குல தெய்வங்கள்

தோன்றிய வரலாறு

-சாந்திப்பிரியா-

-4-

பிரபஞ்சம் படைக்கப்பட்டதற்கு முன்னரே பரபிரும்மனின் உடலுக்குள் சக்திக்கதிர்களாக லட்ஷக்கணக்கான தேவ கணங்களும், தெய்வங்களும் வெளியில் தெரியாமல் மறைந்து இருந்திருக்க வேண்டும் என்பது நம்பிக்கை. அப்படி  மறைந்திருந்த சக்திக்கதிர்களுக்கு சில விசேஷ  குணங்களும், தோற்றங்களும் அமைந்து இருந்தனவாம். பிரபஞ்சம் படைக்கப்பட்டபோது அவற்றில் இருந்துதான் சில மூல தெய்வங்களை பரபிரும்மன் வெளிப்படுத்தினார், மற்ற தெய்வங்களை பிரதான தெய்வங்கள் பல்வேறு நிலைகளில் வெளிப்படுத்தின.

அந்த தெய்வங்களுக்கும், தேவ கணங்களுக்கும் யார் வடிவம் கொடுத்தது6? பரப்பிரும்மனால் அவை அங்கு ஏன் உருவாக்கப்பட்டன? கண்களுக்கு புலப்படாத உருவமான சக்திக்கதிர்களாக அதாவது பரபிரும்மனின் சக்திக்கதிர்களில்  புதைந்து இருந்தவை  தங்கி இருந்த இடத்தின் பெயர் பரபிரும்ம லோகம் என்பதாகும். அந்த சக்திக்கதிர்கள் அவற்றுக்கு விதிக்கப்பட்டு இருந்த பிரும்ம காலம் முடிவடைந்ததும் தானாக மறைந்து விடும் தன்மை கொண்டவை. இயற்கையாகவே நடைபெறும் இந்த நிகழ்வில் சக்திக்கதிர்  கிளைகளில் இருந்த கிளை சக்திக்கதிர்கள் வெளிவந்து அவை விட்டுச் சென்ற இடத்தை நிறப்பும். இதுதான் பரபிரும்ம லோகத் தத்துவம்.  பிரும்ம காலம்  எத்தனை வருடங்கள் என்பது புரியவில்லை. அனைத்தையும் பரபிரும்ம லோகத்தில் ஆட்டி வந்திருந்த சக்தி எது என்பதும் பண்டிதர்களால் விளக்க முடியவில்லை. முன்னரே கூறியபடி தேவி பாகவதம் மற்றும் விஷ்ணு புராணங்களின்படி ஒவ்வொரு எழுபத்தி ஒன்றாவது சதுர் யுகத்தின் துவக்கத்திலும் பிரும்மா தன்னுடன் தேவேந்திரன், மற்றும் அனைத்து தேவர்களையும் அழைத்துக் கொண்டு பரபிரும்மனின் சக்திகதிர்களில் கலந்து மறைந்து விட்டு மீண்டும் மறுபிறவி எடுக்கின்றார் என்பதினால் பரபிரும்ம லோகத்தில் உருவங்களை பெற்று இருந்த சக்திக்கதிர்கள் அனைத்தும் யுக  முடிவில், அதாவது எழுபத்தி ஒன்றாவது சதுர் யுகத்தின் துவக்கத்தில் மறைந்து விடுகின்றன. மீண்டும் பிரும்மா பிறப்பு எடுத்து புதிய பிரபஞ்சம் படைக்கப்படும்போது, அவற்றின் இயக்கங்கள் மீண்டும் வெளிப்படுகின்றனவாம்.

7பிரபஞ்சம் படைக்கப்பட்டப் பின் அந்த பிரபஞ்சத்தில் சக்திகதிர்களில் இருந்து உருவான தேவ கணங்களின் இயக்கம் எந்த முறையில் இருக்க வேண்டும் என்பதை அவை பரபிரும்ம லோகத்தில் போதனைகளாக பெற்றதாக நம்பப்படுகின்றது. அந்த போதனைகள் யாரால் அவர்களுக்கு தரப்பட்டது என்பதற்கான கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை. ஆனால் பிரபஞ்சம் படைக்கப்பட்டதற்கு பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே அவை அங்கு போதனைகளை பெற்றதின் காரணம் இதுவாக இருக்கலாம். பிரபஞ்சம் படைக்கப்பட்ட பின் அந்த கணங்கள் பூமிக்கு சென்று அங்கு என்னென்ன செய்ய வேண்டும், எந்த இடத்தின், எந்த உருவில் அவதரிக்க வேண்டும் என அனைத்தையும் கற்றறிந்து அவற்றை தன்னுள் அடக்கிக் கொள்ள வேண்டும் என்பதற்கு  உணர்வும் உருவமும் தேவை. இல்லை என்றால் அவற்றின் இயக்கங்களில் தடுமாற்றம் ஏற்படலாம் என்பது பரபிரும்மனின் கணக்காக இருந்திருக்கலாம் என பண்டிதர்கள் கருதுவதில் நியாயம் இல்லாமல் இல்லை. அதனால்தான் சக்திக்கதிர்களுக்கு சில குறிப்பிட்ட உருவங்களை கொடுத்து தெய்வீக போதனைகளும் அதனதன் தன்மைகளுக்கு ஏற்ப தரப்பட்டு இருந்திருக்க வேண்டும். இதில் நடைபெற்றதாக நம்பப்படும் முக்கிய நிகழ்வுகள் என்னவென்றால் அந்த போதனா பயிற்சியின்போது சில கணங்கள் தம்மை அறியாமல் செய்த சில தவறுகளின் விளைவாக பலதரப்பட்ட சாபங்களையும் பெற்றன. சில தெய்வங்கள் சில தோஷங்களையும் பெற்றன. அதன் விளைவு என்ன8?.

பிரபஞ்சம் படைக்கப்பட்ட பின் பிரும்மா படைத்த உயிரினங்களை மனித உரு, மிருக உரு மற்றும்   செடி கொடிகளாக பல உருவங்களில் பூமிக்கு அனுப்பினார். அந்த நிலையில் அந்த ஆத்மாக்கள் அவரவற்றுக்கு வரையறுக்கப்பட்ட தோற்றங்களுடன் எங்கு சென்று தங்க வேண்டுமோ அந்த இடங்களை சென்றடைந்து அங்கு வசிக்கலாயின. அதே நேரத்தில் பூமிக்கு சென்று தெய்வங்களாக உருவெடுக்க தயார் நிலையில், பரபிரும்மனின் சக்திக்கதிர்களாக மறைந்திருந்த கணங்களும் அவரவற்றுக்கு வரையறுக்கப்பட்ட இடங்களை சென்றடைந்து மறைந்து கிடந்தன. அதிக சாபங்களை பெற்று இருந்த சில கணங்கள் கற்களாக, மரம் செடிகளாக வடிவம் பெற வேண்டி இருந்தன என்றாலும் அவற்றின் உள்ளும் தெய்வீக சக்தி இருந்தன, அவைகளும் வணங்கப்பட்ட தெய்வங்களாக இருந்தன. அப்படி பூமிக்கு சென்று தம்மை பதிவு செய்து கொண்ட கணங்கள் மனித கண்களுக்கு எப்போது புலப்பட வேண்டுமோ அந்த தருமணத்தில் தம்மை வெளிப்படுத்திக் கொண்டன.

இந்த நேரத்தில் ஒரு முக்கியமான கேள்வி எழுகின்றது. பரபிரும்ம லோகத்தில் உருவமும், சக்தியும் தரப்பட்டவற்றில் பிரதான தெய்வங்களான சிவன். விஷ்ணு, பார்வதி மற்றும் பிரும்மாவும் அடக்கமா6a? இல்லை என்றால் அங்கு எந்த கணங்கள் படைக்கப்பட்டன, படைக்கப்பட்ட அனைத்து கணங்களும் பூமிக்கு வந்தனவா? இல்லை என்றால் அவற்றில் யார் யார் பூமிக்கு வந்தார்கள்? அனைத்து தேவகணங்களுமே பூமிக்கு வரவில்லை என்றால் குறிப்பிட்ட சில கணங்கள் மட்டும் பூமிக்கு வரக் காரணம் என்ன? பூமிக்கு வந்தவை பரபிரும்ம லோகத்தில் இருந்த அதே உருவங்களில் வந்தனவா இல்லை எனில் புதிய  வடிவங்களை பெற்றனவா9? இந்த சிக்கலான, புரியாத, குழப்பமான கேள்விகளுக்கு சரியான விடை இல்லை.

6 and 6aபண்டிதர்கள் கருத்தின்படி பரபிரும்ம லோகத்தில் சக்திக்கதிர்களாக இருந்த கணங்களுக்கு பூமிக்கு செல்லும் வடிவிலான ஒரு உருவமும், வடிவமும் கொடுத்து அனுப்ப வேண்டும் என்பதினால் பரபிரும்மன் தனது சக்திக்கதிர்களில் இருந்து, தனக்குள்ளேயே  முதன் முதலாக விஸ்வகர்மா எனும் தெய்வ கண சிற்பியை படைத்தாராம். அவரே அனைத்து தெய்வங்களின் தோற்றத்துக்கும் வடிவம் கொடுத்ததாகவும், அதில் சிவன். விஷ்ணு, பார்வதி மற்றும் பிரும்மாவும் அடங்குவார்கள் என்கின்றார்கள். விஸ்வகர்மா படைக்கப்பட்டவுடன் அவர் பல தோற்றங்களை தனது நாபிக் கமலத்தில் இருந்து வெளிவரச் செய்து அவற்றில் கிடைத்த தோற்றங்களைக் கொண்டு தெய்வ தோற்றங்களை வடிவமைத்தாராம். விஸ்வகர்மா குறித்து விரிவான செய்திகள் ரிக் வேதம் மற்றும் சில உபநிஷத்துக்களில் செய்திகள் காணப்படுகின்றன. மேலும் அத்தனை வடிவங்களையும் அவர் ஒருவரால் மட்டுமே வடிவமைக்க முடியாது என்பதினால் அவருக்கு உதவியாக இருக்க அவர் கீழ் பணிபுரிய பல தெய்வ கண உதவியாளர்களையும் படைத்தார்.

7விஸ்வகர்மாவும் அவருடைய உதவியாளர்களும் சேர்ந்து பரபிரும்மனின் சக்திக்கதிர்களாக இருந்த தெய்வங்களுக்கும், தேவ கணங்களுக்கும் உருவம் கொடுத்து வடிவமைத்தார்கள். அதன் பின் பரபிரும்மன் அந்த உருவம் கொடுக்கப்பட்ட கணங்களுக்கு தெய்வீக சக்தியை அவரவர் தகுதிகளுக்கும், இயக்கங்களுக்கும் ஏற்ப கொடுத்தப் பின் அவர்கள் அனைவரையும் பிரும்மனின் பொறுப்பில் விட்ட பின், இனி அவர் கட்டளைப்படி நடக்க வேண்டும் என்ற நியதியையும் ஏற்படுத்தினார். அதற்கு காரணம் பூமிக்கு யார் யார் செல்ல வேண்டும், என்ன நிலையில், எந்த இயக்கத்துக்கு செல்ல வேண்டும் என அனைத்தையும் முடிவு செய்யும் அதிகாரம் கொண்டவராக பிரும்மா இருந்தார் என்பதே. அதை போல தேவ கணமான விஸ்வகர்மாவையும் பிரும்மாவின் கட்டளைபடி நடக்குமாறு அவரிடம் அனுப்பினார். முதலில் பரப்பிரம்ம லோகத்தில் சிவன், விஷ்ணு, பார்வதி, பிரும்மா போன்ற முதல் நிலை கடவுட்களின் வடிவம் கூட விஸ்வகர்மா மூலம் வடிவமைக்கப்பட்டதாகவே நம்பப்படுகின்றது என்பதின் காரணம் பரப்பிரும்மனின் சக்திக்கதிர்களுக்கு ஒரு தோற்றம் தந்து அதன்படி வடிவமைக்க விஸ்வகர்மாதான் முதன் முதலில் படைக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. பரப்பிரும்மனால் வெளிப்பட்ட மற்ற தெய்வங்களும், அவதாரங்களும் பிரும்மாவின் செயல் திட்டத்தின்படி வெளிவந்தார்கள். இந்த ரகசியத்தை பிரும்மாவே தான் உருவாக்கிய ஏழு மஹரிஷிகளுக்கும் கூற, அதையே நாரத முனிவருக்கு ஸ்ரீமான் நாராயணன் எனும் விஷ்ணு பகவான் கூறியதாக ரகசியஸ்துதியில் கூறப்பட்டு உள்ளது.  அதை போலவே சிவபெருமானும் தனது மனைவி பார்வதிக்கு தான் எப்படி இறப்பும் பிறப்பும் இல்லாதவர் எனும் ரகசியத்தைக் கூறியபோது அதன் இடையே இந்த ரகசியத்தையும் குகையில் கூறியதாகவும், அதை ஓட்டுக்  கேட்ட பறவை மூலம் அந்த உண்மைகள் வெளி உலகத்துக்கு தெரிய வந்ததாக வாய் மொழிக் கதையும் உள்ளது.

ஒவ்வொரு முறையும் பிரும்மனின் செயல் வடிவத்தின்படி உலகில் தெய்வங்கள் அவதரித்தபோது சக்திக்கதிர்களாக இருந்த அவற்றுக்கு பிரும்மாவின் உத்தரவின்படி தெய்வ கண சிற்பியான விஸ்வகர்மாவே சில தோற்றங்களில் வடிவமைத்துக் கொடுக்க அவை வெளிவந்தனவாம். ஆனால் பிரும்மாவின் உத்தரவின்படி விஸ்வகர்மா வடிவமைத்த  தோற்றங்களை முதலில் யார் தயாரித்தார்கள் என்பது சரிவரத் தெரியவில்லை.  

8பிரதான தெய்வங்களைத் தவிர பூமியில் முதலில் அவதரித்த முதல் நிலை அவதாரங்கள் அனைத்துமே பரபிரும்ம லோகத்தில் சாபம் பெற்று இருந்தவை. அவை இரண்டு காரணங்களுக்காக பூமிக்கு வந்தன. முதலாவதாக சாப விமோசனம் பெற வேண்டும், இரண்டாவதாக குலதெய்வங்களாக இருந்து கொண்டு தெய்வீகத்தைப் பரப்ப வேண்டும் என்பதே அவை.

சாப விமோசனத்திற்காக பூமிக்கு வந்து அவதரித்த அந்த கணங்கள் மற்றும் தெய்வங்கள் அனைத்தும் தமக்கு இட்ட பணிகளை – மனித குலமேம்பாட்டிற்கு தேவையான தெய்வீக நிகழ்வுகளை, தர்ம நெறிமுறைகளை நிறைவேற்றிய பின் சாப விமோசனம் பெற்று தமது சக்திகளை மீண்டும் பெற்று மேலுலகத்துக்கு சென்றன. பூமிக்கு முதலில் வந்த அந்த தெய்வகணங்களே குலதெய்வங்களாக மாறின.

சாபம் அடைந்திருந்த தெய்வங்கள் பூமியில் இரண்டாம் நிலை தெய்வங்களாக அவதரிக்க வேண்டியதாயிற்று8a. முதலில் பூமிக்கு வந்து தெய்வங்களாக இருந்த அனைத்து தெய்வங்களும் சாபம் பெற்றவை அல்ல. அவற்றில் சில தெய்வங்கள் சாபம் பெற்றிருந்த  சில தெய்வங்களுக்கு சாப விமோசனம் தருவதற்காக பூமிக்கு அனுப்பப்பட்டவை. இன்னும் சில பிரதான தெய்வங்கள் பரபிரும்ம லோகத்தில் இருந்தபோது சாபம் பெறாமல், சில நிலைகளில் அடைந்த தோஷங்களின் காரணமாகவும் பூமிக்கு வந்து தோஷ நிவாரணம் பெறவேண்டி இருந்தன. அப்படிப்பட்ட தெய்வங்கள் பூமிக்கு வந்து தங்கி இருந்த நேரத்தில் தமது தெய்வ சக்தி மூலம் தெய்வீகத்தை நிலைநாட்டி எவருக்கெல்லாம் சாப விமோசனம் தர வேண்டுமோ -மனிதப் பிறவிகளை சேர்த்தே – அவர்களுக்கும் சாப விமோசனம் தந்து, தமது தோஷங்களையும் அகற்றிக் கொண்டன. அந்த தெய்வங்களில் சிலவும் குலதெய்வங்களாயின.

9தமது கடமைகளை செய்தபின் அந்தந்த தெய்வங்கள் மேலுலகம் சென்றவுடன் பரப்பிரும்மன் மற்றும் அவற்றை வெளிப்படுத்தி அனுப்பிய பிரதான தெய்வங்களின் சக்திக் கதிர்களில் சென்று மறைந்தமையினால், மீண்டும் அவற்றுக்கு அதே ரூபம் தரப்பட்டு வெளிப்பட வைக்கப்படவில்லை என்பதினால் யுகம் யுகமாக மேலும் மேலும் புதிய அவதாரங்கள் தோன்றி மறைந்தன. புதிய குலதெய்வங்களும் வெளியாயின.  இதனால்தான் புராண இதிகாசங்களை படித்தோம்  எனில்  ஒரே தெய்வங்களின் உருவங்கள்  பல ரூபங்களில்  இருந்ததைக் காண முடியும்.

8and8aசாபம் பெற்று பூமிக்கு வந்து அவதரித்தவை இரண்டாம் நிலை கடவுட்களாயின. அதன் காரணம்  பரபிரும்ம லோகத்தில் அவற்றுக்கு போதனைகள் தரப்பட்டபோது   அவற்றை  முறையாக  தன்னுள் ஏற்றுக் கொள்ளாமல் செய்த தவறினால் அவை சாபம் பெற்றன. அதனால்தான் அவை சாப விமோசனத்துக்காக பூமிக்கு அனுப்பப்பட்டன.  அந்த குற்றத்துக்கு  தண்டனையாக  சாப விமோசன பரிகாரம் மட்டும் அல்ல மனிதகுலங்களை ஆண்டு அடக்கி அவர்கள் அலைபாயும் மனதில் தெய்வீகத்தை பரப்பும்  கடினமான வேலையும் தரப்பட்டது. அதன் பின் சாப விமோசனம் பெற்ற அந்த தெய்வ கணங்கள் மீண்டும் தேவலோகம் சென்று சக்திக்கதிர்களில் மறைந்து விடும், மறு பிறப்பு எடுக்கும். ஆனால் பூமிக்கு வந்து தமது கடமைகளை சரிவர நிறைவேற்றாத தெய்வ கணங்கள் மீண்டும் யுக யுகமாக பூமியில் அவதரித்து இரண்டாம் நிலை கடவுட்களாகவே இருந்திடும் என்பவை பரபிரும்மனின் நியதியாம்.

அதே நேரத்தில் சாபம் பெற்று இருந்த  தெய்வங்களை தற்காலிகமாக இரண்டாம் நிலை தெய்வங்களாக்கினாலும்  அவற்றின் மதிப்பைக் குறைக்க விரும்பாத  பரபிரும்மன் அவர்களது தெய்வீக சக்திகளை அழிப்பது இல்லை. ஆகவே குலதெய்வங்களைக் கொண்டிருந்த  எவரும் தமது குலதெய்வங்களை உதாசீனப்படுத்திவிட்டு  பிரதான தெய்வங்கள் உட்பட வேறு எந்த தெய்வங்களையும் பிரார்த்தனை செய்து வழிபட்டாலும், அவர்களுக்கு தேவையான அருள் கிடைக்காது என்பது பரப்பிரும்மனின் கண்டிப்பான நியதியாக இருந்தது.  குலதெய்வங்களை  அலட்சியப்படுத்தி தம்மிடம் வந்து வேண்டுதல் செய்பவர்களுக்கு பிற தெய்வங்கள் அருள் புரிய நினைத்தால்  அந்த தெய்வங்களின் தெய்வீகம் குறைக்கப்பட்டு அவர்களும் சாபங்கள் பெற்று இருந்த குலத்தெய்வங்களுக்கு இணையான    இரண்டாம் நிலைக் கடவுளாக பரபிரும்மனால் மாற்றப்படுகின்றார்கள்.

10பூமியிலே பிறந்த அனைத்து மானிடர்களுக்கு குல தெய்வம் அமைந்ததா? குல தெய்வம் இல்லாதவர்கள் யாருடைய கட்டுப்பாட்டில் இருந்தார்கள்? அவர்களுக்கெல்லாம் தெய்வ அருள் எப்படிக் கிடைக்கின்றன. அடுத்த பகுதியில் அவற்றின் விளக்கம் வரும்.

…….தொடர்கிறது : 5