அத்தியாயம் – 51
ஸ்வாமிகள் தன்னுடன் நான்கு சிஷ்யர்களை மட்டும் ஸ்ரீ சைலத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்று பாதாளகங்காவை அடைந்ததும் அவர்களிடம் தான் அந்தக் கரையில் உள்ள மல்லிகார்ஜுனத்துக்கு செல்ல உள்ளதினால் தான் நதியில் செல்ல வாழை இலையினால் ஆன ஒரு படகை செய்யும்படிக் கூறினார். அதன்படி அந்த நால்வரும் அவருக்கு வாழை இல்லை மற்றும் மலர்களினாலும் ஆன படகை தயாரித்துக் கொடுத்தப் பின் அதில் ஏறிக் கொண்ட ஸ்வாமிகள் அவர்களிடம் இனி அவரவர் அவரவர் வீடுகளுக்கு சென்று விடலாம் எனவும், தான் மற்றவர்களின் கண்களுக்கு புலப்படாமல் கனக்பூரில் தங்கி இருந்து கொண்டு அருள் பாலிப்பேன் எனவும் கூறினார்.
ஆனால் அவருடைய சிஷ்யர்கள் அவரை அங்கேயே விட்டு விட்டுச் செல்ல விரும்பவில்லை. அவர் திரும்பி வரும்வரை நதிக் கரையில் காத்து இருக்கப் போவதாகக் கூற அதற்கு அவர் அவர்கள் அனைவரையும் அங்கு நதிக்கரையில் காத்திருக்கக் கூடாது என்றும் உண்மையில் பகுதான்ய வருடத்தில் மக மாதத்தில் வெள்ளிக் கிழமை அன்று ஜுபிடர் கன்யா ராசியில் புகுந்துள்ள அந்த வேளையில் தான் தன்னுடைய இருப்பிடத்திற்கு செல்வதாகவும் தான் சென்ற பின் அவர்களுக்கு தான் தன்னுடைய இருப்பிடத்துக்கு சென்று விட்டதின் அடையாளமாக அவர்களுக்குப் பிரசாதம் அனுப்புவதாகவும், அதைப் பார்த்தப் பின் தத்தம் வீடுகளுக்கு அவர்கள் திரும்பிச் செல்ல வேண்டும் என்று கூறினார். அதோடு தன்னுடைய வாழ்கை சரித்திரத்தை எவர் ஒருவர் படிப்பாரோ அவர்களது வேண்டுகோள்கள் நிச்சயமாக நிறைவேறும் என்றும் உறுதி கூறினார்.
அவர் சென்ற பல மணி நேரத்துக்குப் பிறகு மனதில் பாரத்தையும் இதயத்தில் வருத்தத்தையும் சுமந்தவாறு அந்த நதிக்கரையில் நின்று கொண்டு இருந்த சிஷ்யர்களிடம் அந்த நதியில் நீந்திக் கொண்டு கரைக்கு வந்த சிலர் தாங்கள் அவர்களுடைய குருவை நடு நதியில் தாம் சந்தித்ததாகவும் அதை நதிக்கரையில் நின்று கொண்டிருந்த அவருடைய சிஷ்யர்களான நான்கு பேர்களிடமும் கூறி விடுமாறு அவர் சொன்னதாக கூறினர்.
அவர்கள் கூறி முடிக்க மறைந்து போன ஸ்வாமிகள் ஏறிச் சென்ற அதே படகும் பழங்களையும், பூக்களையும் ஏற்றிக் கொண்டு கரைக்கு வந்து சேர அவர்கள் அனைவரும் அதை ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் அனுப்பி வைத்துள்ள பிரசாதமாக ஏற்றுக் கொண்டார்கள்”. இப்படியாக ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகளின் அற்புதக் கதையை நமத்ஹரகாவுக்கு தான் கூறி முடித்து விட்டதாக சித்த முனிவர் கூறியதும் நமத்ஹரகா ஆவலோடு சித்த முனிவரிடம் கேட்டார் ‘குருவே ஸ்ரீ நருசிம்ம ஸரஸ்வதி ஸ்வாமிகள் மறைந்து போகும்போது அவருடன் இருந்த அந்த நான்குபேர்கள் யார், யார் என அறிந்து கொள்ளலாமா’ என்று கேட்டதும் சித்த முனிவர் கூறினார் அந்த நால்வரும் எவர் என்றால் உன்னுடைய சந்ததியினரான சாயம்தேவா, நந்திவர்மா, நரஹரபட்ட காவீஷ்வரா மற்றும் நான்காவதாக நான்தான்’என்றார் (இப்படியாக அத்தியாயம்-51 முடிவடைந்தது)