திருமுருகாற்றுப் படை
சாந்திப்பிரியா

சூரியனை வதம் செய்ய புறப்பட்ட முருகப் பெருமான் புலவர் நக்கீரரை காப்பாற்றியக் கதை முருகனின் புராணத்தில் உள்ளது. நக்கீரர் பெரும் கவி. யாருக்கும் தலை வணங்காதவர். காரணம் அவருக்கு உண்மையைத் தவிர வேறொன்றும் தெரியாது என்பதே. சிவபெருமானை வணங்காமல் வேறெங்கும் செல்ல மாட்டார்.  ஒருநாள் என்றும் போல வெளியில் கிளம்பிச் சென்றார். நக்கீரர் ஒருமுறை வெளியூருக்குப் பயணமானார். அது திருப்பரம்குன்றம் எனும் இடமாகும். அங்கு சென்றவே அங்கிருந்த குளத்தில் குளித்து விட்டு அருகில் இருந்த சிவாலயத்தின் வெளியில் இருந்த மரத்தடியில் படுத்துக் கொண்டார். ஆலயம் இன்னும் திறக்கவில்லை. அது திறந்ததும் அங்கு சென்று சிவபெருமானை வழிபடலாம் என எண்ணி இருந்தார்.

அதே நேரத்தில் அங்கு சாபம் ஒன்றைப் இருந்த கார்முகி எனும் பூதம் ஒன்று ஆலயத்தின் வெளியில் காத்துக் கிடந்தது.  அதன் வேலை என்ன என்றால் அந்த ஆலயத்தில் வந்து சிவனை பூசிப்பவர்கள் சிவ பூஜையில் கவனம் செலுத்தாமல் இருந்ததால் அவர்களை கொண்டு போய் சிறையில் அடைத்து விடும். இப்படியாக ஆயிரம் பக்தர்களை  சிறையில் அடைத்தப்  பின் அவர்களை காளி தேவிக்கு பலி கொடுத்தால் அதன் சாபம் விலகி அது தன் பழைய மனித உடலைப் பெற்று விடும். ஆகவே அது சிவாலயங்களை சுற்றித் திரிந்து வந்தது. ஆகவே அது அங்கு வரும் பக்தர்களின் கவனத்தைக் கலைத்து சிவ பூஜையில் தவறிழைக்கச் செய்து, அதில் தவறு செய்பவர்களாய் பிடித்துச் சென்று விடும்.

ஆலயமும் திறக்க அதற்குள் சென்ற நக்கீரர் பூஜையை செய்யலானார். அந்த காலங்களில் ஆலயம் என்பது மிகப் பெரிய அளவில் இருக்காது. கருவறை என்பதெல்லாம் கிடையாது. நான்கு சுவர்களுக்குள் ஒரு குளத்துடன் மரமும் உள்ள இடத்தில் விக்ரகங்கள் அல்லது  ஒரு கல்லைப் போன்ற உருவம் இருக்கும். அதையே குறிப்பிட்ட கடவுளாகக் கருதி பூஜிப்பார்கள். பூஜை செய்யத் துவங்கிய நக்கீரரின் முன்னால் இருந்த குளத்தில் அவர் அமர்ந்து இருந்த மரத்தின் மீது இருந்து சில இலைகள் பறந்து வந்து விழுந்தது. ஆச்சர்யமாக அந்த அந்தக் குளத்தில் விழுந்த இலையோ ஒரு மீனாக மாறிவிட,  குளத்தின் கரையில் விழுந்த இலை ஒரு மீன்கொத்திப் பறவையாக மாறியது. அடுத்தகணம் மீன் கொத்திப் பறவை அந்த மீனைப் பிடிக்க முயல,  அதைக் கண்ட  நக்கீரர் அதிசயத்தினால் அவற்றைப் பார்த்துக் கொண்டே இருந்தார். அதனால் பூஜையில் அமர்ந்த அவருடைய கவனம் கலைந்தது. அதுவே தக்க தருமணம் என்று எண்ணிய கார்முகி அவரை அப்படியே தூக்கிக் கொண்டு போய் தன் சிறையில் அடைத்து விட்டு ஆனந்தமாகக் கூத்தாடியது. உடனே சென்று குளித்து விட்டு வந்து காளிக்கு பலி தருகிறேன் என குதுகுலத்துடன் கூறி விட்டுச் செல்ல அவருக்கு முன்னால்  அங்கு சிறையில் இருந்தவர்கள் அவரைக் கண்டதும்  ‘ஓ’ என ஒப்பாரி வைத்து அழலானார்கள். நக்கீரருக்கு ஒன்றும் புரியவில்லை. அவர்கள் எதற்காக அழுகிறார்கள் என விசாரித்தபோது அவர்கள் கார்முகி பூதத்தின் கதையைக்  கூறியப் பின் இதுவரை அந்த பூதம் 999 பேர்களை சிறையில் அடைத்து வைத்து உள்ளதாகவும், பல மாதங்கள் தேடியும் அதனால் ஆயிரமாவது மனிதனைக் கண்டு பிடிக்க முடியாமல் திணறியது என்றும், இன்று நக்கீரரை பிடித்து வந்துவிட்டதின் மூலம் அதன் நோக்கம் நிறைவேறி விட்டது என்றும் இனி அங்குள்ள அனைவருக்கும் மரணமே என்றும் கூறி அழுதார்கள்.
ஆனால் அதைக் கேட்ட நக்கீரர் கலங்கவில்லை. ஆர்பரிக்கவில்லை. கண்களை மூடியபடி கந்தனை வேண்டிப் பாடத் துவங்கினார். ‘கந்தா, கருணை வேலவா, உன் இடத்துக்கு வந்துள்ள என்னைக் காக்க முடியாதவனாகி விட்டாய் என்பதை நான் நம்பவில்லை. உன் சக்திக்கு எதிராக எந்த பூதம் எங்களைக் கொள்ள இயலும். உன் தந்தைக்கு பூஜை செய்தப் பின் உனக்கல்லவோ பூஜை செய்ய வந்தேன். அப்படிப்பட்ட நற்பண்பு கொண்ட உன் பக்தனை கேவலம் ஒரு பூதத்துக்கு இறையாக்கலாமா? இது முறையா? தர்மமா? உன் வேலின் சக்தி என்ன ஆயிற்று? அதை எங்கே ஒழித்து வைத்து விட்டாய்? முருகா, ஷண்முகா…எம்மைக் காக்க வருவாயா?’ என மனமுருகி பிராத்திக்க அவர்கள் சிறை வைக்கப்பட்டு இருந்த குகைக்குள் பெரிய வெளிச்சம் தோன்றியது. அந்த வெளிச்சத்தைத் தொடர்ந்து வந்த கந்தவேலன் அங்கேயே அவர்கள் அனைவரையும் ஆசிர்வதித்தப் பின் காத்திருந்து கார்முகி வரவை எதிர்பார்த்துக் காத்திருந்து அது வந்தப் பின் அதை தனது வேலினால் குத்திக் கொன்றார். அடுத்து அங்கிருந்த ஆயிரம் பேர்களையும் விடுதலை செய்தப் பின் அங்கிருந்துக் கிளம்பிச்  சென்று சூரபதமனையும் அழித்தார்.  அதன் பின்னரே முருகப் பெருமானின் அற்புதத்தை வெளிப்படுத்தும்  திருமுருகாற்றுப் படை எனும் அற்புத பாடலும் பிறந்தது.