சாந்திப்பிரியா

பாகம்-6

சிவபெருமான் தந்த தரிசனம்
தைபூசம் வியார்கிழமை அன்று விஷ்ணு பகவான் ஆதிசேஷனுக்கு வாக்களித்திருந்தபடி மதிய வேளையில், ஆயிரம் முகத்தைக் கொண்டவர் எனக் கூறப்பட்ட பானுகம்பர் ஆயிரம் சங்கை ஊத, ஆயிரம் தோள் கொண்டவன் என வர்ணிக்கப்படும் வாணாசுரன் முரசொலிக்க, பஞ்ச துந்துபி ஒலியும் வேத கானமும் முழங்க ஞான சபையிலே சிவபெருமான் தனது இடப்புறத்தில் உமா தேவியோடு அனைவருக்கும் காட்சி தந்தார்.
வியாக்கரபாத முனிவர், பதஞ்சலி முனிவர், உபமன்யு முனிவர் மற்றும் பிரும்மா, விஷ்ணு என கடவுட்கள், ஆயிரமாயிரம் தேவர்கள், மூவாயிரம் அந்தணர்கள் என அனைவரது மத்தியிலும் தோன்றிய சிவபெருமானின் எழில் தோற்றத்தைக் கண்ட அனைவரும் மெய் சிலிர்த்து, நெஞ்சம் நெகிழ, கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகி ஓட சிவனந்தம் எனும் ஆனந்தக் கடலில் மூழ்கினார்கள்.
அப்போது பதஞ்சலி முனிவர் கூறினார் ‘எம்பெருமானே, இந்த ஞான சபையிலே உமாதேவியோடு இன்று முதல் எக்காலமும் பூவுலகில் உள்ள ஆன்மாக்களுக்கு (பூமியில் உள்ள மனிதப் பிறவிகளுக்கு) உம்முடைய ஆனந்த காட்சியை காட்டியவாறே வர வேண்டும்’ என்று வேண்டினார். அவர் வேண்டுகோளுக்கு சிவபெருமானும் ததாஸ்து கூறினார்.
உடனடியாக அனைத்து தேவர்களுள் சடசடவென அங்கே பொன்னாலான மேடையை அமைத்து சபை ஒன்றையும் நிறுவினார்கள். அந்த ராஜாங்க அறையை கனக சபை என்றார்கள். அங்கு தங்கிய சிவபெருமான் அன்று முதல் அனைவருக்கும் அங்கு இருந்தபடி தரிசனம் தந்து கொண்டும், அங்கு வந்து தன்னை வணங்கி துதித்தவர்களை மோட்ஷத்துக்கும் அனுப்பி வரலானார்.
……….தொடரும்