ஷிதிகண்டபுரம்
மகாதேவர் ஆலயம்
சாந்திப்பிரியா

கேரளத்தில் திருச்சூரில் உள்ள கோரட்டியில் சிவபெருமானுக்கு ஒரு ஆலயம் உள்ளது. திருச்சூரில் இருந்து எர்ணாகுளம் செல்லும் பாதையில் எர்நாகுலத்திர்க்கு இரண்டு கிலோ தொலைவுக்கு முன்னரே இந்த இடம் வரும். ஆலகால விஷத்தை உண்ட சிவ பெருமான் உலக நன்மைக்காக அந்த இடத்தில் வந்து தமது குடும்பத்தினருடன் தங்கினாராம். 1984 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட அச்தமன்கல்யா பிரசன்னத்தில் அந்த ஆலயத்தில் உள்ள சிவ லிங்கம் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனத் தெரிய வந்தது. சுமார் ஏறநூட்ட்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் திப்பு சுல்தான் மலபாரில் இருந்தவர்களை துரத்தியபோது அங்கிருந்து வந்து இந்த ஆலயம் உள்ள இடத்தில் தங்கியவர்கள் நீலகண்ட மகாதேவரையே தமது குல தெய்வமாக வழிபட்டு வந்துள்ளனர். மலபாரில் இருந்து ஓடி வந்தவர்கள் அங்கிருந்த ஆலயத்தில் இருந்து பரமசிவனையும் பகவதி தேவியையும் தங்களுடன் கொண்டு வந்து இருந்தார்கள். பின்னர் பகவதியை புளிக்கடவு என்கின்ற நதிக் கரையில் பிரதிஷ்டை செய்து வணங்கினார்கள். அதுபோல மகாதேவரை மேலூர் பரமேல் என்ற இடத்தில் பிரதிஷ்டை செய்து வணங்கினார்கள். கோரட்டி ஸ்வரூப் என்பவர்கள் அந்த ஆலயத்தை நிர்வாகித்தனர்.

அதன் பின் கோடசெர்ரி நிலசுவாந்தார்களுக்கும் கோரட்டி ஸ்வரூப் குழுவினருக்கும் ஆயுதங்களைக் கொண்டு தாக்கி கொள்ளும் அளவுக்கு சண்டை மூண்டது. அதனால் ஸ்வரூப் குழு அங்கிருந்து கிளம்பி ஷிதிகண்டபுரம் சென்று அங்கு தமது ஆலயத்தை நிறுவிக் கொண்டனர். அந்த சண்டையினால் கோரட்டி ஸ்வரூப் பெண்களினால் வான்புழாக்கடவு தேவி ஆலயத்துக்கு செல்ல முடியாமல் ஆயிற்று. ஆகவே அந்த தேவிக்கும் சேர்த்து அந்த இடத்தில் ஆலயம் அமைந்தது. மலபாரில் இருந்து வெளியேறியபோது கொண்டு வர முடியாமல் இருந்த 2000 வருடத்துக்கு முன்னர் ஸ்வயம்புவாக வந்த சிவலிங்கத்தை கொண்டு வந்து அதை தாந்தரி ”முக்கிய பத்ரகாளி மட்டப்பிள்ளை நம்பூத்ரி” மேற்பார்வையில் ஷிதிகண்டபுரம் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்தனர். ஆலயம் அந்த இடத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இடமாக உள்ளது.

அஷ்டமிவிளக்கு பூஜையும் சிவராத்தரிப் போல மிகவும் பிரபலமானது . ஒவ்வொரு ஆண்டும் கோரட்டி ஸ்வரூப குடும்பத்தின் தலைவரான தம்பிரான் வைகோம் என்ற இடத்தில் உள்ள ஆலயத்தில் நடைபெறும் வைகாதலஷ்மி பூஜையில் கலந்து கொள்வது வழக்கம். ஆனால் ஒருமுறை அவரால் அங்கு செல்ல முடியவில்லை. அதனால் மனம் உடைந்தவர் தமது ஆலயத்தில் சென்று தன்னால் அந்த பூஜைக்கு செல்ல முடியவில்லையே என துயரம் தாங்காமல் அழுதார். அவர் கனவில் மகாதேவர் தோன்றி இனி அங்கிருந்து எவரும் வைகோம் செல்ல தேவை இல்லை எனவும் தான் அங்கு அவர்கள் கட்டி உள்ள ஆலயத்திலேயே தங்கி இருக்க உள்ளதாகக் கூற தம்பிரான் கண் விழித்தார். வானத்தில் இருந்து கீழே இறங்கி வந்த ஒரு ஓளி அந்த ஆலயத்தில் சென்றதைக் கண்டு மகிழ்ச்சிப் பொங்க அனைவரிடமும் அது குறித்துக் கூறினார். மறுநாள் எதேற்சையாக வைகாதாஷ்டமியும் வந்தது. அதை அவர்கள் பெரிய அளவில் அந்த ஆலயத்திலேயே கொண்டாடினர். அன்று இரவு மீண்டும் சிவபெருமான் தம்பிரான் கனவில் தோன்றி அந்த இடத்திலேயே அவர்கள் வைகாதாஷ்டமி செய்தது தனக்கு மனத் திருப்பதி அளித்ததாகவும் இனி அதை அங்கேயே தொடருமாறும் கட்டளை இட அது முதல் ஒவ்வொரு வருடமும் அந்த விழா அங்கு கோலாகாலமாகக் கொண்டாடப் படுகின்றது.

அந்த ஆலயத்தில் சென்று வணங்கி வந்தால் குடும்ப ஒற்றுமை நிலவும், கணவன் மனைவி ஒற்றுமையாக இருப்பார்கள், நல்ல கல்வி அறிவு கிடைக்கும் அனைத்து நன்மைகளும் பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது. ஆலய விலாசம் :-

விவரங்கள் நன்றி:-  http://www.shithikandapuram.com/