பராசர முனிவர்

சாந்திப்பிரியா

முன்னொரு காலத்தில் வசிஷ்ட முனிவருடைய சிஷ்யனான கல்மஷாபாதன் என்ற அரசன் ஒரு நாட்டை ஆண்டு வந்தான். அவன் நிறைய நற்பண்புகள் மிக்கவன். பல்வேறு பூஜைகள், யாகங்கள் என அனைத்தையும் செய்து வந்தவன். அதே நேரத்தில் காடுகளில் சென்று விலங்குகளை வேட்டையாடுபவன். அப்படி ஒரு நாள் வேட்டை ஆடிவிட்டு திரும்பும்போது    வழியிலே குறுகலான இடத்தைக் கடக்க வேண்டி இருந்தது.  அந்த இடத்தில் சென்று கொண்டு இருந்த பொழுது எதிர்புறத்தில் இருந்து ஒரு அந்தணன் வந்து கொண்டு இருப்பதைக் கண்டான். இருவரும் ஒரே நேரத்தில் பக்கத்தில் நடந்து சென்றால் அந்த இடத்தைக் கடக்க முடியாது. எவராவது ஒருவர் பாதையை விட்டு சற்றே விலகி நின்றால்தான் மற்றவர் மேற்கொண்டு செல்ல இயலும். அந்த அந்தணர் வசிஷ்ட முனிவரின் புதல்வாரன சக்தி என்பவர். அவரைப் பற்றி அந்த கல்மஷாபாதன் அறிந்திருக்கவில்லை. ஆகவே அவரை ஒதுங்கி நிற்குமாறு மன்னன் கூற சக்தியோ, ஒரு மாபெரும் முனிவரின் மகன், மற்றும்   பாண்டித்தியம் பெற்றவர் என்பதினால் அவர் சாஸ்திர விதிகளை நன்கு அறிந்தவர்.  இருவர் சாலையை கடக்கும்போது முதலில் அந்தணர் செல்ல மற்றவர் வழி விட வேண்டும் என்பது சாஸ்திர விதி என்பதினால் கல்மஷாபாதனை சாலையை விட்டு விலகி நிற்குமாறு கூற அதைக் கேட்ட கல்மஷாபாதன் கடும் கோபமுற்றான். மன்னன் என்னை இழிவாகப் பேசி விட்டான் ஒரு அந்தணன், கோபமுற்று அவரை சாலை ஓரம் தள்ளிவிட்டு மேலே செல்லத் துவங்கினான். சக்தி தனக்கு நேர்ந்த அவமானத்தை எண்ணி துடித்தார்.  உடனே கோபமுற்று அந்த மன்னன் மனித குல மாமிசம் தின்னும் ராக்ஷசனாக மாறட்டும் என சாபமிட்டார். உடனடியாக கல்மஷாபாதனும் அதன்படி மாமிசம் உண்ணும் குணம் கொண்டவனாக மாறி வசிஷ்டருடைய பிள்ளையான சக்தியையும் சேர்த்து அவருக்கிருந்த நூறு பிள்ளைகளையும் கொன்றுத் தின்று விட்டான்.

அதைக் கேள்விப்பட்ட வசிஷ்டர் மிகவும் வருத்தம் அடைந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்தபோது இறந்து போன சக்தியின் மனைவி அவரை தடுத்து நிறுத்தினாள். தான் கர்பமுற்று இருப்பதினால் தனக்கு துணையாக அவர் தன்னுடன் இருந்து தன்னை காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்ள அவரும் தற்கொலை எண்ணத்தை விட்டு அவளுடன் சென்று வாழத் துவங்கினார். அடுத்த சில மாதங்களில் அவள் ஒரு குழந்தையை பெற்று எடுத்தாள்.    

ஒரு நாள் வீட்டில் எதோ மந்திர உச்சாடனை செய்யும் குரல் வந்ததைக் கேட்ட அவர் எங்கிருந்து அந்த ஒலி வருகின்றது என அவளைக் கேட்க அவளும் தன்னுடைய வயிற்றில் உள்ள குழந்தைதான் வேதம் ஓதுகின்றது என்றாள். அவளுடைய கணவர் ஓதும் மந்திரங்களை வயிற்றில் இருந்த குழந்தை கற்றுக் கொண்டு அப்படி மந்திரம் ஓதியது. நாளடைவில் அவள் குழந்தை நன்கு வளர்ந்தது. அதற்கு பராசரா எனப் பெயரிட்டு வளர்த்தனர். தன்னுடைய தந்தைக்கு ஏற்பட்ட கதியை அறிந்து கொண்ட பராசரா அனைத்து இராட்ஷசர்களையும் அழிக்க சபதம் கொண்டு யாகம் ஒன்றைத் துவக்கினார். ராட்ஷசர்கள் அந்த யாக குண்டத்தில் விழுந்து மடிந்தவண்ணம் இருக்க வசிஷ்டர் வந்து அவரிடம் ஒரு ராக்ஷசன் செய்த தவறுக்கு எப்படி அனைத்து ராக்ஷசர்களும் பொறுப்பாக முடியும்? முன்கோபம் என்பது ஒருவனது விரோதி என்றும், அவருடைய தந்தையின் முன் கோபத்தினால் வெளி வந்த ராக்ஷஸனினால் அனைத்தும் வந்தது என்றும், ஆகவே அமைதியாக இருக்குமாறும், அவரவர் வினைகளுக்கு ஏற்ப அவரவர் தண்டனையை அடைவார்கள் என்றும் அறிவுரை கூறி அவரை யாகத்தை நிறுத்துமாறு கூறினார்.  பராசரரும் பிரும்மாவின் ஒரு மகனான புலஸ்த்யசி மகரிஷிக்கு அர்க்கயம் தந்து யாகத்தை நிறுத்தினார்.

பராசர முனி ஒரு முறை நதிக்கு சென்று மறு கரையை அடைய படகைத் தேடிய பொழுது ஒரு பெண் படகோட்டியுடன் பயணம் செய்தார்.  அவள் மிகவும் அழகானவள் ஆனால் உடல் முழுதும் மீன் வாசனைக் கொண்டவள் என்றாலும் அவள் அழகில் மயங்கி அவளை சல்லாபிக்க பராசரா முனிவர் ஆசை கொண்டார். அவள் தன் ஆசையை எடுத்துக் கூறி அவளை சமாதானப்படுத்தி அவளுடன் அந்தப் படகிலேயே உறவு கொண்டு விட்டார். நதியில் இன்னொரு இடத்தில் சிறிய தீவு ஒன்றையும் தன்னுடைய சக்தியினால் படைத்து அவளை அங்கு தங்க வைத்து ஒரு குழந்தைப் பெறச் செய்தார். அழகான குழந்தையும் பிறந்தது. அவளுடைய உடல் நல்ல மணம் பெற்றது. அப்படி ஒரு மீனவளுக்கும் பராசரா முனிவருக்கும் இடையிலான உறவிலே பிறந்தவரே வேதங்களைப் படைத்த மாபெரும் வேத வியாச முனிவர் ஆவார்.

 

Sage Parasara

Santhipriya

Very long ago there lived a king by the name Kalmashapadan.  He was a disciple of Maharishi Vashishta. He possessed good habits and pious. Once while he was returning back after hunting in the forest he happened to pass along a narrow road in which only one person could move and if someone came from the opposite direction, one of them had to slightly move a little on side ways to allow the other to cross without touching each other.   Half way down the path he saw another Brahmin coming from the opposite direction. The Brahmin was Sage Sakthi son of Maharishi Vashishta. When both of them approached close, both were not willing to give way to the other to move forward and remained silent for few minutes.  Sage Shakthi always followed the precincts of dharma Shastra in which it is stated that when a king and Brahmin meet under the circumstances which they faced now, it is the Brahmin who had the right to have his say. Breaking the silence the Sage told the King of the precincts in the Dharma Shastra and requested the King to give him way to move forward, but the King refused to accept the theory and in fit of anger he pushed aside the sage and walked forward. The sage got wounded and humiliated.  When he cursed the King to turn into a human flesh eating demon, immediately the King turned into a human flesh eating demon and he instantly ate sage Sakthi and went on further eating the other hundred sons of Maharishi Sage Vashishta.

Saddened by the act of the demon, Maharishi Vashishta attempted to commit suicide but was persuaded by the wife of Sage Sakthi not to commit suicide and instead stay with her to protect her as she was pregnant. Maharishi Vashishta therefore changed his mind and stayed with her. One day he heard the chants of Veda and asked her from where it was coming. She told him that that it was chanted by her unborn child in her womb which learnt it from her husband when he was alive. Maharishi Vashishta was too pleased to hear it.  

In the next few more months, she delivered a male child which was named Parasara.  When it grew and learnt of every one of the events that had happened he became furious and decided to conduct a Yagya with the intent to destroy   all the Rakshasas and commenced it also.  Soon many Rakshasas began to come and fall into the Yagya fire and died.  The moment Maharishi Vashishta came to know of it, he rushed to Parasara and advised him to stop the Yagya as many of the innocent Rakshasas cannot be made accountable to the misdeeds of one Rakshasa.  Vashishta counselled that anger cannot be the sole weapon to punish anyone and because his father Sakthi did that mistake, a Rakshasa was born and because of the Rakshasa, he lost (Vashishta) all his sons. He therefore advised him to stop the Yagya stating that destiny would punish the guilty for their misdeeds.  Agreeing to the saner advice of the Maharishi Sage Parasara stopped the Yagya after giving argaya (giving water to wash the hands and feet to the main guest who preside over the Yagya and who ends it as well) to the son of Lord Brahma.

An interesting episode in the life of Sage Parasara.   Once he was crossing the river by a boat driven by a female from lower caste and bad smell of fish emanated from her body.  Notwithstanding it, and attracted by her beauty he wanted to have sexual pleasure with her and showed his desire to perform coitus with her. When she resisted, he convinced her and got his sexual desire fulfilled in the boat itself.  He also granted her the boon that the fragrance of the raw fish will turn into the finest fragrance that may emit from her. He then took her to an island which he created with his power  on the Ganges and in due course, they had a son who was named Vyasa who was later came to be known as Veda Vyasa because he mastered the Vedas, divided the Vedas and made them accessible to the humans.