நம்மை பார்த்து
பொறாமைப்படுபவர்களிடமிருந்து
நம்மை காத்துக்கொள்வது எப்படி? ?


திரு வேணுகோபால் கிருஷ்ணமூர்த்தி 

அவர்கள் கேள்வி

ஆம் கொடுக்கின்ற எல்லாவற்றையும் கபளீகரம் செய்து விட்டு
இன்னும் இன்னும் என கேட்கும் “அக்னியை”விட மோசம்
“பொறாமை தீ:
இதில் இருந்து தப்பிக்க வழி சொல்லவும்…அதாவது
நம்மை பார்த்து பொறாமைபடுபவர்களிடமிருந்து
தப்பிக்க…வழி சொல்லவும்

பதில்

பொறாமைப்படுபவர்களைப்
பார்த்து மகிழுங்கள் (மனதில் மட்டும்)
அதை வெளிக் காட்டாதீர்கள்.

அவர்களை விட நீங்கள் மேம்பட்டு நிற்கிறீர்கள்
என்பதை உணர்ந்து கொள்ளவும்.

நீங்கள் அடைந்த நிலையை
அவர்கள் அடையமுடியவில்லையே
என்று மனதிற்குள் வெதும்பட்டும் .

அதன் வெளிப்பாடுதான்
அவர்களின் செயல்பாடுகள்,
பேச்சுகள் , தடங்கல்கள்.

அதைப்பற்றி எல்லாம்
கவலைப்படாதீர்கள்.

ஒரு மின் விளக்கில் உள்ள
உலோகத் திரியில் ஏற்படும்
மின் தடையினைப் பொருத்துதான்
அதன் ஒளிரும் தன்மை அதிகமாவதைபோல
உங்கள் செயல்பாடுகளும் பிரகாசிக்கும்.

தடைகளை கண்டு அஞ்சாதீர்கள்.

பொறாமைக்காரர்களிடம் போராடி
உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.

அவர்கள் கடினமான ஓட்டின் கீழே
ஒளிந்துகொள்ளும் ஆமை போன்றவர்கள்.
உங்களை நேரிடையாக தாக்கமாட்டார்கள்..

அவர்களால் உங்களை ஒன்றும் செய்யமுடியாது
நீங்கள் எச்சரிக்கையால் இருந்தால்.

அவர்களிடம் நேரடியாக போராடாதீர்கள்.
உங்களின் நோக்கத்தில் மட்டும்
கவனம் செலுத்துங்கள்.

நங்கூரம் பாய்ச்சப்பட்ட கப்பல்
புயல் காற்றினாலும் ஒன்றும் ஆகாது
என்பதை புரிந்துகொள்ளுங்கள்  .

முகத்தில் புன்னகையோடு அவர்களை எதிர்கொள்ளுங்கள்
அதே நேரத்தில் உங்கள் இலக்கை அடைவதில் முழு கவனமும் இருக்கட்டும்.ரகசியமாக

பொறாமை என்பது ஒரு அழுக்காறு.
அந்த ஆறு எதற்கும் பயனற்று போவது போல்
அந்த குணமுடையவர்கள் வாழ்க்கையும் நாற்றமடித்து
அந்த சாக்கடையிலே அவர்கள் மூழ்கி ஒருநாள் காணாமல் போய்விடுவார்கள்.