திருமதி மாலதி சேஷாத்திரி

-சாந்திப்பிரியா-

BSNL நிறுவனத்தில் துணை மேலாளராக பணி புரிந்து ஒய்வு பெற்ற திருமதி மாலதி சேஷாத்திரி, ஆத்மார்த்தமான ஆன்மீக நாட்டம் கொண்டிருந்தவர் என்பதினாலோ என்னவோ, அவர் பணியில் இருந்து ஒய்வு பெற்றதும், தனது ஒய்வு நாட்கள் பண்பு மிக்க காலமாக அமைய வேண்டும் என்ற நோக்கத்தில் You Tube எனப்படும் ஒலி ஒளி வீடியோக்கள் மூலம் தெய்வீக போதனைகளையும், தூய்மையான வாழ்க்கை நெறி முறைகளையும் விளக்கும் மகான்கள், புராண, இதிகாசக் கதைகளை வெளியிடத் துவங்கி உள்ளார். அவர் ஒலி பரப்ப எண்ணிய மகான்கள், புராண, இதிகாசக் கதைகள் அனைத்துமே பல்வேறு நூல்கள், வலை தளம் மற்றும் இணைய தளங்களில் காணப்படும் அபூர்வமான முத்து மணிகளினால் வேயப்பட்ட தெய்வீக மாலைகள் என்று மனதார நம்பியதினால், அந்த படைப்புக்களை தனது இனிய குரல் வளத்தின் மூலமும், மென்மையான உச்சாடனங்களுடனும், சிறு குழந்தைகளுக்கு பாடம் புகட்டுவதை போல எளிமையுடனும் ஒலி, ஒளி பதிவு செய்து You Tube பில் வெளியிட்டு வருகின்றார்.

ஒரு வகையில் பார்த்தால் அவர் தனக்காக தேர்ந்தெடுத்துள்ள பாதை தீர்க்கமான மார்க்கமே என்பது புரியும். ஒருவரது வாழ்கைக்குத் தேவையான அனைத்து பண்பாடுகளையும் போதனைகளையும் ஆழமாக உள்ளடக்கிக் கொண்டிருந்த அந்த அற்புதமான காவியங்களும் புராணங்களும் முன் காலங்களில் நமது முன்னோர்களால் சிறு குழந்தைகளுக்கு உணவு அளிக்கும்போது சிறு கதைகளாக கூறப்பட்டு வந்திருந்தவை. ஆபத்தான, நெறியற்ற, வீர, தீர சாகசங்களில் ஈடுபட வைக்கும் வகையில் அமைந்துள்ள, உணர்ச்சியையும், சிலிர்ப்பையும் தூண்டும் தற்கால கதைகளுக்கு மாறாக, தெய்வீக உணர்வோடு கூறப்பட்டு வந்திருந்த அந்த கால கதைகளில் கலந்திருந்த ஆத்மார்த்தமான போதனைகள் அந்த பிஞ்சு நெஞ்சங்களில் இனம் புரியா மென்மை தாக்கத்தை ஏற்படுத்தி பிற்காலத்தில் தாம் மேற்கொள்ள வேண்டிய ஒழுக்கம் சார்ந்த வாழ்க்கை முறையை தேர்ந்தெடுத்துக் கொள்ள ஒரு பாதையாக இருந்தன.

மேற்கத்திய நாடுகள் உட்பட உலகெங்கிலும் பளபளப்பான, சிலிப்பூட்டும் சுகபோகங்களுடனும், வளமான வாழ்க்கையிலும் வாழ்ந்து கொண்டு வரும் பெரும்பாலானவர்கள் வாழ்க்கையில் சலிப்பு ஏற்பட்டு, மனதிலும் அமைதி இல்லாமல் தவித்தபடி ஆன்மீக பெரியோர்களையும் ஆன்மீக மையங்களையும், ஆலயங்களையும் தேடி அலைவதையும், தெய்வீக சிந்தனைகளை தந்திடும் ஓலி-ஒளிக் காட்சிகள் மற்றும், பத்திரிகைகள் மீது நாட்டம் கொள்வதையும் பார்க்கும்போது, தற்காலத்தில் பரவலாக தொடர்ந்து கொண்டிருக்கும் நெறியற்ற பொது வாழ்க்கைக்கு போடப்படும் ஒரு கடிவாளம் போல உள்ளதாகவே நினைக்க வேண்டி உள்ளது. இது நிச்சயமாக ஆறுதல் தரும் விஷயம் ஆகும். அப்படி அனைவராலும் பொதுவாக ஏற்கப்பட்டு உள்ள வழி முறையில் ஒன்றே ஆன்மீக நாட்டம் கொண்டுள்ள திருமதி மாலதி சேஷாத்திரி போன்றவர்கள் தேர்ந்தெடுத்துள்ள You Tube எனப்படும் ஓலி சார்ந்த ஒளிக் காட்சி மார்கம் ஆகும்.

வைதீகமான, பழமையிலிருந்து நழுவ விரும்பாத, மாறுதல் விரும்பாத எண்ணம் கொண்டவர்களாக ஒருவர் இருக்க வேண்டும் என்பதல்ல நம் கருத்து. ஆனால் அதே சமயம் ரத்தின கற்களை போன்ற போன்ற பண்டை காலத்தைய கதைகளில் உள்ளடங்கி இருந்த சத்திய போதனைகளை ஒருவர் தெரிந்து கொண்டால்தான் பிற்கால வாழ்க்கை முறையை அவர்களால் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியும். இல்லை என்றால் கண் கெட்டப் பின் சூரிய நமஸ்காரம் செய்வதை போல, பண்பற்ற வாழ்க்கை முறையில் ஊர்ந்துவிட்டு, மன அமைதி தேடி அங்கும் இங்கும் அலைய வேண்டி வரும் என்பதை புரிந்து கொண்டுள்ள திருமதி மாலதி சேஷாத்திரி போன்றவர்கள், தாம் குழந்தைப் பருவத்தில் கேட்டறிந்திருந்த அற்புதமான காவியங்களை, நீதி நெறிக் கதைகளை, வாழ்க்கை வரலாற்றுக்களை இன்றைய தலைமுறையும் கேட்டு மகிழட்டும் என்பதற்காக ஒலி -ஒளி சார்ந்த வீடியோக்களாக வெளியிட்டு வருகின்றார்கள். அந்த முத்துக்கள் அமைதியாக ஓடிக் கொண்டு இருக்கும் நீரோட்டம் போல மனித குலம் இருக்கும்வரை மக்கள் மனதை ஆக்ரமித்துக் கொண்டே இருக்கும்.

திருமதி மாலதி சேஷாத்திரி விலை மதிப்பில்லாத அந்த ரத்தினக் கற்களில் இருந்து மேன்மையானவற்றை பல்வேறு புராணங்கள், காவியங்கள் போன்ற புத்தகங்கள், இணைய தளங்கள் மற்றும் வலைத்தளங்களில் இருந்து கவனமாக தேர்ந்து எடுத்து வெளியிட்டு வருகின்றார். கேட்பவர்களுக்கு அலுப்பு தட்டாமல் இருக்கும் வகையில் மிக நீண்ட கதைகளை தக்க இடத்தில் நிறுத்தி அடுத்தடுத்த பாகங்களாக வெளியிட்டு வருகின்றார்.  ஓலி சார்ந்த ஒளிக் காட்சிகளாக அவர் வெளியிட்டு உள்ள பொதுவான காவியங்கள், நீதி நெறிக் கதைகள் போன்றவற்றை மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கு  கிரேக்க மற்றும் லத்தீன் மொழியைப் போல புரியாமல் இருக்கலாம். ஆனால் அவற்றில் புதைந்துள்ள கருத்துக்கள் ஆழமானவை என்பதில் சந்தேகம் இல்லை.

இதுவரை அவர் எழுபதுக்கும் மேற்பட்ட வீடியோக்களை ஒளி – ஒளி காட்சியாக வெளியிட்டு உள்ளார். அவருடைய You Tube தளம்: https://www.youtube.com/c/MalathiSeshadri என்பதாகும் . அந்த தளத்தில் சென்று அவர் பதிவிறக்கி உள்ள ரத்தனக் கற்களை உளமார கேட்டு மகிழலாம் .

தற்போது அவர் நான் சாந்திப்பிரியா பக்கங்கள்  எனும் இந்த இணைதளத்தில் வெளியிட்டு உள்ள காளிதாசரின் ரகுவம்சம் எனும் காவியத்தை ஒளி-ஒளி காட்சியாக பதிவேற்றி வருகின்றார். ராமாயணத்தில் கூறப்படும் ராமபிரானின் வம்சாவளியினர் யார், எவர், அவர்கள் அனைவருடைய காலத்திலும் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் போன்றவற்றையும், சூரிய வம்சத்தில் இருந்து தோன்றிய இஷ்வாகு வம்சத்தை சேர்ந்த ரகு எனும் மன்னனது ஆட்சி காலத்திலேயே ரகு வம்சம் எனும் பெயரைப் பெற்ற கதையையும் விளக்குகின்றது ரகுவம்ச காவியம். இந்த ஒலி ஒளி வீடியோக்களை மே மாதம் 20 ஆம் தேதிமுதல் தொடர்ந்து வாரம் மூன்று முறையாக வெளியிட உள்ளார். அவர் பதிவேற்றி உள்ள முதல் மூன்று ஒலி ஒளி வீடியோக்களை ஒன்றன் பின் ஒன்றாக கீழே உள்ள லிங்கில் சென்று கேட்கலாம். மற்றவற்றையும் ஒன்றன் பின் ஒன்றாக அவர் பதிவேற்றிய பின் கேட்கலாம்.

ரகுவம்சம்

ரகுவம்சம் –Introduction

ரகுவம்சம் –Part-1

ரகுவம்சம் –Part-2

ரகுவம்சம் –Part-3

ரகுவம்சம் –Part-4

ரகுவம்சம் –Part-5

ரகுவம்சம் –Part-6

ரகுவம்சம் –Part-7

ரகுவம்சம் –Part-8

ரகுவம்சம் –Part-9

ரகுவம்சம் –Part-10

ரகுவம்சம் –Part-11

ரகுவம்சம் –Part-12

இதர காவியங்களும் கதைகளும்

கீழ் உள்ள PDF ஐ திறந்து அதில்  உள்ள பெயர்களை கிளிக் செய்து  அந்தந்த ஒளி-ஒலிக் காட்சியினைக் கேட்கலாம்

 இதர காவியங்களும் கதைகளும் 

வலையொளி தளம்

கீழ்கண்ட  வலையொளி தளத்தில் சென்றும் அவருடைய ஒளி-ஒளி காட்சிகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  1. Radio public: https://radiopublic.com/malathi-seshadri-69JJo1
    2.Breaker: https://www.breaker.audio/malathi-seshadri
    3.Spotify: https://open.spotify.com/show/4IkjBxNZh5jtw9DrzthVWx
    4. Google podcast: விரைவில் வெளியாக உள்ளன