COPYRIGHT MATERIAL. NOT TO BE USED IN ANY MANNER WITHOUT PRIOR PERMISSION

முன்னுரை:
ஸ்ரீமத் சத்குரு சேவா மண்டல், மொரிஷியஸ்

ஸ்ரீமத் தத்தாத்ரேயப் பெருமானின் தெய்வீக அருளாலும், புனே, கோகலே நகரைச் சேர்ந்த எங்களின் வணக்கத்திற்குரிய குருதேவரான பரம பூஜ்ய சத்குரு பிரேமானந்த ஸ்வாமி மகாராஜின் ஆசிர்வாதங்களுடனும்,  ‘ஸ்ரீ தத்த மஹாத்மியத்தின்’ ஆங்கிலப் பதிப்பை,   ஸ்ரீமத் சத்குரு சேவா மண்டல் மொரிஷியஸ் சார்ப்பில் உலகெங்கிலும் உள்ள ஸ்ரீ தத்த பக்தர்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறது. 1901-ஆம் ஆண்டு   ஸ்ரீமத்  பரம பூஜ்ய சத்குரு ஸ்ரீ  வாசுதேவானந்த சரஸ்வதி டெம்பே ஸ்வாமி மஹராஜ் (Shri Vasudevanand Saraswati Tembe Swami Maharaj) அவர்களினால் சமஸ்கிருத ஸ்லோகங்களுடன்,  மராத்தி மொழியில் இந்தியாவின் மஹத்பூரில் (Mahatpur), முதலில் எழுதப்பட்ட இந்த புனித நூல், ஆன்மீக இலக்கியத்தில், ஸ்ரீமத் தத்தாத்ரேயப் பெருமானின் போதனைகளைக் கொண்ட நூலாக, தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. ஸ்ரீமத் துண்டிராஜ் மகாராஜ் கவிஷ்வர் (Shri Dhundhiraj Maharaj Kavishwar), டெம்பே ஸ்வாமி  மகாராஜின் இலக்கியப் படைப்புகளை  ‘அசாதாரணமானவை, தெய்வீக உத்வேகம் பெற்றவை, தன் உள்ளத்தில் இருந்து தன் இச்சையாக எழுதப்பட்டது, ஆன்மீக  இனிமை கொண்டது , தெய்வீக அருள் நிறைந்தது, இதை படிப்போருக்கு மன நிறைவை தருவது,  தெளிவானது மற்றும் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் வல்லமை கொண்டது’  என்பதாக வர்ணித்து உள்ளார்.  ‘ஸ்ரீ தத்த மஹாத்மியமும்’ அப்படிப்பட்ட புகழுரைகளுக்கு சற்றும் சளைத்தது அல்ல அந்த இதற்கு விதிவிலக்கல்ல.
ஆங்கிலப் பதிப்பை வெளியிட எங்களுக்கு அனுமதி வழங்கிய ஸ்ரீமத் அவதூத் சாகித்ய பிரகாஷன் அறக்கட்டளைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், இந்த அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்து, குஜராத்திப் பதிப்பிலிருந்து மொழிபெயர்ப்பைச் சாதகமாக்கிய டாக்டர் அனுராக் கும்சதாவின்  அர்பணிப்பிற்கும் ,முயற்சிகளுக்கும் நாங்கள் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்த புனித நூலை அனைத்து ஸ்ரீ தத்த பக்தர்களிடமும்  கொண்டு செல்ல எங்களுக்கு வழி காட்டி அருள் புரிந்துள்ளனர்  குரு பரம்பரையின் வழித் தோன்றலாகிய  ஸ்ரீ டெம்பே ஸ்வாமி மகாராஜ் அவர்கள் ஆவார். அவருக்கு நாங்கள் பெரிதும் கடமைப்பட்டுள்ளோம். அவர்களின் அர்ப்பணிப்பும் பக்தியும், ஸ்ரீமத் தத்தாத்ரேயப் பெருமானுக்குச் செய்யப்படும் தன்னலமற்ற சேவையின் சாரத்திற்குச் சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகின்றன.
மராத்தி, சமஸ்கிருதம் அல்லது குஜராத்தி மொழிகளில் புலமை இல்லாத பக்தர்களுக்கு  ஸ்ரீமத் தத்தாத்ரேய  பெருமானின் ஆழ்ந்த போதனைகளையும் மகிமையையும் எளிதில்  அணுகும்படி செய்வதே ஆங்கிலப் பதிப்பின் நோக்கமாகும். இந்த ஆங்கிலப் பதிப்பு  உலகளாவிய ஸ்ரீமத் தத்தரின்  குடும்பத்தினரை சென்றடையவும், பக்தர்களிடையே ஆன்மீகப் பிணைப்பை வலுப்படுத்தவும், ஸ்ரீமத் தத்தாத்ரேயப் பெருமானின் எல்லையற்ற அருளைப் பற்றிய ஆழமாக புரிந்து கொள்ளும் வகையிலும் எழுதப்பட்டு உள்ளது.
இந்தப் புனித நூல் பக்தர்களுக்கு வழிகாட்டும் ஒளியாகத் திகழ்ந்து, அவர்களின் ஆன்மீகப் புரிதலை வளப்படுத்தி, தெய்வீகத்துடன் ஒரு நெருக்கமான பிணைப்பை வளர்க்கும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். ஆன்மீகப் பயணத்தில் ஈடுபட்டுள்ள சாதகர்களுக்குத் துணை நிற்பதையும், பகவான் ஸ்ரீமத் தத்தாத்ரேயரின் நித்திய போதனைகளைப் பரப்புவதையும் தனது நோக்கங்களாகக் கொண்ட இந்த முயற்சி, அந்த நோக்கத்தை முழுமையாக நிறைவேற்றுவதாக அமையட்டும் என்று வேண்டுகின்றோம் பணிவுடன்

ஸ்ரீமத் சத்குரு சேவா மண்டல் மொரிஷியஸ்
டௌலத்ராவ் கங்காராம் — கௌரவத் தலைவர்
விக்ரம் சம்வத் ஆண்டு 2081
நாள்: 14/01/2026

அனுமதி கடிதம் (Translated from above letter)

சாந்திப்பிரியா என்ற புனைபெயரில் எழுதி வரும் திரு. N. R. ஜெயராமன் (ஸ்ரீ தத்தாத்ரேய பக்தர்) அவர்களுக்கு ஸ்ரீ தத்த புராணம் (தத்த மகாத்மியம்) நூலை தமிழில் வெளியிட்டுக் கொள்ள அனுமதி வழங்குவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். பரோடாவைச் சேர்ந்த அவதூத் ஜோஷிஜியின் (Avadhoot Joshiji) உந்துதலின் பேரில், அதே ஊரைச் சேர்ந்த டாக்டர் அனுராக் குமஷ்டா (Dr. Anurag Gumashta) அவர்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த ஸ்ரீ தத்த புராணம் (தத்த மகாத்மியம்) நூலின் அடிப்படையில், தமிழில் அந்த நூலை தனது இணைய தளப் பக்கங்களில் (சாந்திப்பிரியா பேஜஸ்) வெளியிட சாந்திப்பிரியா என்ற புனைபெயரில் எழுதி வரும் திரு. N. R. ஜெயராமன் (ஸ்ரீ தத்தாத்ரேய பக்தர்) அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
பரம்பூஜ்ய சத்குரு வாசுதேவானந்த சரஸ்வதிஜி (தெம்பே மகாராஜ்) அவர்களால் முதலில் மராத்தி மொழியில் சமஸ்கிருத ஸ்லோகங்களுடன் எழுதப்பட்ட இந்த புனிதமான நூல், பல நல்ல உள்ளங்களின் முயற்சிகளால் தற்போதைய வடிவத்தை அடைந்துள்ளது. மூல சமஸ்கிருத உரையை குஜராத்தி மொழியில் மொழி பெயர்த்த வல்லப் வித்யா நகரை சேர்ந்த சர்தார் படேல் பல்கலைக் கழகத்தின் கல்வித் துறைத் தலைவரும் பேராசிரியருமான சாஸ்திரி ஜெயேந்திர டேவ் (Shastri Jayendra Dave) அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், 2002-ல் குஜராத்தி பதிப்பை வெளியிட்ட ‘சஸ்து சாகித்ய’ (Sastu Sahitya) வெளியீட்டுக் குழுவினருக்கும் (பிக்ஷு அகண்டானந்தரின் ஆசியுடன் செயல்பட்டவர்கள்), அந்த முயற்சி வெற்றி பெற விலை மதிப்பற்ற பங்களிப்பை வழங்கிய அகமதாபாத் மற்றும் மும்பை பிரின்சஸ் ஸ்ட்ரீட்டைச் சேர்ந்த திரு. ஆனந்த்பாய் N. அமின் (Shri Anandbhai N. Amin) அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
2012-ஆம் ஆண்டில் ஸ்ரீ தத்த புராணம் (தத்த மகாத்மியம்) நூலின் முதல் ஆங்கிலப் பதிப்பை மொழிபெயர்த்து வெளியிட்ட பரோடாவைச் சேர்ந்த டாக்டர் அனுராக் குமஷ்டா அவர்களும் எங்களது நன்றிக்கு உரியவர் ஆகின்றார். ஆங்கிலப் பதிப்புகளை வெளியிட அனுமதி அளித்ததற்கும், இந்த புனிதமான நூலைப் பாதுகாத்து மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் தொடர்ந்து ஆதரவளித்ததற்கும் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நாங்கள் ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த நிலையில் சாந்திப்பிரியா என்ற புனைபெயரில் எழுதி வரும் திரு. N. R. ஜெயராமன் (ஸ்ரீ தத்தாத்ரேய பக்தர்) அவர்கள் ‘தத்தாத்ரேய புராணம்’ (தத்த மகாத்மியம்) நூலின் தமிழ் பதிப்பை வெளியிடுவதில் எங்களுக்கு எவ்வித ஆட்ஷேபணையும் இல்லை. பகவான் ஸ்ரீ தத்தாத்ரேயரின் போதனைகளையும் தெய்வீக மகிமையையும் தமிழ் பேசும் பக்தர்கள் அறியும் வகையில் கொண்டு செல்லும் இந்த உன்னதமான முயற்சியை நாங்கள் முழு மனதுடன் ஆதரிக்கிறோம்.
சாந்திப்பிரியா என்ற புனைபெயரில் எழுதி வரும் திரு. N. R. ஜெயராமன் (ஸ்ரீ தத்தாத்ரேய பக்தர்) அவர்கள் மீதும், இந்த புனிதமான நூலைப் படிக்கும் அனைத்து வாசகர்கள் மீதும் பகவான் தத்தாத்ரேயரின் எல்லையற்ற அருளும் ஆசிகளும் பொழியட்டும். இப்பிரசுரம் எண்ணற்ற தேடுநர்களின் இதயங்களில் பக்தி, ஆன்மீக ஞானம் மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றைத் தூண்டட்டும்.
நல்வாழ்த்துக்கள் மற்றும் எங்கள் மனப்பூர்வமான ஆசிகள்,
தேதி: 19/06/2026

                                                                                                                                                         –கையெழுத்து–
டௌலுத்ராவ் கங்காராம்
கௌரவத் தலைவர்

நினைத்துப் பார்க்கின்றேன்

கடந்த பத்து அல்லது பன்னிரண்டு  ஆண்டுகளாக எனக்கு தெம்பே ஸ்வாமிகள் எழுதிய  ஸ்ரீ தத்தாத்திரேயர் சரித்திர புத்தகத்தை தமிழில் எழுத வேண்டுமென்ற ஆசை இருந்து கொண்டே இருந்தது. எனக்கு  சமிஸ்கிருத மொழி தெரியாது என்பதினால் அந்த புத்தகத்தின்  ஆங்கில மொழியாக்கத்தை  தேடினேன், கிடைக்கவில்லை.  ஆகவே இடை இடையே ஸ்ரீ தத்தாத்திரேயர் பாராயண புத்தகம், அனகா தேவியுடனான ஸ்ரீ தத்தாத்திரேயர் சரித்திரம் மற்றும்  ஸ்ரீ தத்தாத்திரேயர் ஆலயம் போன்ற சில  கட்டுரைகளை வெளியிட்டேன்.  இந்த நிலையில் இருந்த  எனக்கு சில மாதங்களுக்கு முன் எதேர்ச்சையாக  திரு அனுராக் கும்சலா என்பவர் எழுதிய ஆங்கில மொழியாக்கத்தின்  புத்தகம் கிடைத்தது என்பது மட்டும் அல்ல, அதை மொழி பெயர்த்துக் கொள்ள அவரது அனுமதியும் கிடைத்தது .  அவரது அனுமதியோடு அதை வெளியிட்ட  ஸ்ரீ  ஸத்குரு  சேவா  மண்டல் அமைப்பினரின் அனுமதியையும் கேட்டுப் பெற்று அதை எனது இணைய தளத்தில் பிரசுரித்து உள்ளேன். எனது நீண்ட நாள் கனவு நிறைவேறி உள்ளது என நினைக்கின்றேன். அவருக்கு எனது ஆத்மார்த்தமான நன்றியை தெரிவிக்கின்றேன்   -சாந்திப்பிரியா

பொருளடக்கம்

பாகம் -1  மங்கல துவக்கம்
அத்தியாயம் 1  ஒன்பது வகை பக்தி முறைகள்
அத்தியாயம் 2  யோகப் வழிப் பாதையிலிருந்து விலகிய மகனின் கதை
அத்தியாயம் 3  பிராமணர் கௌசிகர் புத்துயிர் பெறுதல்
த்தியாயம் 4  கார்த்தவீர்யனின் பிறப்பும் கர்கா முனிவரின் அறிவுரையும்

பாகம் -2  தெய்வத்தின் சேவகர்கள்
அத்தியாயம் 5  அசுரர்களால் தோற்கடிக்கப்பட்ட தேவர்கள் ஸ்ரீமத் தத்தாத்திரேயரிடம் சரண் அடைந்த கதை
அத்தியாயம் 6  ஸ்ரீமத் தத்தாத்திரேயரிடம் இருந்து கார்த்தவீரியன் வரம் பெற்ற கதை
அத்தியாயம் 7  கார்த்தவீர்யன் விரக்தி; ஸ்ரீமத் தத்தாத்திரேயரிடம் மீண்டும் சரண்

பாகம் -3 முனிவர்களின் அறிவுரை
அத்தியாயம் 8 குரு பிருஹஸ்பதி – இந்திரன் உரையாடல்
அத்தியாயம் 9 காயத்ரி மந்திர ஜப முறை; பக்தன் சுசீலன் முக்தி பெற்ற கதை
அத்தியாயம் 10 கர்ம பந்தம் : நோயுற்ற அந்தணருக்கு அறிவுரை

பாகம்-4 ஆத்மாவின் பயணம்
அத்தியாயம் 11  பல்வேறு கருப்பையில் ஆத்மாவின் பயணம்;
அத்தியாயம் 12  பிரபஞ்சத்தின் தோற்றமும் படைக்கப்பட்ட உயிரினங்களும்
அத்தியாயம் 13  மொழியின் அமைப்பு விளக்கம்; அறிவாற்றலின் ஆய்வு; ஆறு லிங்கங்களின் பண்புகள்

பாகம் 5 சமாதி நிலை
அத்தியாயம் 14  அஷ்டாங்க யோகத்தின் எட்டு (8) அங்கங்கள்; அரசருக்கு அறிவுரை
அத்தியாயம் 15  சமாதி நிலை; மன்னனுக்கு அறிவுரை
அத்தியாயம் 16  எஞ்சிய கர்மவினைப் பயனை அனுபவிக்க மன்னர் அனுப்பப்படல்

பாகம் – 6  தெய்வ அவதாரங்கள்
அத்தியாயம் 17  சூரிய பகவானுக்கு அளிக்கப்பட்ட காணிக்கை
அத்தியாயம் 18  ரிஷிகர்-சத்தியாவதி திருமணம்; ஜமதக்னி மற்றும் விசுவாமித்திரர் பிறப்பு
அத்தியாயம் 19 பரசுராம அவதாரம்; அன்னை ரேணுகா மரணம்: புனர் ஜென்மம்

பாகம் -7  மன்னன் கார்த்தவீர்யனின் யுத்தங்கள்
அத்தியாயம் 20  ஜமதக்னி முனிவரின் ஆசிரமத்தில் கார்த்தவீரிய மன்னனின் விருந்தோம்பல்
அத்தியாயம் 21  பரசுராமர் – கார்த்தவீரியன் யுத்தம்
அத்தியாயம் 22அர்ஜுனன் புதல்வர்கள் வெறிச் செயல்; ஜமதக்னி முனிவர் படு கொலை

பாகம் -8  ஸ்ரீமத் பரசுராமனின் புனிதப் பயணம்
அத்தியாயம் 23  ஸ்ரீமத் தத்தர் ஆஸ்ரமத்திற்கு பரசுராமரும், பெற்றோரும் வருகை
அத்தியாயம் 24  இறந்து போன பெற்றோர்களை ஸ்ரீமத் பரசுராமர் சந்தித்தல்
அத்தியாயம் 25  ரிதுத்வஜன் பாதாளகேது போர்

பாகம் -9  ஸ்ரீமத் தத்தாத்திரேயரின் போதனைகள்
அத்தியாயம் 26  ரிதுத்வஜன் மற்றும் மதாலஸா திருமணம்: ரிதுத்வஜன் நாடு திரும்புதல்
அத்தியாயம் 27  நாகலோக மன்னனின் புதல்வர்களும் இளவரசனும்
அத்தியாயம் 28  மதாலஸா – ரிதுத்வஜன் மறுமணம்; மகன் பிறந்தான்

பாகம் -10  நீதிநெறி பாதை
அத்தியாயம்  29  மந்த புத்தி மகன்; மன்னனின் துயரம்
அத்தியாயம் 30  அரியணையில் அலர்கன்
அத்தியாயம் 31  அலர்கனின் தோல்வி; ஸ்ரீமத் தத்தரிடம் சரணடைதல்

பாகம் -11  அஷ்டாங்க யோக தத்துவம்
அத்தியாயம் 32  அலர்கனுக்கு தெய்வீக தத்துவத்தை போதித்தல்
அத்தியாயம் 33  தாரணை (Dharana): அஷ்டாங்க யோகத்தில் ஆறாவது படி நிலை; குறை, நிறைவுகள்
அத்தியாயம் 34  திசை திருப்பும் யோக சித்துக்களை துறப்பது; தியான நிலையின் பல்வேறு பரிமாணங்கள்
அத்தியாயம் 35  யோகப் பயிற்சி; ஒலியின் மீதான தியானம்; சுவாச முறைகள்; ‘ஓம்’மீதான தியானம்
அத்தியாயம் 36  மரணம்; பிறப்பு-இறப்பு சுழற்சி
அத்தியாயம் 37  அலர்கன் ஸ்ரீமத் தத்தரை போற்றிப் பாடிய துதிப் பாடல்கள்
அத்தியாயம் 38  காசி மன்னனுக்கு சுபாஹு அறிவுரை; அலர்கன் சகோதரர்கள் வன வாழ்க்கை
அத்தியாயம் 39  ஸ்ரீமத் தத்தரின் கருணை; மன்னன் ஆயு பெற்ற புத்திர பாக்கியம்
அத்தியாயம் 40  அரசி கர்பமுற்றாள்; கனவில் ஸ்ரீமத் தத்த பகவான் தரிசனம்
அத்தியாயம் 41  நஹுஷன் கடத்தப்பட்டான்; வசிஷ்ட முனிவரிடம் அடைக்கலம்
அத்தியாயம் 42  மகன் காணவில்லை; துயரத்தில் மன்னனும் ராணியும்
அத்தியாயம் 43  நாரத முனிவர் வருகை; மன்னனுக்கும் ராணிக்கும் உபதேசம்
அத்தியாயம் 44  காட்டில் நகுஷனுக்கு ஆகாயவாணியின் தெய்வீக செய்தி
அத்தியாயம் 45  ஹுண்டாசுரன் வதம்; நஹுஷன்- அசோக சுந்தரி திருமணம்
அத்தியாயம் 46  யயாதி மற்றும் தேவயானியின் திருமணம்; யயாதிக்கும் சர்மிஷ்டைக்கும் இடையிலான சேர்க்கை; குரு சுக்ராச்சாரியரின் சாபத்தால் ஏற்பட்ட முதுமை
அத்தியாயம் 47  அவதூதர் – யது குல மன்னன் உரையாடல்கள்; பூமி, காற்று மற்றும் ஆகாயத்திடமிருந்து பெற்ற போதனைகள்
அத்தியாயம் 48  நீர், நெருப்பு, சந்திரன், சூரியன் போன்றவர்களிடம் இருந்து பெற்ற போதனைகள்
அத்தியாயம் 49  மலைப்பாம்பு, தேனீ, யானை, மான் மற்றும் மீன் போன்றவர்களிடம் இருந்து பெற்ற பாடம்
அத்தியாயம் 50  விலைமகள் பிங்களா, சிறுவன், கை வளையல், பாம்புகள் மற்றும் சிலந்திகளிடமிருந்து பெற்ற போதனை
அத்தியாயம் 51  அத்தியாயங்களின் சுருக்கம்

……இதோடு முன்னுரை முடிவடைந்தது
அத்தியாயம் -1 தொடர்கின்றது