கண்ணா கண்ணா என்று 
கண்மூடி அழைத்தாலே …
கண்ணா கண்ணா என்று
கண்மூடி அழைத்தாலே
கண் முன்னே
வந்து நின்றிடுவான்
கவலைகளைஎல்லாம்
போக்கிடுவான்
காலமெல்லாம் உடனிருந்து
கண்ணிமைபோல் காத்திடுவான்
அன்புடன்  தினமும்
அவன் நாமம்
நாவிலும் நினைவிலும்
ஒலிக்க  விட்டால்
ஒயாது சலிக்கும்
மனமும் ஒடுங்கிவிடும்.
அரக்கரை அழிக்க
சீதையின் நாயகனாய்
தரணிக்கு  வந்த இராமனவன்
அதர்மத்தை அழித்து தர்மத்தை
நிலை நாட்டிய கீதா நாயகனவன்
சிலையாய் புறத்தே நின்றிடினும்
என் அகத்தே நிலையாய்
நின்றருள் செய்திடவே
ஓதுகின்றேன் அவன் திருநாமம்