நவகிரகங்களை நாம் தினமும் துதித்து வணங்குவத்தின் மூலம் நமக்கு அந்தந்த நவகிரக நாயகர்களினால் ஏற்படும் தொல்லைகள் குறையும். அந்த ஒன்பது நாயகர்களும் அவர்களுக்கு இட்ட வேலைகளையே செய்கின்றார்களே தவிர வேண்டும் என்றே எவருக்கும் கெடுதல்களைப் புரிவது இல்லை. நாம் பூர்வ ஜென்மத்திலும், இந்த ஜென்மத்திலும் செய்துள்ள, செய்து வரும் பாவக் காரியங்களுக்கு ஏற்ப நமக்கு விதிக்கப்பட்டு உள்ள தண்டனையையே அவர்கள் தருகிறார்கள்.
நாம் செய்துள்ள பூர்வ ஜென்ம பாப, புண்ணியங்களின் கணக்கின்படி நமக்கு ஒரு குறிப்பிட்ட பிறப்பு தரப்படுகின்றது. நமக்கு கொடுக்கப்பட்டு உள்ள அப்படிப்பட்ட பிறப்பில் இன்ன காலத்தில் இன்ன தண்டனை, கீர்த்தி, சோதனை, போன்றவற்றை பெற வேண்டும் என முடிவு எடுக்கப்படுகின்றது. அதைத்தான் ஜாதகமாக கணித்து நம் ஜாதகத்தில் அந்த கிரக தோஷம் உள்ளது, இந்த கிரக தோஷம் உள்ளது எனக் கூறுவார்கள். கிரக தோஷம் என்ன என்றால் குறிப்பிட்ட தண்டனையை தரக்கூடிய நவகிரக நாயகர்கள் தரும் தண்டனை காலத்தையே கிரக தோஷம் என கூறப்படுகின்றது. அது மன வேதனை, பண விரயம், சரீர கஷ்டங்கள், தேவையட்ற அலைச்சல், கிடைக்க வேண்டியது கிடைக்காமல் இருப்பது, பொருள் நாசம் போன்றவை.
அப்படிபட்ட தண்டனைகளை தரவல்ல நவகோள நாயகர்களினால் அந்தந்த நேரத்தில் தரப்படும் தண்டனையை குறைத்து அளிக்கவும் முடியும். அதற்காகத்தான் நவகிரக தரிசனங்கள், அந்தந்த கிரகங்களுக்கு பீடை பரிகாரம் போன்றவற்றை செய்து அந்த தண்டனையை தரும் நாயகனை வேண்டி தவமிருக்க (தவம் என்பதை இங்கு வேண்டுகோள், விரதம், சுயக் கட்டுப்பாடுகள் போன்றவை என படிக்க வேண்டும்) அந்த வேண்டுகோளை வைக்கும் மனிதர் உண்மையான பக்தியுடன் தன்னை வேண்டுகிறாரா என சோதித்தப் பின் அவர் அதை ஏற்றுக் கொண்டால் அவரே அந்த தண்டனையின் கடினத் தன்மையைக் குறைக்கலாம். இல்லை தம்மை அந்த பாபிகள் வேண்டுவது மனதார அல்ல, மனிதனுக்கு பணம் கொடுத்து ( லஞ்சம்) செய்து கொள்ளப்படும் வேலையைப் போல எவரோ அதை செய், இதை செய் எனக் கூறியதைக் கேட்டு ஒரு வேலையைப் போல செய்ய நினைத்தால், எத்தனை வேண்டுதல்களை செய்தாலும் தண்டனையின் தன்மை குறையாது.
அது மட்டும் அல்ல அப்படிப்பட்ட வேண்டுதல்களை செய்வது உண்மையில் அவரை நம்புவதினால்தானா இல்லை மற்றவர்கள் கூறுகிறார்கள் என லாட்டரி சீட்டு வாங்குவது போல செய்கின்றார்களா என அவர் கண்காணிப்பார். அவ்வப்போது வேண்டும் என்றே சில கடின தண்டனையையும் சோதனைகளையும் தருவார். அதையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து அவரை வழிபட்டால் கிடைக்க உள்ளது நன்மைதானே தவிர வேறு அல்ல. அதே நேரத்தில் கொடும் தண்டனையை அனுபவிக்க வேண்டியவர்கள் எத்தனைதான் வேண்டினாலும் அந்த தண்டனையை ஏற்றே ஆக வேண்டும். கொடும் தண்டனையை கொடுக்க நம்மை நோக்கி வருபவர் முன்னால் – நவகிரக நாயகரிடம்- நாம் கைகூப்பி நிற்கும்போது அவர் மனதில் நம் மீது பரிதாப உணர்வு தோன்றும். அப்போது அவர் தர உள்ள தண்டனையின் வேகத்தின் தன்மையும் குறையும். அப்படி தண்டனை தரும்போது மன உளைச்சலை தாங்கக் கூடிய சக்தி உள்ளவர்களுக்கு மன உளைச்சலை அதிகரித்தும், சரீர உபாதையை தாங்கும் சக்தி உள்ளவர்களுக்கு சரீர உபாதைகளை அதிகரித்தும், பணம் உள்ளவர்களுக்கு பண விரயத்தை ஏற்படுத்தியும் தண்டனைகளின் தன்மைகளை மாற்றி அமைப்பதுண்டு.
அதற்காகத்தான் கிரகப் பரிகாரம் என்ற பெயரில் அவர்களை பல வகைகளிலும் பூஜித்து திருப்பதிப்படுத்துதலும், அவரையே சுற்றி வந்து (நவகிரக பிரதர்ஷனம்) அவரை வேண்டுவதும் நடைபெறுகின்றன. அந்த வேண்டுகோள்களின் தன்மை நியாயமாக, நல்ல உணர்வோடு, பக்திபூர்வமாக இருந்தால் நமக்கு தரப்படும் தண்டனையின் வலி நமக்கு மனதில், வாழ்கையில் ஆழமான காயத்தை ஏற்படுத்தாமல் இருக்க அவர் நிச்சயம் நமக்கு உதவுவார்.
ஆகவே ஒரு குறிப்பிட்ட காலத்தில் மட்டுமே நவக்ரஹங்களை பூஜித்துவிட்டு மற்ற நாட்களில் அவர்களை மறப்பதைவிட தொடர்ந்து அவர்களை நாம் தினமும் வணங்கி வந்தால் நமக்கு வர உள்ள கஷ்ட நாட்கள் வராமலேயே இருக்கும். அதற்காக அந்த ஒன்பது நாயகர்களையும் தினமும் ஒரு முறை உளமார நினைத்து வணங்க மிக எளிய மந்திரம் தரப்பட்டு உள்ளது. அதை தினமும் உச்சரிப்பதின் மூலம் நமது வாழ்கை சிக்கல் இன்றி , பணப் பிரச்சனைகள் இன்றி, தடங்கல்கள் இன்றி சீராகச் சென்று கொண்டு இருக்கும் என்பது நிச்சயம். அனைத்துக்கும் தேவை நம்பிக்கை. தினமும் ஒருமுறை பூஜை அறையில் நின்று கடவுளை நோக்கி நாம் சொல்ல வேண்டிய நவகிரக மந்திரம் கீழே தரப்பட்டு உள்ளது.
க்ராஹனம் அதிராதித்யோ , லோக ரக்ஷண கரகாஹ் விஷமஸ்தன
விஷமஸ்தன சம்பூதம் , பீடம் ஹரது மீ விதுஹ்
பூமி புத்ரோ மகா தேஜோ , ஜகாத பாயக்ரித் சத
விஷ்டிக்ரித் வ்ரிஷ்டி ஹர்த்த ச்ச , பீடம் ஹரது மீ குசாஹ்
உத்பதரூபோ ஜகதம் , சந்த்ரபுத்ரோ மகாத்யுதி
சூர்யா பிரியா கரோ வித்வான் , பீடம் ஹரது மீ புதஹ்
சூரியனாரால் நேசிக்கப்படுபவரில் முதல்வரான புதனே,
பல சீடர்களை தன்வசம் கொண்ட குரு பகவானே
இந்த உலகில் அதி புத்திசாலியாக விளங்குபவரே
நஷத்திரங்கள் மற்றும் கோளங்களுக்கு தலைவனாக உள்ள சுக்ர பகவானே
( அர்த்தம் :- மெல்லச் சென்றாலும், என்றும் பொலிவுடன் இருப்பவரே,
சூரியனின் புதல்வரே, பெரும் உடல் அமைப்பை கொண்டவரே
சிவனைப் போன்ற பெரிய கண்களைக் கொண்ட சனி பகவானே
( அர்த்தம் :- பெரிய தலை மற்றும் கம்பீரமான குரலைக் கொண்டவரே,
பலமான பெரிய பற்களைக் கொண்டவரே
நீண்ட தலை முடியுடன் உலவுகின்ற ராகு பகவானே
( அர்த்தம் :- வண்ணமயமான பல உருவங்களைக் கொண்டவரே
ஒரு முறை அல்ல பல்லாயிரம்முறை எம்மை தூய்மை படுத்துபவரே
பேராபத்துக்களின் உருவமான எம் கேது பகவானே