நமக்கு வேண்டியதை இரண்டு ரூபாய் செலவிலான ஆலய விசேஷ காகிதத்தில் எழுதி பைரவியின் கையில் கட்டிவிட்டால் நினைப்பது விரைவில் நடைபெறும் என்பது நம்பிக்கை. பைரவியே அங்கு ஸ்ரீ காளிக துர்கா பரமேஸ்வரியின் யஷினியாக இருப்பதாகவும், நமது கோரிக்கைகளை அவள் காளிக துர்க்கையிடம் கொண்டு சென்று அதை நிறைவேற்றித் தருகிறாள் என்கின்ற ஐதீகம் உள்ளது. இந்த ஆலயத்தை காலம் சென்ற திரு ராமு சாஸ்திரிகள் என்பவர் கட்டி உள்ளதாகவும், அவருக்கு கனவில் தோன்றிய காளிக துர்கா தனக்கு அங்கு ஆலயம் அமைக்குமாறு கூறியதாகவும் அதனால் அவர் அங்கு இந்த ஆலயத்தை அமைத்தார் என்றும் அங்குள்ளவர் கூறினார்.
ஆலயத்துக்குள் நுழையும்போதே நமக்கு நல்ல நிம்மதி கிடைத்து விட்டது போல ஒரு மன உணர்வு ஏற்படுவதின் காரணம் அந்த பூமியில் உள்ள துர்கையின் ஆகர்ண சக்தியே என்று நம்புகிறார்கள். ஆலயம் ஞாயிற்றுக் கிழமைகளில் நிறம்பி வழிகிறதாம். ஆலயத்தில் துர்கையின் சன்னதியின் வெளியில் எலுமிச்சை பழ மூடியில் என்னை ஊற்றி விளக்கு ஏற்றி வழிபடுகிறார்கள்.
Sri Durga Parameshwari Temple
Durgadevi Layout, Thindlu,
Vidyaranyapura,
Bangalore – 560097.
Karanataka
Phone : +91-80-23640048
Email:
info@parameshwaritemple.org