ஆலமரத்து அடியில் கேட்ட கதைகள்  –  16
அண்ணன் சுவாமிகள்
சாந்திப்பிரியா

திருவாரூரில் இருந்து இருபது கிலோ தொலைவில் உள்ள திருநெல்லிக்காவல் என்ற ஊரின் அருகில் உள்ள இடமே புத்தூர் என்பது.  1937 ஆம் ஆண்டு அந்த ஊரில்  பிறந்தவரே அண்ணன் ஸ்வாமிகள். அவர் பிறந்த தினம் போகிப் பண்டிகை கொண்டாடப்பட்ட தினம்.  அவர் பிறந்தது சாதாரண நிலையில் இருந்த குடும்பத்தினருக்கே.
அவர் சிறுவனாக இருந்தபோது அந்த ஊருக்கு வந்து இருந்த ஒரு வங்காள தேசத்து ஆன்மீகப்  குரு அவருடைய நாக்கில் எதோ சில மந்திரங்களை எழுதி மந்திரோபதேசம் செய்தார்.  அதன் காரணமாக அவர் சித்த புருஷராகி விட்டார் அவருக்கு நிறைய சீடர்கள் வந்தனர். அவர்களில் முக்கியமானவர்கள் நிர்வாண ஸ்வாமிகள்  , மருதூர் ஸ்வாமிகள் போன்றோர் உண்டு. அவர் நல்ல திடகர்தமான உடல்வாகு கொண்டு இருந்ததினால் அவரை மாஸ்டர் என்றே அனைவரும் அழைத்தனர்.  சிலம்பு ஆடுவதில் மன்னராக இருந்தாராம்.  வளர்ந்து கொண்டு இருந்தவர் ஒரு கட்டத்தில் முழுமையான ஆன்மீகவாதியாக மாறிவிட்டார்.  உலக பற்று  அனைத்தையும் துறந்து விட்டார். இடுப்பில் ஒரு முழ வெட்டி மட்டுமே உடுத்திக் கொண்டு  ஒரு குளத்தின் அருகில் தன இரு கைகளையும் தலைக்கு தலையானிப் போல வைத்துக் கொண்டு பல மணிநேரம் அப்படியே படுத்துக் கிடப்பாராம். அந்த நேரத்தில் வானத்தில் சுற்றித் தெரிந்த பல தேவதைகளுடன் தொடர்புக் கொண்டு பல சித்திகளைப் பெற்றார். அவர் அதிக அளவு உணவு அருந்துவதில்லை. அவர் எவருடன் பேசிக்கொண்டு இருப்பாரோ அவர்களை அடையாளம் காட்டுவது  போல அவருடைய உடலின் நிறமும் மாறிக்கொண்டே இருக்குமாம். ஆனால் இரவு ஆனது அவர் உடல் மீண்டும் அவருடைய  உண்மையான வண்ணமான கருப்பு உடலாகவே மாறி விடுமாம்.  ஒரு முறை அவர் ஆறு மாத காலம் ஒரு சிலையைப் போல எந்த உணர்வையும் கட்டாமல் எதுவும் சாப்பிடாமல், எதையும் குடிக்காமல், நிர்விகல்ப சமாதியில் இருந்தாராம்.  அந்த நேரத்தில் அவருடைய தலை முடி வளர்ந்து சீக்கு பிடித்துப் போயிற்று. அந்த தலை முடி அவருடைய சமாதியில் இன்னமும் பாதுகாத்து வைக்கப்பட்டு உள்ளது எனவும் அது இன்னமும் வளர்ந்து கொண்டே போகின்றது என்பதும் கேட்பதற்கு அதிசயமாக உள்ளது.

அவர் பலரது தீர்க்க முடியாத வியாதிகளை குணப்படுத்தி உள்ளார். ஒருமுறை தற்கொலை செய்து கொள்ள இருந்தவருடைய உடலில் தானே புகுந்து கொண்டு அவருடைய தற்கொலை எண்ணத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறுகிறார்கள். அவர் தன்னுடைய பக்தர்களிடம் கட்டிய அன்பு அளவிட முடியாதது. அவரை சுற்றி நன்கு படித்த,  நல்ல குணங்களுடன்  இருந்த இளஞ்சர்களை வைத்துக் கொண்டு தன்னுடைய தவ வலிமையை சோதிக்க விட்டாராம். மெத்தப் படித்த பலரும் அவருடைய தத்துவங்களை அறிவுத் திறனை   கண்டு வியந்தார்கள்.  மந்திரங்கள், தந்திரங்கள், கடவுட்களைப் பற்றிய ரகசியங்கள், யோகக் கலை போன்றவற்றைப் பற்றி  அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் போதனை செய்தார். சில சமயங்களில் தன்னைப் பற்றிய இளமை ரகசியங்களை, வாழ்ந்த வாழ்கையைப் பற்றி கூறுவாராம். மாலை நேரத்தில் பஜனைப் பாடல்களை பக்தர்களுடன் சேர்ந்து கொண்டு பாடுவாராம். அவர் ஒரு அத்தி மரத்தை மிகவும் போற்றி வந்தார். அது சக்தி வாய்ந்த மரம் எனக் கூறினாராம்.  பலருக்கும் பல விதங்களிலும் அருள் புரிந்த மகன், 1989 ஆம் ஆண்டு  பிப்ரவரி இருபத்தி இரண்டாம் தேதி மறைந்தார். அவரை நம்பி வேண்டியவர்களுக்கு நிறைய  நன்மைகளை செய்துள்ளார். அவரை அண்ணன் ஸ்வாமிகள் என அனைவரும் அன்புடன் அழைக்கின்றனர். அவருடைய மகிமைகள் பலவற்றை  பலரும் கூறுகின்றனர் .  அண்ணன் சுவாமிகளின் அருள் வாக்கு :

அமைதியாய் இரு
ஆனந்தம் அடைவாய்

 படம் நன்றி: http://sriannan.site90.net/default.php
அவருடைய மகிமைக்கு எடுத்துக்காட்டாக  ஒரு சம்பவத்தைக் கூறுகின்றார்கள். அவர் ஜீவா சமாதி அடைவதற்கு ஒரு வருடத்துக்குப் முன்னால்  வானத்தில் இருந்து ஒரு செயற்கை கொள் பூமியில் விழ இருந்ததை  அமெரிக்காவில் ஆராய்ச்சி செய்து கொண்டு இருந்தனர். அப்போது அவர் அது எந்த இடத்தில் எப்போது விழ உள்ளது என்பதை துல்லியமாக ஒரு ஆராய்ச்சியாளரிடம்  கூறி இருந்தார். அதுஅ அப்படியே நடந்தது எனக் கூறுகிறார்கள். அவர் சமாதி அடைந்ததும் அவருடைய உயிரற்ற உடலில் இருந்து வியர்வை வழிந்து கொண்டே இருந்ததாகவும் அதை கடைசிவரை – சமாதியில் அடக்கம் செய்தவரை- அவருடைய பக்தர்கள் துடைத்துக் கொண்டே இருந்தனர் என்பதைக்  கேட்டபோது மிகவும் அதிசயமாக உள்ளது.