மதுர காளி அம்மன்
சாந்திப்பிரியா
திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் பெரம்பலூருக்கு தெற்குப் பகுதியில் உள்ள சிறுவாச்சூர் என்ற கிராமத்தில் மதுர காளி அம்மன் ஆலயம். சென்னையில் இருந்து சுமார் 280 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது இந்த கிராமம். இது காஞ்சி பரமச்சாரியாளான ஸ்ரீ சந்திரசேகர ஸ்வாமிகளின் குலதெய்வம் என்கிறார்கள்.
இந்த ஆலயம் உள்ள இடத்தின் மலையின் பெயர் மதிர மலை என்பார்கள். இந்த ஆலயத்தில் உள்ள காளி தேவி ஸ்ரீ செல்லியம்மன் மற்றும் ஸ்ரீ கருப்பஸ்வாமி என்ற இரண்டு காவல் தேவதைகளுடன் இந்த ஊரைக் காத்து வருவதான ஐதீகம் உள்ளது. ஆலயத்தின் தல விருஷம் மதுர மரம். ஆலயம் 1000 அல்லது 1500 வருடங்களுக்கு முற்பட்டது என்கிறார்கள்.
இந்த ஆலயம் குறித்து பல சுவையானக் கதைகள் உள்ளன . ஆனால் அவற்றுக்கு ஆதாரம் இல்லை என்றாலும் வாய்மொழிக் கதையாகவே ஆண்டாண்டு காலமாக விளங்கி வருகின்றது.
ஒரு முறை ஆதி சங்கரர் இந்த மலைப் பிரதேசத்தின் வழியே வந்து கொண்டு இருந்தபோது களைப்பினால் ஒரு மரத்தடியில் இளைப்பாறினாராம். அவருக்கு தாகம் எடுத்தது, ஆனால் சுற்றிலும் எங்குமே தண்ணீர் கிடைக்கவில்லை. அப்போது அவர் தேவியை நினைத்து மனமுருகி வேண்டிக் கொண்டபோது, அங்கு இருந்த மதுர காளியம்மான் அவர் முன் தனது சுய ரூபத்தில் தோன்றி அங்கு ஒரு நீர் ஊற்றை வரவழைத்து அவர் தாகத்தைத் தீர்த்தாளாம். அதன் பின் அங்கேயே அவள் ஒரு நான்கு அடி உயர கல் சிலையாக மாறிவிட, ஆதி சங்கரர் அந்த சிலையை எடுத்து அங்கேயே பிரதிஷ்டை செய்து வழிபட்டாராம்.
இன்னொரு கதையின்படி ஒரு காலத்தில் இந்த மலைப் பிரதேசத்தின் மூன்று ரிஷிகள் வசித்து வந்தார்கள். அவர்கள் அங்கு தாபத்தில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தபோது ஒரு நாள் ஒரு குழந்தை அங்கு அழுதுகொண்டு அனாதையாகக் கிடந்தது. அதை அவர்கள் கருணையோடு எடுத்து வந்து வளர்த்து அறிவு புகட்டினார்கள். அந்தக் குழந்தை நன்கு அவர்களிடம் ஆன்மீகப் பாடம் கற்றுக் கொண்டவுடன், அங்கிருந்து கிளம்பி ஷேத்ராடனம் சென்றுவிட்டது. அந்த நேரத்தில் ஒரு நாள் அந்த மூன்று ரிஷிகளும் அந்த மலையின் (தற்போது ஆலயம் உள்ள இடத்தில்) ஒரு மரத்தில் தேன்கூடாக மாறி விட்டார்களாம். அதற்குக் காரணம் பூர்வ ஜென்மத்தில் அவர்கள் ஒரு முனிவரிடம் பெற்று இருந்த சாபமே. பூர்வ ஜென்மத்தில் அவர்கள் ஒரே குடும்பத்தினர். அந்த மலையில் தேன் எடுப்பவர்கள். ஒரு முறை அவர்கள் அந்த முனிவர் அங்கு தவத்தில் இருந்ததைப் பார்க்காமல் அவர் தவம் இருந்த மரத்தின் மீது இருந்த தேன் கூட்டை கலைக்க அந்த கூட்டில் இருந்த தேன் அந்த முனிவர் மீது வாய் மீது விழுந்து அவர் தவம் கலைந்தது. ஆகவே அவர் அவர்களை தேன்கூடுகளாக மாறி விடுவார்கள் என்றும் பல காலம் பொறுத்து ஒரு சாபத்தினால் அங்கே வந்து குழந்தையாக பிறக்க உள்ள நாரத முனிவர் அவர்களின் சாபத்தைத் தீர்ப்பார் என்றும் சாபமிட்டார். ஆகவே அந்த முனிவர்கள் அந்த மரத்தின் மீதே தேன் கூடுகளாக மாறி அமர்ந்து இருந்தார்கள். அபோது அந்த மரத்தடியில் வந்து இளைப்பாறும் ரிஷி முனிவர்களின் வாயில் ஒரு சொட்டு தேன் விழுமாறு அவை பார்த்துக் கொள்ளும். அதன் காரணம் தமது பூர்வ ஜென்மக் குழந்தை அங்கு வந்தால் அந்த செய்கையை புரிந்து கொண்டு தமக்கு சாப விமோசனம் தரும் என்பதற்காகவே.
இப்படியாக பல ஆண்டுகள் கழிந்த நிலையில் அவர்கள் வளர்த்து ஆளாக்கிய பூத்தார் என்ற பெயர் கொண்ட முனிவராக மாறி இருந்தக் குழந்தை மீண்டும் அங்கு வந்து அவர்களைத் தேடினார். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. அப்போது அந்த மூன்று முனிவர்கள் தேன்கூடாக இருந்த மரத்தின் அடியில் படுத்து இருந்தபோது அவர் வாயில் ஒரு சொட்டு தேன் விழுந்தது. உடனேயே அவர் அந்த செய்கையின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டார். அங்கேயே இருந்த காளியின் முன் தவமிருந்து அவளது அருளைப் பெற்று அவர்களுக்கு சாப விமோசனம் பெற்றுத் தந்தார். ஆகவே இனிமையான தேனை போன்ற வாழ்கையை வழங்கும் இடமான அந்த ஆலயம் மதுர (இனிமை என்று பொருள்) பெயர் கொண்டு மதுர மலை ஆயிற்று.
நான்கு கைகளைக் கொண்ட அன்னையின் ஒரு கையில் அக்ஷயபாத்திரம் இருக்க தந்து இடது காலை மடித்து வைத்துக் கொண்டு ஒரு சிங்கத்தின் மீது அமர்ந்தபடி காட்சி தருகிறாள். சாதாரணமாக காளி உக்ரஹ வடிவில்தான் அனைத்து ஆலயத்திலும் காலடியில் தான் வதம் செய்த மனிதன் மீது நின்றபடி காட்சி தருவாள். ஆனால் இங்குள்ள காளியோ கருணை முகத்துடன் காட்சி தந்து அருளைத் தருவதால் மதுர காளி அம்மன் என்ற பெயரைப் பெற்றாள். திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் மட்டும் பக்தர்கள் தரிசிக்க ஆலயம் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. மற்ற நாட்களில் கண்களுக்குத் தெரியாமல் அங்குள்ள சித்தர்களும் ரிஷி முனிவர்களும் அந்த ஆலயத்து தேவியை வணங்க ஆலயம் மூடப்பட்டு உள்ளதாம். இந்த மதுர காளி தேவியும் உக்ரஹமான காளியின் அவதாரமே.
இந்த தலத்தின் பெருமையைக் குறித்து திரு N R பாலசுப்ரமணியன் என்பவர் எழுதி அனுப்பி உள்ள கீழ் கண்ட செய்தியை வெளியிடுவதில் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன்.
திரு பாலசுப்ரமணியன் அவர்களுக்கு நன்றி:-
…………..”.பிரம்மேந்திர சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள ஸ்ரீ சக்கரம் இங்குள்ளது. திங்கள், வெள்ளி ஆகிய இருநாட்கள் மட்டுமே திறக்கப்பட்டு பூஜை நடைபெறுகிறது. திருவிழா மற்றும் சில குறிப்பிட்ட பண்டிகைகளின் போது மட்டும் பிற நாட்களிலும் ஆலயம் திறக்கப்படுகிறது. மற்ற நாட்களில் கோயில் திறக்கப்பட மாட்டாது. காலை 8 மணிக்கு சன்னதி திறக்கப்படும். காலை 11 மணிக்கு மேல் அம்மனுக்கு அபிசேகம் நடைபெறும். பிற்பாடு தங்கக் கவசம் அணிவிக்கப்படும். இரவு 8 மணி வரை தொடர்ந்து தரிசனம் செய்யலாம். குலோத்துங்க சோழனால் திருப்பணி செய்யப்பட்ட கோயில். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இத்தலத்தில் பெருமளவில் வந்து வழிபடுகின்றனர். நோய்கள், மற்றும் உடல் உபாதைகள், வழக்கு சிக்கல்கள், காணாமல் போன பொருட்கள், வியாபார சிக்கல் முதலியவற்றுக்கு இங்குள்ள அம்மனை வழிபட்டால் தீர்வு கிடைக்கிறது. மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக் இருப்பதால் இங்கு வரும் பக்தர்களின் அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுகிறாள் என்பது இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. மாவிளக்கு ஏற்றுதல் இத்தலத்தின் முக்கிய நேர்த்திகடன் ஆகும். அங்கபிரதட்ணம் செய்வதும் பக்தர்களால் செய்யப்படும் புகழ்பெற்ற நேர்த்திகடன் ஆகும். நான்கு திருக்கரங்கள் இவற்றில் உடுக்கை, பாசம், சூலம், அட்யபாத்திரம் ஆகியவற்றை ஏந்தியுள்ளாள். இடது திருவடியை மடித்த நிலையில் வைத்து வலது திருவடியை சிம்மத்தின் மீது ஊன்றி அமர்ந்த திருக்கோலம். மந்திரவாதியை அன்னை எதிர்கொண்டு அழித்து விடுகிறாள். செல்லியம்மன், அன்னை திறம் கண்டு இனி அவளே சிறுவாச்சூர் ஆலயத்திலிருந்து அடியார்கட்கு அருள் பாவித்து வர வேண்டுகிறாள். தான் அருகிருக்கும் பெரியசாமி மலை சென்று விடுவதாகவும் ஆனால் கோயிலில் எப்பொழுதும் தனக்கு முதல் மரியாதை வேண்டுமெனவும் கூறுகிறாள். மதுரைக் காளியம்மனும் அதற்கு ஒப்புக் கொண்டு ஆலயத்தில் அமர்கிறாள். சிறுவாச்சூருக்கு வெள்ளிக்கிழமை வந்த மதுரைக் காளியம்மன் பக்தர்களுக்கு திங்கள் கிழமை காட்சி தருகிறாள். எனவேதான் திங்கள் வெள்ளி மட்டும் ஆலயம் திறந்திருக்கும். மற்ற நாட்களில் மதுரகாளியம்மன் செல்லியம்மனுடன் பெரியசாமி மலையில் தங்குவதாகக் கூறுகிறார்கள்.
சிறுவாச்சூர் காளியம்மன் என்றாலே, மிக பிரசித்தி பெற்ற திருக் கோயிலாகும், அம்பிகை என பக்தர்கள் கூறவே மக்களால் குலதெய்வமாக வணங்கப்படும் , பேசும். பேசியது…பேசிக்கொண்டிருக்கிறது – இன்னும் பலருக்கு சூக்ஷ்ம வடிவில். ஒரு நடமாடும் தெய்வம் – மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். நம் துயர் களைவதற்காகவே – கருணையே தவிர – அம்பாளை பார்த்து விட்டோம் என்ற பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை, பிரார்த்தனையை நிறைவேற்றிக் கொள்கிறார்கள். .அடியார்கட்கு அருள் செய்ய, வேண்டுதல்களையும் நிறைவேற்ற அமர்ந்துள்ளாள். அருட்காட்சி தருவது வேறு தலங்களில் இல்லாத சிறப்பாகும். குடும்ப தீராத வழக்குகளை, பிரச்னை தீர, தம்பதியர் ஒற்றுமைக்காகவும், குழந்தை பாக்கியம் கிடைக்க, தொழில் விருத்தியடைய, வாழ்வில் நன்மைகள் பல பெற்று, திருமண தடை நீங்கவும், பூர்வஜென்ம வினை பிணிகள் தீர, மாங்கல்ய பாக்கியத்திற்கும், தோஷ சாப நிவர்த்திக்காகவும், ஐஸ்வர்யம் பெருகவும், இங்கு வேண்டிக்கொள்கிறர்கள். அம்மன் வடக்கு திசை நோக்கி அருளும் நிலையிலேயே காட்சி. திருமணமான தம்பதியர் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டால் அடுத்தாண்டு அவர்களுக்கு குழந்தை பாக்கியம் நிச்சயம் என்பது நம்பிக்கை. இது ஒரு சக்தி பீடமாகும்.
வெள்ளி கிழமைகளில் மாலை பக்தர்கள் தங்க தேர் இழுத்து தங்கள் பிரார்த்தனையை நிறைவேற்றுகிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் அம்மனுக்கு புடவை சாத்தியும், அபிஷேகம் செய்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர். சிறப்பு அபிஷேகம், எலுமிச்சை தீபம், மாவிளக்கு
ஏற்றலாம். கரங்களில் சூலம், உடுக்கை ஏந்தி காட்சியளிக்கிறாள். . மாங்கல்ய பாக்கியத்திற்கு, மாங்கல்யத்தை அம்பிகைக்கு அணிவிப்பர். அமாவாசை, பவுர்ணமி நாட்களில் விசேஷ பூஜை உண்டு.
இங்கு தேர்த்திருவிழா நடத்தப்படுகிறது.
Yesterday, i.e. 5.2.15, Shri Yesudas, Carnatic Musician visited the temple along with his family Members and sang a song in praise of the Goddess. They stayed till the end of the Puja………….”
Balasubramanian NR has left a new comment on
Mar 23, 2016, 10:13 AM
எப்பொழுதும், நிலைத்திருப்பினும் மாபெரும் மலைகள் போலெழும், தடைகளை தகர்க்கின்றவளும், ஸ்ரீ ஆதிசங்கரரால், ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவரால் ஆராதிக்கப்பட்டவளும், வர்ணணைகளுக்கு எட்டாதவளும், ஸ்ரீ மதுரகாளி என்ற பெயருடையவளுமான அந்த மங்களகரமானவளை, தன்னை துதிக்கின்றவர்களுக்கு ஏற்படும் அனைத்துவித தடைகளையும் அகற்றி வெற்றியை அடைய செய்கிறாள். தங்களது முயற்சிகளில் வெற்றி பெற இவளைத்தான் தேடி வரவேண்டியிருக்கும். இவளையோ, இவளது மகிமைகளையோ முழுமையாக வர்ணிப்பதென்பது இயலாத காரியம்.
ஸ்தலத்தைப் பற்றி பாடல்கள் ஓதுவது தல வழிபாட்டு முறை. பூசாரிகள் பிரார்த்தனைகளை முறையாகக் கற்று ஓதுவார்கள். மற்றவர்கள் கேட்டு அனுபவித்தால் போதும். தெய்வீக பாடல்களுக்கு மிக்க மந்த்ர சக்தி உண்டு. காண்பவர்களின் மனதைத் தன் வசப்படுத்தக் கூடிய அழகும் மகிமையும் உடையவள். எல்லார் மனத்தையும் தன் வசமாக்கிக் கொள்ளுகின்ற உண்மைத் தெய்வமானவள். இவளைச் சதா என் நினைவில் வைத்துள்ளேன். அனைத்து உலகங்களையும் காத்து இரட்சிக்கின்றவள். சிறுவாச்சுர் மிகவும் பழமை வாய்ந்த புனித ஸ்தலம். பலர் உபாசனா தெய்வமாக கொள்கிறார்கள். பக்தர்களுக்கு ஏற்படும், ஏற்படவிருக்கும் அனைத்து ஆபத்துகளும் அவள் ஆலயத்தை நெருங்கியதுமே அழிந்துவிடுகின்றன. அன்னை பராசத்தியை தியானம் செய்து துதிப்போம். அவள் சந்நிதியில், கடலில் அலைகள் அழிதல் போல பக்தர்களின் தீவினைகளும் அழிந்து விடும்.
Balasubramanian NR has left a new comment on
Mar 24, 2016, 7:52 AM
ஓம் ஸ்ரீ சிறுவாக்க்ஷயை நமோ நம
கரம் குவிக்க ஜெகம் போற்றித் துதி பாட வருவாயே ஸ்ரீ மதுரகாளி தாயே
சாந்தம் அவளது கண்களிலே
வாழ்வினிலே விதிகள் மாறிடும் நொடியினிலே
வினைகள் அழியும் வேரோடு
ஸ்ரீ மதுரகாளிகதியெனக் கழலடி பற்றிடவே
கவலைகள் ஓடிடும் வரும் வழியே
உண்மையாய் பணிந்திடும் அடியவர்க்கு நன்மைகள் யாவையும் தருகின்றாள்
உருகிடும் பக்தியை உடனேற்று அருளை வாரி வழங்குகிறாள்
கருணை மழையை பொழிகின்றாள்
நம்பிக்கை வைத்தே தொழுதிடும் அடியவர் நற்கதி அடையச் செய்கின்றாள்
அனுதினமும் வந்து ஆசிகள் தருகின்ற அன்னை நீயல்லவா
ஸ்ரீ சிறுவாச்சுர் வாஸாய பரம ஈஸ்வரியே சரணம்
சௌபாக்கியம் தருவாயே
Balasubramanian NR has left a new comment on
Mar 27, 2016, 7:39 PM
உலகில் வாழுகின்ற எல்லா உயிர்களுக்கும் ஆனந்தம் அருள்வது அன்னை
எல்லையில்லா பெருமைகளையும், ஆனந்தத்தையும் அவளுடைய வடிவத்தில் ஒரு சேர உணர முடியும்.
பக்தர்ளைக் காக்கும் பொறுப்பு அவளுடையது
அழகிய கோலத்துடன் சிங்க வாகனமாகக் கொண்ட அற்புதக் கோலம்
அழகே உருவாய் பக்தர்ளை பித்து பிடிக்க வைத்த வடிவம்
அம்பிகையின் மேன்மையை உலகிற்கு
உணர்த்துவதற்காக அன்னை பார்வதி எடுத்த வடிவம்
சிறுவாச்சுர் மக்களைக் காக்கும் பொருட்டு அன்னை பார்வதி
எடுத்த வடிவமே
வட திசையை நோக்கி காளியின் அற்புதக் கோலம்
காட்சி அளிக்கும் வடிவினில் அமர்ந்திருப்பது வசீகரத்தின் சிகரம்.
அன்னை பார்வதி சாருகன் ஆணவத்தை அடக்க எடுத்த கோலம்.
சிவ தத்துவத்தை இந்த ஆலயத்தில் ஒரு சேர உணர முடியும்.
சாந்தம், ஆனந்தம், வசீகரம், கருணை என ஆகிய
நான்கு குணங்களையும் இந்த வடிவத்தில் ஒரு சேர
உணர முடியும். எக்காலமும் கருணாமூர்த்தி என உணர்த்துவதற்கான அன்னை எடுத்த வடிவம். இந்த காட்சி அளிக்கும் வடிவத்தை எல்லாரும் உலகில் முழு பக்தியுடன் வணங்குகின்றனர். உலகில் வாழுகின்ற எல்லா உயிர்களுக்கும் அவள் தாய் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
அன்னையை அடைக்கலம் புகுந்து ஞானத்தவத்தால் தூய்மை பெற்று ஐக்கியம் எய்தினோர் பலர். அவள் பெருமையை அறிந்தபின் அவளிடத்து அடைக்கலம் புகுதல் எளிதாகிறது. சுகம் எந்த தியானத்தால் விளைகிறதோ அதை பக்தர் பெறுகிறார். ஆகையால் இந்த ஞானத்துக்கு நிகரான தபசு இல்லை. சக்கரவாகம் என்னும் பக்ஷி எப்போதும் ஆகாயத்தில் பறந்துகொண்டே இருக்கும். அப்பறவை மழை நீரையன்றி, எவ்வளவுதான் தாகத்தால் தொண்டை வறண்டு போயினும் மழை நீரைத் தவிர்த்து வேறு எந்த நீரையுமே அது அருந்தவே அருந்தாது. அதுபோல விவேகமுடையவன் அம்பிகையின் தரிசனத்தை நாடிச் செல்லுகின்றான். மனம் தெளிவடைகிறபடியால் அழியாத இன்பத்தை எய்துகிறான்.
Balasubramanian NR has left a new comment on
Mar 29, 2016, 7:53 PM
பெரியஸ்வாமி மலையில் மூலிகைகள் உள்ளதாகச் சொல்வர். இந்த மலை மிகவும் போற்றக் கூடியது என்றால் மிகையல்ல. இந்தத் தொடர் மலையின்மேல் கோவில் ஒன்று உள்ளது. மலையின்மேல் சிற்றோடை உள்ளது ஊர் மக்கள் கோவிலுக்குச் செல்வது சிறிது கடினம் என்கிறார்கள். ஆண்கள் மட்டும் கோவிலுக்குச் செல்கிறார்கள். கோயிலில் இருந்து இங்கு செல்ல ஆட்டோ வசதி உண்டு. அற்புதங்கள் நிறைந்த இந்த மலையைத் தரிசித்தாலே பாவங்கள் அழியும்; புண்ணியம் சேரும் என்பர். இக்கோவிலின் வெளியே தனி மண்டபத்தில் மற்ற தேவதைகள் எழுந்தருளியுள்ளார்கள். மேடையில் பல சிலைகள் உள்ளன. பரம்பரையைச் சேர்ந்தவர் விரதம் மேற்கொண்டு, அங்கப் பிரதட்சணம் செய்து கோவிலின்முன் அமர்வார்கள். இங்கு சகல தோஷங்களும் கழிக்கப்படுகின்றன. சாப நிவர்த்தியானதும் ஸ்ரீமதுரகாளி அம்பாளை வழிபடுவது என்பது குறிப்பிடத் தக்கது. இக்கோவிலில் ஒரு தீர்த்தக் கிணறு உள்ளது. முன்னொரு காலத்தில் இங்கு நீராடுவதற்கு கயிறு கட்டிய வாளி ஒன்றினை தருவார்கள். அதன் உதவியால் வேண்டிய அளவு நீரை எடுத்து நீராடலாம். சத்துக்கள் பல உள்ளதாகச் சொல்லப்படும் இந்தப் புனித நீர் மிக சுத்தமாக உள்ளது. ஆரோக்கியமாக வாழலாம் என்று விவரம் அறிந்தோர் சொல்வர். இது எந்தக் காலத்திலும் வற்றுவதில்லையாம். மக்கள் கூட்டம் இங்கு திங்கள்,வெள்ளி, விழா மாதத்தில் நிறைந்து காணப்படுகிறது. கருவறையில் அருள்பாலிக்கும் விநாயகப் பெருமான் அமர்ந்து உள்ளார். அம்பாளிடம் சக்தி இல்லை என்றால் இன்று இக்கோவில் இப்படி வளர்ந்திருக்காது என்பது நிதர்சனம். ஸ்ரீமதுரகாளி அம்பாளின் அவதார ரகசியம் சுவாரஸியமானது. நான் ரிடையர் ஆன ஓரு கிழவன். தெய்வ பலத்தை தனக்காக இல்லாமல், உலகத்துக்காகச் செய்ய வேண்டியதுதான்
Balasubramanian NR has left a new comment on
Mar 29, 2016, 8:35 PM
பக்தர்கள் உள்ளத்தில் ஞான திருஷ்டியே
கண்ணின் ஒளியே கருவிழியே
பாவங்கள் தீர்க்கும் தயாசாகரியே
கற்பனைக்கு எட்டா பரம தயாளுவே
சர்வ லட்சணம் பொருந்திய தனித்துவம் உள்ள தாயே
அகிலாண்ட நாயகியே
சாப விமோசனம் தந்த ஸ்ரீமதுரகாளி தாயே
அண்டமெலாம் தொழும் அற்புத தாயே
நின் பொற்பதம் பணிந்தேன் நித்தமுமே
நான் பற்றற்ற உன் துறவி
இந்த கிழவனைப் பார்
இத்தனை காலம் நான் தவசக்தியை சேமித்தேன்
நான் எனக்கென்று யாரிடமும் எதையும் கேட்டதில்லை.
நீ மனம் வைத்தால் பக்தர்களுக்காக ஒரு புதிய பொன்னுலகையே
படைக்க முடியுமே
நீ அவர்களுக்கு துணை நிற்க வேண்டும் தாயே
Balasubramanian NR has left a new comment on
Mar 30, 2016, 9:18 PM
ஒரு வயதானவர் பழம், புஷ்பங்களை அம்பாளின் காலடியில் வைத்து தரிசனம் செய்தார். பூசாரி அவருக்காகவே நின்றார். மேலும் அவர்
பூசாரியிடம் என்னையும் ஆலயத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள், எதைச் சொன்னாலும் செய்வேன். உங்கள் அருகிலேயே இருக்க ஆசைப்படுகிறேன் என்றார். பிரிய மனமில்லை. சிரித்த படியே பூசாரி, உங்களுக்கு ஸ்ரீமதுரகாளி தாயை பார்த்துக் கொண்டே இருக்கணும்னு தோணித்து என்றால், நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருந்து அன்னையை நினைத்துக் கொள்ளுங்கள். உங்கள் நினைவில் அன்னை வந்தால் உங்களோடு இருப்பது போல் தானே அதற்காக வர வேண்டாம் என்றார். எதற்கு இவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டு என்று கண்ணீர் பெருக பூசாரி கூறினார். பெரியவருக்குக் கண்ணீர் பெருகியது
Balasubramanian NR has left another new comment on the same day
இம்மைக்கு மட்டுமல்ல, ஏழ்பிறப்புக்கும் ஸ்ரீ மதுராம்பிகா திருநாமம் என்ற மந்திரமே உயர்ந்தது. . ராம என்ற திருநாமம் மந்திரமே இதிலும் உள்ளது. இப்போதாவது நம்புவாயல்லவா. நீ திகைத்துப் போய் இருக்கிறாயா. இதை நாம் கண்கூடாகக் காணலாம். உண்மையும் அதுதான். நீ என்ன செய்கிறாய் என்பது உனக்கே தெரியவில்லை. எனக்குத் தெரியும். வழிகாட்டும் மந்திரமே உயர்ந்தது. தேவியின் பாதங்களை நினைப்பதே சிறந்த மார்க்கமாகும். என்னுடைய ஒரே புகலிடம் ஏனென்றால் அவள் கருணைக்கடல், விபூதி தான் மற்றவையெல்லாம் ஒன்றுமில்லை. அவள் திருவடிகளை விழுந்து வணங்கி பணிவோம்.