விநாயக சதுர்த்தி
ஒரு நாடோடிக் கதை
சாந்திப்பிரியா 

ஒரு முறை விநாயகருக்கு பிறந்த நாள் வந்தது. அன்று தன மகனுக்குப் பிடிக்கும் என பார்வதி நிறைய தின்பண்டங்கள் செய்தாள். அவருக்குப் பிடித்த் கொழுக்கட்டையை செய்தாள். விநாயகருக்கு நல்ல சுவையான உணவைப் பார்த்தால் சாப்பிட ஆசை. ஆகவே அவர் அனைத்தையும் தின்றுவிட , வயிறு ஒப்பி விட்டது. அதனால் அவரை பார்வதி தொந்தி விநாயகா என அழைத்தாள் . அதுவே அவர் பெயராக நிலைத்து நின்றது. அடுத்து விநாயகரால் ஒரு இடத்தில் நிற்க முடியாமல் திணறினார். ஆகவே தனது வாகனத்தை துணைக்கு அழைத்துக் கொண்டு நடக்கத் துவங்கினார்.

நடந்து கொண்டு இருந்தவர் ஒரு மேடு இருந்ததைக் கவனிக்காமல் கீழே தலை குப்பற விழ வயிறு பூமியில் பதிந்து அமுங்க அவர் சாப்பிட்ட அனைத்தும் வாந்தியாயிட்று. அப்போது மாலை நேரம். விநாயகர் தொந்தியுடம் நடக்க முடியாமல் அசைந்து அசைந்து சென்று கொண்டு இருந்ததையும், விழுந்து வாந்தி எடுத்ததையும் கண்ட சந்திரன் சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்தார். அப்போது அதக் கண்டு கோபமுற்ற விநாயகர் சந்திரனுக்கு சாபம் தந்தார். ‘இனி என் பிறந்த நாள் அன்று உன்னை எவரும் பார்க்கக் கூடாது. நீயும் என் பிறந்த நாளுக்கு வரக்கூடாது ‘ . அது முதல் பிள்ளையார் முடிவு செய்தார் இனி என் பிறந்த நாளில் நான் பத்தியமாகத்தான் சாப்பிடுவேன் என. அதனால்தான் அன்றைக்கு அவர் சக்கரைப் போட்ட அவலையும், ஜீரணிக்க அருகம் புல்லின் சாற்றையும் பருகுகின்றாராம்.  எத்தனை கடின வாழ்கையிலும் என்னிடம் பக்தியை வைத்து  வணங்கினால் முடிவில் உங்களுக்கு கிடைக்க உள்ளது இனிய  சக்கரை சாறை பருகுவதைப் போன்ற வாழ்கையையே என்பதை விளக்க கரும்பை வைக்க வேண்டும் என்றாராம் .  அதனால்தான் விநாயகர் சதுர்த்தி அன்று மழை பொழிந்து மேகங்கள் மூடி சந்திரனைப் பார்க்க முடியாமல் உள்ளதாம். சந்திரனும் தெரிவது இல்லையாம்.விநாயகருக்கு சர்க்கரை அவலை  பிரதானமாக வைக்கின்றார்கள்.