மருதநல்லூர் சத்குரு சுவாமிகள்

கலியுகத்தில் நாமசங்கீர்த்தனமும், வழிபாடும் மிகச் சுலபமாக இறைவனை அடையும் வழியாகும். ஸ்ரீபோதேந்திர சுவாமிகள், ஸ்ரீதர ஐயர்வாள், மருதாநல்லூர் சுவாமிகள் மூவரும் நாமசங்கீர்த்தனத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்கள் ஆவர். நாமபஜனையில் பாகவதர்களின் கீர்த்தனைகளை வரிசைப்படுத்தி, மிருதங்கம் போன்ற வாத்தியங்களை இசைத்து மனதை ஒருமுகப்படுத்தி புனிதமான இறைவழிபாட்டு முறையை மேம்படுத்தியவர் சத்குரு மருதாநல்லூர் சுவாமிகள்.

சீதாகல்யாணம், ராதாகல்யாணம், ருக்மணி கல்யாணம் போன்ற பஜனை சம்பிரதாயங்களை உருவாக்கி, “மருதாநல்லூர் பாணி‘ என்று புகழ்பாடும் அளவிற்கு அதை மக்களிடையே பரப்பியவர். 1777 முதல் 1817வரை 40 ஆண்டுகள் வாழ்ந்தார். ஸ்ரீதர ஐயாவாள் வாழ்ந்த   திருவிசநல்லூர் பக்திப்பயிர் செழித்த புண்ணிய பூமி. அங்கு வாழ்ந்த வேங்கட சுப்பிரமணிய ஐயர் தம்பதிக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குலதெய்வமானவெங்கடேசரோடு, ராமனையும் சேர்த்து வேங்கடராமன் என பெயரிட்டனர். இளம் பிராயத்தில் “வெங்கட்ராமன்‘ என்ற பெயர் பெற்ற சுவாமிகள், தெலுங்கு பிராமணர் வம்சத்தில் பிறந்தவர். மூன்று வயது வரை குழந்தை பேசவில்லை. பெற்றோர் மனம் வருந்திய நேரத்தில், வீட்டுக்கு வந்த பெரியவர் ஒருவர், இந்தக் குழந்தையிடம் தெய்வீகசக்தி இருக்கிறது. இவன் நிச்சயம்பேசுவான். அதோடு ஒரு மகானாகவும் விளங்குவான், என்றார். இவரது தந்தை காவியங்களில் பற்றுடையவர். பக்திமான் என்பதால், சுவாமிகளுக்கு வேதத்துடன் கூட, ராமகாவியத்தை திரும்பத் திரும்ப சொல்லி மனதில் பதிய வைத்தார். இதனால், ராமஜபம் மட்டுமில்லாமல், உள்ளும்புறமும் தன்னை ஸ்ரீராமனாகவே பார்த்துக் கொண்டார்.

இவர் ஜானகி என்ற பெண்மணியை திருமணம் செய்து கொண்டார். தந்தையார் இறந்த பிறகு, குடும்பத்தை நடத்த, பக்கத்து ஊருக்குச் சென்று குழந்தைகளுக்கு வேதம் சொல்லித் தந்தார். இவரிடம் கற்றுக் கொண்ட மாணவர்களுக்கு படிப்பு நன்றாக வந்ததால், இவரது புகழ் எங்கும் பரவியது. கூட்டம் பெருகியது. இது இவரது ஜப வாழ்க்கைக்கு இடையூறாக அமைந்தது.

பாகவதர்களின் இருப்பிடமாகிய திருவிசைநல்லூரில் வசித்த இவருக்கு, சிறுவயதிலேயே இவரது தாயார் பல மகான்களின் கதைகளைச் சொன்னார். தன் தந்தை செய்த சிரார்த்தம் முதலான வைதீக காரியங்களில் பிழைப்புக்காக ஈடுபட்டு வந்தார்.

ஒருநாள் பக்கத்து ஊருக்கு சிரார்த்தம் செய்ய சென்ற போது, ராமநாம ஜபம் செய்ய ஆரம்பித்து விட்டார். காலையில் ஆரம்பித்த ஜபம் மாலையில் தான் முடிந்தது. சிரார்த்தம் பற்றிய நினைப்பு வந்தவுடன், ஓடிச்சென்று அந்த வீட்டுக்காரரை பார்த்து மன்னிப்பு கேட்க முயற்சி செய்தபோது, “”நீங்கள் இன்று வெகுநன்றாக சிரார்த்தம் செய்து வைத்தீர்கள்,” என்று சொன்னதைக் கேட்டு, பகவத் அருளை நினைத்து திகைத்து நின்று விட்டார்.

எனவே, தம் சொத்துக்களை உறவினர்களிடம் கொடுத்துவிட்டு ராமஜபம் செய்யும் ஆசையில் அயோத்திக்கு புறப்பட்டு விட்டார். உஞ்சவிருத்தி எடுத்து நாமசங்கீர்த்தனம் செய்து கொண்டே ஆந்திரா வந்து விட்டார். திருப்பதி செல்லும் பக்தர்கள் ஒரு குழுவாக அமர்ந்து ராமபெயரைச் சொல்லி ஆடிப்பாடிக் கொண்டிருப்பதை கண்டார். “”தமிழகத்தில் கடவுள் பெயரைச் சொல்வதற்கே வெட்கப்படுகிறார்களே! ஆனால், இங்குள்ள மக்கள் பக்தியுள்ளவர்களாக இருக்கிறார்களே,” என எண்ணியவராய், வடக்கே இருந்த சம்பிரதாயங்களையும், தெற்கே இருந்த கீர்த்தனைகளையும் ஒன்றாக இணைத்து ஒருநாம சங்கீர்த்தன முறையை உருவாக்க எண்ணினார்.

அன்று இரவில் போதேந்திரர் கனவில் தோன்றி, “” உன் பிறப்பின் நோக்கத்தை அறிந்த பிறகும் அயோத்திக்கு ஏன் செல்கிறாய். உன் ஊருக்குச் சென்று நாமசங்கீர்த்தனத்தை பரப்ப ஏற்பாடு செய்,” என்றார். உடனே, சுவாமிகள் மருதாநல்லூர் திரும்பி விட்டார்.

ஜெயதேவரின் கீதகோவிந்தம், போதேந்திர சுவாமிகள், ஐயர்வாள், பத்ராசலம் ராமதாசர் போன்ற மகான்களின் பாடல்களை ஒன்றிணைத்து ஒரு அழகான நாமசங்கீர்த்தன முறையை உருவாக்கினார். அதை அந்த ஊரில் உள்ள எல்லா பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் கற்றுத் தந்தார். மருதாநல்லூரில் ஒரு மடத்தை ஸ்தாபித்தார். இதன்பிறகு, சத்குரு மருதாநல்லூர் சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார்.

போதேந்திர சுவாமிகளின் சமாதியை பார்க்க, இவர் கோவிந்தபுரம் சென்றபோது, சமாதி எங்கிருக்கிறது எனத் தெரியவில்லை. அவரது சமாதியைக் கண்டுபிடிக்கவேண்டும் என்ற தீர்மானத்துடன் 9 நாட்கள் உண்ணாமல், உறங்காமல், அசையாமல் ராமநாம ஜபம் செய்தார். 10வது நாள் உத்வேகம் வந்தவராய், காவிரியாற்று மணலில் பல இடங்களில் காது வைத்து கேட்க, ஓரிடத்தில் சிம்மகர்ஜனையாக “ராம் ராம்‘ என்ற நாமம் காதில் கேட்டது. அந்த இடமே மகானின் ஜீவசமாதி என்பதை அறிந்த சுவாமிகள் தஞ்சை மன்னர் சரபோஜியின் உதவியுடன் சமாதி அமைக்க ஏற்பாடு செய்தார்.

சுவாமிகள் சரபோஜி மன்னரைத் தேடிச் செல்வதற்கு முன்னதாக ஒருநாள், மன்னரின் கனவில் ஆஞ்சநேயர் தோன்றி, “”உன்னைத் தேடி ராமச்சந்திரமூர்த்தி வந்துள்ளார்,” என்று சொன்னார். இதனால் சரபோஜி மன்னர்,சுவாமிகளின் பாதங்களில் விழுந்து ஆசிபெற்றார்.

மருதாநல்லூர் சுவாமிகள் பல அற்புதங்களை நிகழ்த்தினார். ஒருமுறை அவர் உஞ்சவிருத்தி எடுத்துவரும்போது, பாலகலோசன் என்பவர் அவரை அவமரியாதை செய்தார். இதனால் அவருக்கு வயிற்றுவலி வந்து அவஸ்தை அதிகமானது. அவரது மனைவி சுவாமிகளிடம் மன்னிப்பு கேட்டு தீர்த்தம் பெற்றார். அதை கணவருக்கு அளித்தாள். வயிற்றுவலி நீங்கிய பாலகலோசன் அவரது சீடரானார். அந்த சீடர் எழுதிய, “அதடே பரபிரும்மம்‘ என்ற பாடல் குருவணக்கமாக பாடப்படுகிறது.

1817-ல், ராமநவமிக்கு முதல்நாள், ஆடுதுறை பெருமாள் கோயிலில் ஜெகத்ரட்சக சுவாமி சந்நிதியில் இறைவனுடன் ஐக்கியமானார்.

திருவிசநல்லூர்அருகிலுள்ளமணஞ்சேரியில் கோபாலசுவாமி என்ற ராம பக்தர் இருந்தார். அவரிடம் குழந்தையை அழைத்துக் கொண்டு சுப்பிரமணியஐயர் சென்றார்.இவனது குறை தீர்க்கும் மருந்து ஒன்று இருக்கிறது என்று சொல்லிய பக்தர், குழந்தையின் வலக்காதில் ராம என்ற மந்திரத்தை ஜெபித்தார். அதைக் கேட்ட வேங்கடராமன் எழுந்தான். பரசவம் அடைந்தவனாய் பேசும் திறன் பெற்றான்.ஏழுவயதில் உபநயனம் செய்து வைக்க ஏற்பாடானது. தந்தைபிரம்மோபதேசம் செய்த போது,மனதிற்குள் ராமதரிசனம் பெற்றான். அந்தக்காட்சி மறைந்ததும்,வேங்கடராமனால் தாங்கிக் கொள்ள முடியாமல் கண்ணீர் சிந்தினான். அன்று முதல்எப்போதும்ராமநாமமே ஜெபித்தான்.தந்தையைக் குருவாக ஏற்று வேதம், சாஸ்திரம் கற்றான்.

சங்கீதவித்வானிடம் இசைப்பயிற்சியும் பெற்றான். இசையோடு சேர்ந்த நாம சங்கீர்த்தனமே சிறந்தது என்ற எண்ணம் வேங்கடராமனின் மனதில் வேரூன்றியது. ஜானகி என்ற பெண்மணியை மகனுக்கு பெற்றோர் மணம் செய்து வைத்தனர். ஒருநாள் ராமாயண உபன்யாசத்தில், ராமனைக் காட்டுக்கு அனுப்பாதே! அயோத்தியிலேயே உஞ்சவிருத்தி செய்தாவது இருக்கச் சொல் என்று தசரதரின் வேண்டுகோளைக் கேட்டதும், வேங்கடராமனின் உள்ளம் உருகியது. அன்று முதல் தானும் உஞ்சவிருத்தி செய்து கிடைத்த பொருளைக் கொண்டு வாழ்வு நடத்த எண்ணினார். மக்கள் அவரை சத்குரு சுவாமிகள் என்று அன்போடுஅழைத்தனர். தினமும் லட்சத்து எட்டாயிரம்ராமநாமம் ஜெபித்து வந்தார்.மனைவி ஜானகியுடன் சுவாமி அயோத்திக்கு நடந்தே யாத்திரை புறப்பட்டார். ஆந்திராவில், தாளபாக்கம் கிராமத்தை வந்தடைந்தார்.அங்கிருந்த பாகவதர்களிடம் அன்னமாச்சாரியார் வகுத்த பாகவத சம்பிரதாயங்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்றார். அங்குஇரவில் தூங்கியபோது கனவில் போதேந்திர சுவாமிகள் என்பவர் தோன்றினார். இவர் நாமசங்கீர்த்தனம் மூலம்பக்தியைப் பரப்பியவர். அவர் சத்குரு சுவாமியிடம், உடனே தமிழகத்திற்கு போ! உன்னால் ஒரு மகத்தான செயல் ஆகவேண்டியிருக்கிறது, என்றார்.

அந்த சமயத்தில் காவிரியின் நடுவில் அமைந்திருந்த போதேந்திரசுவாமிகளின் அதிஷ்டானம் (சமாதி) மண் மூடி மறைந்து கிடந்தது. அதைக் கண்டுபிடித்து மீண்டும் சீரமைப்பதே தன் கடமை என்பதை உணர்ந்த சுவாமி, அயோத்தி பயணத்தை நிறுத்தி விட்டு தமிழகம் திரும்பினார். பக்தர்களுடன் அதிஷ்டானத்தைத் தேடும் பணியில் ஈடுபட்டார்.அப்பகுதி மக்களுக்கு இதுபற்றி ஏதும் தெரியவில்லை. அப்போது, கோடைகாலம் என்பதால் காவிரிநதி வறண்டு கிடந்தது. ஒவ்வொரு இடத்திலும் தன் காதை மணலில் வைத்து. எங்காவது நாம சங்கீர்த்தனம் கேட்கிறதா என்று கவனித்தபடி தேடினார். ஒரு இடத்தில் பூமியிலிருந்து ராம ராம ராம ராம என்ற திருநாமம் துல்லியமாகக் கேட்பதை உணர்ந்தார். ஆனந்தக்கண்ணீருடன் அங்கே விழுந்து வணங்கினார். தஞ்சை மன்னரின் உதவியுடன் மீண்டும் அங்கொரு அதிஷ்டானம் கட்டினார். அந்த இடமே கோவிந்தபுரம் போதேந்திர சுவாமிகள் அதிஷ்டானமாகத் தற்போது விளங்குகிறது. தஞ்சை மன்னர் கோவிந்தபுரத்தைச் சுற்றியுள்ள பகுதிக்குபாகவதபுரம் என பெயரிட்டு மானியம் வழங்க உத்தரவிட்டார். ஒருசமயம், சத்குரு சுவாமிகள், சீடர்களுடன் நாம சங்கீர்த்தனம் செய்து கொண்டு தெருவில் வந்து கொண்டிருந்தார்.

அழுதபடி வந்த ஒருவர் ஓடிவந்து சுவாமியிடம் மனைவி ஜானகி அம்மையாரின் மறைவு செய்தியைத்தெரிவித்தார். இதைக் கேட்டு, அவர் அதிர்ச்சி அடையாமல், தன் மனைவி ஸ்ரீராமன்திருவடியை அடைந்திருப்பாள் என்பதால்,பரவசத்துடன் ராமநாமம் ஜெபித்தபடி நர்த்தனமாடினார். பின், ஒரு துறவியைப் போல தன் வாழ்வை பக்திப்பணிக்கே அர்ப்பணித்தார். ஒருநாள் சுவாமி, பாகவதர்களுடன் நாமசங்கீர்த்தனம் செய்தபடி வந்தபோது, திண்ணையில் ஒருவன் கால்நீட்டிப் படுத்திருந்தான். இப்படி மரியாதைக் குறைவாகஇருக்கிறாயே! பாகவதர்களை அவமதிப்பது பாவம். காலை மடக்கிக் கொள்! என்று பக்தர்கள் சொல்ல, நீங்களும் என்னைப் போல மனிதர்கள் தானே! என்று சொல்லிஅலட்சியமாகப் பார்த்தான். அன்று முதல்கடுமையான வயிற்றுவலி அவனுக்குஉண்டானது. பின் மருதாநல்லூர் சுவாமியைத் தேடிச் சென்று தன்னை மன்னிக்கும்படி வேண்டினான். அவரோ,நீ எனக்கு அபச்சாரம் செய்திருந்தால் மன்னிக்கலாம். ஆனால், நீயோ பாகவத அபச்சாரம் செய்து விட்டாய்.

உன்னை மன்னிக்கும் சக்தி எனக்கில்லை! என்று மறுத்துவிட்டார். ஆனாலும், அவரின் வழிகாட்டுதல்படி,பாகவதர்களின் பாத தீர்த்தத்தை அருந்தி நோயிலிருந்து மீண்டான். மருதாநல்லூர் மடத்தில் ஒருநாள் சுவாமி தியானத்தில் இருந்தார். அந்த சமயத்தில் சீடர் ஒருவர் அங்கு வந்தார். சுவாமிக்கு அருகில், ராமனும், சீதாபிராட்டியும் அமர்ந்திருந்ததைக் கண்டார். கணப்பொழுதில் ராமனும், சீதையும் அவருள் ஐக்கியமாயினர். இதை கேள்விப்பட்ட ஒருவனுக்கு தானும் இக்காட்சியைக் காண ஆசைஉண்டாயிற்று. அன்றிரவு,மருதாநல்லூர் சுவாமி உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில், ஜன்னல்வழியாக எட்டிப் பார்த்தான். கட்டில் மீது ராமனும் சீதையும் ஏகாந்தமாக அமர்ந்திருப்பதைக் கண்டான். அப்போது ஏற்பட்ட பேரொளியால் அவன் பார்வை பறி போனது.சுவாமியின் அருளால் மீண்டும் பார்வை பெற்றான். மண்ணில் பிறவி எடுத்த நோக்கத்தை நிறைவேற்றிய சுவாமி, அந்திம திருவிசநல்லூர். ஸத்குருவின் பிள்ளைப் பெயர் வேங்கடராமன். பன்னிரண்டு வயதுக்குள்ளேயே வேத அத்தியாயனம் முடித்துவிட்டார். சிறு வயதிலேயே வேங்கடராமனுக்கு துருவனையும் பிரகலாதனையும் போல, பகவத் பக்தியில் மனம் ஈடுபட்டிருந்தது. திருவிசநல்லூருக்கு சிறிது மேற்கே இருந்த ஆஞ்சநேயர் கோயிலுக்கு அடிக்கடி செல்வார். அங்கே பிரதிஷ்டை ஆகியுள்ள விக்ரகத்துக்குப் பின்னால் போய் அமர்ந்து கொண்டு ராமநாம ஜபம் செய்யத் தொடங்கி விடுவார். கோயிலுக்கு எப்போதாவது வருகிற பக்தர்களின் பார்வையில் கூட அவர் பட்டதில்லை. தந்தையாருக்கு சுற்றுப்பட்டு கிராமங்களில் நிறைய வைதிக உபாத்தியாய வீடுகள் இருந்தன. தந்தையாரின் கட்டளைப்படி கிருஹஸ்தர்களின் வீடுகளுக்கு லட்சுமி பூஜை, அமாவாசைத் தர்ப்பணம், விவாஹம், சிரார்த்தம் முதலிய கிரியைகளைச் செய்து வைக்கப் போக வேண்டிய சந்தர்ப்பங்களிலும், வேங்கடராமனுக்கு அவற்றில் சிரத்தை குறைந்து விட்டது. ஏதோ பழைய மந்திரங்களை கிளிப்பிள்ளை சொல்வதுபோல் உச்சரித்துப் பொழுதைத் தொலைப்பதை விட, சில ஆயிரம் நாம ஜபம் செய்தால் மனம் ஆனந்திக்குமே என்று நினைத்து, ஆஞ்சநேயர் கோயிலுக்குப் போய் விடுவார். இவர், வைதீக வாடிக்கைகளுக்குச் சரிவர வருவதில்லை என்று புகார்கள் அதிகரித்தன. தகப்பனார். வேங்கடராமனின் வருங்காலத்தைப் பற்றி வருந்தலானார்.

ஒருவேளை இவனுக்கு ஒரு திருமணத்தைச் செய்து வைத்தால் இவன் திருந்தக் கூடும் என்று எண்ணி, பெண் பார்த்து முடித்தார். கல்யாணமும் ஆயிற்று. ஆயினும் வேங்கடராமனின் போக்கு மாறவில்லை. இரண்டொரு ஆண்டுகளிலேயே அவர் மனைவி அம்மை கண்டு இறந்துவிட்டார். ஒருநாள், கிழக்கே வேப்பத்தூரில் ஒரு நிமந்த்ரணம், ஏழெட்டு வேஷ்டிகளும் வீட்டுக்காரர்கள் வாங்கியிருந்தார்கள். வேங்கடராமனை அங்கே போகும்படி சொல்லியிருந்தார், தகப்பனார், வேங்கடராமனும் வீட்டை விட்டுப் புறப்பட்டார். திருவிசநல்லூர் அக்ரஹாரத்தைத் தாண்டியதும் கிழக்கே செல்வதற்குப் பதிலாக மேற்குப் பக்கம் திரும்பி விட்டார். ஆஞ்சநேயரின் கோயிலுக்குப் போய்விட்டார். நாம ஜபத்தில் ஆழ்ந்து விட்டார். தாம் புறப்பட்ட காரியம் வேப்பத்தூரிலே செய்விக்க வேண்டிய உபாத்தியாயம் என்ற நினைப்பு அவருக்கு ஏற்பட்ட போது, பகல் மூன்று மணி இருக்கும். வருத்தத்தோடு மாலையில் திருவிசநல்லூர் நோக்கி நடந்து கொண்டிருந்தார். அவர் புறப்பட்டுச் சென்ற சில நிமிஷத்துக்கெல்லாம் ஆஞ்சநேயர் கோயில் பலிபீடத்தில் ஒரு ஜோடி புது வேஷ்டியும் தட்சணைக் காசுகளும் வைக்கப்பட்டிருந்தன. தம்முடைய பக்தன் செய்ய வேண்டிய காரியம் வீணாகிப் போய் அவனுக்குக் கெட்ட பெயர் வரக்கூடாது என்பதற்காக ஆஞ்சநேய சுவாமியே மனித உருவில் சென்று வைதிகம் செய்து வைத்துவிட்டு வந்துள்ளார்.

வேங்கடராமன் திரும்பி வீட்டிற்குச் சென்று சேர்வதற்குள், கோயில் பட்டர் பலிபீடத்தில் இருந்த வேஷ்டியையும் தட்சணைக் காசுகளையும் பார்த்த ராம நாம பித்துக்குளி வைத்துவிட்டு போயிருக்கிறது என்று ஊகித்து, அவற்றை திருவிசநல்லூருக்கு அனுப்பி வைத்தார். வேப்பத்தூர் வீட்டுக்கு சிராத்தத்திற்கு சென்று திரும்பிய இரண்டு வைதிகர்களும் கூட இதற்குள் வந்து, வேட்கடராம னுடைய தேஜஸ், வைதிகப் பெருமையை தகப்பனரிடம் பாராட்டிக் கொண்டிருந்தார்கள். ஆஞ்நேயர் கோயில் பலிபீடத்திலிருந்து வந்திருந்த இரண்டு வேஷ்டிகளையும் பணத்தையும் பார்த்தபோதே வேங்கடராமனுக்கு வெளிச்சம் ஏற்பட்டு விட்டது. அப்பனே ! எனக்குப் பதிலாக இந்த சிரார்த்த மந்திரம் சொல்வதற்கா நீ இருக்கிறாய் ? என் பொருட்டு இனிமேல் நீ கஷ்டப்பட வேண்டாம் என்று கதறி அழுதார், வேங்கடராமன். அன்றிலிருந்து எங்கே போனார், என்ன ஆனார் என்றே யாருக்கும் தெரியாது. பின்னாளில், நாடு திரும்பி சங்கீத மேதையாக மருதாநல்லூர் ஸத்குருசுவாமியாக விளங்கியவர் இந்த வேங்கடராமனே.

கலியுகத்தில் நாமசங்கீர்த்தனமும், வழிபாடும் மிகச் சுலபமாக இறைவனை அடையும் வழியாகும். ஸ்ரீபோதேந்திர சுவாமிகள், ஸ்ரீதர ஐயர்வாள், மருதாநல்லூர் சுவாமிகள் மூவரும் நாமசங்கீர்த்தனத்தை உலகிற்கு அறிமுகப்படுத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியவர்கள் ஆவர். நாமபஜனையில் பாகவதர்களின் கீர்த்தனைகளை வரிசைப்படுத்தி, மிருதங்கம் போன்ற வாத்தியங்களை இசைத்து மனதை ஒருமுகப்படுத்தி புனிதமான இறைவழிபாட்டு முறையை மேம்படுத்தியவர் சத்குரு மருதாநல்லூர் சுவாமிகள். சீதாகல்யாணம், ராதாகல்யாணம், ருக்மணி கல்யாணம் போன்ற பஜனை சம்பிரதாயங்களை உருவாக்கி, மருதாநல்லூர் பாணி என்று புகழ்பாடும் அளவிற்கு அதை மக்களிடையே பரப்பியவர். 1777 முதல் 1817வரை 40 ஆண்டுகள் வாழ்ந்தார். இளம் பிராயத்தில் வெங்கட்ராமன் என்ற பெயர் பெற்ற சுவாமிகள், தெலுங்கு பிராமணர் வம்சத்தில் பிறந்தவர். இவரது தந்தை காவியங்களில் பற்றுடையவர்.
பக்திமான் என்பதால், சுவாமிகளுக்கு வேதத்துடன் கூட, ராமகாவியத்தை திரும்பத் திரும்ப சொல்லி மனதில் பதிய வைத்தார். இதனால், ராமஜபம் மட்டுமில்லாமல், உள்ளும்புறமும் தன்னை ஸ்ரீராமனாவே பார்த்துக் கொண்டார். பாகவதர்களின் இருப்பிடமாகிய திருவிசைநல்லூரில் வசித்த இவருக்கு, சிறுவயதிலேயே இவரது தாயார் பல மகான்களின் கதைகளைச் சொன்னார். தன் தந்தை செய்த சிரார்த்தம் முதலான வைதீக காரியங்களில் பிழைப்புக்காக ஈடுபட்டு வந்தார். ஒருநாள் பக்கத்து ஊருக்கு சிரார்த்தம் செய்ய சென்ற போது, ராமநாம ஜபம் செய்ய ஆரம்பித்து விட்டார். காலையில் ஆரம்பித்த ஜபம் மாலையில் தான் முடிந்தது. சிரார்த்தம் பற்றிய நினைப்பு வந்தவுடன், ஓடிச்சென்று அந்த வீட்டுக்காரரை பார்த்து மன்னிப்பு கேட்க முயற்சி செய்தபோது, நீங்கள் இன்று வெகுநன்றாக சிரார்த்தம் செய்து வைத்தீர்கள், என்று சொன்னதைக் கேட்டு, பகவத் அருளை நினைத்து திகைத்து நின்று விட்டார். இவர் ஜானகி என்ற பெண்மணியை திருமணம் செய்து கொண்டார். தந்தையார் இறந்த பிறகு, குடும்பத்தை நடத்த, பக்கத்து ஊருக்குச் சென்று குழந்தைகளுக்கு வேதம் சொல்லித் தந்தார். இவரிடம் கற்றுக் கொண்ட மாணவர்களுக்கு படிப்பு நன்றாக வந்ததால், இவரது புகழ் எங்கும் பரவியது. கூட்டம் பெருகியது.

இது இவரது ஜப வாழ்க்கைக்கு இடையூறாக அமைந்தது. எனவே, தம் சொத்துக்களை உறவினர்களிடம் கொடுத்துவிட்டு ராமஜபம் செய்யும் ஆசையில் அயோத்திக்கு புறப்பட்டு விட்டார். உஞ்சவிருத்தி எடுத்து நாமசங்கீர்த்தனம் செய்து கொண்டே ஆந்திரா வந்து விட்டார். திருப்பதி செல்லும் பக்தர்கள் ஒரு குழுவாக அமர்ந்து ராமபெயரைச் சொல்லி ஆடிப்பாடிக் கொண்டிருப்பதை கண்டார். தமிழகத்தில் கடவுள் பெயரைச் சொல்வதற்கே வெட்கப்படுகிறார்களே! ஆனால், இங்குள்ள மக்கள் பக்தியுள்ளவர்களாக இருக்கிறார்களே, என எண்ணியவராய், வடக்கே இருந்த சம்பிரதாயங்களையும், தெற்கே இருந்த கீர்த்தனைகளையும் ஒன்றாக இணைத்து ஒருநாம சங்கீர்த்தன முறையை உருவாக்க எண்ணினார். அன்று இரவில் போதேந்திரர் கனவில் தோன்றி, உன் பிறப்பின் நோக்கத்தை அறிந்த பிறகும் அயோத்திக்கு ஏன் செல்கிறாய். உன் ஊருக்குச் சென்று நாமசங்கீர்த்தனத்தை பரப்ப ஏற்பாடு செய், என்றார். உடனே, சுவாமிகள் மருதாநல்லூர் திரும்பி விட்டார். ஜெயதேவரின் கீதகோவிந்தம், போதேந்திர சுவாமிகள், ஐயர்வாள், பத்ராசலம் ராமதாசர் போன்ற மகான்களின் பாடல்களை ஒன்றிணைத்து ஒரு அழகான நாமசங்கீர்த்தன முறையை உருவாக்கினார். அதை அந்த ஊரில் உள்ள எல்லா பெரியவர்களுக்கும், குழந்தைகளுக்கும் கற்றுத் தந்தார். மருதாநல்லூரில் ஒரு மடத்தை ஸ்தாபித்தார். இதன்பிறகு, சத்குரு மருதாநல்லூர் சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார்.

போதேந்திர சுவாமிகளின் சமாதியை பார்க்க, இவர் கோவிந்தபுரம் சென்றபோது, சமாதி எங்கிருக்கிறது எனத் தெரியவில்லை. அவரது சமாதியைக் கண்டுபிடிக்கவேண்டும் என்ற தீர்மானத்துடன் 9 நாட்கள் உண்ணாமல், உறங்காமல், அசையாமல் ராமநாம ஜபம் செய்தார். 10வது நாள் உத்வேகம் வந்தவராய், காவிரியாற்று மணலில் பல இடங்களில் காது வைத்து கேட்க, ஓரிடத்தில் சிம்மகர்ஜனையாக ராம் ராம் என்ற நாமம் காதில் கேட்டது. அந்த இடமே மகானின் ஜீவசமாதி என்பதை அறிந்த சுவாமிகள் தஞ்சை மன்னர் சரபோஜியின் உதவியுடன் சமாதி அமைக்க ஏற்பாடு செய்தார். சுவாமிகள் சரபோஜி மன்னரைத் தேடிச் செல்வதற்கு முன்னதாக ஒருநாள், மன்னரின் கனவில் ஆஞ்சநேயர் தோன்றி, உன்னைத் தேடி ராமச்சந்திரமூர்த்தி வந்துள்ளார், என்று சொன்னார். இதனால் சரபோஜி மன்னர், சுவாமிகளின் பாதங்களில் விழுந்து ஆசிபெற்றார். மருதாநல்லூர் சுவாமிகள் பல அற்புதங்களை நிகழ்த்தினார். ஒருமுறை அவர் உஞ்சவிருத்தி எடுத்துவரும்போது, பாலகலோசன் என்பவர் அவரை அவமரியாதை செய்தார். இதனால் அவருக்கு வயிற்றுவலி வந்து அவஸ்தை அதிகமானது. அவரது மனைவி சுவாமிகளிடம் மன்னிப்பு கேட்டு தீர்த்தம் பெற்றார். அதை கணவருக்கு அளித்தாள். வயிற்றுவலி நீங்கிய பாலகலோசன் அவரது சீடரானார். அந்த சீடர் எழுதிய, அதடே பரபிரும்மம் என்ற பாடல் குருவணக்கமாக பாடப்படுகிறது. 1817ல், ராமநவமிக்கு முதல்நாள், ஆடுதுறை பெருமாள் கோயிலில் ஜெகத்ரட்சக சுவாமி சந்நிதியில் இறைவனுடன் ஐக்கியமானார்.
தமிழ் நாட்டில், ஸம்பிரதாய பஜனை பொதுவாக, ஸ்ரீ துகாராம் மஹாராஜின் அபங்கமான ’ஸுந்தர தே த்யான உபே விடேவரி’ என்பதைப் பாடி நிறைவு செய்யப்படுகிறது. 300 வருடங்களுக்கு முன், முதன்முதலில், மராட்டி அபங்கங்களின் மஹிமையைத் தமிழ் நட்டிற்கு அறிமுகப்படுத்தியவர் மருதநல்லூர் ஸ்ரீஸத்குரு ஸ்வாமிகள்