சாந்திப்பிரியா

பாகம்-7

பிரும்ம தேவர் செய்த யாகம்

வியாகிரதபாதா முனிவர் மற்றும் பதஞ்சலி முனிவர் போன்றோரும் முனி ரிஷிகளும் தில்லை வனத்திலே சிவபெருமானை தரிசனம் செய்து கொண்டிருந்த வேளையிலே பிரும்ம தேவர் கங்கைக் கரையில் ஒரு யாகத்தை செய்யத் துவங்கி இருந்தார். ஆகவே தில்லையில் வாழ்ந்து வந்த அந்தணர்களையும் முனிவர்களையும் அதற்கு அழைத்து வருன்மாறு நாரத முனிவரை அவர் தில்லை வனத்துக்கு அனுப்பினார். அங்கு சென்று அனைவரையும் அழைத்த நாரத முனிவரிடம் அந்தணர்களும், முனிவர்களும் ‘மாபெரும் முனிவரே, நாங்கள் இந்த தில்லை வனத்திலே ஆனந்தமயமான அமிர்தம் பருகுவதைப் போல போன்ற காட்சியை ரசித்துக் கொண்டு இருப்பதினால், இதை விட மேலானது எதுவுமே இருக்க முடியாது  என்பது தெளிவாகிறதினால் , உங்கள் அவிர்பாகத்தை ஏற்க எம்மால் வர இயலாது’  எனப் பணிவோடு கூறியப் பின் நடந்த இனிய நிகழ்ச்சிகளை விவரமாக எடுத்துக் கூறினார்கள். அன்புடன் அவரை வழி அனுப்பினார்கள். ‘அடடா…இவர்கள் கூறுவதைப் பார்த்தால் நானும் அல்லவா அந்த அற்புதத்தைக் காணாமல் இத்தனை நாளும் இருந்துள்ளேன்.  ஆகவே உடனே சென்று பிரும்ம தேவரையும் அழைத்து வந்து அவருக்கும் இந்த அற்புதத்தைக் காட்ட வேண்டும்’ என முடிவு செய்து விட்டு,  அந்தணர்கள் தன்னுடன்  வாராததினால் ஏமாற்றத்துடன் சென்ற நாரதர்  பிரும்ம தேவரிடம் சென்று நடந்தவற்றை விவரித்தார். அதைக் கேட்ட பிரும்ம தேவருக்கும் ‘ அந்த அற்புதத்தை நாமும் நேரிலே தரிசித்துவிட்டு, அமிர்தமயமான காட்சியை சுவைத்து விட்டு  வியாகிரதபாதா முனிவர் மூலம் அந்தணர்களுக்கு எடுத்துக் கூறி அவர்களை இந்த யாகத்துக்கு அழைத்து வரலாம் என முடிவு செய்தார்.  அதன்படி நாரதரும், பிரும்ம தேவரும் தில்லைவனத்துக்குச்  மறுநாள் காட்சி தந்த சிவபெருமான்-உமையின் அற்புதக் காட்சியை மனதார ரசித்தப் பின்,  அங்கிருந்து மீண்டும் செல்ல மனமே இல்லாமல், ஆனால் யாகத்தை நிறைவடையச் செய்ய வேண்டுமே என்ற கவலையினால், வியாகிரதபாதா முனிவரிடம் சென்று நிலைமையை எடுத்துக் கூறினார்கள்.  அவர் மூலம் அங்கிருந்த அந்தணர்களையும், முனிவர்களையும் யாகத்துக்கு அழைக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்றாலும், யாகம் முடிந்தவுடன் அவர்கள் அனைவரும் மீண்டும் தில்லைவனத்துக்கே வந்து சிவ தரிசனம் பெறலாம் என்ற  ஏற்பாட்டை செய்ய அந்தணர்கள் பிரும்ம தேவரின் யாகத்துக்குச் செல்ல சம்மதித்தார்கள். அவர்கள் சென்று விட்டாலும்  வியாகிரதபாதா முனிவர் மற்றும் பதஞ்சலி முனிவர் இருவருமே தில்லைவனத்திலேயே தங்கி இருந்தபடி தினமும், சிவபெருமானின் ஆனந்த தரிசனத்தை மனம் குளிர கண்டவாறு இருந்தார்கள்.
……….தொடரும்