தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், மற்றும் மாயவரம்
பகுதியில் உள்ள சில ஆலயங்கள், 
அங்கு செல்லும் வழிதடம்
சாந்திப்பிரியா
 
படத்தை பெரிய அளவில் பார்க்க படத்தின் மீது கிளிக் செய்யவும்

 

பலரும் இந்த ஆலயம் செல்லும் வழி எது, அந்த ஆலயம் செல்லும் வழி எது, முக்கியமான ஆலயங்களுக்குச் செல்லும் வழி என்ன எனக் கேட்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு உதவியாக இருக்க சென்னையில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, கும்பகோணம், மற்றும் மாயவரம் செல்லும் வழியையும் முக்கியமாக கும்பகோணத்தை சுற்றி உள்ள நவக்கிரக ஆலயங்கள் செல்லும் வழியையும் மேலே உள்ள படத்தில் தந்துள்ளேன். மேலும் நான் தந்துள்ளதைத் தவிர  வேறு பல ஆலயங்கள் வழியெங்கிலும் வரும். அவற்றில் பழமையான ஆலயங்களை அங்காங்கே வண்டியை நிறுத்திப் பார்க்கலாம்.  வெளியூரில் இருந்து எப்போதாவது செல்பவர்கள்  ஒவ்வொரு ஊரிலும் குறைந்தது இரண்டு நாளாவது ஹோடல்களில் தங்கி அனைத்து ஷேத்திரங்களையும்  ஒரு வாரத்தில் தரிசிக்கலாம்.

கும்பகோணத்தை சுற்றி மற்றும் கும்பகோணத்திலேயே
காண வேண்டிய சில ஆலயங்கள்

1) திருவையாறு செல்லும் வழியில் ஒன்பது கிலோ தொலைவில் உள்ள ஆதனூர் ஆலயம்.
2) இருபது கிலோ தொலைவில் உள்ள அம்மன்குடி ஆலயம்
3) திருவாரூர் செல்லும் சாலையில் சித்தனாதீஸ்வரர் ஆலயம், கபிஸ்தலம் ஆலயம் , ஐந்து கிலோ தொலைவில் உள்ள அழகாபுத்தூர் ஆலயம், எட்டு கிலோ தொலைவில் ஸ்வாமிநாதசுவாமி ஆலயம், பன்னிரண்டு கிலோ தொலைவில் நாச்சியார் கோவில், இருபது கிலோ தொலைவில் உள்ள குடவாசலில் கோனேஸ்வரர் மற்றும் பக்தவத்சலர் ஆலயம்.
4) தஞ்சாவூர் செல்லும் சாலையில் ஐந்து கிலோ தொலைவில் உள்ள ஐராதீஸ்வரர் ஆலயம், ஏழு கிலோ தொலைவில் உள்ள கர்பபுறீச்வர் ஆலயம், இருபது கிலோ தொலைவில் வேதநாராயனர் ஆலயம் .முப்பது கிலோ தொலைவில் உள்ள பசுபதிகோவிலில் உள்ள பிரும்மபுரீஸ்வரர் ஆலயம்.
5) 25 கிலோ தொலைவில் உள்ள பாடலீஸ்வரர் ஆலயம்
6) கும்பகோணம் காரைக்கால் சாலையில் பூமினாதர் என்ற சிவன் ஆலயம்
7) ச்வாமிமலைக்குச் செல்லும் பாதையில் ஆறு கிலோ தொலைவில் உள்ள கோடீஸ்வரர் ஆலயம்
8) மாயவரம் செல்லும் பாதையில் ஐந்து கிலோ தொலைவில் கும்பாஹரீச்வர் ஆலயம், பதினைந்து கிலோ தொலைவில் பிராணவரடீஸ்வரர் ஆலயம், பதினாறு கிலோ தொலைவில் மாசினாமனேச்வர் ஆலயம், இருபது கிலோ தொலைவில் உத்கவீதீஸ்வரர் , நன்னிலத்தில் மதுவநீஸ்வரர்.
9) மன்னார்குடி செல்லும் பாதையில் வலங்கைமான் மாரியம்மன் ஆலயம், மன்னார்குடியில் ராஜகோபாலசுவாமி ஆலயம்.
10) கும்பகோணத்துக்கு உள்ளேயே ஆதி கும்பேஸ்வரர், நாகேஸ்வரர், சோமேஸ்வரர், காசி விஸ்வநாதர், பாணபுரீஸ்வரர், சாரங்கபாணி, சக்ரபாணி, ராமஸ்வாமி, வீரபத்ரர், ஒப்பிலியப்பன், பிரம்மன், மகாமகக் குளத்துக்கு அருகிலேயே யக்யோபதாரனேஸ்வரர் போன்ற ஆலயங்கள் .

திருச்சியை சுற்றி மற்றும் திருச்சியிலேயே
காண வேண்டிய சில ஆலயங்கள்

1) ஏழு கிலோ தொலைவில் உள்ள ரங்கஸ்வாமி ஆலயம், ஸ்ரீரங்கம்
2) ஐந்து கிலோ தொலைவில் உள்ள திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி ஆலயம்
3) இருபது கிலோ தொலைவில் உள்ள சமயவரம் மாரியம்மன்
4) ராக்போர்ட் மலைக்கோட்டை பிள்ளையார்
5) ஆத்மனாதஸ்வாமி ஆலயம்
6) இருபத்தி நாலு கிலோ தொலைவில் உள்ள பிரசன்ன வெங்கடேஸ்வரர் ஆலயம், குணசீலம்
7) ஸ்ரீ கோகர்நேஸ்வரர் ஆலயம்
8) இருபத்தி ஐந்து கிலோ தொலைவில் உள்ள புண்டரீக்காக்சர்  ஆலயம்
9) ஐயப்பன் ஆலயம்
10) எட்டு கிலோ தொலைவில் உள்ள வயலூர் முருகன் ஆலயம்
11) ஸ்ரீரங்கத்தில் இருந்து நான்கு கிலோ தொலைவில் உள்ள உத்தமர் கோவில்
12) ரங்கனாதச்வாமி ஆலயம்
13) கைலாசமுண்டைவர் ஆலயம்
14) சாயவநீஸ்வரர் ஆலயம்

மாயவரத்தை சுற்றி மற்றும் மாயவரம் கும்பகோணம் செல்லும்
பாதைகளில் காண வேண்டிய சில ஆலயங்கள்

1) மயூரநாதசுவாமி
2) கங்கைகொண்ட சோழபுர ஆலயம் – மாயவரத்தில் இருந்து நாற்பது கிலோ தொலைவில் உள்ளது
3) வைதீஸ்வரன் ஆலயம்
4) வள்ளலார் சிவன் ஆலயம்
5) பரிபூரண ரங்கநாதர் ஆலயம்
6) ஐந்து கிலோ தொலைவில் கோழிக்கூத்தி ஸ்ரீ வானமூட்டி பெருமாள் ஆலயம்
7) திருபாம்புப்புரம் சிவன் ஆலயம்
8) திருமணஞ்சேரி ஆலயம்
9) திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலயம்
10) இரண்டு கிலோ தொலைவில் செந்தாங்குடி துர்க்கை ஆலயம்
11) பதினாறு கிலோ தொலைவில் உள்ள திருவாடுதுரையில் மாசிலாமனிஸ்வரர் ஆலயம்
12) திரு அருள்மாக்கடல் பெருமாள் ஆலயம்

தஞ்சாவூரை சுற்றி மற்றும் தஞ்சாவூரிலேயே
காண வேண்டிய சில ஆலயங்கள்

1) பிரஹதீஸ்வரர் ஆலயம்
2) கிழக்கு மெயின் சாலையில் காமாட்சி அம்மன் ஆலயம்
3) கரந்தை ஜெயின் சாலையில் சரஸ்வதி ஆலயம்
4) வெங்கடேச பெருமாள் ஆலயம்
5) ஆத்மனாதஸ்வாமி ஆலயம்
6) காந்தி சாலையில் ஆஞ்சேநேயர் ஆலயம்
7) சக்கனைக்கன் சாலையில் ஷ்யாமளா தேவி ஆலயம்
8) வீரம்மா காளியம்மன் ஆலயம்
9) எண்பது கிலோ தொலைவில் உள்ள புலியூர் வியாக்ரபுரீஸ்வரர் ஆலயம்
10) எண்பது கிலோ தொலைவில் உள்ள சிக்கல் சிங்காரவேலர் முருகன் ஆலயம் 11) சீர்காழி தோணியப்பர் ஆலயம்
12) நாற்பத்தி ஐந்து கிலோ தொலைவில் உள்ள புலியூர் பஞ்சனாதீஸ்வரர் ஆலயம்
13) இருபத்தி மூன்று கிலோ தொலைவில் உள்ள எட்டுக்குடி ஆலயம்
14) ஆறு கிலோ தொலைவில் உள்ள புன்னை நல்லூர் மாரியம்மன் ஆலயம்
15) பத்து கிலோ தொலைவில் உள்ள திருக்காண்டியூர் ஆலயம்
16) முப்பத்தி இரண்டு கிலோ தொலைவில் உள்ள தாரசுரம் ஆலயம்