வாசகர்களுக்கு ஒரு முக்கிய செய்தி

இந்த புராணத்தை மேற்கொண்டு தொடரும் முன் சில விளக்கத்தை தர வேண்டி இருந்தது. சற்று யோசனை செய்த எனக்கு தோன்றியது,  விளக்கத்தை   இப்போது கூறுவதை விட புராணத்தை முழுவதுமாக எழுதியப் பின் விளக்குவதே சரியாக இருக்கும்.  ஏன் எனில் இந்த புராணக் கதைகளில் வரும் சில செய்திகளை சரிவர  புரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்த புராணத்தை முழுவதுமாக படித்தப் பிறகே  விளக்கத்தையும் சரிவர   புரிந்து கொள்ள முடியும். ஆகவே நான் கூற இருந்த  விளக்கத்தை முடிவாகவே கூறலாம்  என முடிவு செய்து புராணத்தை எழுதத் துவக்கினேன்.
நான் எதை எதிர்பார்த்தேனோ அதுவே நடந்தது.  இடையில் ஒருவர் என்னை தொடர்ப்புக் கொண்டு ‘ஐயா, இறந்தவர்களின் ஆத்மாதானே மேலுலகம் செல்ல முடியும். ஆனால் இதில் வரும் கதையிலோ யமலோகம் செல்பவர்களும், தேவலோகம் செல்பவர்களும்  பூமியில் பூத உடலுடன் உள்ளதைப் போலவே அல்லவா இருந்து கொண்டு அங்கு நடமாடுகிறார்கள்.  அங்கு சென்று அனைத்து சம்பவங்களிலும் பங்கேற்று அனைத்தையும் செய்கிறார்கள்.  மேலுலகம் செய்பவர்கள் எப்படி பூத உடலுடன் செல்ல முடியும்? அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் எப்படி அவர்கள் வாழ்ந்து  இருந்த அதே பூத  உடலுடன் பங்கேற்க முடியும்?  இது பொருத்தமாக இல்லையே. இதற்கு உங்கள் பதில் என்ன ‘ என்று கேட்டார்.  
இந்தக் கேள்வி நியாயமானது. இந்தக் கேள்வி எழும் என்பதை முன்னரே நான் எதிர்பார்த்திருந்ததினால்தான் மேலே குறிப்பிட்டிருந்தபடி முடிவு செய்திருந்தேன்.  என்னை விளக்கம் கேட்டவருக்கான பதிலை தர சில செய்திகளை விளக்கமாக கூற வேண்டி உள்ளது.  அதை முடிவில்  தந்தால் மட்டுமே அந்த விளக்கத்தை பூரணமாக புரிந்து கொள்ள முடியும் என்பதினால் புராணத்தின் முடிவில்  அவை அனைத்தையும்  விளக்க உள்ளேன். அதுவரை வாசகர்கள் பொருத்தருள வேண்டும்.
சாந்திப்பிரியா