இராகு ஆலயம்
திருநாகேஸ்வரர்
திருநாகேஸ்வரர்
சாந்திப்பிரியா
வழி : புதன் ஆலயத்தில் இருந்து மீண்டும் மெயின் ரோட்டிற்கு வந்து (SH 113) அதே சாலையில் வலப்புறம் திரும்பி குன்றத்தூரை நோக்கிச் செல்ல வேண்டும். அதில் சென்றால் இடதுபுறம் சேக்கிழார் ஸ்கூல் மற்றும் தேவி மூகாம்பிகை ஆலயம் போன்றவை வரும். அடுத்து குன்றத்தூர் மெயின் பஸ் நிலையம் வரும். அங்கு சென்று பக்கத்து தெருவில் திரும்ப திரு நாகேஸ்வரர் எனும் இராகு ஸ்தலத்தைக் காணலாம். யாரைக் கேட்டாலும் கூறுவார்கள்.
வரலாறு:-
குலோத்துங்க சோழன் தனது அரச சபையில் மிக்க புத்திசாலிகளையும், அறிவாளிகளையும்தான் வைத்தக் கொள்வாராம். அவர் அறிவானிகளைக் கண்டால் அவர்களை அழைத்து அவர்களுடைய அறிவை சோதிப்பது உண்டாம். அப்படிப் பட்ட நிலையில்தான் கவிஞர் சேக்கிழாரைப் பற்றி மன்னன் கேள்விப்பட்டார்.அவருடைய அறிவுத் திறனைக் கண்டு தம் அரசில் அவரை அமைச்சராக சேர்த்துக் கொண்டார்.
இராகு பகவான் தனி மனிதனின் ஆத்ம பலத்தை பெருக்கி வெற்றிகளைத் தருபவர். ஆத்ம பலம் இருந்ததினால்தான் அவரால் தேவர்களுக்குத் தெரியாமல் அமிருதத்தைக் கூட சிறிது உண்டு தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முடிந்தது. இறவா வரம் பெற முடிந்து. அதனால் ஏற்பட்ட விவகாரத்தினால் உடலை இழந்து பாம்பு உடலை கேது மூலம் பெற்று வாழ வேண்டி இருந்தது. சேக்கிழாரும் ஆத்ம பலம் பெற்றவர்ää தனி மனிதரானாலும் பல வெற்றிகளை தனியாகவே பெற்றவர். அதனால்தான் அறிவு ஜீவியான அவரால் சோழ மன்னனின் எண்ணத்தில் கூட வெற்றி கொள்ள முடிந்தது.
இத்தகைய தன்மைகள் இராகு பகவானிடம் இருந்ததினாலும், அந்த மண்டலத்தில் ஆலகால விஷத்தை உண்டப் பின் உறங்கிய சிவபெருமான் கண் திறந்தபோது அனைத்து தேவர்களுடன் ஒன்று சேர்ந்து அங்கு கேது பகவானுடன் வந்து சிவபெருமானை இராகு பகவான் வணங்கி இருந்ததினாலும் அந்த ஆலயத்தில் சிவபெருமான் நாகேஸ்வரரான இராகு பகவானாகவே இருந்து பக்தர்களுக்கு அருளாசிகளை தந்தவண்ணம் இருக்க வேண்டும் என வேண்டிக் கொண்டு சேக்கிழார் அந்த ஆலயத்தை நிறுவி உள்ளார்.ஆலயத்தின் ஸ்தல விருஷ்சம் செண்பக மரம் உள்ளது. பார்வதி காமாட்சி அம்மனாக காட்சி தந்து கொண்டு அருள் பாலித்து வருகின்றார். இராகு தோஷம் உள்ளவர்கள் இந்த ஆலயம் சென்று இராகுவை போற்றி வணங்கினால் அவர் மூலம் தடைபெறும் காரியங்கள் அனைத்தும் விலகி நன்மைகளை அடைவார்களாம்.