அக்கல்கோட் ஸமர்த்த
மகராஜ் ஸ்வாமிகள் 
வரலாறும் அவர் மகிமைகளும்
 
சாந்திப்பிரியா
   

பாகம்- 6

ஸ்வாமிகளின் பிறப்பு பற்றிய விவரங்கள் யாருக்குமே சரிவரத் தெரியவில்லை .அவர் பிறப்பு பற்றி அவரவர் கூறியவை, பல்வேறு ஹேஷ்யங்கள் கட்டுக் கதைகள் என இருந்ததினால் ஸ்வாமிகளை தரிசித்த ஒரு ஜோதிடர் அவரது ஜாதகத்தைக் கணிக்க அனுமதி கேட்டார். ஸ்வாமிகளும் அந்த ஜோதிடருக்கு தமது ஜாதகத்தைக் கணிக்க அனுமதி கொடுத்தார். ஸ்வாமிகள் தந்த தகவலை ஒட்டி அந்த ஜோதிடர் ஸ்வாமிகளின் ஜாதகத்தைக் கணித்து ஸ்வாமிகளிடம் தர ஸ்வாமிகள் அதை ஜாக்கிரதையாக வெட்ட வெளியில் வைத்து விட்டு அங்கு நடந்து கொண்டு இருந்த பஜனையில் கலந்து கொள்ளுமாறு கூறினார். பஜனையும் பூஜையும் நடந்து கொண்டு இருந்தது. அந்த காகிதம் பறக்காமல் இருக்க அதன் மீது ஒரு கல்லை வைத்து இருந்தார். அதே இடத்தில் நடந்த பஜனை முடிந்ததும் ஸ்வாமிகள் அந்த காகிதத்தை எடுத்து வருமாறு கூறினார். அதை எடுக்கச் சென்ற ஜோதிடர் திகைத்து நின்றார். அதன் மீது யாரோ குங்குமம், மலர்கள் போன்றவற்றைத் தூவி அர்ச்சனை செய்து இருந்ததைப் போல அங்கு காட்சி இருந்தது. தாம் அங்கேயே அமர்ந்து இருக்க, அனைவரும் பூஜையில் கலந்து கொண்டு இருந்தபோது அத்தனை பேர்களின் கண்களுக்கும் புலப்படாமல் யார் அந்த காகிதத்திற்கு அர்சனை செய்து இருக்க முடியும்? அனைவரும் ஸ்வாமிகளின் அற்புதத்தை எண்ணி திகைத்தார்கள். அதில் கணிக்கப்பட்டு எழுதப்பட்டு இருந்த ஸ்வாமிகளின் ஜாதகமும் இல்லை என்பது அடுத்த அதிர்ச்சி. ஆகா உண்மையான தெய்வப் பிறப்பாக யாரேனும் இருந்தால் அவர்களின்  ஜாதகத்தை யாராலும் கணிக்க முடியாது என்பதே உண்மை.

ஸ்வாமிகளின் சமாதி

எங்கெங்கு  சென்றாலும்  அங்கெல்லாம் அற்புதங்களை நிகழ்த்திய வண்ணம் மக்களின் துயரங்களை துடைத்துக்  கொண்டு இருந்த ஸ்வாமிகள் செய்து காட்டிய மகிமைகளும் அற்புதங்களும் எழுதி மாள முடியாதவை. ஒன்றா இரண்டா அவற்றை எழுத. இறந்தவர் பிழைத்து எழுந்தது, ஒரு ஊரைப் பற்றிய கல்வெட்டு இருந்த இடத்தைக் காட்டியது, வானத்திலே பறந்து சென்றது, இழந்த செல்வத்தை மீட்டுத் தந்தது, எலும்புகளை தங்கமாக்கியது   போன்ற பலப் பலக் கதைகள் உண்டு.

முடிவாக அக்கல்கோட்டில் வந்து தங்கினார். 1854 ஆம் ஆண்டு முதல் 1878 ஆம் ஆண்டு வரை அங்கு தங்கி இருந்த ஸ்வாமிகள் 03 -04 -1878   ஆம் தேதியன்று சமாதி அடைந்தார். தான் சமாதி அடைய இருந்த தினத்தை முன் கூட்டியே பக்தர்களுக்கு அறிவித்து விட்டே ஸ்வாமிகள் சமாதி அடைந்தார். அவர் பூவுலகில்  400 ஆண்டுகள் வாழ்ந்து இருந்தார், இல்லை , இல்லை அவர் 600 ஆண்டுகள் வாழ்ந்து வந்தார் என அவர் வாழ்ந்த காலத்தைப் பற்றிக் கூறினாலும் அவர் பல நூற்றாண்டுகள் வாழ்ந்து இருந்தார் என்பது அவர் தவம் செய்த இடங்களில்  இருந்து கிடைத்த செய்திகளில் இருந்து தெரிய வந்துள்ளது.

”நான் சமாதி அடைந்து விட்டாலும் அக்கல்கோட்டில் இருந்தபடி உங்களை ரட்சித்து வருவேன் . அழிவு என் தேகத்திற்குத்தான் , ஆனால் நான் அழியவில்லை. என்னை நாடி வருபவர்களை நான் கைவிடமாட்டேன். அவர்களை என்றுமே கத்தபடித்தான் இருப்பேன்—அன்யாத் சிந்தையோ, மாம் யே ஜனக பர்யூபாசதே, தேசம் நித்யாபியுக், தானம் யோகஷேமம் வஹாம்யஹம்– என்ற பகவத் கீதை வரிகளைக் கூறியவாறே விடை பெற்றார்.
இன்றும் அந்த ஆலயத்தில் அவர் சூஷுமமாக வாழ்ந்து கொண்டு உள்ளதை அங்கு சென்று அவரை வணங்குபவர்கள்  உணருகிறார்கள். வரும் பக்தர்களின் கூட்டத்திற்கு குறைவும் இல்லை. அவரை வேண்டி வணங்குபவர்கள் பெரும் நன்மைகளை பலரும் கூறக் கூற அதை கேட்பது அதிசயமாக உள்ளது.

ஆலயத்தின் விலாசம்  
Akkalkot-Niwasi Shree Swami Samarth Mandir
Shree Swami Samarth Nagar,
Off Four Bunglows,
Andheri (West),
MUMBAI
Pin Code : 400 053
Maharashtra State
INDIA
Phone : 022 – 2 633 30 30
Timings : 06.00 A.M. to 11.00 A.M. and 04.00 P.M. to 09.00 P.M. (IST).
Temple of Akkalkot Niwasi Shree Swami Samarth Maharaj
 ———————-

 

Shree Sadguru Baba Maharaj Sahasrabuddhe Samadhi Mandir
&
Shree Sadguru Digambardas Maharaj Samadhi Mandir

937/ D, Chatushrungi Road,
Near Dnyaneshwar Paduka Chowk,
Shivajinagar,
PUNE
Pin Code : 411 016.
Maharashtra State
INDIA
Phone : 020-25655021
Timings : 06.30 A.M. to 11.00 A.M. and 03.30 P.M. to 06.00 P.M. (IST)

——————–

 

அக்கல்கோட் ஸமர்த்த ஸ்வாமிகளின் சரித்திரம் முடிவுற்றது