கோதாவரி அன்னையும்
ஸத்குரு உபாசினி
மஹாராஜும்
சாந்திப்பிரியா
பெண் சாத்விக்களைப் பற்றி அதிகம் அறிந்திருக்க மாட்டோம். ஆனால் அங்கும் இங்குமாக சில அற்புதமான ஆற்றலைப் பெற்ற பெண் சாத்விக்கள் இருந்துள்ளனர். அவர்களில் ஒருவரான கோதாவரி மா எனப்பட்ட சாத்வினி 1914 ஆம் ஆண்டு பிறந்தவர். அவருக்கு கோதாவரி எனப் பெயரிட்டார்கள். அவரது பெற்றோர்கள் கடவுள் பக்தி நிறைந்தவர்கள். அவருடைய தாயார் ராமாபாய் தனது பெண் கோதாவரி ஒரு சாதாரணப் பெண் அல்ல என்பதை கோதாவரியின் சிறு வயதிலேயே கண் கூடாக கண்டவர். ஒருநாள் அவர் உறங்கி கொண்டு இருக்கையில் திடீர் என முழிப்பு வந்தது. கண்களை திறந்து பார்த்தவர் அறை முழுவதும் கண்களை கூசும் அளவிலான வெளிச்சம் உள்ளதைக் கண்டார். அப்போது யார் என்று தெரியாத, முன் பின் பார்த்திராத அமானுஷ்ய உருவம் ஒன்று மேல் இருந்து கீழ் இறங்கி வந்து தனது பெண்ணின் காதில் எதையோ கூறிக் கொண்டு இருப்பதைக் கண்டார். கண் விழித்தபடி நடப்பதை பார்த்துக் கொண்டு இருந்தவர் தான் காண்பது கனவல்ல என்பதை உணர்ந்தார். சற்று நேரத்துக்கு பின்னர் பயத்தினால் கண்களை மூடிக் கொண்டவர் தன்னை மறந்து உறங்கி விட்டார்.
மறுநாள் முதல் அவரது பெண் கோதாவரியின் நடத்தையில் பெரிய மாற்றம் தெரிந்தது. எதையாவது படித்தாலோ அல்லது ஒருமுறை காதால் கேட்டாலோ அதை அப்படியே மனப்பாடம் செய்தது போல ஒப்புவிக்கும் அளவிற்கு நினைவாற்றல் தோன்றியது. அதை போலவே அவளுக்கு சாதுக்கள் சந்யாசிகள் மீதான ஈர்ப்பும் உண்டாயிற்று. அவள் இருந்த இடத்திற்கு வந்த சாதுக்களும் சன்யாசிகளும் தாமாகவே அவரை சந்தித்து அவருடன் ஆன்மீக விஷயங்களை விவாதித்தார்கள். அத்தனை ஆன்மீக அறிவு சிறுவயதான கோதாவரிக்கு எங்கிருந்து வந்தது என்பது விளங்காத புதிராகவே இருந்ததாம். அவர்களில் ஒரு சன்யாசி அவரது தாயாரிடம் அவருடைய பெண் சாதாரண பெண் அல்ல, மாபெரும் சாத்வீ என்று கூறினாராம். மேலும் ஒருநாள் அவரது பெண் மாபெரும் யோகிகளை சந்தித்து, பெரும் சிறப்பு பெற்று, பலரது வாழ்க்கையையும் மாற்றும் வகையில் இருப்பார் என்றாராம்.
கோதாவரிக்கு ஒன்பது அல்லது பத்து வயதான பொழுது அவருடைய கனவில் உபாசினி மகராஜ் தோன்றி அவளைத் தன்னைக் காண வரும்படி அழைத்தாராம். ஆகவே அவர் தன்னுடைய தாயாருடன் மகராஷ்டிரத்தில் இருந்த அஹமத் மாவட்டத்தில் உள்ள சகோரி என்ற இடத்திற்கு அவரைக் காண யாத்திரை சென்றாள். சாகோரி எனும் அந்த ஊர் ஷீரடியில் இருந்து ஐந்து கிலோ மீடர் தொலைவில் உள்ளது. அவருடைய தாயார் ஸ்ரீரடி ஸ்ரீ சாயி பாபாவின் பக்தர். உபாசினி மகராஜ் அந்த காலத்தில் சாயிநாதரின் சிஷ்யராக இருந்தார். அவர் சித்த புருஷர் எனப் பெயர் பெற்றவர். 1870 ஆண்டில் பிறந்த அவரை 1913 ஆண்டில் சீரடி சாயிபாபா பெருமையாகப் போற்றி தன்னைப் போலலே அவரையும் அனைவரும் சென்று வணங்க வேண்டும் என தன்னுடைய பக்தர்களிடம் கூறி வந்தார். ஸத்குரு உபாசனை மஹராஜ் மற்ற சாதுக்களைப் போல் அல்லாமல் மிகவும் வித்யாசமாக இருந்தவர். எந்த நேரத்தில் என்ன செய்வார் எனத் தெரியாதாம்.
அந்த காலங்களில் பெண்களுக்கு பொது வாழ்வில் சுதந்திரம் கிடையாது. வேதங்கள் ஓதவோ, சமிஸ்க்ருத பாடங்கள் பயிலவோ அல்லது ஆசிரமங்கள் மற்றும் ஆலயங்களில் யாக பூஜைகளை செய்யவோ அனுமதி இல்லை. அதை உடைக்கும் விதத்தில் முதலில் தன்னிடம் வந்த பத்து வயது கோதாவரிக்கு ஸத்குரு உபாசினி மஹராஜ் மாலை அணிவித்து தனது பக்தையாக மாற்றிக் கொண்டார். அவருடைய தீவீரமான பக்தையாக மாறிய கோதாவரிக்கு அவளுடைய வயது பதினெட்டு ஆன பொழுது அவளை தன்னுடைய ஆசிரமத்திற்கு வரவழைத்தார்.அவரை தமது பிரதான சீடராக அங்கீகரித்தார். அதனால் ஆஸ்ரமத்தில் தங்கி இருந்த, அவர் மீது பொறாமை கொண்ட பிற பெண் சீடர்கள், அவரைக் குறித்து வேண்டும் என்றே அவதூறு பரப்பினார்கள். எப்படியாவது அவரை ஸத்குரு உபாசினி மஹாராஜிடம் இருந்து பிரித்து விட நினைத்தார்கள்.ஆனால் கோதாவரி மாவோ அனைத்து அவமானப் பேச்சுக்களையும் தாங்கிக் கொண்டு தனது கடமைகளை சரிவர செய்து கொண்டு ஒரு குருவிற்கு உண்மையான சீடர் செய்யும் பணிவிடையை தொடர்ந்து கொண்டு இருக்க சத்குருநாதரோ அவர் மீது முழு அளவிலான நம்பிக்கையை கொண்டார்.
1928 ஆம் ஆண்டு அங்கு வந்தவளை கற்பக்கிரகத்திற்கு அழைத்துச் சென்று தன்னுடைய கழுத்தில் இருந்த மாலையைக் கயற்றி அவளுடைய கழுத்தில் அணிவித்து விட்டு அவளுக்கு மந்திரோபதேசம் செய்தார். அனைவரிடமும் அவள் முன் பிறவியில் மாபெரும் முனிவராக இருந்ததினால்தான் இந்தப் பிறவியில் தன்னுடைய சிஷ்யையாக மாறி மக்களுக்குத் தொண்டு செய்ய வந்திருப்பதாகக் கூறினார். அதன் பின்னரே கோதாவரி என்ற பெயர் கோதாவரி மா என்று ஆகியது. அதாவது கோதாவரி அன்னை என பெயர் கொண்ட அவர் கோதாவரி மா என்றே அனைவராலும் அழைக்கப்படலானாள்.
அந்த காலத்தில் பலரது எதிர்பையும் மீறி, பெண்களையும் ஆன்மீக உலகின் உச்சத்தில் கொண்டு வைக்கும் விதத்தில், ஸத்குரு உபாசினி மகராஜ், ‘கன்யா குமாரி ஸ்தான்’ அதாவது திருமணமாகாத இளம் பெண்களின் அடைக்கல ஆசிரமம் என்ற ஒன்றை 1917 ஆம் ஆண்டில் நிறுவி அதில் பெண்களுக்கு சமிஸ்கிருத மொழியையும் கற்றுத் தந்து, பூஜைகள் செய்யவும் கற்றுத் தந்தார். அந்த ஆசிரமத்தில் பன்னிரண்டு ஜோதிர் லிங்கங்களை பிரதிஷ்டை செய்தார். ஸத்குரு உபாஸினி மகராஜ் சமாதி அடைந்தப் பின் மடத்தின் பொறுப்பை ஏற்று அதை நிர்வாகித்தார் அன்னை கோதாவரி மா. அந்த ஆசிரமத்தின் பொறுப்பை அன்னை கோதாவரி ஏற்ற பொழுது அவருடைய வயது முப்பதுக்கும் குறைவாகவே இருந்ததாம். அந்த அன்னையின் முயற்சியால் ஸத்குரு உபாசினி மகராஜ் சமாதி அந்த ஆசிரமத்திற்கு உள்ளேயே எழுப்பப்பட்டதாம். அவர் அந்த ஆசிரமத்தில் பல்வேறு காரணங்களினால் வந்து சேர்ந்த பல இளம் பெண்களுக்கு மந்திர தீட்சைத் தந்து தினமும் அவர்கள் கடை பிடிக்க வேண்டிய பூஜை விதி முறைகளைக் கற்றுத் தந்து வந்தார். காலை ஐந்து மணிக்கு எழுந்தப் பின் சுமார் நான்கு மணி நேரம் மௌனம் அனுஷ்டித்தபடி, ஆலயத்தின் வேலைகள், ஆசிரமத்தின் வேலைகள், உணவு தயாரித்தல், தத்தம் உடைகளை வெளுப்பது போன்றவற்றை செய்த பின் அந்த கன்னிகைகள் தினமும் பல்வேறு பூஜைகள், யாகங்கள் மற்றும் ஆன்மீக சொற்பொழிவுகள் போன்றவற்றை செய்தும் ஆன்மீக வழிபாட்டில் இணைந்து இருந்தார்கள். அந்த ஆசிரமத்தின் மிக ஆச்சரியமான விஷயமே யாகங்கள் அனைத்தையும் மந்திர உச்சாடனங்களை பிழை இன்றி ஓதி பெண்களே செய்வதுதான். அந்த கன்னிகா ஸ்திரீகளுக்கு எந்த விதமான நகைகளோ நாகரீக உடைகளோ அல்லது மற்ற லொளகீகப் பொருட்களோ உபயோகிக்க அனுமதி இல்லை. அத்தனை மனக் கட்டுப்பாட்டைப் பெற்று வாழ்ந்து கொண்டு இருந்த அவர்கள் அனைவரையும் அப்படிப்பட்ட நல்ல காரியத்தில் வழி நடத்திச் சென்றவர் அன்னை கோதாவரி மா அவர்கள்தான். ஆனால் கோதாவரி மாவும் 1990 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சமாதி அடைந்தார். அவருடைய சமாதியும் ஆஸ்ரமத்தின் உள்ளேதான் உள்ளது.
Godavari Ma and
Sadguru Upasani Maharaj
Santhipriya
Rarely one will find female Sadhviks who remain in lime light; one amongst them is Godavari Ma who was born in the year 1914. Her parents, like the parents of many spiritual masters were pious and god-fearing. Godavari Ma’s mother Ramabai realized that her daughter was a divine soul because one day when everyone were asleep, in the night, suddenly Ramabai woke up and witnessed a striking scene. The room was filled with dazzling white light like noon in summer. In the dazzling light she saw some one landing down from the air; something like spirit or ghost; the new entrant went near her daughter, whispered something in the ears of her daughter Godavari and went away coolly. Ramabai was awake and in her sense to witness what was happening; soon everything vanished. she realized what she saw was not unreal; some divine power indeed may have visited her home in person and conveyed something to her daughter. Out of fear she closed her eyes and went into deep sleep only to get up next morning.
From next morning she saw the attitude of Godavari was quite different compared to other children. She developed amazingly retentive memory which enabled her to recite any poem or texts which were read out to her only once. Slowly Godavari began to show interest on holy men, saints and spiritual gurus of many kinds. Slowly saints and sannyasins started visiting their home uninvited and conversed with Godavari. Their discussions centered around spirituality and other divine subject matters as well, as if she was well knowledged in those subjects. One of the holy men told her parents that their daughter was not an ordinary soul and divine in nature. He prophesied that one day she was bound to meet a great spiritual master through whom she will reach her exalted status and thereafter lead hundreds of souls to attain their spiritual goal.
When Godavari was ten years old, Sadguru Upasini Maharaj appeared in her dream and asked her to come to Sakori, which was five Kilometers away from Shirdi and meet him. Therefore she travelled to Sakori along with her mother to meet the Sadguru. Sadguru Upasini Maharaj was very close to Shirdi Sai Baba and therefore whoever went to meet Shirdi Sai Baba, he used to direct them to meet and pay obedience to Sadguru Upasini Maharaj who was totally a different personality compared to other Spiritual Masters and nobody could predict his behavioural pattern.
Those were the days when the female had no freedom in society. They were not allowed to perform Yagya, perform poojas or learn vedas and Sanskrit language or recite mantras. Breaking the tradition Sadguru Upasani Maharaj welcomed her, placed a garland on her neck and adapted her as his disciple. Since then she became his ardent devotee. When she attained the age of eighteen years, he called her to his ashram and asked her to stay with him thenceforth. Several female disciples who were already residing in the ashram, felt jealous on her and spread canard on her, spoke ill about her character to break away the relationship between Sathguru Upasini Maharaj and Godavari. However she withstood all the vilification campaign with determined mind and continued to serve her Guru which made him repose complete confidence on her.
In 1928, Sadguru Upasini Maharaj took her inside the sanctum, removed garland from his neck and put it around on her neck, and gave initiation with a special spiritual power specific to her. He then revealed to everyone that she was one of the greatest maharishis in her previous birth and hence she had become his disciple in the present birth to serve mankind. He then suffixed Ma in her name and everyone began to affectionately call her as Godavari Maa i.e. Mother Godavari.
Despite opposition by many, in the year 1917, Sadguru Upasini Maharaj established an ashram for spinsters in the name of- ‘Kanyakumari Sthan’- to elevate women to higher levels in spiritual growth and taught Vedas and Sanskrit language to the women who came and took refuge there. He also installed twelve Jyotirlinga inside the ashram. After Sadguru Upasini Maharaj attained samadhi, mother Godavari Ma succeeded him when her age was even less than thirty years. The samadhi of Sadguru Upasini Maharaj was built inside the ashram at the initiative of Godavari Ma. She also performed incantations to several spinsters who took asylum in the ashram. Godavari Ma ensured that everyone got up by five in the morning, observed silence for four hours, attended to the chores of the ashram like preparation of the food, washing the clothes, performing Yagya, Poojas. She delivered discourses to awaken them spiritually. The unique act of those young women were that the yagya were performed by the same women chanting the mantras clearly. They never used luxurious items, jewelries and other make up material as used by the modern women. All of them were led from the front by none other than Godavari Ma herself by living as one amongst them. However Godavari Ma too attained Samadhi in the month of August in the year 1990 and her Samadhi sthal too was constructed inside the Ashram.
Please send your comments to the author on this article