தீய ஆவிகள் , ஏவல்கள்

சாந்திப்பிரியா
பாகம்-3 

விண்வெளியில் பந்தங்களின் பாதையை  சுற்றி பெரும்  விண்வெளியே உள்ளது. அந்த விண்வெளியிலும் நல்ல ஆவிகள், தீய ஆவிகள், நல்ல தேவதைகள், துர் தேவதைகள்  என பலவாறான ஜீவன்கள் சுற்றிக் கொண்டு இருக்கும். ஆனால் அவற்றினால் அந்த வெற்றிடத்தில் ஒருவரை ஒருவர் தொட முடியாது. அங்குள்ள தீய ஆவிகள் அங்கு சுற்றித் திரியும் துர்தேவதைகளுடன் மட்டுமே தொடர்ப்பு கொள்ள முடியும். அது போல அடுத்த பிறவியை எடுக்க காத்துக் கொண்டு இருக்கும் அங்குள்ள நல்ல ஆவிகள் அங்குள்ள நல்ல தேவதைகளுடன் மட்டுமே தொடர்ப்புக் கொள்ள முடியும். இதுவும் தெய்வ நியதி. அதே சமயத்தில் தீய ஆவிகள் மற்றும், தேவதைகள் போன்றவர்கள் மட்டும்  அவரவர்களின் பந்தப் பாதையிலும் செல்ல முடியும்.  ஆனால் அடுத்தப் பிறவியை எடுக்கக் காத்திருக்கும் நல்ல ஆவிகளினால் அந்த பந்தப் பாதை எவற்றிலும் நுழைய முடியாது. ஆகவே நல்ல தேவதைகள், மற்றும் தீய ஆவிகள் போன்றவை  சில  பந்தப் பாதையில் சென்று கொண்டும் வந்து கொண்டும் இருக்கும்.

அனைத்து தீய ஆவிகளுமே அந்த பந்தப் பாதையில் சென்று கொண்டு இருக்கும் என்பது கிடையாது. யமராஜரிடம் தண்டனைப் பெற்று  தீய ஆவிகளாக மாறி குறிப்பிட்ட காலம்வரை இருக்க வேண்டிய தீய ஆவிகள் தமது தண்டனைக் காலம் முடியும்வரை  வெற்றிடத்திலேயே கூட சுற்றிக் கொண்டு இருக்கும். அதேபோல இன்னொரு முக்கியமான விஷயம் என்ன என்றால் அந்த விண்வெளி வெற்றிடத்திற்கு மரணம் அடைந்தவர்களின் ஆத்மா செல்ல முடியாது.  மரணம் அடைந்தவர்களின் ஆத்மா  முதலில்  பந்தப் பாதைக்குள்தான் நுழைய முடியும். பன்னிரண்டு பாதைகளையும் கடந்து விட்டு பதிமூன்றாவது இடத்தில் அது பெறும் தண்டனைக்கு ஏற்பவே  அவை வெற்றிடத்துக்குள் நுழைய முடியும்.

ஒவ்வொரு பந்தங்களின் பாதையும் மூன்று வழிப் பாதை ஆகும். ஒவ்வொன்றிலும் மூன்று மூன்று பாதைகள் தொடர்ந்து செல்லும் வகையில் இருக்கும். ஒவ்வொரு மரணம் அடைந்த ஜீவனின் ஆத்மாக்களும் மேலுலகை நோக்கி நல்ல நினைவுடன் அவற்றுக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ள முதல் பாதை வழியே போய்க் கொண்டு இருக்கும்போது வழி முழுவதும் அதன் பக்கத்துப் பாதையில் சூட்ஷுமத்தில் சுற்றித் திரியும் தீய ஆவிகள் அவற்றை தொடர்ந்து சென்று கொண்டே இருக்கும்.

அந்த தீய ஆவிகள் யார்? அவை  தம்முடைய கர்ம வினையினால் மேலும் பிறவி எடுக்க முடியாமல் போய் தீய ஆவிகளாக சுற்றித் திரிபவை. பல வருடங்களுக்கு அவை அந்த நிலையில் அங்கு சுற்றித் திரியும். அடுத்து ஏற்கனவே மேலுலகம் நோக்கிச் சென்று கொண்டு இருக்கும் சில ஆத்மாக்கள் வழி  தவறிப் போய் தீய ஆவிகளிடம் சிக்கிக் கொண்டவை. மற்றவை  அகால மரணத்தை தழுவி  தீய ஆத்மாக்களாக மாறி மேலுலகம் சென்று கொண்டு இருந்தவை.  இந்த தீய ஆவிகள் அனைத்தும்  இரண்டாவது பாதையில் செல்லத் துவங்கிவிடும். இப்படியாக நல்ல ஆத்மாக்கள் செல்லும் பாதையின் பக்கத்துப் பாதையிலேயே  சென்று கொண்டு இருக்கும் தீய ஆவிகள்,  நல்ல ஆத்மாக்களை தொடர்ந்து தம்முடையப் பாதையில் வருமாறு அழைத்துக் கொண்டே செல்லும்.

மூன்றாம் பாதை அகன்றப் பாதை. அதில் நல்ல தெய்வீக தேவதைகளும், அவர்களின் அடிமை தேவதைகளும், படையினரும் உண்டு. அவை மேலுலகம் சென்று கொண்டும், கீழ் உலகிற்கு வந்த வண்ணமும் இருக்கும்  பாதை அது.

இப்படியாக மூன்று பிரிவை சேர்ந்த ஆத்மாக்கள், ஆவிகள் மற்றும் தேவதைகள் என்பவை அந்த மூன்று வழிப் பாதையில் சென்று கொண்டு இருக்கும்.  தீய ஆவிகள் மேலுலகை நோக்கிப் போய்க் கொண்டு இருக்கும் நல்ல ஆத்மாக்களை பக்கத்துப் பாதையில் இருந்து அழைத்துக் கொண்டும், பயமுறுத்திய வண்ணமும் , அவற்றின் கவனத்தை திசை திருப்பிய வண்ணமும்  அவற்றுடன் தொடர்ந்து சென்று கொண்டு இருக்கும்.  நல்ல ஆத்மாக்களைப் போல நடித்துக் கொண்டே அவை தம்முடன் அந்தப் பாதையில் வருமாறு முதல் பாதையில் செல்லும் ஆத்மாக்களை அழைக்கும்.  ஆனால் அவற்றால் அந்த ஆத்மாக்களை தொட முடியாது.

முன்னரே கூறியபடி மேலுலகை நோக்கிப் போய்க் கொண்டு இருக்கும் நல்ல ஆத்மாக்கள் குறிப்பிட்ட பந்தங்களின் நுழை வாயில் வழியேதான் அடுத்த பந்த வளைவுக்குள் செல்ல முடியும். அதற்கான வாயிலைக் கண்டு பிடிக்க அதற்க்கு முப்பது நாட்கள் ஆகும். அதே சமயம்  மந்திரவாதிகள் செலுத்தும் மந்திரங்கள் இரண்டாவது  வளைவுக்குள் தம்முடையக் கட்டுப்பாட்டில் உள்ள  துர்தேவதைகளுடன் தொடர்ந்து சுற்றிக் கொண்டு இருக்கும். ஆனாலும் அந்த மந்திரங்களினால் நல்ல  ஆத்மாவை  அங்கிருந்து கொண்டு  கைப்பற்ற முடியாது.  காரணம் மரணம் அடைந்த ஜீவனின் ஆத்மாக்களுக்கு ஒரு குறிப்பிட்ட பாதை உண்டு.  அவை அனைத்துமே அதில்தான் சென்று கொண்டு இருக்க முடியும்.  அப்படிச் செல்கையில் அந்த வழியை தவற விட்டு பக்கத்தில் உள்ள பாதையில் அவை சென்று விட்டால் மட்டுமே அவை தீய ஆத்மாக்களின் கைகளில் விழுந்து சிறைபட்டு, அவற்றின் அடிமைகளாகி விடும்.

இரண்டாம் வளையத்துக்குள் சுற்றித் திரியும்  தீய ஆவிகளை  மந்திரவாதிகள் பிடித்து வைத்துக் கொண்டு இருப்பார்கள் என்று கூறினேன் அல்லவா, அந்த தீய ஆவிகளின் துணைக் கொண்டே முதலில் மேலுலகை நோக்கிச் சென்று கொண்டு இருக்கும் நல்ல ஆத்மாவை தடம் புரளச் செய்ய தேவையானவற்றை  மந்திரங்கள் மூலம் செய்து கொண்டு இருப்பார்கள்.  நல்ல ஆத்மாக்கள் எப்போது தடம் புரண்டு செல்கின்றன?

ஒவ்வொரு ஆத்மாவும்  ஒரு வளையத்துக்குள் முப்பது நாட்களுக்குள்  தான் செல்ல வேண்டிய நுழை வாயிலை கண்டு பிடிக்கும். ஆகவே அந்த நாளை நெருங்கும் முன்னரே அதைத் தொடர்ந்து சென்று கொண்டு இருக்கும் தீய ஆவிகள் அவற்றின் கவனத்தை திசை திருப்பி விட முயற்சிக்கும். அதில் ஏமார்ந்து போகும் சில நல்ல ஆத்மாக்கள் சில நேரங்களில் தனது வாயிலை கண்டு பிடிக்க முடியாமல், நுழை வாயிலை கடந்து  சென்று விடும்.  இப்படியாக முப்பது நாட்களுக்குள் தாம் செல்ல வேண்டிய பந்த நுழைவாயிலை கண்டு பிடிக்க முடியாமல் போன ஆத்மாக்களினால் அதன் பின்னர் அதன் நுழை வாயிலைக் காண முடியாது.  ஆகவே  கடக்க வேண்டிய நுழை வாயிலைத் தவற விட்டு விட்ட  நல்ல  ஆத்மாக்கள்  இரண்டாவது பாதையில் போய் விழுந்து விடும்.  இது தவிர்க்க முடியாதது . இது நியதி. இப்படியாக தீய ஆவிகளிடம் விழுந்து விடும் நல்ல ஆத்மாக்கள் அந்த பாதைக்குள் நுழைந்த உடனடியாக தீய ஆத்மாக்களாகி விடுகின்றன. அந்த நேரத்தில்தான் மந்திரவாதிகளின் கட்டுக்குள் உள்ள தீய ஆவிகள் அப்படி விழும் ஆத்மாக்களை  இழுத்துக் கொண்டு பாதையின் வெளியில் சென்று விடும்.  இப்படியாக  தீய ஆவிகளினால் வெளியில் இழுத்து வந்து விடப்பட்டு விட்ட  அந்த ஆத்மாக்களை மந்திரங்களை ஏவி  தம்மிடம்  சிறை வைத்து விடுவார்கள்.  அதன் பின் தமக்கு எப்போது தேவையோ அப்போது அவற்றை பயன்படுத்திக் கொள்வார்கள்.

விண்வெளியில் சுற்றித் திரிந்து கொண்டு இருக்கும்  தீய ஆவிகளில்  தாம் எப்படியாவது மனிதப் பிறவியில் மீண்டும் சென்று விட வேண்டும் எனத் துடிக்கும் ஆவிகளும் உண்டு. ஆகவே அப்படிப்பட்ட தீய ஆவிகள் வேண்டும் என்றே அங்கு சுற்றித் திரியும் துர்தேவதைகளின் கட்டுப்பாட்டில், தாமாகவே சென்று விழும். அப்படி வலிய வந்து தன்னிடம் அடைக்கலம் ஆகும் தீய ஆவிகளை அந்த துர்தேவதைகளை ஆராதிக்கும் மந்திரவாதிகள் அதனை வேண்டிக் கொண்டு அவற்றை தம் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விடுவார்கள். காரணம் துர்தேவதைகள் மூலம் தம்மிடம் விழுந்து விட்ட ஆவிகளை  எப்போது வேண்டுமானாலும்  மனித உடல்களுக்குள் சென்று புகுந்து கொண்டு வருமாறு கூற  முடியும். அதற்காக அதிக மந்திர பிரயோகங்களை செய்ய வேண்டியது இல்லை. அதனால் விரையமாகும் மந்திர சக்தியை தக்க வைத்துக் கொள்ளலாம்.

மரணம் அடைந்தவர்களின் ஆத்மாக்கள் தமக்கு விதிக்கப்பட்டு உள்ள பாதை வழியே சென்று கொண்டு இருக்கும்போது சந்தர்ப்பவசத்தினால் அவற்றில் சில  எதனால் தீய ஆவிகளாகி விடுகின்றன ? அதற்குக் காரணம் பூர்வ ஜென்ம வினைப் பயன்.  பதிமூன்றாம் பாதைக்குள் நுழைந்தப் பின்னர்தானே ஆத்மாக்கள் அவற்றின் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப தண்டனைப் பெறும் எனும்போது, அங்கு செல்லும் முன்னரே எப்படி வழியில் தீய ஆவிகளாக மாறி விட முடியும்  விடும் என்கிறீர்களா?   இதைப் படியுங்கள்.

………பாகம் IV தொடரும்