார். அந்த ஆலயத்தில் உள்ள சிலையை சுமார் நூற்றி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் புஞ்சிலால் லாலாஜி படேல் என்பவரே ராமோசனாவுக்கு கொண்டு வந்துள்ளார். ஆனால் அந்த சிலை எந்த காலத்தை சேர்ந்தது என்பது தெரியவில்லை. சக்தி தேவிகளினால் படைக்கப்பட்டவளே மெல்டி மாதா என்பதை தவிர அந்த மெல்டி மாவைப் பற்றிய புராணக் கதைகளும் அதிகம் இல்லை. அந்த ஆலயத்தில் பல அதிசயங்கள் நடக்கின்றன

‘தவோ’ எனும் விசேஷ பூஜை நடைபெறும்போது தேவிக்கு படைக்கப்படும் பிரசாதமான பூரியை எந்த உலோகத்தினால் ஆனா சட்டியிலும் பொரிக்க மாட்டார்கள். எண்ணையை ஒரு மண்சட்டியில் கொட்டி சூடாக்கிய எண்ணையில் பூரியைப் போட்டுப் பொரித்தப் பின் அதை எண்ணையில் இருந்து தமது வெறும் கைகளினாலேயே எடுப்பார்கள். அப்போது அவர்களின் கைகளில் எந்த தீப்புண்ணும் ஏற்படுவது இல்லையாம். அன்று செய்யப்படும் பூரியை அப்படித்தான் செய்கிறார்கள். அனைவருக்கும் அதை பிரசாதமாகத் தருகிறார்கள்.
இன்னொரு அதிசயம் .

விசேஷ நாட்களில் எடுக்கப்படும் ஆரத்தி தீபத்தை தன்னுடைய வெறும் உள்ளங் கையில் ஏற்றி வைத்துக் கொண்டே தயாபாய் படேல் அவர்கள் மாதாஜிக்கு ஆரத்தி எடுக்கின்றார்.

மூன்றாவது என்ன எனில் ஆலயத்தில் அனைத்து விதமான யாகங்களையும் செய்யும் வகைக்கு ஏற்றது போல சிறியது முதல் பெரிய அளவில் ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இப்படிப்பட்ட காட்சியை வேறு எங்கும் காண இயலாது.

ஆலயத்தில் அமைக்கப்பட்டு உள்ள மங்கள முக்கோணத்தில் ஒரு ஆலமரம் உள்ளதாம். அந்த மரத்தை சுற்றியவண்ணம் தமக்கு நன்மைகள் தருமாறு தேவியை வேண்டுவார்களாம்.

ஆலய விலாசம்

SHRI MELADI MATAJI MANDIR
RAMOSANA
TA&DIST :-MEHASANA
NORTH GUJARAT
INDIA
PIN :- 384002
PHONE:- 9824073850 (DAHYABHAI PATEL)

( இந்த ஆலய செய்தியை பிரசூரித்துக் கொள்ள அனுமதி தந்த அவர்களது http://www.meladidham.org இணைய தளத்துக்கு நன்றி )